இடுகைகள்

இந்தியா- தேசியவிருது விஞ்ஞானி! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புவியியல் ஆராய்ச்சிக்கு விருது வென்ற பெண் விஞ்ஞானி!

படம்
புவியியல் ஆராய்ச்சியாளருக்கு விருது! 1970 ஆம் ஆண்டு ஐஐடி ரூர்க்கியில் புவி இயற்பியல் படித்த குசலா ராஜேந்திரன், தனது புவியில் ஆராய்ச்சி பணிகளுக்காக இந்திய அரசின் ஆராய்ச்சியாளர் தேசிய விருதை வென்றுள்ளார். இவ்விருதை வெல்லும் முதல் பெண் விஞ்ஞானி இவரே. “இந்தியாவில் பெண்கள் தாங்கள் விரும்பிய லட்சியத்தில் 10% கூட சாதிக்க ஏற்புடைய சூழல் இல்லாத நிலையில் என்னால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடிந்தது அதிர்ஷ்டகரமான சூழ்நிலை” எனும் குசலாவுக்கு நிலநடுக்கம் தொடர்பாக செய்த ஆய்வுப்பணிகள் தேசிய விருதினை பெற உதவியுள்ளன.  ஐஐடி ரூர்க்கியில் படித்த ஆறு மாணவர்களில் இவர் மட்டும்தான் ஒரே பெண். இதனால் மூத்த மாணவர்கள் மட்டுல்ல வகுப்பிலுள்ள சக மாணவர்களின் உதவிகளைப் பெறுவதும் எளிதானதாக இல்லை. 1987 ஆம் ஆண்டு தெற்கு கரோலினா பல்கலையில் முனைவர் பட்டம் வென்றவர், 1993 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்தவர், தற்போதுவரை இந்திய அறிவியல் கழகத்தில் துணை பேராசிரியராக பணிபுரிகிறார். குசலாவும் கணவர் சி.பி. ராஜேந்திரன் லத்தூர் நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு ...