இடுகைகள்

கட்டணக் கொள்ளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன் - வங்கி சொன்ன அறிவுரை - உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்...

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன்  உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்... ஒன்றாக சேர்ந்து நாம்.... என தலைப்பு கொண்டுள்ள வங்கிதான் நான் பத்தாண்டுகளாக கணக்கு வைத்துள்ளது. தொடங்கியபோது எப்படியோ இன்றுவரை அப்படியேதான் உள்ளது. மாற்றம் என்னவென்றால், நிறைய கட்டுப்பாடுகள் பெருகியுள்ளன. பணம் பிடுங்குதலையும் நாற்காலியில் அமர்ந்துகொண்டே நிதானமாக கணினியை தட்டி செய்கிறார்கள். அதையும் கூட 120 ரூபாயை இழந்துதான் கற்றுக்கொண்டேன். பொதுவாக வங்கிகளுக்கு புகார் அளித்து அதன் வழியாக இழந்த தொகையை பெறுவது பிரம்ம பிரயத்தன முயற்சி. பெரும்பாலும் காசு கிடைக்காது. ஏன் காசு கிடைக்காது என்பதற்கு ஈகுவிட்டி பங்கு விளம்பரம் போது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என வேகமாக இரண்டு பத்தியை ஒரு குரல் படிக்குமே... அந்த ரீதியில் விதிகளை காரணம் காட்டுவார்கள்.  வங்கியில் இருந்து ஏடிஎம் வழியாக பணம் பெறுவதைப் பற்றியும் அதன் கட்டுப்பாடுகளையும் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஏடிஎம்மில் பணம் எடுக்க ஒன்றாக சேர்ந்து... வங்கி மாதம் ஐந்து முறை இலவச வாய்ப்புகளை தருகிறது. அதைப் பயன்படுத்தி ஒருவர் தினசரி 25 ஆயிரம் என்ற வகையில் ஒரு லட்சத்து...