இடுகைகள்

ஜப்பான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வில் பொருட்களின் நுகர்வைக் குறைத்து முழுமையாக வாழ்வதை கற்றுத்தரும் நூல்!

படம்
  Goodbye, Things Fumio Sasaki குட்பை திங்க்ஸ் ஆன் மினிமலிஸ்ட் லிவ்விங் ஃபிமியோ சசாகி கட்டுரை நூல் பெங்குவின்  சசாகி, நலிந்து வரும் பதிப்புத்துறையில் வேலை செய்கிறார். அதற்காக கற்றது தமிழ் நாயகன் போல இரண்டாயிரம், நான்காயிரம் என சம்பளம் வாங்கவில்லை. வீட்டில் பெரிய டிவி, இசைக்கருவிகள், நூற்றுக்கணக்கான நூல்கள், இசை கேட்கும் கருவிகள் வைத்து இருக்கிறார். ஏராளமான பொருட்களையும் வாங்கிக்கொண்டே இருக்கிறார்.  பொருட்களை எவ்வளவு வாங்கினாலும் அதில் சந்தோஷம் குறைவதை மெல்ல உணர்கிறார். அதன்பொருட்டு, பொருள் சார்ந்து வாழ்க்கை இருப்பதை அறிந்துகொள்கிறார். மெல்ல வீட்டிலுள்ள பொருட்களை குறைக்கத் தொடங்குகிறார். குறைந்த பொருட்களில் நிறைவு என்பதே நூலின் அடிப்படை மையப்பொருள்.  வாழ்க்கையை பயணங்கள், நண்பர்கள், புதிய அனுபவங்களை தேடுவது என அமைத்துக்கொள்கிறார். மினிமலிசம் என்பதை பலரும் புரிந்துகொள்ள கஷ்டப்படக்கூடும். ஆப்பிள் போன் பார்த்திருக்கிறீர்கள். வட்டவடிவில் ஒரே ஒரு பட்டன்தான் இருக்கும். அந்த போன் வந்த காலத்தில் பலரும் ஏகப்பட்ட பட்டன்களை போனில் வைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் அத...

கிழக்காசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குக்கர் பெண்களின் வாழ்க்கையை மாற்றியதா?

படம்
      1962ஆம் ஆண்டு, கணவர் தனது மனைவிக்காக பிரஷர் குக்கர் ஒன்றை வாங்குகிறார். இதைப் பார்த்து அருகிலுள்ள வீட்டுக்காரரும் குக்கர் ஒன்றை வாங்கி மனைவிக்கு கொடுக்கிறார். குக்கரை வாங்கிக் கொடுப்பது, மனைவில் அதை வைத்து வேகமாக சமையல் செய்துவிட்டால் வெளியில் வேலைக்கு செல்லலாம் என கணவர் எதிர்பார்க்கிறார். சமையல் வேலையை செய்துவிட்டு வெளியில் செல்லும் இருவரின் மனைவிகளும் தாங்கள் சந்திக்கும் ஆண்களிடம் காதலில் வீழ்கிறார்கள். இன் தி மூட் ஃபார் லவ் என்ற புகழ்பெற்ற படத்தின் காட்சிகள் மேலேயுள்ளவை. திரைப்படத்தின் கதை ஹாங்காங்கில் நடந்தது. ஆசியாவில் நடந்த முக்கிய கண்டுபிடிப்புகளி்ல ஒன்று, பிரஷ்ர் குக்கர் கண்டுபிடிப்பு. இதன்மூலம் பெண்கள் சமையல் வேலையிலிருந்து சற்றே விடுபட்டு வேலைக்கு செல்ல முடிந்தது. ஒவ்வொரு வேளைக்கும் சமைத்துக் கொண்டிருந்த பெண்கள், குக்கர் வழியாக  ஒரே நேரத்தில் சமைத்து இறக்கிவைத்துவிட முடிந்தது. இன் தி மூட் ஃபார் லவ் படத்தின் இயக்குநர், வாங் கர் வாய் மேற்சொன்ன கருத்தை கூறியிருந்தார். ஆல் வி இமேஜின் ஏஸ் லைட் என்ற திரைப்படத்தை இயக்குநர் பாயல் கபாடியா என்பவர் இயக்கியிருந்த...

