இடுகைகள்

படுகொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வருத்தமோ குற்ற உணர்ச்சியோ கொள்ளாத இந்துஸ்தானத்தின் புதிய விதிகள்!

படம்
  இந்தியா, இந்துஸ்தானாக மாறத் தொடங்கிவிட்டது. இனி என்னென்ன விஷயங்களை நாம் நாளிதழ்களில் பார்ப்போம். அல்லது பார்க்க கட்டாயப்படுத்தப்படுவோம் என்பதைப் பற்றிய கற்பனை இது. அதேசமயம் சில விஷயங்கள் நடந்துகொண்டும் இருக்கலாம்.  வானொலிகளில் ஆன்மிக பாடல்கள் முழுக்க இந்து கடவுள்களைப் பற்றியதாகவே இருக்கும். சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கான பாடல்கள் ஒலிபரப்பப்படாது. மக்களிடம் வரிகளை வாங்கித்தானே அரசு ஒலிபரப்பு நிறுவனம் இயங்குகிறது என்று கூறினால், நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்.  அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் அனைவரும் வெளிநாட்டு பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், தேசத்தை முன்னேற்ற விரும்புவது மக்களின் தோளில்தான் உள்ளது. எனவே, அதிக விலை கொண்ட தரமற்ற உள்நாட்டு பொருட்களை மட்டுமேதான் வாங்கவேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ இனிமேல் அப்படித்தான். இதை சரிபார்க்க உறுதிப்படுத்த மதவாத கட்சியின் துணை அமைப்புகள் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குள் வருவார்கள். சோதனையிடுவார்கள்.  கூடுதலாக குளிர்பதனப்பெட்டி சோதனை தனி. சமையல் அறையில், இந்...

தலித் - உயிர் வாழும் பிணம் இலவச மின்னூல் வெளியீடு

படம்
\    நூலை இலவசமாக வாசிக்கலாம். தரவிறக்கி கொள்ளலாம். நூலை தமிழ் வாசிப்பு வலைதளங்கள், குறுஞ்செய்தி தளங்கள் தரவிறக்கி பதிவிட்டு பயன்படுத்துவது அவர்களது முழுப்பொறுப்பு. இதுதொடர்பாக வரும் புகார்களுக்கு கோமாளிமேடை குழு பொறுப்பல்ல.     https://www.academia.edu/129854276/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE_

இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிகள்தான், பிறகுதான் நாடு!

படம்
பிரிட்டிஷார் இந்தியாவை ஆளும்போது, ஒரே அரசாக மக்களை ஒன்றாக வைத்திருந்தனர். அவர்கள் 1947ஆம் ஆண்டு வெளியேறியவுடன் நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிந்துவிட்டது. நாகா பழங்குடிகளுக்கு தனி மாநிலம் வழங்கப்பட்டது. தனி மாநில கோரிக்கையை பலரும் கேட்டு வருகிறார்கள். சீக்கியர்கள், காலிஸ்தான் எனும் தனி நாட்டுக்காக போராடி வருகிறார்கள். இந்துமதம், இந்தியர்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்குகிறது. எனவே நாடு, பல்வேறு பிரிவு, துணைப்பிரிவுகளாக பிரிந்து வருகிறது. இந்தியாவில் இப்போது இந்தியர்கள் என யாருமே இல்லை. இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிதான். இதற்கெல்லாம் பிறகுதான் நாடு வருகிறது. இந்தியாவுக்கும் வெளிநாட்டினர் இதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் உள்ள இந்துகள் கூட தீண்டாமை, சாதி விதிகள், பிரிவினைகளை கடைபிடிக்கிறார்கள். இந்துகள் அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் அவர்களது சாதியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களுக்கு நடக்கும் அநீதி, ஆரியர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு செய்வதை ஒத்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்க...

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களை வைத்து முஸ்லீம்களை படுகொலை செய்து வருகிறார்கள்!

