இடுகைகள்

நூல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரா பிரஸ் நூல்கள் - அமேசான் வலைத்தளம் மற்றும் கோமாளிமேடை

  ஆரா பிரஸ் நூல்கள்  - அமேசான் வலைத்தளம் 1.ஜனநாயக இந்தியா தமிழில் நேருவின் உரைகள் ச.அன்பரசு-வின்சென்ட் காபோ 2. நெ.1 சமூக தொழில் அதிபர் சமூகத்தை மேம்படுத்தும்  தொழில்களை தொடங்குவது பற்றிய நூல் அன்பரசு சண்முகம் 3. நட்பதிகாரம் புனைவு கடிதங்கள் அரசு கார்த்திக் - கா சி வின்சென்ட் 4. பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் ஹூவாய் (சீனா) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரலாறு அன்பரசு சண்முகம் 5. அசுரகுலம் -1(6 தொடர்வரிசை நூல்) கொலைகாரர்களின் கதை அசுரகுலம் 2 குற்றங்களின் முன்கதை அசுரகுலம் 3 ரத்தசாட்சி அசுரகுலம் 4 மனமெனும் இருட்குகை அசுரகுலம் 5 ரகசிய நரகம் அசுரகுலம் 6 உயிர்வேட்டை வின்சென்ட் காபோ  6. மயிலாப்பூர் டைம்ஸ்  அனுபவக் கட்டுரைகள்  லாய்ட்டர் லூன் 7. உதயமாகும் பேரரசன் ஆனந்த் மகிந்திராவின் வெற்றிக்கதை அன்பரசு சண்முகம் 8. நீரெல்லாம் கங்கை கடிதங்கள்  அன்பரசு 9. பன் பட்டர் ஜாம் 1,2 அரசியல் பகடி  விக்டர் காமெஸி - ரோனி அஜித் - ஆசாத்  10. ஒவ்வாமை ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு நூல் அரசு கார்த்திக் 11. டியர் ரிப்போர்டர் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூ...

ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்!

படம்
  ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்! நீங்கள் வரலாற்றை வலதுசாரி,மதவாதப் பார்வையில் பார்க்க வேண்டுமா அதற்கு கீழேயுள்ள நூல்கள் பல்வேறு தகவல்களை வழங்கும். இந்துத்துவா பார்வையில் உலகைப் பார்க்க தொன்மை வரலாற்று நூல்கள் உதவும். இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொன்மை இந்தியா அதாவது பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தில் இருந்த வேதகாலம் எப்படி பொற்காலமாக இருந்தது என்பதை நூல்களாக எழுத மாணவர்களை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக இப்படியான எழுத்தாளர்கள்தான் நேஷனல் புக் டிரஸ்டில் வரலாற்று நூல்களை எழுதி வருகிறார்கள்.  என்பிடி ஒரு அரசு நிறுவனம், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனத்தை ஆர்எஸ்எஸ் ஆட்களை வைத்து வளைத்து வரலாற்றை திருத்தி எழுதி வருகிறார்கள். அந்த வகையில் இந்த நூல்களையும் வலதுசாரிகள் வாசித்தால் குறைந்தபட்சம், டிவி விவாதங்களிலாவது உருப்படியாக ஏதாவது பேசித்தொலைய வாய்ப்புண்டு. இந்த நூல்பட்டியலை பரிந்துரைத்தவர் புகழ்பெற்ற நாளிதழ் ஆசிரியர் ஒருவர்.  நாம் குறிப்பிட்ட பார்வையை கோணத்தை உறுதி செய்துகொண்டு எந்த ந...

அனார்சிசம் பற்றி மேலும் அதிகமாக வாசிக்க தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு...