சீனப் பொக்கிஷங்களை ஜப்பான்காரனுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கும் நாயகன்!

படம்
  ஷூ ஃபூ டிரஷ்சர் சீன திரைப்படம்  ஒன்றரைமணிநேரம் ஐக்யூயி ஆப் கல்லறைக்கு சென்று பொக்கிஷங்களை தேடும் படங்களுக்கென இருக்கும் சில அம்சங்களைப் பார்ப்போம்.  நாயகன் பொக்கிஷ புதிர்களை அவிழ்ப்பதில் திறமைசாலி. அவனுக்கென நகரில் கலைப்பொருட்களை விற்கும் கடை வைத்திருப்பான். தங்கம், வெள்ளி பாத்திரங்களை கொள்ளையிடுவதில் ஆர்வம் இருக்காது.  நாயகனின் நண்பன் பேராசை கொண்ட வியாபாரி. சூதாடி கலைப்பொக்கிஷங்களை அடகு வைப்பான். இவனுக்காகவே நாயகன் வெளிநாட்டுக்காரர்கள் அல்லது எதிரிகளோடு கூட்டு சேர்ந்து கல்லறைகளை கண்டுபிடித்து உள்ளே செல்லவேண்டியிருக்கும். இந்த காட்சிகள் கடுப்பாக இருந்தாலும் திரை நடிகர்கள் காமெடி என்பதாக பாவ்லா செய்வார்கள்.  நாயகி பெரும்பாலும் நாயகனின் தோழியாக இருப்பாள். எதிரியாக இருந்து நட்பாகி தனது காணாமல் போன அப்பாவை கல்லறைக்குள் தேடிக்கொண்டிருப்பாள். நாயகன் ஊடல் கொள்வதும், ஊடாடி மகிழ்வதும் இவருடன்தான்.  சீன படங்களில் ஜப்பானியர்கள் மேல் துவேஷம் மறைக்கப்படாமல் இருக்கும். அந்த நாட்டினர், சீனாவின் மீது படையெடுத்து நிறைய அக்கிரமங்கள் செய்திருக்கிறார்கள். அதை இன்றுவரை மறந்து...

டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் க்யூடி ஹியூமனாய்ட் ரோபோட்!

படம்
  டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் சமூக ரோபோட்டுகள்!  சமூக ரோபோட்டுகள் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாய், பூனை, உதவியாளர் என பல்வேறு வடிவங்களில் நிறைய ரோபோக்கள் உண்டு. அவையெல்லாம் இந்த வகையில் சேரும். இப்படியான ரோபோட்டுகள் நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும், குறைந்தபட்சம் மனிதர்களின் வஞ்சனையிலிருந்தேனும் விலக்கி நட்பு பாராட்டும். நோயாளிகளுக்கு வழிகாட்டியாக உதவும்.  ஆனால் தற்போது இந்தியானா பல்கலைக்கழக ரோபோட் ஆராய்ச்சியாளர் செல்மா செபானோவிக் (selma sabanovic) உருவாக்கியுள்ள ஹியூமனாய்ட் ரோபோட்டான க்யூடி வேறு வகையில் உள்ளது. அதாவது, சாட் ஜிபிடி 4 எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சமூக ரோபோட்டான க்யூடி, டிமென்சியா நோயாளிகளுக்கு உதவுகிறது. இத்தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் பல்வேறு உணர்ச்சிகளை தனது திரையில் காட்டி உரையாடுகிறது. டிமென்சியா நோயாளிகளுக்கு நினைவுகள் மெல்ல அழிந்துகொண்டே வரும். அதுவரை நன்கறிந்த திறனான கார் ஓட்டுவது கூட மெல்ல மறந்துபோகும். மைக்ரோவேவ் ஓவனை இயக்குவது எப்படி என தடுமாறுவார்கள். உச்சபட்சமாக உணவு சாப்பிடுவது, உடை மாற்றுவது கூட மறந்துபோகும்....

கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!

படம்
  அள்ளிக்கொடுத்த கரங்கள் உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.  ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.  பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்க...

