சூழலியல் மாறினால்,மக்களின் தினசரி வாழ்க்கையும் மாறி மேம்பாடு அடையும் - இம்மானுவேல் மாக்ரன்,அதிபர் பிரான்ஸ்


 காலநிலை மாற்றம் - தேவைப்படும் செயல்பாடுகள் என்னென்ன?


காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா சபை மாநாடு நடைபெற்று பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. 195 உலக நாடுகள், மாநாட்டில் பங்கேற்று வெப்பநிலை இரண்டு டிகிரிக்கு அதிகமாக செல்லாமல் தடுப்பதாக உறுதிகூறின.அப்படி உயர்ந்தாலும் ஒன்றரை டிகிரி செல்சியஸ் அளவுதான் அதிகபட்ச அளவு. பிரான்ஸ் நாடு, இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்து செயல்பட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகு நாம் எவ்வளவு தொலைவுக்கு முன்னேறி வந்துள்ளோம் என்பதைப் பெருமையாக பார்க்க முடிகிறது. 


தொண்ணூறுகளோடு ஒப்பிடும்போது, நாங்கள் முப்பது சதவீத பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்துள்ளோம். இதில், 2014-25 காலகட்டத்தில் இருபது சதவீத அளவு என்பதும் உள்ளடங்கும். 2017ஆம் ஆண்டுக்கு முன்னர், பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் செயல்பாடு ஒரு சதவீதம் என்றுதான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு வரையில், அரசு எடுத்து முயற்சி காரணமாக அந்த அளவு இரண்டு சதவீதமாக அதிகரித்துள்ளது. 22-25 ஆண்டு காலத்தில் பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்துவது நான்கு சதவீதமாக கூடியுள்ளது. இது தோராய அளவுதான். 


நம்முடைய இலக்கு, 2030ஆம் ஆண்டுக்குள் ஐம்பது சதவீத அளவில் பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதே. இதை துல்லியமாக கூறுவதென்றால், ஆண்டுதோறும், 270 மில்லியன் டன்கள் அளவுக்கான கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் இருந்து நீக்க வேண்டும். 


இந்த செயல்பாட்டில் வளர்ச்சி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு ஆகியவற்றையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. நாம், முறையான மாற்று ஆதாரங்களை பரிந்துரைக்காமல், விதிகளை இயற்றி சந்தையில் போட்டியிடும் திறனை, இழக்கும் நிலையை விரும்பவில்லை. தெளிவான வாய்ப்புகளின் மூலம் இறையாண்மை, வேலைவாய்ப்பு, கார்பன் நீக்கம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். எப்படி செய்வது?


சூழல் என்பது பொருளாதாரம், திட்டமிடல், ஆற்றல், வேளாண்மை, தொழில்துறை கொள்கை ஆகியவற்றின் இதயம் போன்றது. கார்பன் வெளியீட்டில் நடுநிலை என்பதே அனைத்து கொள்கைகளையும் உருவாக்க உதவுவதாக உள்ளது. அரசின், தேசிய குறைந்த கார்பன்  நிலைப்பாடு என்பதே முக்கியமான அம்சம். இதற்கான ஆறு கொள்கைகளைப் பார்ப்போம். 


மரியாதை மற்றும் அறிவியலை பாதுகாத்தல்


காலநிலை மாற்ற செயல்பாட்டில், நம்மை ஐ.நா சபையின் துறை, வல்லுநர்களின் ஆதரவில் வழிகாட்டி அறிக்கைகளை தயாரித்து வழங்குகிறது. அதன் அடிப்படையில் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்து வருகிறோம். கார்பன் இல்லாத தீர்வுகளை 2030ஆம் ஆண்டை திட்டமிட்டு செய்து வருகிறோம். பல்வேறு துறைகளில் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி ஊக்குவித்து வருகிறோம். இதில் அணு ரியாக்டர்கள் முதல் ஹைட்ரஜன் எரிபொருள், நீர் மேலாண்மை ஆகியவை உள்ளடங்கும். சில சமயங்களில் அறிவியல்  குரல்களுக்கு சவால்கள் விடுக்கப்படும்போது, புதிய ஆராய்ச்சியாளர்களை ஈர்த்து துறையை வேகப்படுத்த வேண்டும். 


இறக்குமதி எரிபொருளை சார்ந்திருத்தலை நிறுத்துதல்


2027ஆம் ஆண்டோடு நிலக்கரியால் இயங்கும் மின்சார உற்பத்தி ஆலைகளை மூட அல்லது அவற்றை மாற்ற முடிவெடுத்துள்ளோம். கார்பனைக் குறைப்பது, சுயசார்பான ஆற்றல் ஆதாரங்களைத் தேடுவது என்பது தேசிய அளவில் நாட்டிற்கு காலநிலை மாற்ற செயல்பாட்டில் உதவும். கரிம எரிபொருட்கள் பயன்பாட்டை குறைப்பது, புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களை மேம்படுத்துவது, அணுசக்தியை மீண்டும் பயன்படுத்துவது பற்றி, 2022ஆம் ஆண்டே பெல்ஃபோர்டில் அறிவித்திருந்தேன். 2024ஆம் ஆண்டு, மின் உற்பத்தியில் 95 சதவீதம் கார்பன் வெளியீடு குறைந்திருந்தது. 2050க்குள் கடலைக் கடந்து காற்றாலைகளை அமைக்க திட்டமிட்டு வருகிறோம். அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமான வேலைகளை செய்து வருகிறோம்.  


