இடுகைகள்

நிதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்லைன் வணிகத்தில் முதலை - அலிபாபாவின் வெற்றி

படம்
  ஆன்லைன் வணிகத்தில் முதலை சீனாவில் உள்ள ஆன்லைன் வணிகத்தில் எண்பது சதவீதம் ஆதிக்கம் செலுத்துவது அலிபாபா. இபே, அமேசான் ஆகிய தளங்களை ஒன்று சேர்த்தால் வரும் வருமானத்தை விட அதிகம். ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம், சிறுகுறு வணிகர்களை இணையத்தின் வழியாக இணைக்கிறது. 2014ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனம்.  இபே நிறுவனம், சீனாவில் தொடங்கப்பட்டபோது அலிபாபா அதை எதிர்கொள்ள தாபோபாவோ என்ற இணையத்தளத்தை தொடங்கியது. ஆன்லைன் வணிகத்தில் பொருளை விற்பவர், இணையதளத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும். அலிபாபாவின் தாவோ இணையத்தளத்தில் அப்படி எந்த தொகையும் தரவேண்டியதில்லை. இபேவின் தளத்தில் பொருட்களை விற்க காசு கட்டவேண்டும். தாவோ தளம் நேரடியாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றது.  அப்போது ஆன்லைன் வணிகத்தில் சீனா திறன் பெற்றிருக்கவில்லை. பொருட்களை வாங்கிவிட்டு இணையத்தில் பணம் கட்டுவதற்கு வசதி கிடையாது. வங்கிகள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாமே வங்கிகளை மாற்றுவோம் என்றார் மா. அதன்படி, அலிபே என்ற இணையவழி பணம் செலுத்தும் வசதியை உருவாக்கினார். நாடெங்கிலும் உள்...

திவாலாகும் வங்கி!

படம்
        பாயும் பொருளாதாரம் 15 திவாலாகும் வங்கி உள்நாட்டு உற்பத்திக்கு அரசு சில தொழில்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. சில இனக்குழுவினரின் உழைப்பை கருத்தில் கொள்வதில்லை. இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. முறையாக அவர்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் வருமானம் ஆவணங்களில் பதிவாகியிருக்காது. வங்கியில் கடன் பெறவும் மாட்டார்கள். உண்மையில் நிறைய பெண்கள் திருமணத்திற்கு முன்னர் வேலைக்குப் போய் சம்பாதிப்பார்கள். திருமணமான பிறகு வீட்டில் சமையல் வேலை பார்த்து சட்டி கழுவிக்கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்று வம்சத்தை தழைக்க வைப்பார்கள். அவர்களை வேலை செய்கிறார்கள் என யாரும் கருதுவதில்லை. பெண்கள் தங்களின் சொந்த செலவுக்கு கூட வேலை செய்யும் கணவனை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள். சில நிறுவனங்களில் பாலின பாகுபாடு உண்டு. ஒரே வேலை ஆனால் ஆணுக்கு ஒரு சம்பளம், பெண்ணுக்கு ஒரு சம்பளம் என தரம் பார்ப்பார்கள். சாதி, மதம், இனம் பார்த்து சம்பளம் போடும் கிறுக்கு புத்திக்காரர்களும் நிறுவனத்தில் உண்டு. ஏன் இப்படி குறைத்து சம்பளம் போடுகிறீர்கள் என்றால் அதற்கு உனக்கான தகுதி இதுத...

வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்!

படம்
          வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்! ஜீப்ரா சத்யதேவ், பிபிஎஸ், சத்யா, தாலி தனஞ்செயா தெலுங்கு இதுவும் ஒரு வங்கியை ஏமாற்றும் அதிகாரியைப் பற்றிய கதை. அதாவது வங்கிக்குள்ளே இருந்துகொண்டே ஊழலை எளிதாக கண்டுபிடிக்காத வகையில் செய்கிறார். அப்படி செய்யும்போது, மாஃபியா டான் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு ஐந்து கோடியை நான்கு நாட்களில் திரட்டுமாறு மிரட்டப்படுகிறார். அதை நாயகன் எப்படி சமாளித்தார் என்பதே கதை. இயக்குநர் ஈஸ்வர கார்த்திக் நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார். வணிக ரீதியான குத்துப்பாட்டு உண்டு. நாயகி பவானியுடன் அடல்ஸ் ஒன்லி வசனங்களை வைத்தே காதலை சொல்லிவிட்டு அடுத்த விஷயத்திற்கு செல்கிறார்கள். பிரியா அக்கட தேசத்தில் காட்டும் தாராளம் பொறாமையாக உள்ளது. விஷாலுக்கு அம்மாவாக நடித்தே சாதனை செய்துவிட்டவரை என்ன சொல்வது?   நாயகன் சூர்யா, அபார்ட்மென்ட் ஒன்றை காசுக்கு வாங்கி நீரிழிவு நோய் வந்த அம்மாவை குடிவைக்க ஆசைப்படுகிறார். அதேநேரம், இன்னொரு வங்கியில் வேலை செய்யும் காதலியைம் மணக்க நினைக்கிறார். அதற்கு காசு வேண்டுமே... அதற்கு வங்கியில் உள்ள சட்ட ...