ஜோம்பிகளுக்குத் தப்பி மாலில் வாழும் ஆறு மனிதர்கள்!

படம்
  வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட் - ஜே டிராமா வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட்   ஜே டிராமா   ஜோம்பிக்களின் கதை. ஜப்பானில் நாடே ஜோம்பி வைரஸ் பரவி பிரச்னையாக உள்ளது. எம் மால் என்ற கட்டிடத்தில் எட்டு பேர் இருக்கிறார்கள். அவர்களின் கட்டிடத்திற்கு அருகில் ரிரிசான் என்ற இளம் மாணவி மயக்கமடைந்து விழுகிறாள். அதைப் பார்க்கும் ஒருவர், மொட்டை மாடியில் இருந்து அந்த மாணவியை மீட்கிறார். மாணவி ரிரிசான் கண் விழிக்கும்போது குழு தலைவர், சமையல் பெண்மணி, யூட்யூப் வீடியோ எடுக்கும் இளம்பெண், தரையை துடைக்கும் வேலையை செய்பவர், உடற்பயிற்சி செய்யும் இளைஞர், மாடல் பெண்மணி   என பலரையும் பார்க்கிறாள். இவர்கள் ஷாப்பிங் மாலுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள்.   அங்குள்ள உடை, எலக்ட்ரானிக்ஸ், உணவு, மளிகைப்பொருட்கள் , அழகு சாதனம் என அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். உதவி வேண்டி மொட்டை மாடியில் சில ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனாலும் கூட அது பயனளிக்கவில்லை. இதற்கு இடையில் மனிதர்களுக்கு   அன்பு, காதல், நட்பு உருவாகிறது. அதுவே சண்டை, பழிக்குப்பழி என பலதையும் ஏற்படுத்துகிறது. தொடரை சற்...

டீ இசம் - அகாகுரா காகுஸோ - மின்னூல் வெளியீடு

படம்
  டீ இசம் நூல், தேநீர் அருந்துவதில் உள்ள விழிப்புணர்வை பற்றி பேசுகிறது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அகாகுரா, மேற்கு நாட்டினருக்கு தேநீர் அருந்துவது பற்றிய கலாசாரத்தை பற்றி விளக்கிப் பேசுகிறார். ஜப்பான் நாட்டில் இன்று வரை டீ செரிமொனி முக்கியமானதாக கடைபிடிக்கப்படுகிறது.  தேநீர் அருந்துவதை ஜென், தாவோயிசம் ஆகிய மதங்கள் எப்படி வளர்த்தெடுத்தன என்பதை வரலாற்று கண்ணோட்டத்தில் சான்றுகளோடு அகாகுரா நூலில் விளக்கியுள்ளார். இந்த நூலை படித்தபிறகு நீங்கள் தேநீர் குடிப்பதை மனமார்ந்து விழிப்புணர்வோடு செய்ய வாய்ப்பிருக்கிறது. ஜென், தாவோயிச மடாலயங்களில் தேநீர் அருந்துவது, முக்கியமான தியான சடங்குகளில் ஒன்று.  பத்திரிகையாளர் த. சக்திவேல் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம். அவரது நட்பு மற்றும் ஆதரவில்தான், நான் ஏராளமான தேநீர் கடைகளுக்கு சென்று பல்வேறு விதமான தேநீரை சுவைக்க முடிந்தது.  நூலை வாசிக்க க்ளிக் செய்யுங்க.... https://www.amazon.in/dp/B0CHFJ22QQ

என்னால் முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்! - பெரிதாகவே சிந்தியுங்கள் - ரியோ ஒகாவா

