இடுகைகள்

நம்பிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன்முறையைப் பயன்படுத்தி மக்களை பணிய வைக்கும் சாமர்த்தியம்!

படம்
    மேலாதிக்க சாதியினர், கையில் பத்திரிகைகளை கொண்டிருக்கிறார்கள். டிவி சேனல்களை நடத்துகிறார்கள். அரசிடம் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்கள் அதிகாரத்தை வலியுறுத்துபவர்களை வெடிகுண்டு வீசுபவர்கள், ஒழுங்கின்மை கொண்டவர்கள், பேரிடரை விளைவிப்பவர்கள் என வசைபாடி தவறான கருத்துகளை முன்முடிவுகளை ஏற்படுத்துகிறார்கள். முதலாளித்துவத்தைக் கொண்டுள்ள அரசு, தன்னைக் காத்துக்கொள்ள பேரிடரை ஏற்படுத்துகிறது. வன்முறையை கைக்கொள்கிறது. மக்கள் அதிகாரம், இதற்கு எதிரான இயல்பைக் கொண்டுள்ளது. அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி என இரண்டையும் உருவாக்க முனைகிறது. ஜனநாயகவாதி, முடியரசு விசுவாசி, சோசலிசவாதி, போல்ஸ்விக், மக்கள் அதிகாரர்கள் என எவரும் கூட வெடிகுண்டுகளை வீசலாம். வன்முறையைக் கையில் எடுக்கலாம். இன்றைய சூழலில் வன்முறை ஒருவரின் கையில் திணிக்கப்படுகிறது. அதை மக்கள் எவரும் வேண்டுமென தேர்ந்தெடுக்கவில்லை. ப்ரூடஸ் தனது நண்பனான அரசன் சீசரைக் கொன்றான். அவனுக்கு தனது நண்பன் குடியரசுக்கு துரோகம் செய்துவிடுவானோ என்ற பயம் இருந்தது. ப்ரூடஸ் நண்பனை விட ரோமை அதிகம் நேசித்தான் என்று கூறமுடியாது. வி...

கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024

படம்
      கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024 மகளின் நோயை விளக்க புத்தகம் எழுதிய தாய்! டோன்யே ஃபாலுகி எகேசி நைஜீரியாவைச் சேர்ந்தவர் லோலா சோன்யின். இவர் உய்டா புக்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். கவிஞரான இவர் குழந்தைகளுக்காக ஏழு நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு ஊக்கம் தந்த எழுத்தாளராக டோன்யே என்ற எழுத்தாளரை அடையாளம் காட்டினார். டோன்யே, தனது ஒன்பது வயது மகள் சிமோனுக்காக நூல்களை எழுதி வெளியிட்டவர். அவரது மகளுக்கு டவுன் சிண்ட்ரோம் நோய் உள்ளது. இதுபற்றிய நூல்கள் இல்லாத நிலையில், தாயே மகளுக்காக, மகளின் நோயைப் பற்றிய நூலை எழுதியிருக்கிறார். இவரின் நூல்களை உய்டாபுக்ஸ் வெளியிட்டு வருகிறது. டோன்யேவின் வீட்டிக்கு வந்த டவுன் சிண்ட்ரோம் சிகிச்சையாளருக்கு, நோயை எப்படி விளக்குவதென தெரியவில்லை. ஏதேனும் நூல்கள் கிடைக்குமா தேடி சோர்ந்து போயிருக்கிறார். உகோ அண்ட் சிம் சிம் - வாட் இஸ் டவுன் சிண்ட்ரோம் என்ற தலைப்பில் இரு பிரதிகளை அச்சிட்டிருக்கிறார். பிறகு, ஐந்தாயிரம் பிரதிகளை அச்சடித்து விற்றிருக்கிறார். பிறகுதான் உய்டோ பதிப்பக உதவி கிடைத்திருக்கிறது. என்னுடைய குழந்தையின் நிலையை அறி...

சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி?

