இடுகைகள்

எலக்ட்ரானிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமேசானை நெருக்கடியில் தள்ளும் போலிப்பொருட்கள்!

படம்
              அமேசானில் கிடைக்கும் அனேக டெக் பொருட்கள் போலியானவை! அனைத்துமே போலி என்று கூறமுடியாது. ஆனால், நிறைய பொருட்களை ஒரே நிறம், வேறு எழுத்துகள் என நுட்பமாக பயனர்களை ஏமாற்றி வருகிறார்கள். இதனால், அமேசானே இப்படி செய்தால் எப்படி என மக்கள் வேறுவேறு இ விற்பனை தளங்களுக்கு மாறி வருகிறார்கள். அலி எக்ஸ்பிரஸ், டெமு ஆகிய இ விற்பனை தளங்களிலும் நிறைய போலிகள் உண்டு என ஊடகங்கள் கூறி வருகின்றன. போலிகளை முற்றாக தடுப்பது கடினம். ஆனால், அதிக விலை கொடுத்து மட்டமான பொருட்களை வாங்காமல் இருக்கலாமே? அதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். அமேசானில் ஒரு பொருளை வாங்கி சில நாட்களிலேயே அது போலி என தெரிந்தால், முப்பது நாட்களில் அதை வாங்கிய காசை திரும்ப பெறலாம். இதற்கு ஏ டு இசட் கேரண்டி புரடக்சன் என்ற வலைத்தள பக்கம் உள்ளது. பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது பொருட்கள் பற்றி புகார் தெரிவிக்க வாய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், பயனர்கள் தங்களுக்கு கிடைத்த போலிப்பொருட்களைப் பற்றி புகார் செய்ய முடியாது. எஸ்டி கார்டுகள் இதில் சான் டிஸ்க் நிறுவனத்தின் போலி...