இடுகைகள்

காமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாசனை திரவியம் தயாரித்து பாலுறவுக்கு உந்தி காதல் மோசடி செய்யும் பெண்களை தண்டிக்கும் நாயகன்!

படம்
  கம்மாத்து தெலுங்கு சுவாதி தீக்சித் ஆங்கிலத்தில் வெளியான பர்ஃப்யூம் படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதன் மலினமான தழுவல். இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு கதை திரைக்கதை வசனம் என இயக்குநர் பெயர் போட்டுக்கொள்கிறார். கூச்சமே இல்லை. ஒரு படத்தை தழுவி இன்னொரு படத்தை எடுப்பது முற்றாக தவறு இல்லை. ஆனால், மூலப்படத்தை கேவலப்படுத்தாத வகையில் எடுக்கலாம். அதைவிட மேம்படுத்தி எடுக்கலாம். இப்படி எந்த இரண்டு வகையில் வராத மாதிரி படத்தை கிண்டி வைத்திருக்கிறார் இயக்குநர். அறிவியல் ஆராய்ச்சி செய்பவன் என்றாலே மூக்கு கண்ணாடி போட்டிருக்கவேண்டும். முடியை வெட்டாமல் விடவேண்டும் என கிளிஷே அவதாரமாக நாயகன் பாத்திரம் உள்ளது. பள்ளியில், கல்லூரியில் நன்றாக நடிப்பவர். ஆபாச படத்தை நண்பர்களுடன் பார்த்து வாசனை திரவியம் ஒன்றை உருவாக்கி அதன் வழியாக காம உணர்வை தூண்டவேண்டும் என லட்சியம் கொள்கிறார். முதுகலை படித்துக்கொண்டே ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானம்தான் அபார்ட்மென்ட் வாடகை, சாப்பாடு, அவரது அருகிலுள்ள திரைப்பட உதவி இயக்குநருக்கான உணவு, மதுபான செலவு எல்லாம்.... அந்த பக்கத்து வீட்டு அண்ணன் பாத்திர...

திருமணமாகாத இளம் பெண்களின் ரத்தத்தைக் குடித்து இதயத்தைத் தின்னும் கொடூர பிசாசு!

படம்
      வா அருகில் வா கோட்டயம் புஷ்பநாத் திகில் நாவல் கோட்டயம் புஷ்பநாத் எழுதும் நாவலில் என்னென்ன எதிர்பார்ப்போம். இயக்குநர் சுந்தர்சி போல கிளுகிளுப்பாக திகில் கதைகளை எழுதுவார். இதிலும் பெண்களின் பெண்களின் நைட் கவுன் பட்டன்கள் தெறிக்கின்றன. அதைவிட முக்கியம், நாயகி லூசி இறுதியாக கர்த்தரை சரணடைந்து தனது பாவத்தை ஏற்று மடைமாறுகிறாள். அதனால் அவள் உயிர் பிழைக்கிறாள். ஜானி, லூஸி இருவருக்கும் பெற்றோர் பார்த்து வைத்து மணம் செய்கிறார்கள். முதலிரவிலேயே மணமகன் லூசியை தொடாமல் மதுபானத்தை தொட்டு ரசித்துக் குடிக்கிறான். சிகரெட் புகைக்கிறான். இதிலேயே அவனுக்கு உடலுறவில் பெரிய ஈடுபாடு இல்லையோ என்று தோன்றுகிறது. அங்கு வந்து பரிசில், ஒரு கடிதம் இருக்கிறது. அதில் அவர்கள் தேனிலவை தனது பங்களாவில் கொண்டாடலாம் என பெர்னார்ட் என்பவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் யாரென்று கூட விசாரிக்காமல் இருவரும் தேனிலவுக்கு அந்த மர்ம பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நேரும் திகில் அனுபவங்கள்தான் கதையின் முக்கியப் பகுதி. லூசிக்கு அந்த பங்களா, அதன் வினோதமான இயல்பு எல்லாமே பயம் தருகிறது. ஆனால் கணவன் மது...

உடல்பசி, வயிற்றுப்பசி என இரண்டாலும் தவிக்கும் ராமோஜி ராவின் சுயசரிதை! - ராமோஜியம் - இரா முருகன்

படம்
  ராமோஜியம்  இரா முருகன் கிழக்கு பதிப்பகம் பிரிட்டிஷாரின் ஆட்சியில் நடக்கும் கதை. அக்காலகட்டத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கிளர்க்காக வேலை செய்யும் ராவ்ஜி, அவரது மனைவி ரத்னாபாய் ஆகியோரின் வாழ்க்கை கதைதான் நாவல்.  கொரிய டிவி தொடர்களில் பன்றிக்கறி, மாட்டிறைச்சி, நூடுல்ஸ், முட்டை எப்படி நீங்காமல் இடம்பெறுகிறதோ அதுபோல இந்த நாவலெங்கும் உணவு வகைகள் ஏராளம். தாராளம். உணவு கதையில் ஒரு பாத்திரம் போலவே வருகிறது. ராவ்ஜிக்கு அரசு வேலை என்பதால் அவர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவரது உறவினர்கள் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் அத்தனை ருசியாக, வகை வகையாக சமைத்து போடுகிறார்கள். கும்பகோணத்தில் டீ ஆபீசராக சென்று வேலை பார்த்து, அங்கு விடுமுறைக்கு வந்திருந்த இளம்பெண் ரத்னாபாயை காதல் வலையில் வீழ்த்துகிறார். அவருமே வீழ்கிறார். பிறகுதான் அரசு தேர்வு எழுதி கிளர்க்காக சென்னையில் உத்தியோகமாகிறது. அதை வைத்தே மராட்டிய மாமனார், மச்சினன் ஆகியோரை சரிகட்டி ரத்னாவை கல்யாணம் செய்கிறார்.  1975 நாவலைப் போலவே இதிலும் நாயகன் ராவ்ஜி, அரசு விவகாரங்களை விமர்சிக்க விரும்பாத குட...

'காதல் போதும்' - காதலன், 'செக்ஸ் அவசியம்' - காதலி! மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா

படம்
  மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் மை   ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் ஜப்பான் டிவி தொடர் ஜே டிராமா 9 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   தலைப்பில் தெரிகிறது அல்லவா…. அதுதான் கான்செஃப்ட். செக்ஸ் காமெடியை மையப்பொருளாக கொண்ட தொடர். ஷேர்ட் கோ வொர்க்கிங் பிளேஸ் அங்கு நிறையப் பேர் வேலை செய்கிறார்கள். கலைப்பொருட்களை ஆன்லைன் வழியாக வாடகைக்கு கொடுக்கும் நிறுவனத்தில் நாயகி, அவளது கல்லூரி கால தோழி, நண்பன் ஆகியோர் வேலை செய்கிறார்கள். அது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம். கல்லூரித் தோழி கேட்டுக்கொண்டதற்காக இந்த தொழிலுக்கு நாயகி வருகிறாள். மொத்தம் இரு பெண்கள், ஒரு ஆண் என மூவர் வேலை செய்யும் நிறுவனம். கோ வொர்க்கிங் ஸ்பேஸில் பொருட்களை புகைப்படம் எடுத்து அதை சந்தைப்படுத்தும் தொழிலில் உள்ள மூவரை, சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் புகைப்படக்கலைஞன் அழகாக கூடவே அமைதியாக இருக்கிறான். அவனுக்கும் சேர்த்து புறவயமான இயல்பு கொண்ட   நாயகியே பேசுகிறாள். தொழில்ரீதியாக நாயகியின் தோழி புகைப்படக்கலைஞன், சுயாதீனக் கலைஞன் என்பதால் அவனை தனது தொழிலுக்கு பயன்படுத்துகிறாள்....

சொந்த சகோதரிகளை வல்லுறவு செய்த காமக்காளை!