படம்
        சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி? இந்தியா, சீனாவுக்கு இடையில் பிரிட்டிஷார் வகுத்த எல்லைக்கோட்டை சீன பொதுவுடைமைக் கட்சியும், அரசும் ஏற்கவில்லை. 1949ஆம் ஆண்டு, சீனாவில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து மக்கள் சீன குடியரசு உருவாகிறது. அதை இந்திய அரசு அங்கீகரித்தது. சீன அரசுக்கு பிரிட்டிஷார், ஜப்பான் ஆகியோரின் தாக்குதலால் தங்களை வலுவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற வேட்கை உருவாகியிருந்தது. அதை சீனா, நவீன காலத்தில் பெருமளவு நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. சீனக்கனவு என அதை குறிப்பிடுகிறார்கள். 1962ஆம் ஆண்டு சீனா, எல்லையில் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெறுகிறது. இதன் விளைவாக முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றுகிறது. இது இந்தியாவின் மீது மாவோவின் போர் என அழைக்கப்படுகிறது. மார்க்சிய லெனினியவாதிகள் இதை எப்படி விளக்குவார்களோ தெரியவில்லை. இதற்குப் பிறகு, சீனாவின் அனைத்து செயல்பாடுகளும் சந்தேகத்திற்குரியவையாக மாறிவிட்டன. அல்லது அரசியல்வாதிகள் அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று கூறத்தொடங்கினர். குறிப்பாக, இந்து பேரினவாத கட்சி தலைவர்கள். சீனா, இந்தியாவை எல்லையில் தோ...

அமேசானை நெருக்கடியில் தள்ளும் போலிப்பொருட்கள்!

படம்
              அமேசானில் கிடைக்கும் அனேக டெக் பொருட்கள் போலியானவை! அனைத்துமே போலி என்று கூறமுடியாது. ஆனால், நிறைய பொருட்களை ஒரே நிறம், வேறு எழுத்துகள் என நுட்பமாக பயனர்களை ஏமாற்றி வருகிறார்கள். இதனால், அமேசானே இப்படி செய்தால் எப்படி என மக்கள் வேறுவேறு இ விற்பனை தளங்களுக்கு மாறி வருகிறார்கள். அலி எக்ஸ்பிரஸ், டெமு ஆகிய இ விற்பனை தளங்களிலும் நிறைய போலிகள் உண்டு என ஊடகங்கள் கூறி வருகின்றன. போலிகளை முற்றாக தடுப்பது கடினம். ஆனால், அதிக விலை கொடுத்து மட்டமான பொருட்களை வாங்காமல் இருக்கலாமே? அதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். அமேசானில் ஒரு பொருளை வாங்கி சில நாட்களிலேயே அது போலி என தெரிந்தால், முப்பது நாட்களில் அதை வாங்கிய காசை திரும்ப பெறலாம். இதற்கு ஏ டு இசட் கேரண்டி புரடக்சன் என்ற வலைத்தள பக்கம் உள்ளது. பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது பொருட்கள் பற்றி புகார் தெரிவிக்க வாய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், பயனர்கள் தங்களுக்கு கிடைத்த போலிப்பொருட்களைப் பற்றி புகார் செய்ய முடியாது. எஸ்டி கார்டுகள் இதில் சான் டிஸ்க் நிறுவனத்தின் போலி...

2023 - மனிதர்கள் - சம்பவங்கள் - கார்டியன் நாளிதழ்

படம்
  2023 - மனிதர்கள், சம்பவங்கள்  பிரேம் குப்தா, தனது மகளை வழக்கம் போல திருமணம் செய்துகொடுத்தார். மருமகன் வழக்கம்போல, காசுக்கு ஆசைப்பட்டு மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்த தொடங்கினார். மகள் இதைப்பற்றி அவளது அப்பாவிடம் கூறினாள். பிரேம் குப்தா என்ன முடிவெடுத்திருப்பார். பெரும்பாலான இந்தியர்கள், அடித்தாலும் உதைத்தாலும் அனுசரித்துப் போ, குடு்ம்பம் என்றால் ஆயிரம் இருக்கும் என்றுதான் கூறுவார்கள். பெண்களை பெரும்பாலான இந்தியப் பெற்றோர் சுமையாகவே நினைக்கிறார்கள். ஆனால், பிரேம் குப்தா வேறு ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் இங்கு அவரைப் பற்றி பேச வைக்கிறது. மருமகனின் வீட்டுக்கு பேண்டு, மேளம், டிரம்பெட்டுடன் சென்று மகளை எப்படி கல்யாணம் செய்துகொடுக்கும்போது கொண்டாட்டமாக அனுப்பி வைத்தாரோ அதேபோல தாளமேளத்துடன் கூட்டி வந்துவிட்டார். உண்மையில் அவரை சுற்றி இருப்பவர்கள், திட்டியிருப்பார்கள். பணம் கொடுத்து மகளை வாழ வை என்று கூட கூறியிருப்பார்கள். ஆனால் பிரேம் குப்தா தனது மகளின் மனநிம்மதியை, பாதுகாப்பை முக்கியமாக நினைத்திருக்கிறார். வாயில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்றாலும் தனது மகளை கௌரவ...

