இடுகைகள்

தொடர்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழில்நுட்பத்தை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் எப்படி பயன்படுத்துகின்றன?

படம்
          தொழில்நுட்பம் என்பது ஒருவரை குறிப்பிட்ட செயலை செய்யவைக்கிறது என்று கூற முடியாது. ஆனால் செய்யும் செயல்பாட்டை சற்று எளிமைபடுத்தி வேகமாக செய்யலாம். இணையம் வந்தபோது இந்தியாவின் வடக்குதேச தற்குறிகள், வெளிநாட்டினரின் நிர்வாண படங்களைக் கேட்டு சமூக வலைதளங்களில் தொந்தரவு செய்தனர். ஆக, தொழில்நுட்பம் என்பது உங்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. அதை நீங்கள்தான் தாழ்ந்துபோகாமல் காக்கவேண்டும். இப்போது விமானச்சேவை விலை குறைவாக வந்துவிட்டதால், வடக்குதேச தற்குறிகள் அயல்நாடுகளுக்கு சென்று அங்கு பொது இடங்களில் அநாகரிகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். உலகநாடுகளில், இந்தியா என்ற நாட்டிற்கு பெரிய நல்லபெயர் கிடையாது என்பதால், வடக்குதேச தற்குறிகளின் செயல்களால் பெரிய பாதிப்பில்லை. ஆனால், நேர்மையாக படித்து சென்று அமைதியாக வேலை செய்பவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனவே, அவர்கள் ஒன்றியத்தின் பெயரைக் கூறாமல் தெற்குதேசத்திலுள்ள மாநிலங்களின் பெயர்களை குறிப்பிட்டு வருகிறார்கள். தொழில்நுட்பம் என்பது உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. உங்கள் மனம் சரியான ...

ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது

படம்
    ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது ஒருவரின் அப்பா, நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியவர். வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்டு செய்யும் கடமையில் கவனம் செலுத்தவேண்டும் என நினைத்தவர். ஆனால், அவரது மகன்களோ செய்யும் அனைத்து விஷயங்களிலும் லாபத்தையே எதிர்பார்க்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? அப்படியான சூழலில், அப்பா தனது மகன்களை ஆமை முட்டைகள். அவர்களை எனது மகன்களாகவே நினைக்க முடியவில்லை என்றார். இப்படி கூறியவர் கமாண்டர் வாங் ஸென். சீனாவின் தொடக்க கால கட்ட தலைவர்கள் உடுத்தியுள்ள ஆடை எளிமையானது. ஃசபாரி சட்டை பேண்ட் அல்லது ராணவ சீருடையை உடுத்தியிருப்பார்கள். பெரும்பாலும் அழகான சட்டை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. ஆனால், அவர்களது மகன்களது வாழ்க்கை மிகவும் சொகுசானது. எளிமையான மனிதர்களிடமிருந்து வேறுபட்டது. திகைப்பூட்டும் அளவுக்கு பகட்டானது. தொண்ணூறு இரண்டாயிரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வாரிசுகள் வளம் பெற்றுவிட்டார்கள். தொடக்க கால கல்வியை பெய்ஜிங்கில் பெற்றவர்கள், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லத் தொடங்கினர். அதிபர் ஷியின் அப்பா, ஷ...

சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங்

படம்
            சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியோபோபிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தலைவர்களை விட டெங்கின் வாழ்க்கை நிறையவே மாறுபட்டது. அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் இமாலய உயரத்தையும், பாதாள வீழ்ச்சியையும் கண்டவர். எதிரிகள் பற்றி கவலைப்படாமல் தனது செயல்பாட்டில் கவனம் வைத்து வென்றவர். அரசியல் தொடர்புகள்,தனிப்பட்ட நட்பு, திருமண உறவு ஆகியவற்றின் மூலமே தன் அரசியல் வாழ்க்கையை நீட்டித்துகொண்ட ஆளுமை. சிறுவயதில் வெளிநாடுகளுக்கு அதிக பயணம் செய்து வலம் வந்தவர். சிச்சுவானில் பிறந்தவரான டெங், 1920ஆம் ஆண்டு, பிரான்சுக்கு கம்யூனிஸ்ட் கல்வி கற்கச் சென்றார். அங்குதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு எழுந்தது. பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று கல்வி கற்றார். 1927ஆம் ஆண்டு சீனாவுக்கு திரும்பியவர், தனது கட்சி சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்தார். 1937ஆம் ஆண்டு ஜப்பான், சீனாவின் மீது போர் தொடுத்தது. இப்போர் காரணமாக எந்நாளைக்குமான ஜென்ம விரோதியாக ஜப்பான் நாடு மாறியது. இன்று, ஒலிம்பிக்கில் நடந்த சில போட்டிகளில் ஜப்பான் நாட்டு அணியிடம் சீன அணி தோற்றுப்போனது. உடனே...

ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு உள்ளது ஆண் மூளை!

படம்
  சைமன் பாரோன் கோகன் simon baron cohen பிரிட்டனின் லண்டனில் பிறந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் படிப்பை படித்தார். யுனிவர்சிட்டி காலேஜில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1995ஆம் ஆண்டு, டிரினிட்டி கல்லூரியில் சோதனை உளவியலைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். தற்போது ஆட்டிசம் தொடர்பான ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஆட்டிசத்தின் தீர்வு, அதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். 2009-2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச ஆட்டிச ஆராய்ச்சி சங்கத்தில் துணைத்தலைவராக இருந்தார். தற்போது தேசிய ஆட்டிஸ்டிக் சங்கம்(இங்கிலாந்து) அமைப்பில் துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். அதிபர் விருது, ஸ்பியர்மேன் பதக்கம், பாய்ட் மெக்கேண்ட்லெஸ் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.  1993 ஆட்டிசம் - தி ஃபேக்ட்ஸ்  1995 மைண்ட்பிளைண்ட்னெஸ் 1999 டீச்சிங் சில்ட்ரன் வித் ஆட்டிசம் மைண்ட் ரீட்  2003 தி எசன்ஷியல் டிஃபரன்சஸ்  புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் - இதுதான் ஆட்டிசத்திற்கான தமிழக அரசின் தமிழ்மொழி வழக்குச்சொல். அதன் நீளம் காரணமாக மதி இறுக்கம் என்று சுருக்கமாக கூறலாம...

இயற்கையுடனான மனிதர்களின் தொடர்பு வரலாற்று ரீதியானது! - கிரெச்சன் காரா டெய்லி

படம்
  நேர்காணல்  கிரெச்சன் காரா டெய்லி (Gretchen cara daily) சூழலியல் அறிவியலாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நீங்கள் செய்துவரும் நேச்சுரல் கேபிடல் புராஜெக்ட் பற்றி கூறுங்கள். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகளை வெளிச்சமிட்டு காட்டுவதுதான் எனது திட்ட நோக்கம். நம் அனைவருக்குள்ளும் தனித்துவமான இயற்கைத்தொடர்பு இருந்தாலும் அதை மறைந்திருக்கிறது. எனவே, நாம் மண், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை கைகளால் தொடுவதற்கான உந்துதல் கொண்டுள்ளோம். இப்படி தொடுவது மனிதர்களின் உடல், மனம் இரண்டிற்கும் பயன்களைத் தருகிறது. நமக்கு பயன்தரும் இயற்கையை அறிந்துகொள்ள உதவும் கொள்கை, திட்டம், முதலீடு தேவைப்படுகிறது.  இயற்கை அனுபவம் மனிதர்களின் அறிவாற்றலை மேம்படுத்துகிறதா? இன்று ஆராய்ச்சி செய்யப்படும் முக்கியமான துறை இதுதான். அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள பள்ளியில் மாணவர்களிடையே சோதனை ஒன்று செய்யப்பட்டது. இதில், இரு வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், இயற்கை காட்சிகளை பார்க்கும்படியும், மற்றவர்களுக்கு அந்த வசதி இல்லாமலும் வகுப்புகளை அமைத்தனர். இறுதியில், இயற்கை காட்சிகளை...

மக்கள் தொகைக்கும், காலநிலை மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை! - டெட் நார்தஸ்