படம்
     

நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும்

படம்
    நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும் தமிழ்நாடு அரசு, பலநூறு எழுத்தாளர்களது நூல்களை நாட்டுடமையாக்கி, நூல்களுக்கு உரிய வாரிசுகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இப்படி சட்டப்பூர்வமாக பெறப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதை நூல் பதிப்பாளர்கள் பயன்படுத்தி நூல்களை அச்சிடலாம். விற்கலாம். வாரிசுகளுக்கு காப்புரிமை தொகையை தர அவசியமில்லை. இவ்வகையில் எழுத்தாளரது நூல்கள் மக்களுக்கு பரவலாக கிடைக்கும். நூல்களை நாட்டுடமையாக்கம் செய்வது நூலின் பரவலாக்கம் என்ற வகையில் சரி என்றாலும், காப்புரிமை தொகையை எழுத்தாளர்கள் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது என மாறுபட்ட விமர்சனக் கருத்துகளும் எழுந்து வருகிறது. அண்மையில் மறைந்த முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்கு உரிய தொகையை தமிழ்நாடு அரசு வழங்குவதற்கு முன்வந்தது. ஆனால், கருணாநிதியின் குடும்பத்தார் அதை மறுத்துவிட்டனர். ஏற்பது, மறுப்பது எழுத்தாளரது வாரிசுகளது சொந்த விருப்பம். உரிய தொகையை வழங்க முன்வருவது அரசின் கடமை. இந்த வகையில...

கணித்தமிழ் மின்னிதழ் வெளியீடு - தமிழ் இணையக் கல்விக்கழகம்

படம்
      தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் - டிஜிட்டல் நூலகப்பக்கத்தில் கணித்தமிழ் என்ற மின்னூல் வெளியாகி இருக்கிறது. இருபத்தி இரண்டு பக்கங்கள் கொண்ட இதழில், தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்ட முக்கியமான தமிழ் வளர்ச்சிப் பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மின்னிதழ் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்.   தொகுப்பாற்றுப்படை என்ற பக்கத்தில் சித்த மருத்துவ நூல்கள், அண்ணாவின் படைப்புகள் ஆகியவை உள்ளன. ஆர்வம் இருப்பவர்கள் சென்று நூல்களை வாசியுங்கள். அல்லது தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

வாசிக்க வேண்டிய நூல்கள்! இயற்கை சார்ந்தவை

படம்
  வைல்டர்  மில்லி கெர் ப்ளூம்ஸ்பரி பத்திரிகையாளர், கானுயிர் பாதுகாப்பாளர் மில்லி கெர் எழுதிய நூல். காடுகளில் செயல்படுத்தும் திட்டங்கள், காடுகளை வளர்ப்பது ஆகியவை பற்றி நூலில் கூறியுள்ளார். அர்ஜென்டினா தேசியப் பூங்காக்களுக்கு ஜாகுவார்கள் கொண்டு வரப்பட்டதையும், தென் ஆப்பிரிக்காவில் எறும்பு தின்னிகள் கொண்டு வரப்பட்டதையும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் வில்லி கெர்.  இல்லுமினேட்டட் பை வாட்டர்  மலாச்சி தாலக் டிரான்ஸ் வேர்ல்ட் மீன் பிடிப்பது அனைவருக்கும் ஏற்றதல்ல. ஆனால் அதை செய்பவர்கள் அனுபவித்து செய்வார்கள். எழுத்தாளர் மலாச்சி தாலக்கும் ஆங்கில கணவாயில் தான் மீன் பிடித்த அயர்ச்சியான அனுபவத்தை நூலாக எழுதியிருக்கிறார். கலாசார வேறுபாடுகள் இந்த பணியில் எப்படி இருக்கின்றன என்பதையும் கூறியிருக்கிறார்.   வைல்ட்லிங்க்ஸ்  ஸ்டீவ் பேக்ஷால், ஹெலன் குளோவர்  ஜான் முர்ரே  குழந்தைகளும் பெற்றோர்களும் சேர்ந்து செய்யவேண்டிய பல்வேறு ஆக்டிவிட்டிகள் நூலில் உள்ளன. அவற்றை வீட்டைவிட்டு வெளியில் தான் செய்யவேண்டும். இந்த நூல் அதுபோல நிறைய செயல்பாடுகளை பரிந்துரைக்கிறது. இதை செய்தால்...

காலநிலை மாற்றத்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த நூல்கள் இதோ!

