இடுகைகள்

ஜாட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிணை வழங்கி குற்றம் செய்த சாமியார்களை தேர்தலுக்காக பயன்படுத்தும் அபாயகரமான தந்திரம்!

படம்
               குற்றவாளிகளைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியை பெற நினைக்கும் மதவாத சக்திகள்! உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவரைப் பார்க்கப் போய் நிறைய மக்கள் நெரிசலில் சிக்கி இறந்துபோனதை இணையத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள். அந்த சர்ச்சைக்குள்ளான சாமியாரை காவல்துறை நெருங்கமுடியவில்லை. முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் பதிவிடப்படவில்லை. அவரின் பெயர்தான் நாராயணன் சாகர் ஹரி. போல் பாபா என மக்களால் அழைக்கப்படுபவர், ஜாதவ் எனும் தலித் இனக்குழுவில் பேராதரவு கொண்டவர். அந்த மக்கள்தான் இவரை அதிகளவு பின்தொடர்கிறார்கள். வட இந்தியாவில் சாமியார்களுக்கும் அவர்களின் மடங்களுக்கும் பஞ்சமேயில்லை. அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்கப்படுவதைப் போலவே சாமியார்கள் அனைத்து சாதிகளுக்கும் மோட்சத்தை வழங்குகிறார்கள். மடத்தை கட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களை வைத்துத்தான் அங்கு விழாக்களும், திருமணங்களுமே நடக்கிறது. நடப்பதே பிராமண இந்துத்துவ பாசிச அரசு என்பதால், அவர்களுக்கு உதவும் சாமியார்களை,அரசு கைது செய்யாது. துணிச்சலும் இல்லை. இதுதான் நடைமுறை உண்மை. சீக்கிய ...

மகளை குழுவாக வல்லுறவு செய்தவர்களை நீதியின் முன்னே நிறுத்திய பாந்த் சிங்! - துணிவின் பாடகன் - தமிழில் கமலாலயன்

படம்
            துணிவின் பாடகன் பாந்த்சிங் நிருபமா தத் தமிழில் கமலாலயன் காம்ரேட் டாக்கீஸ் மார்க்சிய லெனினிய கட்சியைச் சேர்ந்த பாந்த் சிங் , இரண்டு கைகளையும் ஒரு காலையும் ஜாட் சாதி வெறியர்களால் இழந்தவர் . அதற்கு முன்னரே அவரது மகள் ஆதி திராவிட பெண்மணியின் உதவியால் இரு ஜாட் இனத்தவரால் பாலியல் குழு வன்புணர்வு செய்யப்பட்டவர் . அதற்காக அந்த பெண் நடத்திய சட்டப்போராட்டம் , கிடைத்த நீதி , அதற்குப் பிறகு அதன் விளைவாக பாந்த்சிங் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கப்பட்டது எல்லாம் வேதனையான சம்பவங்கள் . இந்த நூல் நேரடியாக பாந்த் சிங் என்பவருடைய வரலாற்றைப் பற்றி சொல்லவில்லை . கடுகு பூக்கள் பூத்த வயல் என்று காட்சி வர்ணனை தொடங்கும்போதே மனதிற்குள் ஏனோ சோக உணர்வு ஏற்படுகிறது . இது அந்த காட்சி காரணமாகவா , பாந்த்சிங்கின் வாழ்க்கையை நினைத்தா என்று தெரியவில்லை . நிருபமா தத் பல்வேறு கிராம்ங்களுக்கு சென்று மஹ்ஜாபி சீக்கியர்கள் எப்படி ஜாட் சாதிவெறியர்களால் சுரண்டப்படுகிறார்கள் . அவர்கள் வீட்டிலுள்ள வயது வந்த பெண்களை வல்லுறவு செய்வது அங்க...