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் டெட் நார்தஸ் ( Ted Nordhaus ) நிறுவனர் பிரேக்த்ரோ இன்ஸ்டிடியூட்  சூழலியலாளர்கள், காலநிலை மாற்ற அபாயத்தைத் தவிர்க்க மக்கள்தொகை கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகிறார்களே? மக்கள்தொகை அதிகரிப்பு என்பது மறைமுகமாக பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. அதனைக் குறைப்பது என்பது தவறானது. கிராமத்தில் வறுமையில் வாழ்ந்த மக்கள் இன்று நகருக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இந்த மாற்றம் காலப்போக்கில் இயல்பாக நடந்தது. ஏழை மக்களின் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைக்கிறது. அவர்கள் வேலையைத் தேடிக்கொண்டு நலமாக வாழ்கிறார்கள். தேவையான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இது சமூக மேல்தட்டினருக்கு பிடிக்காமல், மக்கள்தொகை கட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பு என பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழலியலாளர்களில் பெரும்பாலானோர் வசதியானர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  சூழல் மாதிரிகள் பற்றிய உங்கள் கருத்து? சூழல் அறிவியலாளர்கள், சூழல் மாதிரிகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எவையும் துல்லியமாக வெப்பநிலை அதிகரிப்பதை நமக்கு காட்டவில்லை. அப்படி அவை காட்டினாலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும...

காந்திக்கும், அம்பேத்கருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு! ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
pixabay அன்பிற்கினிய தோழர் ராமுவுக்கு , வணக்கம் . நீங்கள் பேசும்போதெல்லாம் போனின் பின்னணியில் தீவிரமான டிவி விவாத நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன . நீங்கள் இன்னும் அரட்டை அரங்க கொதிநிலை மனநிலையை விட்டு வெளியே வரவில்லை என்று நினைக்கிறேன் . நாம் அம்பேத்கர்கரின் நூல்களில் சாதி ஒழிப்பு மட்டுமே படித்துள்ளேன் . நீங்கள் நிறைய நூல்களைப் படித்திருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது . காந்தி , சாதி வேண்டும் , தீண்டாமை கூடாது என பாலீஷாக பேசினார் என்று சொன்னீர்கள் . இடதுசாரிகள் கோட்சேயின் வன்முறையைப் பேசும்போது , பகத்சிங்கின் வன்முறையான பாதையைப் போற்றுகிறார்கள் . திரும்பத் திரும்ப அவரை காந்தி காப்பாற்றி இருக்கலாம் என்கிறார்கள் . இப்படி பேசுவது வலதுசாரிகளுக்கு பலமேற்றும் என்பதையும் , அகிம்சை பாதையை மக்கள் பலவீனமாக அறிய வழிவகுக்கும் என்பதை அறிவதில்லை . மயிலாப்பூரில் உள்ள ஹாஸ்டலை லீசுகு எடுத்து மாணவர்கள் விடுதியாக நடத்தி வந்தனர் போல . இப்போது அந்த செட்டப்புகளை உடைத்து எடுத்து வருகின்றனர் . எங்கள் அறையில் கதவு மட்டுமே பிரிக்கப்படாமல் இருக்கிறது . விரைவில் அதனையும் பிரித்து எடுப்ப...

பௌர்ணமி மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பௌர்ணமி நிலவு நம்மை பைத்தியமாக்குமா? நிலவுக்கும் மனநிலைக்குமான தொடர்பு இன்று தொடங்கவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று மனநிலை மருந்துகளை சாப்பிடுவது என்பது சிலரின் பழக்கம். ஆனால், கிரேக்கர்கள்தான் இதிலும் முன்னிலை வகிக்கிறார்கள். 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் அரிஸ்டாட்டிலின் கருத்தான நிலவு, நம் எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது என்பதை நம்பினர். அதோடு, தொழுநோய் போன்றவற்றுக்கும் நிலவுக்கும் தொடர்புள்ளதாக கூறிவந்தனர். ஆனால் இதற்கு வலுவான எந்த அறிவியல் ஆய்வும் கிடையாது. ஆனால், மூளையிலுள்ள நீர்மத்தில் நிலவின் ஈர்ப்புவிசை பௌர்ணமியன்றி மாறுதல்களை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் அது குணநலன்களில் மாறுபாடு ஏற்படுத்தும் அளவு வலிமையானதல்ல என்கிறது அறிவியல்துறை. தற்போது நடைபெற்றுவரும் ஆராய்ச்சிப்படி, பௌர்ணமி தினத்தன்று ஒப்பீட்டளவில் கொலைகள் குறைந்து வருவதாக கூறுகிறது. எப்படிங்க ப்ரோ என்று கேட்டுவிடாதீர்கள். ஆய்வுகள் அப்படித்தான் டக்கென ஒரு விஷயம் சொல்லிவிட்டு செல்லும். பௌர்ணமி அன்று முடிந்தவரை உற்சாகமாக இருக்க முயற்சியுங்கள். அப்படியாவது பக்கத்து சீட...