அதானி குழுமம் பங்கு மோசடி செய்து வளர செபி தலைவர் சிந்திய வியர்வை!

படம்
            செபியின் தலைவர் மாதபி, அதானி குழுமத்தின் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க முடியாததற்கு, வினோத் அதானியின் நிறுவனங்களில் அவர் செய்திருந்த பங்கு முதலீடும் முக்கிய காரணம் என ஹிண்டென்பர்க் கருதுகிறது. இன்றைய தேதிவரை செபி அமைப்பு, அதானி குழுமம், அதன் பங்குதாரர்கள், இந்தியா இன்போலைன் ஆகியோர் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதில் இஎம் ரீசர்ஜென்ட் பண்ட், எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்தியா இன்போலைன் நிறுவனம் இப்போது பெயர் மாறி 360 ஒன் என செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய நிறுவனங்களைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளோம். இந்தியா இன்போலைனின் ஆண்டு அறிக்கைப்படி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு எண்ணிக்கை, விலை அதானி குழும நிறுவனங்களால் போலியாக ஊதி பெருக்கப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. ஃபினான்சியல் டைம்ஸ் இதழ் செய்த விசாரணையில், அதானி  வணிக நிறுவனங்களை, முன்னே நிறுத்திவைத்துவிட்டு, மறைமுகமாக இந்திய சட்டவிதிகளை மீறி பங்குவிலைகளில் முறைகேடு செய்துள்ளார் என தெரிய வ...

பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டிற்கு பயன்தரும் விஷயங்கள்!

படம்
      பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அறிக்கையில், அறிவிக்கப்பட்ட மற்ற திட்டங்களில் இருந்து ஏதேனும் பயன்கள் உண்டா என்று பார்ப்போம். வேளாண்மை இத்துறையில் உள்ள ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்படவிருக்கின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை வைத்து எளிதாக விவசாய கடன்களைப் பெறலாம். 102 வீரிய பயிர் ரகங்கள், காலநிலை மாற்றத்தை தாங்கும் 32 தோட்டப்பயிர் ரகங்கள் அறிமுகமாகியுள்ளன. பருப்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை பயிரிடவும் ஒன்றிய அரசு முனைந்துள்ளது. இயற்கை விவசாய பிரசாரமும் இதில் கூடுதலாக இணைந்துள்ளது. இவற்றை தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ளலாம். சிறுகுறு தொழில்கள் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக சிறு, குறு தொழில்கள் அதிகம் கொண்டதாக தமிழ்நாடு உள்ளது. வேலை சார்ந்த ஊக்கத்தொகையை ஒன்றிய அரசு வழங்கவிருப்பதால், புதிய பணியாளர்கள் சிறுகுறு தொழில்துறையில் அதிகம் சேரக்கூடும். புதிதாக படித்துவிட்டு தொழில்துறைக்கு வரும் அனுபவமில்லாதவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்குவது சிறுகுறுதொழில்துறை மட்டுமே. அண்மைக்கா...

ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி!

