ஆள் மாறாட்டத்தால் தங்கத்திருட்ட பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் பங்காருராஜூ- இதே கோல்ட் இஹெ
இதே கோல்ட் இஹெ இயக்கம் - வீரு போட்லா இசை - சாகர் மகதி தலைப்பில் கூறியது போல சிரிக்கும் புத்தர் சிலை ஒன்றைத் திருடுகிறார் ஒருவர். சிலையை பறிகொடுத்த கும்பல் அதை தேடுகிறபோது, மாட்டுகிறவர்தான் பங்காரு ராஜூ. நேர்மையாக இருந்து வேலை செய்யும் இடத்தில் எல்லாம் வம்பும் வழக்குமாக இழுத்துவிடுபவர். தங்க கடத்தல் பிரச்னையில் மாட்டுகிறார். எப்படி அதிலிருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை. படத்தில் சுனில் தான் நாயகன் என்பதால், காமெடியில் அடக்கி வாசிக்க அவரது சக நண்பர்கள் எல்லோரும் அட்டகாசம் செய்கிறார்கள். குறிப்பாக தன் நண்பன் பங்காருவிடம் கூட புரோபெஸ்னலாக திருடும் சகலகலா சங்கர். இவர் வரும் காட்சிகள் மட்டும் தான் படத்தில் சற்று ஆறுதலாக இருக்கின்றன. மற்றபடி படத்தில் வரும் காட்சிகள் 70,80 கால திரைப்படங்களில் சற்றேறக்குறைய சுட்டதுதான். அம்மா சென்டிமென்ட் காட்சி, அவர் சுனிலை தனது மூத்தமகனாக ஏற்பது, அவரை அடிக்கும்போது சுனில் கண்கள் சிவப்பாவது, சுஷ்மா ராஜை கடத்திச்செல்லும்போது மெல்ல அவருக்குள் கோபம் வந்து அடிப்பது என படத்திற்குள் அவர்களை அவர்களே கிண்டல் செய்துகொள்கிறார்களா என நாம் யோ...