வட்டவடிவ பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி எதற்காக?

படம்
  பழமொழிகளை நாம் நிறைய இடங்களில் பயன்படுத்துவோம். நிறைய நம்பிக்கைகளை முன்னோர்கள் கூறினார்கள் என அப்படியே பின்பற்றுவோம். அதை ஏன் என கேள்வி கேட்டால்தானே அதன் பின்னணி தெரியும். அப்படி சில விஷயங்களை தேடிப்பார்த்த அனுபவம் இது.  தினசரி 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடலுக்கு நல்லது இப்படி கூறுவதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. பொதுவாக வாக்கிங் சென்றால் நல்லது என்ற நிலைக்கு நீரிழிவு நோய் வந்தவர்கள் வந்துவிட்டார்கள். எனவே பத்தாயிரம் அடி என்பது கூட இப்போது போதுமா என்று தெரியாத நிலை. ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்த காலம். 1960ஆம் ஆண்டு, மான்போ கெய் என்ற கருவி விற்பனைக்கு வந்தது. இதை பத்தாயிரம் அடி மீட்டர் என்று அழைத்தனர். இக்கருவியை தயாரித்த யமாசா என்ற நிறுவனம் பத்தாயிரம் என்ற எண்ணைக் குறிக்கும் ஜப்பானிய எழுத்தைக் கவனித்தது. அது ஒரு மனிதர் நடப்பது போலவே இருந்ததால்,அதேயே விற்பனைப் பொருளுக்கு பயன்படுத்தியது.  உடல் ஒரே இடத்தில் இருந்தால் அது கெடுதலை உருவாக்கும், எனவே சிறிது நடங்கள், உட்காருங்கள். உடலை பல்வேறு வடிவங்களில் நிலைகளில் மாற்றி உட்கார்ந்து பாருங்கள். இதெல்ல...

பெண் தலைவர்களை நம்பாத நாட்டு மக்கள், ஒழுக்கத்தை தூக்கிப்பிடிக்கும் ஊடகங்கள்- பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்?

படம்
  சன்னா மரின் ஜெசிந்தா ஆர்டெர்ன் உலக அரங்கில் பெண் தலைவர்கள் காணாமல் போவது ஏன்? அண்மையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஆஸ்திரேலியா நாட்டில் உரையாற்றினார். அதில், உலக நாடுகளில் ஏற்பட்டு வரும் ஜனநாயக பாதிப்புகளை பற்றி குறிப்பிட்டு பேசினார். ‘’உலக நாடுகளில் பரிசோதனை முறையாக இரண்டு ஆண்டுகள் பெண்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் உலகம் சரியான திசையில் செல்லத் தொடங்கும்’’ என்று பேசினார். அவரை நேர்காணல் கண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் அதற்கு பதிலாக “ஆறுமாதங்கள் போதும்” என்று கூறினார். பராக் ஒபாமா தனது மனதில் இருப்பதைக் கூறினாலும் அவர் கூறிய விஷயம் நடைபெறுவது மிகவுமதொலைதூரத்தில் இருக்கிறது. ஐ.நா சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், கடந்த இருபது ஆண்டுகளில்தான் பெண்கள் நாட்டின் அதிபர்களாக வரத் தொடங்கியுள்ளனர். இப்படி அவர்கள் நாட்டின் தலைவர்களாக உருவாகி வளரும் எண்ணிக்கையும் ஆண்களோடு ஒப்பிட்டால் குறைவாக உள்ளது. 2022ஆம் ஆண்டு பதினேழு பெண் தலைவர்கள் ஆட்சியில் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை பனிரெண்டாக சுருங்கிவிட்டது. பாலின பாகுபாடு காரணமாக பெண்களுக்கு அரச...