படம்
  ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி! ஜெர்மனியின் போன் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாடு எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. இதில், பொருளாதார இலக்கு ஒன்றை தீர்மானிக்க இருந்தனர். 2024ஆம் ஆண்டு இறுதியில் ஆண்டுக்கு நூறு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கு தாண்டி செல்லவேண்டும் என்பதே லட்சியம். அப்போதுதான் காலநிலை மாற்ற திட்டத்திற்கு வளரும் நாடுகளுக்கு உதவ முடியும். வரும் நவம்பர் மாதம் அஜர்பைஜானில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற மாநாடுக்கு முன்னதாக நிதி இலக்கை திட்டமிட இருந்தனர். ஆனால் நோக்கம் நினைத்த திசையில் செல்லவில்லை. காலநிலை மாற்ற அறிக்கையில் நாற்பத்தைந்தாவது பக்கம், இன்புட் பேப்பர் என்ற சொல் உள்ளது. இதில், நாடுகள் வழங்கும் நிதி, அது செலவழிக்கப்படும் விதம், அதை அமைப்பினர் கண்காணிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்துகளை அழுத்தம் கொடுத்து கூற வாய்ப்புள்ளது. காலநிலை மாற்றத் திட்டங்களில் நிதியாதாரமே முக்கியப் பங்கு வகிக்கிறது. பணம் செலவிடப்படும் விதம், ஏற்பட்ட தாக்கம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவது 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை...

எர்டோகனுக்கு ஆதரவில்லாத நிலைமை - உள்ளூர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

படம்
  துருக்கியில் அதிபருக்கு எதிரான நிலை - உள்ளூர் நிர்வாகத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி துருக்கியில் அதிபராக உள்ளவர் ரிசெப் எர்டோகன். இவரது கட்சி, நீதி மேம்பாட்டு கட்சி. அண்மையில் அங்கு நடந்த உள்ளூர் தேர்தலில் அவரது கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிகாரத்தை சுவைத்து வரும் எர்டோகனுக்கு இது பெரிய சறுக்கல்.  துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, குடியரசு மக்கள் கட்சி. இந்த கட்சியினர், உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டு 36 முனிசிபாலிட்டிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர், புர்சா, அன்டால்யா ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளடங்கும்.  தேசிய அளவிலான தேர்தலில் எர்டோகன் வென்று ஓராண்டு கூட நிறைவடையவில்லை. அதற்குள் அதிபருக்கும், அவரது கட்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  தேர்தலில் எதிர்க்கட்சிகள் 37 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. 2019ஆம் ஆண்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதிபரின் நீதி மேம்பாட்டுக் கட்சி, 36 சதவீத வாக்குகளை உள்ளூர் தேர்தலில் பெற்றது. அதிபரின் கட்சி, இஸ்தான்புல் நகரை இழந்து...

நாட்டை நிலைநிறுத்த போராடி வரும் ரிசர்வ் வங்கிக்கு வயது 90!

படம்
  ரிசர்வ் வங்கிக்கு வயது 90 இன்று அனைத்து ஜனநாயக அமைப்புகளும் சீரழிவுப்பாதையில் உள்ளன. காவிக்கட்சி ஆட்கள் உள்ளே புகுந்து எளிய மக்களின் நம்பிக்கையாக உள்ள அனைத்து அமைப்புகளையும் உருக்குலைத்து வருகிறார்கள். அதில் முக்கியமான அமைப்பு, ரிசர்வ் வங்கி.  1935ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட மத்திய வங்கி நிர்வாக அமைப்பு. நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளுக்குமான நெறிமுறைகள், நிதி நிர்வாகம், பணநோட்டுகள் மேம்பாடு, பணவீக்கம் கட்டுப்பாடு, வட்டிவிகிதம், வங்கிமுறையை சீரமைப்பது ஆகியவற்றை செய்து வருகிறது. தொண்ணூறாண்டு பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்துள்ளது ரிசர்வ் வங்கி.  செயல்பாடு ஏப்ரல் ஒன்று என்றாலும் திட்டம் தொடங்கியது, 1935ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி. அப்போதே அரசியலமைப்பு சட்டப்படி உரிமைகள், கடமைகள், வகுத்து தனியாக சுயாட்சியாக செயல்படுவதற்கான சிந்தனைகள் வடிவம் பெற்றுவிட்டன. முதல் ஆளுநராக ஆஸ்பர்ன் ஆர்கெல் என்பவர் பொறுப்பேற்றார். சிடி தேஷ்முக் என்பவர் முதல் இந்திய ஆளுநராக பொறுப்பேற்றார்.  பிரிவினை காலத்தின்போது பாகிஸ்தான், இந்தியா என இருநாடுகளுக்குமான நிதி நிர்வா...

பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும்! - லீனா நாயர்!