படம்
  பீட்டர் கர்டன் ஜெர்மனியைச் சேர்ந்த கொலைமகன். 1883ஆம் ஆண்டு கோலன் முல்ஹெய்ம் எனும் நகரில் பிறந்தவர். வன்முறை நிறைந்த சிக்கலான குழந்தைப் பருவத்தைக் கொண்டவர். மொத்தம் பதிமூன்று பேர்களைக் கொண்ட குடும்பம். இவர்கள் வாழ்வதற்கு ஒற்றை அறை. ஒரே அறை என்பதால் கணவன், மனைவி, மகள், மகன் என அனைவரும் நெருங்கித்தான் படுக்கவேண்டிய சூழல், இதுவே அவர்கள் குடும்பத்தில் பாலியல் ரீதியான சிக்கலை உருவாக்கியது. குடிநோயாளியாகிவிட்ட பீட்டரின் தந்தை, பிள்ளைகளின் முன்பே அம்மாவை உறவுக்கு அழைத்து, உடலுறவு கொள்வார். பின்னாளில் அவர் தனது மகளுடன் வல்லுறவு கொள்ள முயன்று அப்புகார் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். அப்பா செய்ய முடியாததை மகன் பீட்டர், தனது சகோதரிகளுக்கு செய்தார். கிடைத்த வாய்ப்புகளில் சகோதரிகளை தடவினார்.தேய்த்தார். ஆக மொத்தம் மகிழ்ச்சி கொண்டார். இவருக்கு ஊக்க உந்துதலைக் கொடுத்தவர், அருகில் வாழ்ந்த நாய் கண்காணிப்பாளர். இவர், நாய்களை அடித்து உதைத்து கொடுமை செய்ததோடு, விலங்குகளை சுய இன்பம் அனுபவிக்கச் செய்து அதை பார்த்து வந்தார். ஒன்பது வயதில் பீட்டரின் குற்ற வரலாறு தொடங்குகிறது. தன்னோடு விளையாடிக் க...

பெற்றோர்களின் தவறான வளர்ப்பால் சிலுவை சுமக்கும் இரட்டையர்கள்! இரட்டா - ஜோஜூ ஜார்ஜ்

படம்
  இரட்டா -ஜோஜூ ஜார்ஜ், அஞ்சலி இரட்டா ஜோஜூ ஜார்ஜ் இடுக்கி மாவட்டத்திலுள்ள வாகாமன் காவல்நிலையம். அங்கு, பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை ஒப்படைக்க விழா ஒன்றை நடத்துகிறார்கள். வனத்துறை அமைச்சர் வருவதாக இருக்கிறது. அந்த நேரத்தில் காவல்நிலையத்தின் உள்ளே ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தவர்கள் என அங்கு நிற்கும் மூன்று போலீஸ்கார்களைப் பிடிக்கிறார்கள். சந்தேகப்படுகிறார்கள். உண்மையில் யார் குற்றவாளி என கண்டறிவதே படம். இறந்துபோனவரான வினோத், வாகாமனில் உதவி ஆய்வாளர். அவருக்கு சகோதரரான பிரமோத், அதே காவல்துறையில் டிஎஸ்பியாக இருக்கிறார். இறந்தவரான வினோத், கொலையை விசாரிக்கும் பிரமோத் இருவருமே இரட்டையர்கள். ஆனால், 17 ஆண்டுகளுக்கு மேலாக துவேஷமாக வன்மத்தோடு வாழ்கிறார்கள். வினோத் கொல்லப்பட என்ன காரணம் என்பதை எஸ்பி விசாரிக்க, மூன்று போலீஸ்காரர்களின் வாக்குமூலம் வழியாக கதை நகர்கிறது. இறந்துபோன வினோத் பற்றிய காட்சிகள் படத்தில் அதிகம். அவர், மனதில் சகோதரர் பிரமோத் பற்றிய ஒரு தீராத கோபம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை காவல்நிலையத்தில் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில், விசாரணையில் பிரமோத்தைக் ...