பணமும், அறிவுக்கூர்மையும் ஒரே இடத்தில் இருந்தால்.... - காதல்கவிதை (விஷ்வா)

படம்
  விஷ்வா (காதல் கவிதை) பிரசாந்த் தமிழ் இயக்குநர் – அகத்தியன் படத்தின் தொடக்க காட்சியில் விஷ்வா என்பவர், பெட்டிக்கடையில் வந்து நின்று தண்ணீர் கேட்பார்.   காசு கொடுத்து வாட்டர் பாக்கெட் கேட்க மாட்டார். இலவசமாக டம்ளரில் நீர் கேட்பார். ‘காசு கொடுத்தாத்தான் தண்ணீர் ’ என கடைக்காரர் சொல்லுவார். அதாவது, பாக்கெட்டில் கொடுப்பேன் என்கிறார். ஆனால், விஷ்வா தனது சட்டை பாக்கெட்டை காட்டி ‘’பாக்கெட்டில் ஊற்றினால் கீழே கொட்டிடுமே, டம்ளரில் கொடுங்க’’ என கேட்பார். தான் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்போதுதான் நமக்கே பீதியாகும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என…. முதல் காட்சி தொடங்கி விஷ்வாவின் பாத்திரம் சற்று ரிவர்ஸாகவே பேசிக்கொண்டிருக்கும். விஷ்வா, அப்போதுதான் ஜில்லெட் க்ரீம் போட்டு அதே கம்பெனி ரேஷரில் ஷேவ் செய்துவிட்டு வந்த மாதிரியான பளபளப்பில் இருப்பார். சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டிக் கடைக்கு வரும் சார்லி, சைக்கிளுக்கு ட்ரைவர் வேணும் என விஷ்வாவைக் (பிரசாந்தைக்) கூட்டிக்கொண்டு போவார். பிறகு பீச்சுக்கு செல்வார்கள். அங்கு ஏதோ ஒரு கடையைப் பார்த்துக்கொள்வதாக பேசிக்கொண்டு இருப...

காதலர்களை போனை மாற்றிக்கொள்ளச் சொல்லும் பெண்ணின் அப்பா! லவ் டுடே - பிரதீப், இவானா

படம்
  லவ் டுடே பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா இசை யு1 இயக்கம் பிரதீப் ரங்கநாதன்   நிகிதா, பிரதீப் என இருவரும் காதலிக்கிறார்கள்.இருவரும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கமாகித்தான் டேட்டிங் சென்று காதலிக்க தொடங்குகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதாக சொல்லிக்கொள்கிறார்கள். கல்யாணம் பற்றி பேசப் போகும்போது நிகிதாவின் அப்பா, இருவரும் ஒரு நாளுக்கு இருவருடைய போன்களையும் மாற்றிக்கொள்ளச் சொல்கிறார். இதனால் ஏற்படும் களேபரங்கள்தான் படம். படத்தை இயக்குநர் பிரதீப் குடும்ப படம் என்றாலும் முழுப்படத்தையும் குடும்ப ஆட்கள் தனித்தனியாக வந்து பார்த்துக்கொள்ளலாம். படம் அப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. 2கே கிட்ஸ்களுக்கான படம். எப்போதும் போனை கையில் வைத்துக்கொண்டே அனைத்து உறவுகளையும் அனைத்து வசதிகளையும் பெற்று நுகரும் ஆட்களுக்கு அதன் வழியாக சந்திக்கும் மனிதர்கள், அவர்களால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி பேசுகிற படம்.   நேரடியாக ஒருவரைச் சந்தித்துப் பேசுவதும், அதன் வழியாக உறவு வளர்வதும், சமூக வலைத்தளங்களின் வழியாக உறவு வளர்வதும் எப்படியானது என்பதை படத்தில் சில இடங...

