இடுகைகள்

போக்குவரத்து நெரிசல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டீசல்கார்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு குறைவு! - ஹைபிரிட் கார்களுக்கு ஆதரவு பெருகலாம்!

படம்
  cc   எதிர்கால கார்கள் டீசல்கார்களை நகரங்களுக்கும் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்படலாம். டீசலுக்கான வரிகள் உயர்த்தப்படலாம் இதனால் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் டீசல் கார்களின் தயாரிப்பை கைவிடுவது உறுதி. மெர்சிடிஸ் நிறுவனம், டீசல் கார்கள் முழுக்க அழிந்துவிடாது என்று கூறியிருக்கிறது. மெர்சிடிஸ் சி300 போன்ற ஹைபிரிட் கார்கள் சந்தையில் வலம் வரலாம். இதற்கு நிறைய மவுசு பெறலாம். எலக்ட்ரிக் கார்கள் டெஸ்லா இந்த பிரிவில் சிறப்பான தலைவராக எலன் மஸ்கை கொண்டிருப்பதால் வேகமாக முன்னேறி வருகிறது. இதற்காக மற்றவர்கள் பின்தங்குகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஜாக்குவாரின் ஐ பேஸ் என்ற கார் இதற்கு போட்டி தரக்கூடியது. போர்ச், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறார்கள். இதில் ஹூண்டாயின் கோனா எலக்ட்ரிக் கார் சிறப்பாக இருக்கிறது. வேகம் வேகம் மணிக்கு 482 கி.மீ வேகத்தில் செல்லும் காரை கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? ஹென்னஸி என்ற கார் நிறுவனம் இந்த வகையில் கார்களை தயாரித்து வருகிறது. ஜான் ஹென்னசி என்பவர்தான் இந்நிறுவனத்திற்...

எவரெஸ்டில் பயணிகள் இறப்பது ஏன்?

அண்மையில் எவரெஸ்டில் ஏறிய பலர் காயமுற்றும் இறந்தும் உள்ளனர். என்ன காரணம்? இந்த வாரம் மட்டும் ஏழுபேர் இறந்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நிகால் பக்வான் என்பவரும் இந்த பட்டியலில் அடக்கம். முன்பை விட  சாதனைக்கான ஏக்கம் உலகில் அதிகரித்துள்ளது. எவரெஸ்டில் ஏறுவதற்கான காத்திருப்பு பனிரெண்டு மணிநேரமாக அதிகரித்துள்ளது. பனிரெண்டு மணிநேரம் காத்திருந்து நாங்கள் மேலே சென்றோம் என்கிறார் பிரான்ஸ் பிரெஸ்ஸே நிறுவனத்தைச் சேர்ந்த கேசவ் பாடெல். எவரெஸ்டில் ட்ராஃபிக் ஜாமா என்று நினைப்பீர்கள். உண்மைதான். இதில் ஒருவருக்கு ஆக்சிஜன் போதாமல் பிரச்னை ஏற்பட்டால் அவரைக் காப்பாற்றுவது மிகவும் சிரமம். உலகின் உயரமான மலைத்தொடரான எவரெஸ்ட் 29 ஆயிரம் அடி கொண்டது. கடல்மட்டத்திற்கு மேல் உள்ள சிகரம் இது. மலையில் ஏறுபவர்கள் அங்கு சென்றதும், மூச்சுத்திணறலை உணர்வார்கள் என்கிறார் மருத்துவர் ஆண்ட்ரூ லூக்ஸ். இந்த பாதிப்பைப் போக்க டயாமோக்ஸ் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது டெக்ஸ்மெத்தோசோன் என்ற மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.  மலையில் ஏறுபவர்களுக்கு ஹேஸ்  எனும் ஹை அல்டிடியூட் செரிபிரல்...