படம்
  காலநிலை மாற்றம் பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள் தி நியூ க்ளைமேட் வார் - தி ஃபைட் டு டேக் பேக் அவர் பிளானட் மைக்கேல் இ மன் காலநிலை மாற்ற வல்லுநர் மைக்கேல் இ மன், டோன்ட் லுக் அப் என்ற டிகாப்ரியோவின் பட பாத்திரம் போலவே இருக்கிறார். அதாவது நாயகனாக இருக்கிறார் என சொல்ல வருகிறோம். மைக்கேல், நடப்பு கால காலநிலை மாற்ற செயல்பாடுகள் எதை செய்தன எதை தவறவிட்டன என்பதை தெளிவாக விளக்குகிறார்.  தி அன் இன்ஹேபிட்டபிள் எர்த் டேவிட் வாலஸ் வெல்ஸ்  காலநிலை மாற்றம் பற்றிய பயத்தை ஏற்படுத்துகிற நூல் என இதனை தாராளமாக கூறலாம். இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்னவாகும் என்பதை துல்லியமாக விளக்கியிருக்கிறார் டேவிட். பயம்தானே நம்மை முன்கூட்டியே செயல்படத்தூண்டும். அந்த வகையில் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட டேவிட்டின் இந்த நூல் ஊக்கமாக அமையலாம்.  தி நட்மெக்ஸ் கர்ஸ் - பாரபிள்ஸ் ஃபார் எ பிளானட் இன் கிரிசிஸ்  அமிதவ் கோஷ் காலனிய காலம் தொடங்கி இன்றுவரை முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயற்கையை அழிக்கிறது என அமிதவ் கோஷ் விலாவாரியாக தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார்....

இந்திய சிறைகளுக்குள் நூல்களுக்கு தடை!

படம்
  ஜிஎன் சாய்பாபா, மனித உரிமை செயல்பாட்டாளர் கடந்த மாதம் எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கௌதம் நவ்லகா, பிஜி வுட்ஹவுஸ் என்ற எழுத்தாளரின் நூல்களை வாசிக்க கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.  மும்பையிலுள்ள தலோஜா சிறை நிர்வாகம் இதற்கு அளித்த பதில், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று.  சிறைத்துறை அதிகாரிகள் நூல்களை, காகிதங்களை, நோட்டுகளை ஏன் அகராதிகளை கூட கைதிகளுக்கு கொடுக்காமல் இருப்பதும், பிறகு வழக்குரைஞர்கள் இதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்கு செல்வதும் புதிதல்ல. இப்படி சமூக செயல்பாட்டாளர் ஜோதி ஜக்தாப் என்பவருக்கு நூல்கள் மறுக்கப்பட்ட, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த உத்தரவு வந்து சேர்ந்தும் கூட இரண்டு மாதங்கள் ஆனபிறகே நூல்கள் ஜோதிக்கு வழங்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளுக்கு நூல்கள் மேல் உள்ள வெறுப்பை  இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.  2020ஆம் ஆண்டு நாக்பூர் சிறையில் ஜிஎன் சாய்பாபா அடைக்கப்பட்டிருந்தார். இவர் தெலுங்கு மொழி நூல்களை வாசிக்க கேட்டிருந்தார். ஆனால் சிறைத்துறை அதிகார...

தலைக்கு மேலே கூரை இல்லை! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புக்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா?  உங்களின் நிலைமை அறியாமல் தங்குவதற்கு இடம் கேட்டு சங்கடப்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன். நான் மனதில் உள்ளதை உடனே சொல்லிவிட்டேன். இனிமேல் நான் திருவண்ணாமலை வந்தால் விடுதியில் தங்கிக்கொள்கிறேன். தங்களைப் பார்க்கும் வாய்ப்பு திகைந்தால் பார்க்கிறேன். இதனை தங்களது பணிச்சூழலைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம். சென்னையில் இப்போதைக்கு நிறைய வேலைகள் இருப்பதால், ஒருநாளுக்கு மேல் தங்க முடியாது. குறைந்த விலை கொண்ட பட்ஜெட் விடுதியை நீங்கள் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்கும். எனக்கு திருவண்ணாமலை மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான இடம். ஆனால் உங்களுக்கு அதுதான் வாழிடமே. இரண்டிற்குமான வேறுபாட்டை உணரவில்லை. இனிமேல் தவறு நேராது.  கடிதம் எழுதுவது பற்றி இணையதளம் ஏதாவது இருக்கிறதா என தேடினேன். chitthi exchange,Mumbai chapter என பல்வேறு கடிதம் எழுதும் வலைத்தளங்கள் இருப்பதை இந்து நாளிதழில் எழுதியிருந்தனர். இது ஆச்சரியமான செய்தி.  மயிலை காபி என்ற கடையில் டீ  குடித்தேன். குங்குமத்தில் வேலை செய்யும் நண்பர் சக்தி அங்கு கூட்டிப்போனார். ஒர...

நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
pixabay நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்!  5.4.2021   அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். நலமா? நான் தற்போது ஈரோட்டுக்கு வந்துவிட்டேன். ஜூன் இறுதியில் நாளிதழ் வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அதுவரையில் நான் ஊரில் இருக்க திட்டமிட்டுள்ளேன். நீங்கள் கொடுத்த அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை இங்கே படிக்க எடுத்து வந்துவிட்டேன். அதில் பதிமூன்று பக்கங்கள்தான் படித்துள்ளேன். சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்து பயணம் பெரும் களைப்பை உடலில் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சேலம், சேலத்திலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து கரூர் என மூன்று பேருந்துகளில் ஏறி எட்டு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பயணிக்க வேண்டும்.  இப்படி பாடுபட்டு முக்கி முனகி வீட்டுக்கு வந்தால் இரவில் மின்சாரம் இல்லை. அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா? தட்டில் சோற்றைப் போட்டு சாப்பிடும் நேரத்தில்....  நூல்களை நூலகத்திற்கு தரும் உங்களது பழக்கத்தைப் பின்பற்றி, எங்கள் ஊர் நூலகத்திற்கு தர ஒன்பது நூல்களை எடுத்து வைத்துள்ளேன். இவை அனைத்துமே புத்தக திருவிழாவில் வாங்கியவைதான்.  தேர்தல் முடிந்தபிறகு நூல்களை கொண்ட...

அரசியல்வாதிகள் எழுதிய நூல்கள்! - காந்தி முதல் சல்மான் குர்ஷித் வரை....

படம்
  சீதாராம் யெச்சூரி தி ஸ்டோரி ஆப் மை எக்ஸ்பரிமென்ட்ஸ் வித் ட்ரூத் 1927 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஓம் புக்ஸ் 295 சத்திய சோதனை என்றாலே எழுதியது யார் என தொடக்கப்பள்ளி மாணவர் கூட சொல்ல முடியும். தென் ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றியது முதல் இந்தியாவுக்கு வந்து சுதந்திரப்போராட்டத்தில் இணைவது வரையிலான பயணம்தான் நூலின் பேசுபொருள். தனது வாழ்க்கையை பகிரங்கமாக வெளிப்படையாக பேசிய அரசியல்வாதி, போராளி காந்தி மட்டும்தான். இதனால் இன்றுவரையும் இவரை வலதுசாரி மதவாத கும்பல்கள் என்ன முயன்றும் புறக்கணிக்கவே முடியவில்லை.  மை ட்ரூத் 1980 இந்திரா காந்தி விஷன் புக்ஸ் 195 சிறுவயதிலிருந்து இந்திராகாந்தியின் வாழ்க்கையைப் பேசுகிற நூல் இது. கூடவே அரசியலில் உயர்வு, இறக்கம் என சொந்த வாழ்க்கையைப் பேசுவதோடு இந்தியாவின் வரலாற்றையும் உள்ளடக்கிய முக்கியமான நுல்.  ட்வென்டி ஒன் போயம்ஸ் 2001 வாஜ்பாய் பெங்குவின்  299 எண்பத்து எட்டு பக்கங்களை கொண்ட நூல்தான். வன்முறை, அதிகாரம், பாகுபாடு ஆகியவற்றைப் பற்றி பேசுகிற கவிதைகளைக் கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை பற்றிய பேச்சுகளையும் கொண்டுள்ள நூல் இது.  கப...

கொரோனாவை சந்தித்து மீண்டு வந்த இந்திய புத்தக கடைகள்! - நிலையை எப்படி சமாளித்தனர்?

படம்
            தாக்குப்பிடித்த புத்தக கடைகள் ! உலகம் முழுவதும் பொதுமுடக்கம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது . புத்தக கடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ? அப்படி தப்பி பிழைத்த புத்தக கடைகள் பற்றி இங்கு பார்ப்போம் . என்ன சாகசங்கள் செய்து ்தங்களை காப்பாற்றிக்கொண்டனர் என்பதை பார்ப்போம் . பாக்தண்டி புனே நேகா , விஷால் பிபாரியா ஆகியோர்தான் இந்த புத்தக கடையை நடத்தி வந்தனர் . பொதுமுடக்கத்தை எதிர்கொள்ள இவர்களுக்கு கிடைத்த ஐடியா , கிப்ட் வ வுச்சர்கள்தான் . அதனை தங்களது வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள கூறினர் . அப்படி வாங்கியவறை பிற்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளமுடியும் . இப்படிக் கிடைத்த தொகை மூலம் மூடப்பட்ட நாட்களை சமாளித்துள்ளனர் . ஆன்லைனில் வலைத்தளங்கள் கொடுக்கும் தள்ளுபடிகளை புத்தககடைகள் கொடுக்க முடியாது என்பது நிதர்சனம் . எங்களது வாடிக்கையாளர்கள் மூலமே நாங்கள் இன்றுவரை இயங்கி வருகிறோம் என்கிறார்கள் நேகா அ்ண்ட் கோ . விட்டுக்கொடுக்காமல் இருந்தது . புத்தக கடை என்பதை முழுமையான அனுபவமாக மாற்றியது இக்கடையின் வெற்றி என்கிறார்கள் . ரச்ச...