கார்பன் வாயுவைக் குறைக்க தொழில்துறைக்கு உதவுதல்


பிரான்சிலுள்ள தொழில்துறையை மறுதொழில்மயப்படுத்துவதன் பொருள், அதை கார்பன் வாயு இல்லாததாக மாற்றுவதேயாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறை சார்ந்த பசுமை முதலீடு முப்பது சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் மூன்றில் ஒரு தொழிற்சாலை பசுமை தொழில்நுட்பம் சார்ந்தது. ஏற்கெனவே, பிரான்சில் பத்து சதவீத பசுமை இல்ல வாயு வெளியாகும் ஐம்பது  தொழிற்பேட்டைகளில்  கார்பன் வாயுவைக் குறைக்கும் செயல்பாடுகளை தொடங்கிவிட்டோம். 2030ஆம் ஆண்டில், அவை வெளியிடும் வாயுக்களின் அளவு பாதியாக குறைந்துவிடும். மின் வாகனங்கள், பேட்டரிகள், சோலார் பேனல்கள், வெப்ப பம்புகள் என  பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வேலைவாய்ப்பும் கூடும். ஐரோப்பிய கமிஷன், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் திட்டங்களைப் பற்றி அறிவிப்பார்கள் என நம்புகிறேன். அத்திட்டம் வெளியாகும்போது, ஐரோப்பா, கார்பன் வெளியீட்டை குறைக்கும் திட்டங்களை தீட்டியுள்ள முக்கிய இடமாக மாறும். 


மக்களுக்கான வளர்ச்சி


சூழலியல் என்பது மக்களின் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியது. மக்கள் பயன்படுத்துகிற மின்சார கட்டணம் குறையும். பிரான்ஸ் நாடு, கரிம எரிபொருட்களை சார்ந்து இருக்கும் கட்டாயம் குறையும். இந்த வகையில் மக்கள் வாங்கும் சக்தி கூடும். சமத்துவம் அதிகரிக்கும். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் புதிய வாகனங்களை வாங்கும் பொருளாதார வலிமை பெறுவார்கள். இவர்களுக்கு மாதம் நூறு யூரோ நிதியுதவியாக வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் மேலும் ஐம்பதாயிரம் குடும்பங்கள் பயன்பெற வாய்ப்புள்ளது.  


காலநிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ளல்


காலநிலை மாற்றம் காரணமாக எழும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். பிரான்ஸ் நாட்டில் மூன்றாவது தேசிய மாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் உள்ளூர் தொடங்கி தேசிய அளவில் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்த முடியும்.

 


உலகம் மற்றும் ஐரோப்பாவிற்கான போர்


2050ஆம் ஆண்டு கார்பன் அளவை முற்றாக குறைக்கும் இலக்கு, ஐரோப்பாவிற்கு உள்ளது. ஐரோப்பிய யூனியன், உலகில் காலநிலை சார்ந்த நிதியை வழங்கும் முன்னிலையான அமைப்பு. பிரான்ஸ் நாடு, பாரிஸ் ஒப்பந்தம், காலநிலை செயல்பாட்டிற்கு பொறுப்பாளராக செயல்பட்டது. 2017ஆம் ஆண்டு, நான் 'ஒரு பூமி' எனும் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தினேன். அதில், கார்பன் வாயுவை குறைப்பது, அதற்கேற்ப தொழில்துறையினரோடு ஒத்துழைப்பு ஆகிய விவகாரங்களை உரையாட முடிந்தது. அந்த மாநாட்டிலிருந்து இன்றுவரை காலநிலை மாற்றத்திற்காக ஐம்பது திட்டங்களை உருவாக்கியுள்ளோம். 


குன்மிங் மாண்ட்ரியல் உலக பன்மைத்தன்மை திட்டம், கடல் ஒப்பந்தம் ஆகியவற்றை ஐ.நா சபை ஏற்று, பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு 4 பில்லியன் டாலர்கள், உணவு பாதுகாப்பு, பன்மைத்தன்மைக்கு 19 பில்லியன் டாலர்கள் என திட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்ஸ் நாடு கடல்சார் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கார்பனைக் குறைக்கும் திட்டத்திற்கு உதவ முன்வரும் தனியார் நிறுவனங்களின் நிதி முதலீட்டை வரவேற்கிறோம்.பெலேமில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாடு 2030க்கு இதுதான் எங்களுடைய செய்தி. 




மூலக்கட்டுரை

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரன் - மின்ட் நாளிதழ்


புகைப்படம் விக்கிப்பீடியா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!