காமத்தைக் கொண்டாடும் நுண்கதைகள்! - 69 நுண்கதைகள் - சி.சரவணகார்த்திகேயன்

படம்
  69 நுண்கதைகள் சி.சரவணகார்த்திகேயன் உயிர்மை பதிப்பகம் ரூ.80 சி.சரவணகார்த்திகேயன் ஒரு மாதத்தில் எழுதப்பட்ட கதைகள் என எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார். 69 என்பது காகத்தின் கலவி நிலை என பின்னட்டைக் குறிப்பு சொல்லுகிறது. இதெல்லாவற்றையும் தாண்டி இந்த நூலை வாங்க வைப்பது முன்னட்டையில் உள்ள அழகான ஓவியங்கள்தான். பார்த்தவுடனே ஈர்க்கும்படி செய்திருக்கிறார்கள்.  60 கதைகள் இருக்கின்றன. அனைத்துமே நுட்பமாக காமம், காதல், மனதிற்குள் ஒளித்து வைத்துள்ள சில ரகசியங்கள், பாலினத்தின் மீதான மாறாத ஈர்ப்பு ஆகியவற்றை குறியீடாக சில சமயங்களில் நேரடியாகவே வெளிப்படுத்துகிற ஒருபக்க கதைகள்.  சரவண கார்த்திகேயன் எழுதிய கதைகள் சிறியவை என்றாலும் இதில் எங்கேயும் தேவையில்லாமல் கதையை  இழுத்துவிடுகிற தன்மை இல்லை. எல்லாமே இழுத்து பின்னப்பட்ட வலைப்பின்னல்களைக் கொண்ட நாற்காலி போல கச்சிதமாக உள்ளது.  இதில், குறிகளை வெட்டும் லட்சியத்தைக் கொண்ட மனிதரின் கதை சிறப்பாக உள்ளது. கணவரை விவகாரத்து செய்யும் பெண் நீதிமன்றத்தில் சொல்லும் உரையாடல்களாக விரியும் கதை, காமத்தில் நிறைவு கொள்ளாத மனம் பிறருக்கு ஏற்படுத்தும் அ...

காமத்தைப் பற்றி பேசும் நூல்கள்! - எழுதியவர்கள் அனைவரும் பெண்கள்தான்!

படம்
  காமத்தைப் பேசும் நூல்களில் சில... தி ஆர்ட்ஸ் ஆப் செடக்ஷன் சீமா ஆனந்த் ஆலெப் சீதாஸ் கர்ஸ் ஸ்ரீமோயி பியு குண்டு ப்ளூம்ஸ்பரி லாஸிங் மை வர்ஜினிட்டி அண்ட் அதர் டம்ப் ஐடியாஸ் மாதுரி பானர்ஜி பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  எரோடிக்  ஸ்டோரிஸ் ஃபார் பஞ்சாபி  விடோஸ் பலி கௌர் ஜஸ்வால் வில்லியம் மோரோ செக்ஸ் ஈஸ் மெமோர் ஆப் எ வுமன்ஸ் செக்சுவாலிட்டி பல்லவி பர்ன்வால் ப்ளூம்ஸ்பரி பாலஸ்  கல்ச்சுரல் ஹிஸ்டரி டாக்டர் அல்கா பாண்டே ஹார்பர் கோலின்ஸ் தி எல் வேர்ட் லவ், லஸ்ட் அண்ட் எவ்ரிதிங்க் இன் பெட்வீன் ஆஸ்தா அட்ரே பனான் ஹார்பர்கோலின்ஸ் இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவருமே பெண்கள் என்பதை நம்புங்கள். அதுதான் உண்மை. 

காமத்தைக் கொண்டாடிய இந்தி திரைப்படங்கள்!

படம்
  ஒருவர் பொது வாழ்க்கைக்கு வர பயப்படுவதன் காரணமே, அவரது தனி வாழ்க்கையையும் நடுத்தெருவுக்கு இழுத்து வரவேண்டும் என்பதுதான். காந்தி தன்னுடைய வாழ்க்கையை நேர்மையாக வாழ்ந்து அதனை நூலாக எழுதினார். அதன் பிரதிபலனாக அவரது நோக்கத்திற்கு நிறைய சீடர்கள் கிடைத்தனர். அதோடு எதிரிகளும் உருவானார்கள். காந்தியின் செயல்பாடு பற்றி பேசும்போது, அவரின் செக்ஸ் பரிசோதனைகளைப் பற்றி பேசாதவர்கள் குறைவு. ஒருவகையில் மனதில் ஏற்படும் பாலியல் வறட்சி இதற்கு காரணம் என்று கூறலாம்.  பாலியல் விஷயங்களைப் பேசுவது என்பது இந்தியாவில் அவமானகரமான ஒன்றாக படுகிறது. காமசூத்திரா நூல்களை எரிப்பது, காதலர்களை அடிப்பது என மனநோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் பற்றிய செய்திகளை நாம் தந்தியில் எப்போதும் படித்துதானே வருகிறோம். இதையெல்லாம் தாண்டி பாலியல் சமாச்சாரங்களை மக்களுக்கு சொல்ல படங்களும் வந்துள்ளன. நூல்களும் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.  காம சூத்ரா எ டேல் ஆப் லவ் (1996) இயக்கம் மீரா நாயர் நடிப்பு நவீன் ஆண்ட்ரூஸ், சரிதா சௌத்ரி சத்யம் சிவம் சுந்தரம்  1978 இயக்கம்  ராஜ் கபூர் நடிப்பு சஷிகபூர் ஜீனத் அமன் உத்சவ் 1984...