புதிர்ப்பாதையிலிருந்து நம்பிக்கை பெற்று தப்பி வாழ்க்கையை அடைய கற்றுத்தரும் நூல்! - ஸ்பென்சர் ஜான்சன் (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

படம்
  புதிர்ப்பாதையிலிருந்து தப்பித்து வெளியேறுதல்  ஸ்பென்சர் ஜான்சன் தமிழில் நாகலட்சுமி சண்முகம்  மின்னூல்  என் சீஸை நகர்த்தியது யார் என்ற நூலின் இரண்டாம் பகுதி. நூல் சிறியதுதான். வேகமாக படித்துவிடலாம்.  நாம் நம்புகின்ற நம்பிக்கை தவறாக இருக்கும்போது, அது நம்மை தொழில் வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து துன்பத்திற்குள்ளாக்குவதை எழுத்தாளர் வலுவாக சொல்ல நினைத்துள்ளார். அதற்குத்தான் புதிர்ப்பாதையில் சீஸ் தேடும் கதை கூறப்படுகிறது. இதில் ஜெம், ஜா, ஹோம் மற்றும் இரு சுண்டெலிகள் உள்ளன.  சுண்டெலிகளும், ஜாவும் புதிர்ப்பாதையில் இருந்த சீஸ்களைத் தேடி கண்டுபிடிக்க கிளம்புகின்றனர். ஆனால் ஜெம், இன்று இல்லாவிட்டால் என்ன நாளை இதே இடத்தில் சீஸ் கிடைக்கும் என காத்திருக்கிறான். பாறையின் புதிர்ப்பாதையில் யார் சீஸை வைப்பது, அதற்கான ஆதாரம் பற்றி அவன் ஏதும் கவலைப்படுவதில்லை. இதனால் நாளுக்குநாள் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை. ஆளும் மெலிய நம்பிக்கையும் மெலிகிறது. அப்போது ஹோம் என்ற சிறு குள்ளப் பெண் அவனுக்கு ஆப்பிள் தந்து உதவுகிறாள். ஜெம்முக்கு அது ஆப்பிள் என்பது கூட தெரிவதில்லை. சீஸ...

பாரனாய்ட்டும், ஸிஸோபெரெனியாவும் ஒரே குறைபாடா?

படம்
  ஆளுமை பிறழ்வு குறைபாட்டில் பாரனாய்ட் மற்றும் ஸிஸோய்ட் மற்றும் ஸிஸோடைபல் ஆகிய இரண்டுக்கும் சில ஒத்த அறிகுறிக்ள் உண்டு. அதாவது, நிகழ்காலம் மெல்ல மறந்துவிடும். புதிய பாத்திரங்கள், உலகத்தை உருவாக்கியபடி வாழ்வார்கள்.    ஸிஸோய்ட் குறைபாடு உள்ளவர்களுக்கு சமூக உறவுகள் குறைவாகவே இருக்கும். இவர்கள் தங்களது உணர்ச்சிகளையும் குறைவாகவே வெளிப்படுத்துவார்கள். தங்களுக்கே இப்படியென்றால் பிறரைப் பற்றி நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். கவலையே பட மாட்டார்கள்.  ஸிஸோடைபல் குறைபாடு உள்ளவர்களுக்கு, நெருங்கிய உறவுகளைக் கையாள்வது கடினமாக இருக்கும். இவர்களை எதிர்கொண்டு புரிந்துகொள்வது நெருங்கிப் பழகுபவர்களுக்கு சவால். அப்படியெனில் புதிதான ஆட்களுக்கு எப்படி இருக்கும்?பீதியூட்டும் குணம் கொண்ட மனிதர்களாக தெரிவார்கள் என்று அர்த்தம்.  ஆளுமை பிறழ்வு விவகாரத்தில் ஒருவருக்குள் பல்வேறு மனிதர்கள் எந்த வித ஒற்றுமையும் இல்லாமல் இருப்பது சாத்தியம். மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என  இதைக் கூறலாம். மனம் குறிப்பிட்ட வாழ்க்கை சம்பவத்தில் காயமுற்று அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும்போது உய...