வாசிக்கவேண்டிய சாகச நூல்கள்!

படம்
பலரும் கொரோனா பாதிப்பால் தனிமையாக இருக்கும்படி நேரலாம். மேற்குலகில் தனியறையில் என்றால் இந்தியாவில் இங்கு குடும்பமே ஒன்றாக உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும். டிவியில் படங்கள் சுவாரசியமாக இருந்தாலும் நூல்களைப் போன்ற அனுபவங்களை திரைப்படங்கள் தருவது இல்லை. சில சுவாரசியமான திரில் தரும் நூல்களைப் பார்ப்போம். லத்தீன் குடும்பத்தில் பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்தவர் நோ ஆல்வாரெஸ். இவரது குடும்பத்தில் கல்லூரி படிக்கட்டில் கால் வைத்த முதல் ஆள் இவர். கனடா தொடங்கி குவாத்திமாலா வரை ஓடத்தொடங்கினார். இதன்பிறகுதான் அல்ட்ரா மாரத்தான்கள் பிரபலமாயின. இதுதொடர்பான அனுபவங்களை இந்த நூல் பேசுகிறது. அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்களுக்கு இப்போது போக முடியாது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? அதற்குத்தான் அந்த பூங்காக்களின் சிறப்பு என்ன, அங்குள்ள தாவர வகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிய இந்த நூல் உதவும். மியாமியிலுள்ள வின்வுட் வால்ஸ் என்ற இடம் பிரபலமானது. இந்த இடத்தில் பல்வேறு கலைஞர்கள் சுவர் ஓவியங்களை வரைந்திருப்பார்கள். அதனை படம் எடுக்க இளைஞர்கள் அலைமோதுகின்றனர். இங்கு சுவரோ...

கொரோனோ வைரசை முன்னரே கணித்த அமெரிக்க எழுத்தாளர்!

படம்
pixabay பொதுவாக எழுத்தாளர்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லுவதுண்டு. காரணம், அவர்கள் கற்பனையாக யோசித்த விஷயங்கள் திடீரென நிஜத்தில் நடக்கத்தொடங்கும். இதுபோல உலகம் முழுக்க நடப்பது உண்டு. அண்மையில் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவிவருகிறது. இதன் பாதிப்பை அமெரிக்க எழுத்தாளர் டீன் கூட்ஸ் 1981இல் தான் எழுதிய ஐஸ் ஆஃப் டார்க்னெஸ் என்ற நாவலில் குறிப்பிட்டுள்ளார். இதில் கொலைகார வைரஸின் பெயர் வூஹான் 400. இப்போது உலகம் முழுக்க பரவி வரும் வைரஸ் முதன்முதலில் பரவியது வூஹான் நகரத்திலிருந்துதான் என்பது நினைவுக்கு வருகிறதா? இந்நேரத்தில் மனதில் திகிலும் உடலில் நடுக்கம் இருந்தாலும் நீங்கள் வாசிக்கவேண்டிய இத்தகைய திகில் நாவல்களை சொல்லவேண்டியது எங்கள் கடமை. தி இலியட், ஹோமர் ஹோமர் எழுதிய கிரேக்க கவிதை. இது பிளேக் நோயால் அழிந்த மக்களின் துயர் பற்றி பேசுகிறது. அப்போலோவை கிரேக்க மக்கள் அவமரியாதை செய்ய அவர் கொடுக்கும் சாபத்தால் ஒன்பது நாட்களில் ஏராளமானவர்கள் இறக்கிறார்கள். இத்துயரத்தை இந்த நூல் பேசுகிறது.  தி கோப்ரா ஈவன்ட் – ரிச்சர்ட் பிரிஸ்டன் 1998 நியூயார்க் நகரில்...