படம்
  இந்து சாதி முறை அமைப்பு உலகிலேயே இந்தியா ஒரு சிக்கலான நாடு என வெளிநாட்டு தோழர்களுக்கு கூற விரும்புகிறேன். ஆரியர்கள்தான் இரண்டு உலகப்போருக்கு காரணம் என ஜெர்மன் நாட்டு தத்துவவாதிகளைக்கூட நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள கல்வியாளர்கள் கூட இந்துமதத்தின் மர்மங்களை கண்டறிய முடியவில்லை. வயது மூப்படையாத, இறக்காத ஒன்றாக இந்துமதம் இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய மதம். இந்த சாதி அமைப்பு, நான்கு பிரிவுகளைக் கொண்டது. மேலிருந்து கீழ் எனும் பிரமிடு சாதி அடுக்குமுறை கொண்டது. மறுபிறவியை அடிப்படையாக கொண்டு ஒருவர் செய்த புண்ணியம் மேல்சாதியிலும் பாவம் கீழ்சாதியிலும் பிறக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். இந்துமதத்தில் சர்வ சக்தியும் ஆற்றலும் கொண்டவர்களாக பார்ப்பான்கள் உள்ளனர். இவர்கள் சாதி அடுக்கில் முதலாக இடம்பெறுகிறார்கள். இவர்களே நாட்டை, கட்சிகளை, ஆட்சித்தலைவர்களைக் கூட கட்டுப்படுத்துகிறார்கள். இந்த மேலாதிக்க இந்துமதம் ஆரியர்களின் கண்டுபிடிப்பு. தனியாக ஒருவரை ஒடுக்குவதை விட அமைப்பு ரீதியாக என்றென்றைக்குமாக ஒடுக்கும் அற்புத ஆற்றலைக் கொண்டது. உலகின் எட்டாவது அதிசயம் எ...

நகரில் திடீரென நெருப்பால் எரிந்து இறந்துபோகும் மனிதர்கள்! - பின்னணியை ஆராயும் இரண்டு காவல் அதிகாரிகள்!

படம்
  அல்டிமேட் சீக்ரெட் சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப்  சீன நகரம். அங்கு நடைபெறும் அரசியல் பிரச்னைகளால் அதன் நிம்மதியை அழிக்க சிலர் முயல்கிறார்கள். அதற்காக பேய் கொலை செய்கிறது என நம்பும்படியான ஜெகஜால பேய் முகமூடி தோற்றத்தில் சிலரை நெருப்பால் எரித்துக் கொல்கிறார்கள். அதைப்பற்றி காவல்துறை அதிகாரிகள் இருவர் எப்படி விசாரித்து அறிகிறார்கள் என்பதே கதை.  சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மருந்துப்பொருள் பற்றிய கதை. ஆனால் அதை கதையில் கொண்டு வந்து விளக்குவதற்குள் நமக்கு படம் பார்க்கும் ஆர்வமே போய்விடுகிறது. நாயகன், காவல்துறை அதிகாரி. ஆனால் எப்போதும் சரக்கு போட்டுக்கொண்டு விலைமாதுக்களின் மடியே கதியென்று கிடக்கிறான். ஏன் அப்படி? அவனுக்கென்று முன்னாள் காதலி இருப்பாள். ஆனால் அவள் இன்னொரு வசதியான ஆளை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டாள் என்பதே காரணம். அந்த செய்தி, அதிலுள்ள உண்மை மனதை வருத்தும்போதெல்லாம் நாயகன் மது அருந்துகிறான். எப்போதெல்லாம் வருந்துகிறான்? எப்போதுமேதான். படம் முழுக்க நாயகன் மது போதையிலேயே இருக்கிறான்.  இவனுக்கு நேர் மாறாக ஆன்ம ஆற்றல் கொண்டவனாக இன்னொரு காவல் அதிகாரி, பச்சை...

டாய்ச்சி கல்லை அடைவதற்காக அழிக்கப்படும் இனக்குழு!

படம்
  டாய்சீஸ் பீஸ்ட் மவுண்ட் சீன திரைப்படம் ஒன்றரை மணிநேரம் ஐக்யூயி ஆப் டாய்ச்சி இனக்குழுவில் டாய்ச்சி கல் உள்ளது. அது சக்திவாய்ந்த ஒன்று. அதை கையகப்படுத்தினால் அவர் சகலகலா வல்லவன் ஆகிவிடலாம் என நம்பிக்கை, வதந்தி எல்லாம் இருக்கிறது. இதை யாரோ பரப்பிவிட பல்வேறு சக்தி வாய்ந்த இனக்குழுக்கள் டாய்ச்சி இனக்குழுவை ஓரிரவில் தாக்கி அழிக்கின்றன. அதில் மிஞ்சுவது, நாயகனும் அவனது தோழியும்தான். இருவரும் சிறு வேலைகளை செய்து பிழைத்து வருகிறார்கள். தங்கள் குடும்பத்தை அழித்த பகைவர்களை பழிவாங்க நாயகன் நினைக்கிறான். அதற்கான காலமும் வருகிறது. உண்மையில் அவனது இனக்குழுவைக் காட்டிக்கொடுத்த துரோகி யார்? அவன் அம்மா வயிற்றில் இருந்த பிறக்கும் தருவாயில் இருந்த குழந்தை எங்கே? டாய்ச்சி கல் சக்தி வாய்ந்த ஒன்றா என்பது பற்றிய கேள்விகளுக்கு படம் விடை தருகிறது.  பழிவாங்கும் வெறி நம்மை அழித்துவிடும் என சொல்லி படத்தை சோகமான முடிவுடன் முடித்திருக்கிறார்கள். சோகம் என்று சொல்வதா, விதி என்று சொல்வதா? நாயகன், அவனுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போக அவள் எதிரியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துபோகிறாள். இவனும் கூட நினைவிழ...

