இடுகைகள்

மூசா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்துபோனவராக கருதப்பட்ட ராணுவ வீரர் திரும்ப கிராமத்திற்கு வருகிறார்!

படம்
  மெயின் ஹூம் மூசா மலையாளம் சுரேஷ்கோபி கேரள கிராமம். அந்த கிராமத்தில் மூசா என்ற ராணுவ வீரர் பிரபலம். கார்கில் போரில் பலியானதால், அவருக்கு சிலை வைத்து கல்லறையைக் கூட ஊரின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் இறந்துபோனதாக கருதப்படும் மூசா பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறார். அங்குள்ள அவரின் நண்பர்கள், உறவு, குடும்பம் எல்லாம் என்னாகிறது என்பதே கதை. ஒரு ராணுவ வீரன், அவனுடைய குடும்பம், அவனை மறந்துவிட்டது. அவனை பயன்படுத்தி உள்ளூரில் வாக்குகளைப் பெறுகிறார்கள். அவனது மனைவி, மூசாவின் தம்பியை மணந்துகொள்கிறாள். மூசா ராணுவத்தில் வேலை செய்து செத்து்ப்போனதால் ஓய்வூதியம் கிடைக்கிறது. அதை முழுக்க அனுபவிக்கிறார்கள். ஆனால், மூசா உயிரோடு திரும்ப வரும்போது, அவனைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் அனைவருமே அவன் செத்துப்போயிருந்தால் நல்லது என நினைக்கிறார்கள். ஒரே ஒரு விதிவிலக்கு. அவன் பால்ய நண்பன் மட்டுமே. அவன் சாராயக்கடை ஒன்றை நடத்துகிறான். மூசாவை தனது வீட்டில் தங்க வைத்து பார்த்துக்கொள்கிறான். மூசா இறந்துவிட்டதாக அனைவரும் நம்புகிறார்கள். அவன், ராணுவ அலுவலகத்திற்கு சென்று தனக்கு நேர்ந்...