படம்
  லீனா நாயர் leena nair by alana semules பெண்கள் உயிர்பிழைத்தால் உலகமும் உயிர் பிழைத்திருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர் லீனா நாயர். அந்த நம்பிக்கையில்தான் தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு வருகிறார். ஆறு ஆண்டுகள் யுனிலீவரில் வேலை செய்தார். தற்போது சேனல் என்ற பேஷன் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். இவர் பொறுப்புக்கு வந்தபிறகு, நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள உள்ள பெண் தலைவர்களின் எண்ணிக்கை அறுபது சதவீதமாக அதிகரித்துள்ளது.  நமக்கு பின்னே ஆற்றல் வாய்ந்த தலைவர் பின்னே உள்ளார் என்பதை அறியவேண்டிய காலம் இது. நாங்கள் கலந்துரையாடலின்போது, தங்கள் கருத்துகளை கூற வரும் அனைவரையும் கவனித்து அவர்களின் குரல்களையும் கேட்கிறோம் என்றார் லீனா நாயர். சானல் நிறுவனத்தின் அறக்கட்டளை ஃபாண்டேஷன் சானல் அமைப்புக்கு கொடுக்கும் நிதி கூடுதலாகியுள்ளது. இருபது மில்லியன் டாலர்களிலிருந்து நூறு மில்லியன் என நன்கொடை நிதி அதிகரித்துள்ளது. இந்த நிதியை வைத்து திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள், மாங்குரோவ் காடுகளை வளர்க்கும் பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகள் ஆகியோருக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறார...

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு

படம்
  காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு காலநிலை மாற்றம் என்பதைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஒருவிதமாகவும், வளரும் நாடுகள் ஒருவிதமாகவும் நடந்துகொள்கின்றன. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற விதிகளை பயன்படுத்தி வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றன. வளரும் நாடுகள், பணக்கார நாடுகளின் விதிகள் தங்களுக்கு பொருந்தாது. நாங்கள் இன்னும் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று கூறி பசுமை விதிகளை அமல் செய்ய மறுக்கின்றன. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை அமல்படுத்த குறிப்பிட்ட தொகையை வளர்ந்த நாடுகள் தர வேண்டியிருக்கும். இதற்கான அடித்தளத்தை காப்29, அசர்பைஜானில் நடக்கும் மாநாடு அமைக்கும் என நம்பலாம்.  துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல் வளங்களை மூன்று மடங்கு வளர்ச்சி கொண்டதாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நடப்பு ஆண்டில், இலக்கு என்பது நாடுகள் அளிக்க வேண்டிய நிதியாக இருக்கும். இதை என்சிக்யூஜி என சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள். புதிய ஒருங்கிணைந்த கூட்டு இலக்கு என தமிழில் கூறலாம்.  2025ஆம் ஆண்டு தொடங்கி வளர்ந்த ந...

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பெண்மணி!

படம்
  நாடியா முராத் nadia murad நாடியா முராத், ஈராக்கில் பிறந்தவர்.அவருக்கு இருந்த ஒரே கனவு பெண்கள், சிறுமிகளுக்கான அழகுக்கலை சலூன் ஒன்றைத் தொடங்கி நடத்தவேண்டும் என்பதுதான். ஆனால் அவர் பிறந்த இனத்தின் பெயரால் அவரது கனவுகள் நொறுக்கப்பட்டன. ஈராக்கின் வடக்குப் பகுதியில் இருந்த கோஜோ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடியா. யாஷிடி இனக்குழுவைச் சேர்ந்தவர். சலூனில் ஒன்றாக பெண்கள் சந்தித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை.  2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் நாடியா உட்பட ஆறாயிரம் பெண்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலின்போது, நாடியாவின் அம்மா, உறவினர்கள், தோழிகள் கொல்லப்பட்டனர். கடத்திவரப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகினர். மூன்று மாதங்கள் சித்திரவதைகளை அனுபவித்த நாடியா, அங்கிருந்து தப்பி 2015ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார். தன்னார்வ அமைப்பொன்றைத் தொடங்கியவர், பாலியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்து உதவத் தொடங்கினார்.  2017ஆம் ஆண்டு தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டார்....

குழந்தை பத்திர முறையை உருவாக்கியவர்கள்!

