பூச்சிமருந்து கண்டுபிடிக்கும் பேராசிரியர் நகரத்தில் சக்திவாய்ந்தவர்களை நண்பனுக்காக பலியெடுக்கும் கதை!
ஆயுதம் தெலுங்கு ராஜசேகர், குர்லின் சோப்ரா, சங்கீதா பேராசிரியர் சித்தார்த்தன், தனது ஆருயிர் நண்பனைக் கொன்ற மூன்று அதிகார பலம் பெற்றவர்களை நேரம் குறித்து சவால்விட்டு கொல்கிறான். கொல்வதில் எப்போதும் போல பெரிய சுவாரசியம் ஏதுமில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக சித்தார்த்தனின் நண்பன் இறந்தான் என்பதே ஒரே சுவாரசியம். டாக்டர் ராஜசேகரின் படம். படம் முழுக்க அவரின் ஆதிக்கம்தான். குர்லின் சோப்ராவுக்கு பக்கத்து ஊர் தலைவரின் மகள் வேடம். நடிப்பிற்கு வாய்ப்பில்லை. காட்சிகளில் கவர்ச்சி காட்டி பாடல்களை பார்க்கும்படி செய்கிறார். சொந்த மாமன் மகள் சங்கீதாவுக்கும் இதே வேலைதான். அடிக்கடி திகைப்புக்கு உள்ளாக்கும்படி கவர்ச்சிப் பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வந்தே மாதரம் ஶ்ரீனிவாஸி்ன் இசை கேட்கும்படி இருக்கிறது. படத்தில் சித்தார்த்தன் பாத்திரம், விவசாய மருந்துப்பொருள் கண்டுபிடிப்பாளர். படத்தின் தொடக்க காட்சியில், தொழிலதிபரின் வீட்டில் அவரது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அவர்கள் கொடூரமானவர்கள் என்பதைக் காட்ட வேலைக்கார சிறுமியை வல்லுறவு செய்கிறார்கள். அதுவும் மூன்றுபேர். எதற்கு இதுமாதிரியான ...