உறவும் கிடையாது, நம்பிக்கையும் கிடையாது! பாரனாய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்

படம்
பாரனாய்ட் என்பதை,  மனதை விட்டு வெளியே என சுருக்கமாக சொல்லலாம். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் பாரனாய்ட் என்பதை் எளிதாக இயல்பாக பயன்படுத்துவார்கள். பாரனாய்ட் எனும் ஆளுமை பிறழ்வு கொண்டவர்கள் பிறரை எளிதாக நம்ப மாட்டார்கள். இவர்களது தினசரி நடவடிக்கையில் பிறரை நம்பாமல் நடந்துகொள்வது தெரியும்.  அலுவலகமோ, வீடோ, பிற இடங்களோ அங்குள்ள அனைவருமே பாரனாய்ட் பிறழ்வு உள்ளவர்களுக்கு எதிரிகள்தான். அவர்கள் தன்னை தாக்க முயல்கிறார்கள் என்றே நோயாளி நினைப்பார். இதனால், அந்த தாக்குதலுக்கு எப்படி பதில் தருவது என யோசித்தபடி, மனதில் பயந்துகொண்டிருப்பார். இவர்களை சொற்கள், உடல் என யாராவது தாக்கினால் அவர்கள் பாடு கஷ்டம்தான். பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள், திருப்பி பதிலடி தருவதிலும் சளைக்காத மனிதர்கள். வார்த்தைக்கு வார்த்தை கண்களுக்கு கண் என எதையும் மறக்காத மன்னிக்காத ஆட்கள்.  பாரனாய்ட் ஆளுமை பிறழ்வு கொண்டவர்களுக்கு ஸீசோபெரெனியா குறைபாடும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வன்முறை எண்ணங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் பாரனாய்ட் நோயாளிகளுக்கு அதிகம் உண்டு. நடக்காத விஷயங்களை நடப்பதாக, சந்திக்காத மனிதர்க...

ஆளுமை பிறழ்வின் அறிகுறிகள்

படம்
  தற்கொலை அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம் ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியாத குணம் செய்யும் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள இயலாமை எப்போதும் சட்டத்தை மீறிக்கொண்டே இருப்பது கட்டுப்படுத்த முடியாத கோபம் திறன் இன்மை பற்றிய தீராத ஆதங்கம் , ஏக்கம் சமூகத்தோடு இணையாமல் நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பிறரின் மீது கருணையின்றி இருப்பது பிறரின் கவனத்தை ஈர்க்க அதீதமாக முயல்வது துன்புறுத்தப்படுவது பற்றிய பயம் பிறரது மீது நம்பிக்கையின்மை படம் - பின்டிரெஸ்ட் 

கடவுளின் சாபத்தால் நாட்டுக்கு தனியாக சொல்லும் மன்னன் ஒடிஸியஸ் ! ஹோமரின் ஒடிஸி - தமிழில் சிவன்

படம்
  ஹோமரின் ஒடிஸி தமிழில் சிவன் சுருக்கப்பட்ட வடிவம் மொத்த நூலின் பக்கங்களே 111 தான்.  இதாக்கா நாட்டு அரசர் ஒடிஸியஸ் ட்ரோய் போரில் பங்கேற்று வெற்றி பெறுகிறார். அந்த வெற்றிக் களிப்புடன் கடலில் வருகையில் கடவுள் ஒருவரின் மகனுடன் சண்டை போட நேரிடுகிறது. அவர் ஒரு அரக்கன், ஒடிஸியஸின் படை வீரர்கள் தக்காளி தொக்கு போல கொன்று சாப்பிட, ஒடிஸியஸ் அவனது ஒற்றைக் கண்ணை குருடாக்குகிறான். இதனால் கோபம் கொண்டு வன்மத்தோடு ஒடிஸியஸ் மற்றும் அவனது படைவீரர்கள் மீது சாபம் விடப்படுகிறது. அதாவது, அவர்கள் தங்கள் சொந்த  நாட்டை சென்று சேர மாட்டார்கள் என. இதன் அர்த்தம் சொந்த நாட்டுக்கு செல்லும் வழியிலே வீரர்கள் அழிந்துபோவார்கள் என.  இந்த சாபத்தை சக கடவுளான ஸியூஸ் கூட மாற்றமுடியாது. ஏனெனில் சாபம் கொடுத்தது கண் குருடான பையனின் அப்பா, வேறு யாருமில்லை. ஸியூஸின் தம்பி தான். அவரும் கடவுள் என்பதால் தன் பக்தன் ஒடிஸியை காக்க தனது மகள் ஆதீனி தேவியை அனுப்பி வைக்கிறார் ஸியூஸ்.  நூல் முழுக்க ஒடிஸியஸும், ஆதீனிதேவியும் தான் நிறைந்திருக்கிறார்கள். ஒடிஸியஸ் எப்போது தடுமாறினாலும் அவனுக்கு உதவிகளை நிரம்பச்செய்து சா...

