பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டிற்கு பயன்தரும் விஷயங்கள்!
பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அறிக்கையில், அறிவிக்கப்பட்ட மற்ற திட்டங்களில் இருந்து ஏதேனும் பயன்கள் உண்டா என்று பார்ப்போம். வேளாண்மை இத்துறையில் உள்ள ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்படவிருக்கின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை வைத்து எளிதாக விவசாய கடன்களைப் பெறலாம். 102 வீரிய பயிர் ரகங்கள், காலநிலை மாற்றத்தை தாங்கும் 32 தோட்டப்பயிர் ரகங்கள் அறிமுகமாகியுள்ளன. பருப்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை பயிரிடவும் ஒன்றிய அரசு முனைந்துள்ளது. இயற்கை விவசாய பிரசாரமும் இதில் கூடுதலாக இணைந்துள்ளது. இவற்றை தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ளலாம். சிறுகுறு தொழில்கள் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக சிறு, குறு தொழில்கள் அதிகம் கொண்டதாக தமிழ்நாடு உள்ளது. வேலை சார்ந்த ஊக்கத்தொகையை ஒன்றிய அரசு வழங்கவிருப்பதால், புதிய பணியாளர்கள் சிறுகுறு தொழில்துறையில் அதிகம் சேரக்கூடும். புதிதாக படித்துவிட்டு தொழில்துறைக்கு வரும் அனுபவமில்லாதவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்குவது சிறுகுறுதொழில்துறை மட்டுமே. அண்மைக்கா...