படம்
  டாரிக் ஹாமில்டன் - வில்லியம் டாரிட்டி darrick hamilton -william darity 2023ஆம் ஆண்டு, ஜூலையில் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் நகரம், அங்கு பிறக்கும் புதிய குழந்தைகளுக்கு 3200 டாலர்களை வங்கிக்கணக்கில் செலுத்துவதாக கூறி, அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாட்டிலேயே முதல்முறையாக நடைமுறைக்கு வந்த குழந்தை பத்திர முறை இதுவே. பதினெட்டு தொடங்கி முப்பது வயது வரையில் மேற்கண்ட தொகை பெருகி 24 ஆயிரம் டாலர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதை வைத்து ஒருவர் தனது கல்லூரிக்கான செலவை சமாளிக்க முடியும். குழந்தை பத்திர திட்டத்தில் தற்போது, 15 ஆயிரம் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை டாரிக் ஹாமில்டன் உருவாக்கினார். அதை நண்பரான வில்லியம் டாரிட்டியிடம் கூறினார். இப்படித்தான் திட்டம் சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.  ஹாமில்டனுக்கு வயது 53. கருப்பினத்தவர்களின் பொருளாதார வளம் சார்ந்து ஆய்வுசெய்து வருகிறார். பொருளாதாரம், நகரக்கொள்கைகள் துறை சார்ந்த பேராசிரியராக வேலை செய்கிறார். 2022ஆம் ஆண்டு ஆய்வுப்படி, நடுத்தர வெள்ளை இன குடும்பத்தின் செல்வம், கருப்பினக் குடும்பத்தை விட ஆறு மடங்கு அதிகம். கலிபோர்...

கருப்பின பெண் தொழில்முனைவோருக்கு உதவும் முதலீட்டு நிறுவனம்!

படம்
  அரியன் சைமன் - அயானா பார்சன்ஸ் arian simone, ayana parsons கருப்பின பாகுபாடு என்பது மேற்குலக நாடுகளில் சாதாரண ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. சமநீதி, ஒரே சட்டம் என்றாலும் மறைமுகமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கீழே தள்ள நிறவெறியர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம், அவர்களிடம் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதற்கு நிதி முதலீட்டையும் பெருமளவு பெற்றுவிடுகிறார்கள். இவர்களோடு போராடி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேரளவுக்கு முதலீடு பெறமுடிவதில்லை.  ஆண்களே முக்கி முனகும்போது, கருப்பின பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்யும் தொழில்களுக்கு முதலீடு செய்யவே ஃபியர்லெஸ் ஃபண்ட் என்ற முதலீட்டு நிறுவனம் உருவானது. இதை 2018ஆம் ஆண்டு அரியன் சைமோன் தொடங்கினார். இவருடன் கூட்டாளியாக அயானா பார்சன்ஸ் இணைந்துள்ளனர். இவர்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குகிறார்கள்.  இதுவரை 44 நிறுவனங்களில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, வெள்ளையர்கள்தான். பெண்கள் தொடங்கும் நிறுவன...

டெக் உலகில் மாற்றுப்பாலினத்தவர்கள் காலூன்ற உதவுபவர்! - ஆஞ்செலிகா ரோஸ்

படம்
  john hope bryant அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காம்டனில் பிறந்தவர். அன்றைய நாளில் அங்கு போதைப்பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறந்தது. அதுதான் பெரும்பான்மையானவர்களுக்கு சம்பாதிக்கும் வழிமுறையும் கூட. ஜானுக்கு பத்து வயதாகும்போது, அவர் படிக்கும் பள்ளிக்கு தொழிலதிபர் ஒருவர் வந்தார். நேர்மையான தொழில் செய்து சம்பாதிப்பதை அவர் மூலமே ஜான் அறிந்து நம்பிக்கை கொண்டார். இன்று 57 வயதானாலும் கூட அந்நாளை நினைவுகூர்ந்து பேசினார். வறுமையான நிலையில் உள்ள மக்கள், தங்களது தொழில் ஐடியாவை நிஜமாக்க நடைமுறையில் சாத்தியப்படுத்த முதலீட்டை ஈர்க்க முடியும். வாய்ப்புகளைப் பெறமுடியும். அதற்கு ஜான் உதவுகிறார்.  1992ஆம் ஆண்டு, ஜான் ஆபரேஷன் ஹோப் என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு, ஏழை மக்களுக்கு நிதி சார்ந்த கல்வியை இலவசமாக வழங்குகிறது. வறுமையில் வாடும் இனக்குழுவுக்கு தொழில் மூலம் முன்னேறுவது எப்படி என வழிமுறைகளை ஹோப் அமைப்பு கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள ஆயிரம் இடங்களில், 300 அலுவலகங்களில் ஹோப் அமைப்பு தனது பயிற்சிகளை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் ஷாப்பிஃபை அமைப்புடன் இணைந்து கருப்பின தொழ...