தொழிலில் ஜெயிக்க உங்களை நீங்கள் நம்ப வேண்டும் - குஷ்னம் அவாரி, நிறுவனர், பனாசே அகாடமி

படம்
  குஷ்னம் அவாரி நிறுவனர், பனாசே அகாடமி விமானப் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. எப்படி விண்ணப்பிப்பது, வேலைக்கான பயிற்சி, தகுதிகள் என்ன என்பதை இன்னுமே அறியாமல் தடுமாறுகிறார்கள். இதைத்தான் குஷ்னம் அவாரி தனது பனாசே அகாடமி மூலம் தீர்த்து வருகிறார். பயிற்சி கொடுப்பதோடு வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறார்.  அவாரியின் செயல்பாடுகள் காரணமாக நான்கு ஆண்டுகளாக 2016 தொடங்கி 2019 வரையில் சிறந்த கல்வி நிறுவனம் என்ற விருதைப் பெற்றுள்ளது. மேற்கு இந்தியாவில் விமான பணிப்பெண்களை உருவாக்கும் கல்வி நிறுவனமாக மாணவர்களின் ஸ்டூண்ட் சாய்ஸ் விருதையும் பெற்றுள்ளது.  இந்த துறையில் சாதிக்க உங்களுக்கு ஊக்கம் கொடுத்த நபர் யார்? எனது அம்மா ஜரின் பாஸ்லா தான் எனக்கு ஊக்கமளிக்கும் நபர். அவர், மானேக்ஜி கூப்பர் மேல்நிலைப்பள்ளியில் தலைவராக இருக்கிறார். கல்வியாளரும் கூட. இளைஞர்களுக்கு ஊக்கமளித்து முன்னேற்றம் அளிப்பதில் அவர்தான் எனக்கு ரோல்மாடல். எனது கணவர் பெர்சி அவாரி எப்போதும் நான் எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னுடன் நின்றிருக்கிறார். எனக்கு இன்று வரை ஆதரவும்...

தோற்றுப்போவதற்கு பயப்படாதீர்கள்! - ஹேம்லதா முகேஷ் சாங்வி, வர்த்தமான் ஜூவல்லர்ஸ்

படம்
  ஹேம்லதா முகேஷ் சாங்வி துணை நிர்வாகத்தலைவர் - வர்த்தமான் குழும நிறுவனங்கள் படித்தது மென்பொருள் பொறியியல் படிப்பு. ஆனால் செயல்படுவது, தொழிலதிபராக தொழில்துறையில் என்பதுதான் லதாவின் வாழ்க்கை. மும்பையில் செயல்படும் வர்த்தமான் குழுமத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு என லதாவைக் கூறலாம். வர்த்தமான்  நிறுவனத்தின் முக்கிய வணிகம், நகைகள்தான்.  2016ஆம் ஆண்டு வர்த்தமான் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதனை தங்க நகைக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக வளர்ச்சி பெறச் செய்தார். வர்த்தமான் நிறுவனம், நிலம், வண்டி, வாகனங்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் முதலீடுகளை செய்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கையான நூறு நிறுவனங்களைக் கணக்கெடுத்தால் வர்த்தமான் நிறுவனமும் அதில் ஒன்று என்று கூறலாம்.  ஹேம்லதாவிடம் பேசினோம்.  நீங்கள் வணிகத்திற்குள் எப்படி நுழைந்தீர்கள்? 2006ஆம் ஆண்டு எனது மாமனார் மறைவிற்குப் பிறகு எனது கணவர் வர்த்தமான் குழுமத்தின் தலைவராக ஆனார். நான் வணிகத்திற்குள் வர நினைக்கவில்லை. ஆனால் எனது கணவர் நகை தொடர்பான வணிகத்தை கவனித்துக்கொள்ள வலியுறுத்தினார். சந...