தந்திரமான ஆட்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது! - கடிதங்கள்

படம்
               பெண்களை மயக்கும் காமம்! - பரந்தாம ராஜூவின் வேட்கை   அன்புத்தோழர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? அஞ்சல் அட்டையில் எழுதுவது பற்றி நண்பர்களுக்கு நிறைய மாற்றுக்கருத்துகள் உள்ளன . அதனை யாரும் எளிதாக படித்துவிட முடியும் என்று கூறுகிறார்கள் . அது உண்மைதான் . ஆனால் இன்லேண்ட் கார்ட் வாங்கி எழுதும் அளவு்க்கு . என்னிடம் விஷயங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை . அஞ்சல் அட்டை எளிமையாக இருக்கிறது என்பதுதான் அதனைப் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் . எங்களது பத்திரிக்கையில் புதிதாக கணித பாடத்திற்கென உதவி ஆசிரியர் இணைந்துள்ளார் . அவர் கொஞ்சம் தடுமாறுவதால் வானியல் , இயற்பியலை எனக்கென பொறுப்பாசிரியர் ஒதுக்கியுள்ளார் . ஆனால் எனக்கு துணுக்குகள் எழுத தெரியும் . ஆனால் நீண்ட கட்டுரைகளை எழுதுவது கடினமான காரியம் . குங்குமத்தில் அப்படி அறிவியல் கட்டுரைகளை இரண்டே இரண்டு பேருக்கு எழுதியுள்ளேன் . அங்கு அறிவியலை எழுதுவதற்கு ஆட்கள் இல்லாத சூழலில் எனது மேசைக்கு வந்த வாய்ப்பு அது . மற்றபடி இவற்றை எழுதுவதற்கான சரியான ஆள் நான்த...

காமத்துப்பாலை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என அடையாளம் காட்டும் பாட்காஸ்ட்!

படம்
  ஜியோ சாவன் ஆப்பைத் திறந்து பாஸ்வேர்டு பஞ்சாயத்துகளை முடித்துவிட்டால், அடுத்து பாட்காஸ்டை திறங்கள். அதில்தான் வள்ளுவம் பேசும் காமம் என்ற பாட்காஸ்ட் உள்ளது. கட்டுமானக்கலைஞரான ஆதவன் சுந்தரமூர்த்தி திருக்குறளில் உள்ள காமத்துப்பால் குறள்களை விளக்கிப் பேசுகிறார்.  ஆரம்பமே அதிரடிதான். தன்னை பாட்காஸ்ட் தொடரில் ஆய்த எழுத்து என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பொதுவாக போர், வன்முறை, கோபம் என பலவற்றையும் பேசும் நாம்  அன்பைப் பேசும் இடங்களில் மௌனமே சாதிக்கிறோம். பள்ளிகளில் இதனை பலரும் நினைவுகூரமுடியும். ஆண், பெண் உடல் வேறுபாடுகளை அறிவியலில் நூலில் பார்த்து கூச்சப்படுவது, தமிழில் காமத்துப்பாலை ஜஸ்ட் லைக் தட் மனப்பாடம் செய்துவிடுங்கள் என சொல்லிவிட்டு தமிழ் ஆசிரியர், ஆசிரியை நகர்ந்து விடுவதன் காரணம் என்னவென்று இன்றுவரை யாருக்கும் புரியாது.  பவா செல்லத்துரை மூலம் ஊக்கம் பெற்று பாட்காஸ்டை உருவாக்கியுள்ள ஆதவன், பகிர்ந்துகொள்ளும் முதல் எபிசோட் விஷயங்களும் இதுதான். சிம்பிளான இன்ட்ரோவாக அமைகிறது. டிசம்பர் 2020இல் வள்ளுவம் பேசும் காமத்தைத் தொடங்கியிருக்கிறார். காமத்துப்பாலில் காதல், காம...