படம்
  ரியோ ஒகாவா, எழுத்தாளர்,ஆன்மிக தலைவர் பெரிதாக சிந்தியுங்கள் ரியோ ஒகாவா ஜெய்ஹோ பதிப்பகம் பக்கம் 135   ஹேப்பி சயின்ஸ் என்ற ஜப்பானின் மிகப்பெரும் ஆன்மிக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் ரியோ ஒகாவா எழுதியுள்ள நூல். இந்த நூலைப் பற்றிய விமர்சனத்தை நாம் எழுதிக்கொண்டிருக்கும்போது , அவர் கோஸ்ட் ரைட்டர்களை வைத்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக்கொண்டிருப்பார். இந்த நூலிலேயே 1,600 நூல்கள் எழுதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.   அப்படியான நூல்களில் ஒன்றுதான் இது. தமிழில் எஸ் ராமன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பில் குறை காண ஏதுமில்லை. நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது. சிறு சிறு கட்டுரைகளாக எழுதப்பட்டிருப்பது நல்ல ஐடியா. நூலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக்கொண்டால் நல்லது. ரியோ ஒகாவா, தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதை வாசகர்களுக்கு சொல்லும் அறிவுரையாக மாற்றிக்கொள்கிறார். குறிப்பாக, பிறர் நம்மீது வைக்கும் விமர்சனங்கள், வரையறைப்படுத்தல் என்பதை தனது சிறுவயது வாழ்க்கை, ஐக்யூ டெஸ்டில் பெறும் மதிப்பெண்களை வைத...

கொலை வழக்குகளைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவும் பல்கலைக்கழக மாணவன்! டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்ட்ரி!

படம்
  டோன்ட் கால் இட்ஸ் எ மிஸ்ட்ரி ஜப்பான் டிவி தொடர் சீசன் 1 இந்த டிவி தொடர் முழுக்க உளவியல் தொடர்பானது. குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவர் எப்படி உளவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார் என்பதை பல்வேறு வழக்குச் சம்பவங்கள் வழியாக விளக்குகிறது. அதிரடியான திருப்பங்கள், துப்பாக்கித் தோட்டாக்கள் என்று தொடரில் ஏதுமில்லை. அனைத்தும் நிதானமாக நடைபெறுகிறது. அதை பல்கலைக்கழக மாணவர் டோட்டனோ குன் கண்டுபிடிக்கிறார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் டோட்டனோ குன், சமூகத்தின் விதிகளுக்கு அதிகம் பொருந்தாத ஆள். அகவயமானவர் என்பதால், நூல்களை வாசிப்பது, பிடித்த உணவுகளை சமைத்து ரசித்து சாப்பிடுவது, ஓவியக் கண்காட்சிகளுக்கு செல்வது என வாழ்ந்து வருகிறார். அவருக்கு நண்பர்களே கிடையாது. பெண் தோழியும் இல்லை. இப்படி வாழ்பவர் வாழ்க்கையில் கொலை வழக்கு குற்றச்சாட்டு வருகிறது. ஒருநாள் தனது. அறையில் சமைத்து சாப்பிடத் தயாரானவரை காவல்துறையினர் வந்து அவரது பல்கலையில் படிக்கும் வசதியான மாணவரை கொலை செய்துவிட்ட குற்றத்திற்காக கைது செய்கிறார்கள். முறையான அரஸ்ட் வாரண்ட கூட கிடையாது. கூட்டிபோய் மிரட்டி அவரை குற்றவாளி...

நிலவுக்குச் சென்று எஸ்பெல் இனக்குழுவைக் காப்பாற்றும் டோராமன் - நோபிடா டீம் - டோராமன் -மூன் எக்ஸ்ப்ளோரேஷன்

படம்
  டோராமன் – நோபிட் குரோனிக்கல் – மூன் எக்ஸ்ப்ளோரேஷன் ஜப்பான் மாங்காஅனிமேஷன் நோபிட் பள்ளி மாணவன். ஒருநாள் நிலவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ரோவர் ஏதோ ஒரு சக்தியால் தாக்கப்பட்டு பழுதாகிறது.. அதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான் நோபிட். அதற்கு டோராமன் ரோபோ உதவுகிறது. நோபிட்டும் டோராமன்னும் சேர்ந்து நிலவுக்கு மந்திரக்கதவு மூலம் போகிறார்கள். அங்கு சென்று, களிமண்ணால் முயல்களை உருவாக்கி முயல்களுக்கான உலகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நேரத்தில் நோபிட்டின் பள்ளியில் லூகா என்ற சிறுவன் சேர்கிறான். எப்போதும் தொப்பி அணிந்தபடியே இருப்பவன் வினோதமான தெரிகிறான். அவன் நோபிட்டின் நிலவு பற்றிய கருத்துகளைக் கேட்டு ஆச்சரியப்படுகிறான். அவன் நிலவு பற்றி செய்யும் ஆராய்ச்சிகளை அறிய நினைக்கிறான். அப்படித்தான் பள்ளி நண்பர்கள் பலரும் சேர்ந்து நோபிட்டின் வீட்டிலுள்ள மந்திரக்கதவு மூலம் நிலவுக்கு செல்கிறார்கள். அங்கு வாழ்பவர்களுக்கும் லூகாவிற்கும் தொடர்பு உள்ளது. இதுபற்றிய கதையை பார்த்து தெ(பு)ரிந்துகொள்ளுங்கள்.   இந்த தமிழ் படத்திற்கு டப்பிங் பேசியவர்கள் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். பள்ளி மா...

