இடுகைகள்

சமையல் எண்ணெய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமையல் எண்ணெய்யை எரிபொருள் கண்டெய்னரில் ஏற்றிச்சென்ற சீன அரசு நிறுவனம்!

படம்
            சமையல் எண்ணெய்யும், எரிபொருட்களும் ஒரே கன்டெய்னரில்..... சீனாவில் புலனாய்வு செய்தி என்பது அரிதிலும் அரிதானது. அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, நாடு முழுவதிலுமுள்ள ஊடக செய்திகளைக் கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட செய்திகளை பரப்ப வேண்டுமெனில் பரப்புகிறது. இல்லையெனில் அவற்றை நீக்கிவிடுகிறது. அந்த வகையில், அண்மையில் சமையல் எண்ணெய்யை எரிபொருள் லாரியில் கொண்டு சென்றது தொடர்பான செய்தி ஒன்றை வெய்போ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியது. பெய்ஜிங் நியூஸ் என்ற ஊடகம், சீன அரசு நிறுவனம் ஒன்று, தனது எரிபொருள் லாரியில் கொண்டு சென்ற சமையல் எண்ணெய்யை சுகாதாரமின்றி கையாண்டதை புலனாய்வு செய்து கட்டுரையாக நாளிதழில் பிரசுரித்தது. அதுதொடர்பான வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டது. அதில் வேடிக்கை, சுகாதார சிக்கலுக்கு உள்ளானது சீனாவின் அரசு நிறுவனம். அதன் பெயர் சினோகிரெய்ன். இந்த நிறுவனம் தொடர்பான விசாரணைகளை சீன அரசு தொடங்கியது. இப்படி தொடங்குவதற்கு வெய்போவில் பயனர்கள், அரசை குறைசொல்லி பதிவுகளை இடத்தொடங்கியதே முக்கிய காரணம். முறையாக விசாரணை செய்து தவறுகளை தீர்ப்ப...

சமையல் எண்ணெய்யை விமான எரிபொருளாக பயன்படுத்தலாம்!

படம்
  சுவாசிக்கும்போது, ஒரு நேரத்தில் நாசித்துவாரங்களில் இரண்டில் ஒன்று மட்டுமே வேலை செய்யும்! உண்மை. மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதையும் சரியாக கவனித்துப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நீங்கள் உணர முடியும். குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு ஒருமுறை இப்படி மூச்சுத்துளைகளில் காற்று உள்ளிழுக்கப்படுவது இடது, வலது என மாறும். இந்த மாற்றம் உடலில் தன்னியல்பாக நடைபெறுகிறது.  பேக்கேஜிங்கில் பயன்படும் பபுள் ரேப், சுவர்களில் ஒட்டவே தயாரிக்கப்பட்டது! உண்மை. இதனை உருவாக்கியவர்கள் பொறியாளர் அல் ஃபீல்டிங், மார்க் சாவென்னஸ் ஆகியோர்தான். இவர்கள் இதனை சுவர்களில் தாள் போல அலங்காரமாக ஒட்டலாம் என நினைத்தனர். 1957ஆம் ஆண்டு,  தாம் தயாரித்த பபுள்ரேப், பொருட்களை உடையாமல் கொண்டு செல்ல பயன்படும் என்பதை நடைமுறைரீதியாக உணர்ந்தனர். அதனால்தான், அதனை நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.  நத்தைகளுக்கு கூர்மையான பற்கள் உண்டு!  ரியல் உண்மை. நத்தை இனங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் போன்ற நாக்கும், சிறு பற்களும் கொண்ட தாடையும் உண்டு. இதற்கு ராடுலா (Radula) என்று பெயர். உணவுப்பொருட்களை குறிப்பிட்ட அளவில் கத்தரித்த...