கனவு காண்பதில் எந்த சமரசமும் தேவையில்லை! - சித்தானந்த் சதுர்வேதி

படம்
சித்தானந்த் சதுர்வேதி  நடிகர்.  உங்கள் வாழ்க்கை இப்போது எப்படி மாறியிருக்கிறது? கல்லி பாய் படத்தில் நடிக்கும்போது நான் ராப் பாடல்கள் மற்றும் கவிதைகளை எழுதிக் கொண்டு இருந்தேன். நான் கிடைக்கும் இடைவெளியில் பாடல்களை எழுதிக்கொண்டிருப்பேன். இதைப்பார்க்கும், விஷயத்தை கேள்விப்படும் பலரும் நான் உண்மையில் ராப்பாடகர் என நினைப்பார்கள். நான் எழுதுவது மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.  பண்டி ஆர் பப்ளி படத்தின் கதையைக்கேட்ட பிறகு, அந்த பாதிப்பில் நான் நீண்ட பாடல் ஒன்றை எழுதினேன். எனது பாத்திரங்களை மையப்படுத்தி நான் டைரி ஒன்றை எழுதி வருகிறேன். நான் அதை எழுதுவதோடு அதனை பதிவு செய்தும் வருகிறேன். நடிப்பிற்கு நான் இப்படித்தான் தயாராகிறேன். படப்பிடிப்பு தொடங்கும்போது, நான் இப்படி பதிவு செய்த எனது குரலை கேட்பேன். இது கதாபாத்திரத்திற்கு ஏற்ப தயாரித்துக்கொள்ள உதவுகிறது. நான் இப்படி பாத்திரத்திற்குள் உள்ளே சென்றபோது, அந்த பாத்திரம் எப்படி யோசிக்கும் என்றுதான் நினைப்பேன். சிந்திப்பேன். நான் இப்படித்தான் எனக்கு கொடுக்கப்படும் பாத்திரங்களை நடிக்கிறேன். எழுதுவதில் உங்களுக்கு ஆர்வம் வந...

எழுத்து என்பது நம்பிக்கையின் செயல்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  எனது மடிக்கணினி பழுதாகிவிட்டது. அதனை சரி செய்ய லினக்ஸ் தெரிந்த ஆட்களிடம் கொடுத்திருக்கிறேன். கணினியில் 60 பக்கம் எழுதிய நூல் இருந்தது. அதுவும் மெல்ல அழிந்துபோய்விட்டது. கணினியின் இயக்கமும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஒருபோதும் நடந்ததே இல்லை என லினக்ஸ் நண்பர் சீனிவாசன் சத்தியம் செய்தார். என்னவென்று, எனக்கும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன். மேன்ஷனில் ஆட்கள் அதிகரித்துவிட்டதால், இப்போது கடையில்தான் சாப்பிடுகிறேன்.   வேலைப்பளுவில் சமைப்பதும் கடினமாகிவருகிறது. தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலை 150 பக்கங்கள் படித்துவிட்டேன். கதை, அமெரிக்காவில் நடைபெறுகிறது. ட்ரேஸி என்ற பெண் எப்படி தன் அம்மா தற்கொலை செய்யக்கார ணமானவர்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.  படித்தவரை மேற்குலக நகரக் கதை என்றாலும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். அலுவலகத்தில் கிறிஸ்மஸிற்கு விடுமுறை கிடையாது என கூறிவிட்டார்கள்.  நன்றி! அன்பரசு 24.12.2021 ---------------------------- எழுத்தாளர் இசபெல் அலண்டே அன்புள்ள இரா.முருக...