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள்!

படம்
  தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை - விவாதங்கள் 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம், தனிநபர்கள், பெருநிறுவனங்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை பிறர் அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியும். தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். அதை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அவர்கள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.  இதுபற்றிய வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்கை இடதுசாரி கட்சி தொடுத்து நடத்தியது. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனோடு மேலும் பலரும் பங்கேற்றனர்.    தகவலறியும் உரிமைச்சட்டம் 19 (1) படி விதிகளை மீறி, தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்படும் நன்கொடை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என வாதாடப்பட்டது. அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மக்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. இதில...

கல்வி, மனநலன் ஆராய்ச்சிக்கென தானமளிக்க தொடங்கியுள்ள தொழிலதிபர்கள்!

படம்
  Graeme hart rank group க்ரீம் ஹார்ட் தலைவர், ரேங்க் குழுமம் வயது 58 நியூசிலாந்து க்ரீம் ஹார்ட் இன்றைக்கு பல்வேறு பொருட்களை அடைத்து விற்கும் பேக்கேஜிங் பொருட்களை விற்கலாம். ஆனால், அவருக்கு ஒருகாலத்தில் பள்ளியில் படிக்கும்போது, பள்ளிப்படிப்பை தொடரமுடியாத பொருளாதார சூழ்நிலை இருந்தது. தற்போது பால் பாக்கெட், குடிநீர் புட்டிகள், காகிதம், அலுமினிய தாள் ஆகியவற்றை தயாரித்து வழங்கிவருகிறார். இவரின் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.  அண்மையில் ஸ்டார்ஷிப் எனும் குழந்தைகள் மருத்துவமனைக்கு ஹார்ட், அவரது மனைவி ராபின் ஆகியோர் இணைந்து 3.8 மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளனர். அந்த மருத்துவமனை தொடங்கி 32 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த மருத்துவமனைக்கு கிடைத்த தனிநபர் நன்கொடையில் இதுவே அதிகம். கிடைத்த நிதியில், தீவிரமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை பராமரிக்கவும், செவிலியர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 2018ஆம் ஆண்டு, ஹார்ட் தம்பதியினர் 10 மில்லியன் டாலர்களை ஒடாகோ பல்கலைக்கழகத்திற்கு வழங்கினர். ஆக்லாந்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரிக்கு 28.2 ...

வறுமையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய தொழிலதிபர்!

படம்
 ரமோன் ஆங்க் அதிபர், இயக்குநர், மிகுல் கார்ப் வயது 69 பிலிப்பைன்ஸ்  Ramon ang miguel corp சுயம்பாக முளைத்தெழுந்த தொழிலதிபர். மணிலாவில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளி கட்டுவதற்காக ஒன்பது மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளார். மதுபானம், உணவு, வங்கி, ஆற்றல், மின்சாரம், சாலை பராமரிப்பு நிறுவனங்களை ரமோன் நடத்தி வருகிறார். நாட்டின் வலிமையை, வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களின் கல்வி, திறன் அதிகரிக்கவேண்டும். வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்ல வயது வந்தோருக்கும் கூட நல்ல பணி கிடைக்கவேண்டும். அல்லது அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும். அதற்கான திறன்களை வழங்க முயல்கிறோம் என்று தான் வளர்ந்த டோன்டோ மாவட்டத்தில் பள்ளி வளாகம் ஒன்றைத் தொடங்கி வைத்து பேசினார்.  ரமோன், சான் மிகுல் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் வழியாக பள்ளிகளைக் கட்டுவது, கோவிட் 19 நிவாரண நிதி, நகர ஆறுகளை தூய்மைப்படுத்துவது, கல்விக்கான உதவித்தொகை, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. ஆர்எஸ்ஏ பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பிற்கும் கல்வி சார்ந்து நிதி நல்கையை கொடுக்கிறது.  -ஜ...

ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

            காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம் . ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது . காடு , இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது . நாளிதழ்கள் , வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம் , சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள் , மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன . ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும் . ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள் . அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள் . அவர்களை எதிர்க்க த் துணிவார்களா கடினம் தான் . குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம் . இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள் . இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டு லிவ்விங் கார...