மாணவர்களை வலுவானவர்களாக மாற்ற முயலும் பலவீனமான தற்காப்புக்கலை ஆசிரியர்!

படம்
  வீக் டீச்சர்  மாங்கா காமிக்ஸ் நாம்கூங் இனக்குழுவில் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இதில், கடைசியாக உள்ள பையன் பலவீனமாக இருக்கிறான். அதற்கு முக்கியமான காரணம், சிறுவயதில் அவனுக்கு மர்ம நபர் கொடுக்கும் விஷ மாத்திரை. அந்த மாத்திரை காரணமாக அவனது உடலில் விஷம் பரவி, அவனது ஆன்ம ஆற்றலை குன்ற வைக்கிறது. அவனை எல்லாருமே இழிவாக பேசுகிறார்கள். நாம்கூங் குடும்பத்தின் அவமானம் என பேசுகிறார்கள். யாருமே அவனுக்கு ஆதரவாக இருப்பதில்லை. அவனது அண்ணன்கள் கூட பாராமுகமாக இருக்கிறார்கள்.  முரிம் கூட்டமைப்பில் உள்ள ஒயிட் அகாடமியில் நாம்கூங் மே சேர அவனது அப்பா உத்தரவிடுகிறார். அவன் அங்கிருந்து மூன்று மாதங்களில் திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் என்பது அண்ணனின் உத்தரவு. அப்படி வரவில்லை என்றால் மூத்த அண்ணனே அங்கு வந்து கூட்டிச்கொண்டு வந்துவிடுவதாக கூறுகிறார். எனவே, வேகமாக வலிமையாக முயல்கிறான். அங்கு செல்பவனுக்கு பார்க்கவே பலவீனமாக உள்ள ஆசிரியர் பயிற்சி அளிக்கிறார். உண்மையில் அவர் டிமன் பிளவர் லீக் என்ற படுகொலை குழுவின் கேப்டன் கிவி என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. உண்மையில் அ...

மாணவர்களை படுகொலை செய்த காவல்துறையை ஆதரித்துப் பேசிய அமெரிக்க மக்கள்!

படம்
  சில மனிதர்கள் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகளில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றே நம்ப முடியாது. அந்த வகையில் பீதியூட்டும்படி நடந்துகொள்வார்கள். நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கூட அவன் என்ன பைத்தியமா என கூறும்படி நடவடிக்கை இருக்கும். இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர் உளவியலாளர் எலியட் ஆரோன்சன்.  இப்படி நடந்துகொண்டவர்களை பைத்தியம் என பிறர் நினைக்கலாம். ஆனால் அப்படி உடனே முடிவுக்கு வரவேண்டியதில்லை என்று ஆரோன்சன் கூறுகிறார். சிலர், வன்முறை, குரூரம் அல்லது முன்முடிவுகளின்படி செயல்படுவது உண்டு. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்படுகிறார்கள் என ஆரோன்சன் கருதினார்.  இதற்கு ஆதாரமாக ஆரோன்சன் காட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1970ஆம் ஆண்டு, ஓஹியோவில் உள்ள கென்ட் மாகாண பல்கலைக்கழகம். இங்கு, அமெரிக்க அரசு, கம்போடியாவுக்குள் நுழையக்கூடாது என மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். அப்போது தேசிய காவலர் ஒருவர், மாணவர்களுடன் வாக்குவாதம் முற்றி துப்பாக்கியை அவர்கள் புறம் திருப்பினார். விளைவாக, நான்கு மாணவர...

விடுதலைப்புலிகளை கோரமான கொலையாளிகளாக காட்டும் பிரசாரப் படம்!

