இடுகைகள்

வாக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனமொழியின் அடிப்படை வாக்கியங்களை கற்றுத்தரும் நூல்!

படம்
 சீனமொழியில் உள்ள 21 எளிய வாக்கியங்கள் பயணிதரன் பயணி.காம் பக்கம் 70 இலவச நூல் இந்த நூலை பயணி.காமில் மின்னஞ்சல் முகவரி பதிந்து தரவிறக்கி படித்தது. எழுத்தாளர் பயணி சீனமொழி கற்று அங்குள்ள இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சீனமொழி கற்கவென தனி நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் இந்த நூல் சீனமொழிக்கான அறிமுக நூலென்று கூறலாம்.  சீனமொழி கற்பதற்கான அடிப்படை இலக்கண, இலக்கியங்களை பயணி கற்றுத்தரவில்லை. அவர் பொதுவாக உரையாடலுக்கான எளிய நூலை எழுதியிருக்கிறார். மும்பை நாயகிகள் தமிழை இந்தியில் எழுதி வைத்து பேசுகிறார்களே அதுபோல, கொச்சையாக இருந்தாலும் தமிழ் வருகிறதே போதுமல்லவா? அதுபோலத்தான் நீ ஹாவ் என்பது உச்சரிப்பு எப்படி இருந்தாலும் அதை சொன்னாலே சீனர்கள் புரிந்துகொண்டு வேற்று நாட்டவர் என்ற வேற்றுமையை விரோத உணர்வை சற்று தளர்த்திக் கொள்வார்கள்.  பயணி எழுதியுள்ள நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக நடைமுறை ரீதியாக கிடைக்கும் நன்மை, அடிப்படையான விஷயங்களை எப்படி கேட்பது, பதில் பெறுவது, அதற்கு நன்றி சொல்வது, பிறகு விடைபெற்றுச்செல்வது ஆகியவற்றை தெரிந்துகொள்வதுதான். எனவே, இலவச நூல்...

சீனமொழி பேசுவதற்கான இலவச நூல் - கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை கொண்டது!

படம்
          இனிய நண்பர்களுக்கு வணக்கம் முன்னாள் விகடன் மாணவப் பத்திரிகையாளரான பயணிதரன் எழுதியுள்ள இலவச நூல் இது. இந்த நூலை அவரது பயணி என்ற வலைத்தளத்தில் சென்று தரவிறக்கிக் கொண்டு படிக்கலாம். வலைத்தளத்தில் சந்தாதாரராக இணைந்தால் நூலை இலவசமாக அளிக்கிறேன் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வலைத்தளத்தை விளம்பரப்படுத்த சிறந்த யோசனை. ஆனால், நூலை உடனே தரவிறக்க முடியவில்லை. வலைத்தளத்தில் இணைந்து ஏறத்தாழ சில மாதங்கள் கழித்து மின்னஞ்சலில் நூலை அனுப்பி வைத்தார். அனேகமாக அறிவிப்பை வெளியிட்டுவிட்டு நூலை எழுதிக் கொண்டிருந்திருக்கக்கூடும். கிரியேட்டிவ் காமன் உரிமையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நூலை பிறருக்கும் நீங்கள் பகிர்ந்து வாசிக்கலாம்.