இடுகைகள்

செல்வம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நன்மையோ, தீமையோ தன் வாழ்க்கையை முழுமையாக வாழ முயலும் நாம்கூங் குடும்பத்தின் நோயுற்ற இரண்டாவது மகன்!

 ஹெவன்லி மார்சியல் காட் மங்கா காமிக்ஸ் பாடோ.ஐஓ நன்மை, தீமை பற்றியெல்லாம் கவலைப்படாத ஆள். தன்னை நலமாக வைத்துக்கொள்ள நிறைய அடிதடி, கொலை, சதித்திட்டங்களை செய்கிறார். இறுதியாக ஒரு கட்டத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பு ஆட்களைக் கூட கொன்றுவிட்டு தற்காப்புக்கலையில் உச்சம் அடைய முயல்கிறார். ஆனால், அவரது ரத்தக்களறியான கடந்தகாலம் தடையாகிறது. அவரை அந்நிலைக்கு அனுமதிக்க உயரிய சக்திகள் மறுக்கின்றன. இதனால் அவரின் ஆன்மா, நாம்கூங் இனக்குழுவின் நோயுற்ற பிள்ளை உடலில் புகுகிறது. அந்த பிள்ளைக்கு உடலில் 9 யின் யாங் தடை உள்ளது. இந்த நோய் அரிதானது. இப்படி உள்ளவர்கள் இருபது வயதில் இறந்துபோய்விடுவார்கள்.  உடல் பலவீனம், எலும்புகள் முறிவது, குளிரைத் தாங்க முடியாதது ஆகியவை நோயின் அறிகுறிகள்.  முந்தைய காலத்தில் மிகச்சிறந்த வீரனாக இருந்தவர், நிகழ்காலத்தில் பலவீனமான உடல்கொண்ட ஆண் பிள்ளையின் உடலில் இருந்துகொண்டு இயங்க முடியாமல் தவிப்பதை கதையில் சிறப்பாக காட்டியுள்ளனர். ஓவியங்கள் நன்றாக உள்ளன.  கதையில் நாயகன், முந்தைய காலத்தில் இருந்ததைப் போல கொடூரமாக தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவனாக இருப்பதில்லை...

மாணவர்களை மன உளைச்சலில் தள்ளும் சீன அரசு தேர்வுமுறை!

படம்
சீன பொதுவுடைமைக் கட்சி, நாட்டிலுள்ள பொதுக்கல்வியைக் கட்டுப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது. அரசியல் கொள்கை திணிப்பு, அதீத தேசியவாதமும் உள்ளடங்கும். உலகிலேயே சீனாவில் பள்ளிகளும், ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களும் அதிகம். சீன அரசின் நோக்கம், மக்களை உற்பத்தித்துறையில் இருந்து கண்டுபிடிப்புகளுக்கு நகர்த்தி நாட்டை முன்னேற்றுவதுதான். அதற்கு கல்வி தரமாக இருக்கவேண்டும் என்பதே முதல்படி. ஏழை - பணக்காரர், நகரம் - கிராமம் இடைவெளியே குறைத்து கல்வியில் சீர்திருத்தங்களை செய்யவேண்டும். சிந்தனையும், செயல்திறனும் கொண்ட மாணவர்களை உருவாக்கினால்தான் நாடு எதிர்காலத்தில் வலிமை பெறும். கிராமங்களில் சிறுபான்மை மக்களுக்கு, ஏழைகளுக்கு, தொலைதூரத்தில் வசிப்பவர்களுக்கு கற்கும் கல்வியை தரமாக்குதல், தொடக்க கல்வியை அனைவரும் எளிதாக அணுகும்படி மாற்றுதல், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வியை மானியம் அளித்து வழங்குதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மேம்படுத்துதல் ஆகியவற்றை பொதுவுடைமைக் கட்சி முக்கியமானதாக கருதியது. சீனத்தின், பதிமூன்றாவது ஐந்தாவது திட்டத்தில் கல்வியை சீர்திருத்தி மேம்படுத்து...

குறைந்த வேலை நேரத்தில் உழைத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?

படம்
      குறைந்த நேரம் உழைப்பு, அதிக நேரம் வாழ்க்கை அணுக்க முதலாளித்துவத்தை கொண்டுள்ள இந்தியா, தொழிலாளர் சட்டங்களை ஏற்கெனவே திருத்தி, உரிமைகளை பறித்து வருகிறது. அப்படியும் கூட மனநிறைவு பெறாத மனச்சிதைவு கொண்ட பேராசைக்கார கிழவாடிகள், இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டும் என ஊளையிட்டு வருகிறார்கள். அதாவது, உழைத்தால் அவர்களுக்கு நல்லது. சொத்து மதிப்பு ஏறும். தொழிலாளர்களுக்கு உடைந்த மண்சட்டி ஓடு கூட கிடைக்காது. மாதசம்பளக்காரர்களிடம் வருமான வரித்துறை ஜேப்படி திருடன் போல நடந்துகொள்கிறது. இந்திய அரசு வரியை வெளிநாடுகள் அளவுக்கு வாங்கிவிட்டு மருத்துவம், கல்வி, என கேள்வி கேட்டால் தனியாரிடம் துரத்திவிடுவார்கள். கார்த்திக் நேத்தாவின் வரிகளில் சொன்னால் ஒரு கண்ணில் அகங்காரம், மறுகண்ணில் ஓம்காரம் என்பது அரசைப்பற்றி புரிய வைக்க சரியாக இருக்கும். 1926ஆம் ஆண்டு ஹென்றி போர்டு, தனது கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஐந்து நாட்கள் வேலை. எட்டு மணி நேரம் உழைப்பு என்ற விதிகளைக் கொண்டு வந்தார். இதை ஒன்பது மணி தொடங்கி ஐந்து மணி வரையிலான வேலை என்று கூட குறிப்பிடும் வழக்கம் இருந்தது. அதிக நேரம் உழைக்கும் நாடு...

எங்கெல்லாம் கல்வியறிவு குறைவாக உள்ளதோ, அங்கெல்லாம் வறுமையான ஏழை மக்கள் உருவாகிறார்கள்! - ஷி ச்சின்பிங்

படம்
1949ஆம் ஆண்டு சீனாவில் மக்கள் குடியரசு மலர்ந்தது. அந்த காலம்தொட்டே நாம் கல்வியில் நிறைய முன்னேற்றங்களைப் பெற்று வருகிறோம். வரலாற்று ரீதியாக கல்வி மேம்பாடு பற்றி பெருமை கொள்வதற்கான நிறைய விஷயங்கள் நம்மிடையே உண்டு. 1949ஆம் ஆண்டுக்கு முன்னர் நிங்டே பகுதி பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்று நாம் அங்கு பள்ளிகளைக் கட்டியுள்ளோம். விவசாயிகளின் பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். இத்தோடு திருப்தி அடைந்துவிடலாமா?, இல்லை. மாறிவரும் கல்வியில் வரும் புதிய மேம்பாடுகளை அறிந்து கொள்ளவேண்டும். கல்வி என்பது பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு பிரிக்க முடியாத தொடர்புடையது. கல்வியைப் பயன்படுத்தி உள்ளூர் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை மேம்படுத்த முடியும். மேற்சொன்ன கருத்துகளின் அடிப்படையி்ல நிங்டேவில் உள்ள கல்வி நிலையைப் பார்ப்போம். அப்போதுதான் கல்வி பற்றிய கவனத்தைப் பெறமுடியும். நடைமுறை சூழலைப் பார்த்து வேகமாக முடிவெடுத்து தீர்மானிக்க வேண்டிய நிலையை புரிந்துகொள்ள லாம். நிங்டே பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளது. அதேநேரம் கல்வியிலும் மோசமாக உள்ளதா? அப்படி பார்ப்பது சரியா? ...

வணிக நடைமுறைகளை நகல் செய்தால் வெற்றி பெற முடியாது! - ஷி ச்சின்பிங்

படம்
ஒ ருமுறை நாம் பறக்கத் தொடங்கி கடலைத் தாண்ட முயன்றால் தட்பவெப்பநிலை, உலக நாடுகளின் சந்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் போராடி பிழைத்து சமாளித்து நிற்க வேண்டும். வணிகத்திற்கு ஏற்ற மாதிரி நிங்டே, ஷியாபு, ஃபுவான், ஃபுடிங் ஆகிய பகுதிகள் உள்ளன. இதில், முதல் இரண்டு பகுதிகள் மட்டுமே வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள இரண்டு பகுதிகளும் வணிகத்திற்கு ஏற்ப தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றன. நிங்டே, ஷியாபு ஆகிய இருபகுதிகளும் நாம் செல்லவேண்டிய திசையைக் காட்டுகின்றன. அந்த வழியில் நாம் செல்லவேண்டுமெனில், அதற்கு நம் உழைப்பு தேவைப்படுகிறது. சூழலின் அவசரத்தைப புரிந்துகொண்டு நிலையை அங்கீகரிப்பது அவசியம். வணிகத்திற்காக பின்தங்கியுள்ள பகுதியை திறந்து வைப்பது என்பது எளிதல்ல. காலம், இடம், உற்பத்தி சார்ந்த சிக்கல்கள், வணிக மாதிரிகள் என நிறைய சவால்கள் உள்ளன. திறந்த முறையைப் பின்பற்றும் பிற நகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அப்படியே நகல் எடுப்பது உதவாது. நம்முடைய நடைமுறை சார்ந்த சூழல்களைக் கருத்தில் கொண்டு வணிக முறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வணிகத்திற்காக ஒ...

பெண்களை முன்னேற்றும் காய்கறி டெலிவரி நிறுவனம்- வீல்சிட்டி

படம்
  நடுவில் இருப்பவர் இயக்குநர் செல்வம் விஎம்எஸ் செல்வம் விஎம்எஸ் நிறுவனர், இயக்குநர் வீலோசிட்டி   வீலோசிட்டி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காய்கறிகளை விற்கும் நிறுவனம். இதன் தனிச்சிறப்பு, காய்கறிகளை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பவர்கள் உள்ளூரிலுள்ள பெண்கள் என்பதுதான். இவர்கள் காய்கறிகளை கொண்டு வந்து கொடுக்கும் ஆட்டோ, காய்கறிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் குளிர்பதன வசதி கொண்டது. அது மின்வாகனம் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிற செய்தி. ஆர்டர்களை டெலிவரி செய்யும் பெண்களின் போனில் வீலோசிட்டி ஆப் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த ஆப்பில், காய்கறிகளின் புத்துணர்ச்சி, தட்பவெப்பம், வண்டியின் வேகம் ஆகிய நிலைகளை பார்த்து அதற்கேற்ப அவற்றை டெலிவரி செய்ய முடியும்.   இந்த வகையில் பெண்களுக்கு ஒருநாளுக்கு 800- 1000 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. இதற்கு அவர்கள் ஆறு மணிநேரம் வேலை செய்தால் போதுமானது. விவசாய பொருட்களை விற்கும் ஐடியா எப்படி வந்தது?   ‘’’2027ஆம் ஆண்டு காய்கறி சந்தை மதிப்பு 136 பில்லியன் டாலர்களாக இருக்கும். இப்படி விற்பனை அதிகரித்தாலும், அதை உற்பத்தி ...