இடுகைகள்

கப்பல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டுச்சாலை திட்டம் வழியாக வளம் பெறும் கல்வி, வணிகம் சார்ந்த துறைகள்!

படம்
  பட்டுச்சாலை நோக்கம் நிலம், நீர் என இரண்டு தளங்களிலும் பட்டுச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், வணிகம், கலாசார பரிமாற்றம்  என்று மூன்று அம்சங்கள் வணிக வழித்தடத்தில் முக்கியமானதாக உள்ளது. கொள்கை அளவில் உள்ளூர் அரசுகளோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுப்பது. நடைமுறை ரீதியாக பெரிய திட்டங்களை உருவாக்க உதவுவது, ஆற்றல், தகவல்தொடர்பு என அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது, வணிகம் என்பதில் தடையற்ற வர்த்தகம், நாடுகளுக்கு இடையிலான வணிக ஒத்துழைப்பு, சான்றிதழ், அங்கீகாரம், தர நிர்ணயம், நவீன சேவை வணிகம், எல்லைகளுக்குள் இணைய வணிகம், இருநாட்டுக்கு இடையிலான பணப்பரிமாற்றம், காப்பீட்டு சந்தை என செயல்பாடுகளை விளக்கலாம்.  பட்டுச்சாலை திட்டத்திற்கு ஆசிய அடிப்படைகட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கி, சாங்காய் கூட்டுறவு அமைப்பு ஆகிய அமைப்புகள் நிதியுதவியை வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் அல்லாமல் பட்டுச்சாலை நிதி என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.  பட்டுச்சாலை திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் பலவும் காலனி கால ஆட்சியால் கடுமையாக சுரண்டப்பட்டவை. அந்த நாடுகள் இப்போதும்...

லாஜிஸ்டிக்ஸ் வணிகம் எப்படி செயல்படுகிறது என அறிய வாசிக்க வேண்டிய நூல்!

படம்
  லாஜிஸ்டிக்ஸ் பா பிரபாகரன் கிழக்கு பதிப்பகம்   லாஜிஸ்டிக் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழியில் பெயர்ச்சியல் என்று பெயர். ஒரு சரக்கை கொண்டு வந்து கொடுப்பதாக நிறுவனம் கூறினால், அதை அவர்கள் கப்பல் வழியாக, ரயில் வழியாக எந்த முறையில் அதை பொதிவு செய்து கொண்டு வந்து வரிகளைக் கட்டி ஒப்படைக்கிறார்கள், பணம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதே பெயர்ச்சியியல். லாஜிஸ்டிக், சப்ளை செயின் என இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குவது தொடங்கி கப்பல், ரயில், விமானம் என மூன்று வகையிலும் பொருட்களை எப்படி கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என நூலில் விலாவரியாக விவரித்துள்ளார். இந்த நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக பெயர்ச்சியியல் என்றால் என்ன என தெளிவாக புரிந்துகொள்ள முடியும். இதற்கு காரணம், நூலை எழுதியவரே பெயர்ச்சியியல் வணிகத்தை செய்வது வருவதுதான். இதனால் அவர் தான் சந்தித்த பல்வேறு அனுபவங்களை கூறும்போது எளிதாக அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கூறவேண்டுமெனில் மாங்கன்றுகளை ஆப்பிரிக்க நாட்டுக்கு கொண்டு செல்லும் பணியைக் கூறலாம். அதை எப்படி கொண்டு செல்வது என்பதை அனுப்புபவர் கூறுவதில்லை. பெயர்ச்சியி...

கடல் சூழலைக் கெடுக்கும் எண்ணெய்!

படம்
  தெரியுமா? கடலை மாசுபடுத்தும் எண்ணெய்! கடலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள், விபத்துக்குள்ளாகி நீரில் எண்ணெய்யை சிந்துவது உண்டு. இதனை வேகமாக செயல்பட்டு சுத்தம் செய்யவேண்டும். இல்லையெனில், அது கடலில் பரவி கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது. எண்ணெய் கடல் பரப்பில் நெருப்பு பற்றும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. கூடுதலாக நீரை நச்சாக மாற்றுகிறது. கடல் நீரில் மிதக்கும் எண்ணெய்யை சேகரித்து எடுக்க, ஆயில் ஸ்கிம்மர் (oil skimmer)என்ற கருவி பயன்படுகிறது. இதில் சேகரிக்கப்படும் எண்ணெய்யை எளிதாக அகற்றிவிட முடியும்.  கடலில் கொட்டும் அல்லது கசியும் எண்ணெய், கடல் பறவைகள், உயிரினங்கள் உடல் மீது படிகிறது. இதன் காரணமாக அவற்றால் பறக்க, நீந்த முடியாது. அவற்றின் உணவையும் நச்சாக்குவதால், நீண்டகால நோக்கில் உணவுச்சங்கிலியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.  1989ஆம் ஆண்டு எக்ஸான் வால்டெஸ் நிறுவனத்தின் டேங்கர், கடலில் 4 கோடியே 10 லட்சம் லிட்டர் எண்ணெய்யை சிந்தியது. இதன் காரணமாக 2,100 கி.மீ. தூர கடல் பகுதி பாதிக்கப்பட்டது. இதனை கடலிலிருந்து அகற்ற 3 ஆண்டுகள் தேவைப்பட்டது. கடல்நீரிலுள்ள எண்ணெய...

155 ஆண்டுகளைக் கடக்கும் சூயஸ் கால்வாய்!

படம்
சூயஸ் கால்வாய்  சூயஸ் கால்வாய் உலகில் நீளமான ஆறு, எகிப்தில் உள்ள நைல் ஆறு. ஆனால் நீளமான கால்வாய் எதுவென தெரியுமா? தலைப்பில் சொல்லிவிட்டோமே, இதில் என்ன ரகசியம் இருக்கப் போகிறது. அதைப்பற்றிய கட்டுரைதான் இது.  ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு செல்வது பல மாதங்கள் நீண்ட பயணமாக இருந்தது. காரணம், அனைத்து கப்பல்களும் ஆப்பிரிக்காவை சுற்றி சென்று சுற்றி வந்தன. சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைத்தது.  மத்திய தரைக்கடலிலிருந்து எளிதாக இந்திய பெருங்கடலை அடைய சூயஸ் கால்வாயே உதவியது. இதன்மூலம் கப்பலின் பயண தூரம் 7 ஆயிரம் கி.மீ. குறைந்ததோடு, பயண நாட்களும் 23 நாட்களாக சுருங்கியது. 1859 - 1869  என பத்தாண்டுகள் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது. இதன் மொத்த நீளம் 193.30 கி.மீ. ஆகும். இதனை தொடக்கத்தில் ஆங்கர் லைன் என்ற ஸ்காட்டிஷ் கம்பெனி ஒன்று தனக்கு சொந்தமாக்கி வைத்திருந்தது. 1867 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று முதல் கப்பல் இதில் பயணித்தது. 2022ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் கட்டப்பட்டு 155 ஆண்டுகள் ஆகிறது.  இந்த கால்வாயில் 1,50,000 டன்கள் கொண்ட கப்பல்கள் பயணிக்கலாம். இதனைக் கடக்க ...

இறந்துபோன பிணங்கள் வெடிக்குமா?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ!? பிணங்கள் வெடிப்பது சாத்தியமா? இறந்துபோனவரின் உடலில் ஏதாவது பேஸ்மேக்கர், அல்லது வேறு பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தால் அப்படி வெடிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி உடலை எரிக்கும்போது நீர்ச்சத்து குறைந்து தசைகள் இறுக்கமாகின்றன. அதனால் எழுந்து உட்கார வாய்ப்புகள் அதிகம். பிணத்தை தகனம் செய்பவர்கள் ராஸ்கோல் என தடியாலேயே நெஞ்சில் ஒரு போடு போட்டு அடக்குவார்கள். பிணம் படுத்துவிடும். மற்றபடி உடலிலுள்ள வாயுக்கள் காரணமாக உடல் வெடிக்கும் என்பது அரிதாகவே நடக்கம். அந்தளவு அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் கிடையாது.  உடல் அழுகிப்போகும் நிலையை பதப்படுத்தும் செயல் மட்டுப்படுத்துகிறது. இதனால் உடலிலுள்ள நுண்ணுயிரிகள் இறந்துபோன செல்களை தின்னும் செயல் தடைபடுகிறது. தசைகள் இறுக்கமடைந்தாலும் உடல் முழுக்க அழுகிப்போவதை தள்ளிப்போடலாம். அழுகும் உடலிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா ஆகிய வாயுக்கள் வெளியே வருகின்றன.  ஐஸால் படகு செய்து பயணிக்க முடியுமா? கேட்க நன்றாக இருந்தாலும் சாத்தியம் குறைவு. கடல் வெப்பநிலை அதிகரித்தால் ஐஸ் படகில் அல்லது கப்பலில் பயணிக்கும் பயணிகளின் கதி எ...

தெரிஞ்சுக்கோ! கப்பல் உடைப்பு - டேட்டா

படம்
தெரிஞ்சுக்கோ! உலகில் தொண்ணூறு சதவீத வர்த்தகம் கப்பல் வழியாக நீர்நிலைகளில் நடைபெறுகிறது. பயன்படுத்திய கப்பல்கள்தெற்காசியப் பகுதிகளில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. இத்தொழிற்சாலைகள் இங்கு அதிகமாக உள்ளன. ஒரு கப்பலை முழுமையாக உடைத்து எடுக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகின்றன. கப்பலிலிருந்து பெறும் இரும்பில் 90 சதவீதம் கட்டுமானத்துறையில் பயன்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கப்பலை உடைக்கும் தொழிலாளர் ஒருவருக்கு தரப்பட்ட கூலி ஆறு டாலர். உலகிலுள்ள கப்பல்களில் 33 சதவீத கப்பல்கள் இந்தியாவிலுள்ள ஆலங் பகுதியில் உடைக்கப்படுகின்றன. இப்பகுதியில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரம். வங்கதேசத்தில் கப்பல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களின் அளவு 25 %. ஒரு கப்பலை உடைத்தால் அதிலிருந்து கழிவாக பெறும் ஆஸ்பெஸ்டாசின் அளவு 6,800 கி.கி. வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இறந்த கப்பல் உடைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1200. 1504 அடி நீளம் கொண்ட கப்பல், இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது. நன்றி - க்வார்ட்ஸ் 

கடற்கொள்ளையர்களுக்கு பணமே முக்கியம்!

படம்
நேர்காணல் பெர்ட்ராண்ட் மோனட் கடந்த ஏப்ரலில், இந்தியர்கள் ஐந்துபேர் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். பின்னர் 69 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். இவர்கள் எங்கிருந்து திடீரென கிளம்புகிறார்கள்? இக்கொள்ளையர்கள் பெரும்பாலும் நைஜீரியர்கள்தான். இவர்கள் வளைகுடா பகுதியில் வசிக்கிறார்கள். டெல்டா, பேயெல்சா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்ளையர்களாக உருவாகிறார்கள். இவர்கள் குழுவாக வாழ்கிறார்கள். ஐஜா என்பது இவர்களின் இனகுழு பெயர். இவர்களின் குழு கட்டமைப்பு எப்படிப்பட்டது.? இக்குழுக்களில் குறைந்த து 15 பேர் இருப்பார்கள். அதிகபட்சமாக 50 பேர் இருப்பார்கள். குறிப்பிட்ட கப்பல்களைத் தாக்கும் அசைன்மென்டுக்கு கிராமம், நகரங்களிலிருந்து ஒன்று கூடுவார்கள். சில நாட்களுக்கு முன்பே தங்கள் வாழிடத்திலிருந்து வெளியேறி தாக்குதலுக்கான திட்டங்களை வகுப்பார்கள். நைஜீரிய பாதுகாப்பு படையிடம் சிக்கிவிடக்கூடாது என கவனமாக இருப்பார்கள். இக்கொள்ளையர்கள் இருக்கும் பகுதியில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.  நைஜீரிய வீரர்களை பாதுகாப்பு படைவீரர்களாக நீங்கள் முன்கூட்டியே நி...