படம்
  குற்றப்பத்திரிக்கை இயக்கம் ஆர் கே செல்வமணி ராம்கி , ரகுமான் , ரோஜா , ரம்யா கிருஷ்ணன் ஶ்ரீபெரும்புதூரில் நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையும் , அதற்கு காரணமான விடுதலைப்புலிகள் பற்றிய விசாரணையும்தான் கதை . படம் அரசாங்க பிரசாரப்படம் போலவே எடுக்கப்பட்டிருக்கிறது . அதாவது , படத்தில் ஒரே கோணமே காட்டப்பட்டிருக்கிறது . இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார் . அதற்கான திட்டத்தை எப்படி விடுதலைப்புலிகள் தீட்டினர் , செயல்படுத்தினர் . அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரை எப்படி பயன்படுத்திக்கொண்டனர் என்பதைக் காட்டுகிறார்கள் . கூடவே , அரசியல் படுகொலையோடு நிற்காமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் கூட கொல்ல நினைக்கும் கொலைவெறி கொண்டவர்களாக சித்திரிக்கிறார்கள் . அங்குதான் மொத்த படத்தின் நோக்கமே வீழ்ந்துபோகிறது . பார்வையாளர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது . படம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் வழக்குகளை சந்தித்து வெளியாகியிருப்பதை டைட்டில் கார்டில் காட்டுகிறார்கள் . ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை புகைப்படமாக எடுத்து அதை படத்த...

பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு

படம்
  பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு ரா அமைப்பு பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளை விளையாடி வருவது பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் ஆதரவு தலைவரை கொல்வார் என யாரும் நினைத்திருக்க முடியாது. இதுபற்றிய உளவுதுறை தகவலை கனடா பெற்று, இந்தியாவின் ரா அமைப்பு படுகொலைக்கு காரணம் என வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் பேசியது. இது இந்தியாவுக்கு தர்மசங்கடமாக ஆகிப்போனது. கொலைக்கு ஆதரவான தடயங்கள், ஆதாரங்களை கனடா இந்தியாவுக்கு தரவில்லை. அரசியல்ரீதியாக அவற்றை தர முடியாது என்றாலும் கூட இந்தியாவை நேரடியாக குற்றம்சாட்டியது மேற்கு நாடுகளுக்கே சற்று அதிர்ச்சிதான். சீக்கியர்கள் கனடாவில் பெரும்பான்மையினராக வசித்து வருகிறார்கள். கனடா அரசின் அமைச்சர்களாகவும் சீக்கியமதத்தினர் இருக்கிறார்கள். எனவே, அவர்களில் ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரிலுள்ள குருத்துவாராவுக்கு வழிபாட்டிற்கு சென்ற...

கொல்லப்பட்ட முஸ்லீம்கள், சீக்கியர்கள், வல்லுறவு செய்யப்பட்ட காஷ்மீர் பெண்கள் பற்றியும் பேசலாமே? - பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்

படம்
  பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா முன்னாள் முதல் அமைச்சர், காஷ்மீர் விவேக் அக்னிஹோத்ரி என்ற இயக்குநர் காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்தி படத்தை எடுத்துள்ளார். படம் சின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் எடுத்துக்கொண்ட கதை தீவிரமானது. காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் எப்படி  விரட்டப்பட்டனர் என்பதை படத்தில் காட்டியிருந்தனர். குறிப்பாக, முதல்வராக இருந்த பரூக் அப்துல்லாவையும் மோசமாக சித்திரித்திருந்தனர். இதைப்பற்றி அவரிடம் பேசினோம்.  தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைப் பற்றி என நினைக்கிறீர்கள்? அது குறிப்பிட்ட அரசியல் கருத்தை முன்வைக்கும் படம்.  1990இல் நடந்த பிரச்னையைப் படம் பேசுகிறது. அதில் மாநிலத்தில் இருந்த அனைத்து மக்களுமே பாதிக்கப்பட்டனர். மத தூய்மை  சார்ந்த செயல்பட்டவர்களை இது தொடர்பாக தண்டிக்க வேண்டும் என்பது உண்மை. அது மோசமான நிலைமை தான். இதற்காக, முஸ்லீம் மக்களை ஒட்டுமொத்தமாக மோசம் என்று கூற முடியுமா? இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் நாம் இதற்காக தண்டிப்பது தவறானது. இந்த படம் ஏற்படுத்தும் வெறுப்புவாதம், பிரசாரம் இருபது சதவீத மக்களை 80 சதவ...

உக்ரேன் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல்களின் வரிசை!

படம்
  உக்ரைன் பற்றித்தான் பேச்சு. பலரும் பெருந்தொற்று காலத்தில் போனை எப்படி நோண்டிக்கொண்டே பதற்றத்துடன் இருந்தார்களோ இப்போதும் அதேயளவு பழக்கம் அதிகரித்து வருகிறது என ஊடகங்கள் சர்வே எடுத்து சொல்லி வருகின்றன. போர் காட்சிகள், அழுகை, மரண ஓலம் என அனைத்தும் உடனுக்குடன் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஷ்ய இலக்கியத்தை நிறையப் பேர் படித்திருப்பார்கள். அதன் வழியாக ரஷ்ய நிலப்பரப்பு பற்றி அறிந்தவர்கள் பலர். ஆனால் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, தனியாக சுதந்திர நாடுகளான பல நாடுகளைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவு. இப்போது நாம் பார்க்கப்போகும் நூல்கள் உக்ரைன் பற்றியதுதான்.  தி கேட்ஸ் ஆப் யூரோப் எ ஹிஸ்டரி ஆப் உக்ரைன் செர்கி புளோகி ஹார்வர்ட் உக்ரேனியன் ஆராய்ச்சி கழக தலைவர் புளோகி. இவர் உக்ரைன் நாடு சுதந்திர நாடாகவும் தனி அடையாளத்திற்காகவும் கி.மு.45,000 ஆண்டுகளாக முயன்று வந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இந்த ஆதாரங்களும் சம்பவங்களும் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதோடு நிகழ்காலத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது.  கிரே பீ...

இனவெறியை சட்டம் மூலம் நீக்கிய ஆப்ரஹாம் லிங்கன்!

படம்
  ஆபிரஹாம் லிங்கன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க வரலாற்றில் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மகத்தான இடம் உண்டு. இவர்தான், துணிச்சலாக உள்நாட்டுப் போரையும் சமாளித்து அடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.  தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அரசுக்கும் மாகாணங்களுக்கும் போர் தொடங்கியது. 1861 தொடங்கி 1865 ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது.  அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் நிறைய ஜவுளித்துறை மில்கள் இயங்கி வந்தன. இதன் அடிப்படையே அடிமைகளை வைத்து வேலை வாங்கி கொழிப்பதுதான். இதனை அமெரிக்க அரசு ஒழித்தவுடன், இவர்கள் அதனை ஏற்கவில்லை. தங்களிடமுள்ள அடிமைகளை சுதந்திரமாக வாழ விடவில்லை. எனவே, வடக்கு புறமுள்ள மாகாணங்களோடு மோத தொடங்கினர்.  இந்த நேரத்தில் வடக்குப்புற மாகாணங்களை வழிநடத்துபவராக அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் இருந்தார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.  1860ஆம் ஆண்டு லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரின் அடிப்படை ஆதாரமே , லிங்கன் அடிமை மக்களுக்கு வழங்கிய சுத...

வலிமையான சீர்திருத்தங்களை முன்னெடுத்த இந்திரா காந்தி! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  இந்திராகாந்தி பதில் சொல்லுங்க ப்ரோ? இந்திராகாந்தியை ஏன் வலிமையான தலைவர் என்று சொல்லுகிறார்கள்? இந்திரா பிரியதர்ஷின் காந்தியின் குடும்பமே, அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அவரது தாத்தா மோதிலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர். மனைவி கமலா மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து வெளிவரலாம் என்ற வாய்ப்பையும் மறுத்தவர். தனது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அதில் உலக வரலாறையே கூறியிருப்பார்.  1917ஆம் ஆண்டு நவ.19 அன்று இந்திரா பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்தியாவில் நடைபெறும் விஷயங்களை அவர் கவனித்து வந்தார். தனது ஐந்தாவது வயதில் மேட் இன் இங்கிலாந்து தயாரிப்பு பொம்மையை நெருப்பிட்டு எரித்தார். 1921ஆம் ஆண்டான அன்று, சுதேசி இயக்கம் தீவிரமாக இருந்தது. தனது பனிரெண்டாவது வயதில் வானர சேனை ஒன்றைத் தொடங்கி, அதில் மாணவர்களை இணைத்தார். இவர்களின் வேலை, சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு ரகசிய செய்திகளை கொண்டுபோய் கொடுப்பது, நோட்டீஸ்களை சுவரில் ஒட்டுவது, தேசியக்கொடிக...