வாழ்வை பிரதிபலிக்கும் அற்புதமான ஹைகூ கவிதைகள்! - ஜப்பானிய ஹைகூ - தி.லீலாவதி

படம்
  ஜப்பானிய ஹைகூ தமிழில் தி.லீலாவதி அன்னம் பதிப்பகம் தமிழிணையம் கவிஞர் அப்துல் ரகுமான் வழிகாட்டலில் ஹைகூ கவிதைகள் மீது ஆர்வம் வந்து எழுத்தாளர் தி.லீலாவதி மொழிபெயர்த்துள்ள ஹைகூ கவிதைகள் நூல். ஹைகூ கவிதைகள் மூன்றடி கொண்டவை. இதில் மிக குறைவான வார்தைகளில் வாழ்க்கை, சோகம், வறுமை, காதல், ஆச்சரியம், வெறுமை ஆகியவற்றை எளிதாக உணர்த்திவிட முடியும். தமிழ் மொழிபெயர்ப்பில் கவிதைகள் சிறப்பாகவே உள்ளன. தினத்தந்தி, மாலைமதி, தேவியின்   கண்மணி, பாக்யா வரை அனைத்து நாளிதழ், வார இதழ், மாதமிருமுறை இதழ்களிலும் ஹைகூ வெளியாகியுள்ளது. வெளியாகிக் கொண்டும் இருக்கிறது. இதன் இறுக்கமான வடிவம், குறைந்த வார்த்தைகள் ஆகியவை இதன் பலம். ஜப்பானிய ஹைகூவில் புகழ்பெற்ற ஹைகூ கவிதைகளை மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.   பாஷா, இஸ்ஸா ஆகியோரின் கவிதைகளை வாசிக்க உணர சிறப்பாக இருக்கிறது.   உதிர்ந்து வீழ்ந்த மலர் கிளைக்குத் திரும்புகிறதோ ஓ.. வண்ணத்துப்பூச்சி என்ற ஹைகூ அற்புதமானது. இந்த கவிதை கவிஞர் அப்துல் ரகுமானை ரசிக்க வைத்துள்ளது. எனவே, அவர் நூலை லீலாவதியிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லியிரு...

பெண்கள் அழகுக்காக மட்டும்தான்-

படம்
  பெண்கள் அழகுக்காக மட்டும்தான்- திட்டமிட்டு பொதுபுத்தியை உருவாக்கும் ஜப்பான் பல்கலைக்கழகங்கள்   கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் பின்னாளில் மாநில அரசியல் கட்சியில் ஏதாவதொரு பதவியில் உயர்வார். அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்வார். இது பொதுவான காட்சி. ஆனால் ஜப்பானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை படிக்கும்போதே மனதில் உறுதிபடுத்திவிடுகிறார்கள். ஜப்பான் வளர்ச்சி பெற்ற நாடு. பொருளாதார அளவில் இதைக் கூறுகிறேன். அதேசமயம் கலாசாரம் சார்ந்தும் அந்த நாடு உலகிற்கு கொடுத்த கொடைகள் அதிகம். ஆனால் பெண்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இளம்பெண்ணின் வனப்பு, ஆனால் சிறுமியின் உடல் என்பது ஃபேஷன் உலகில் எதிர்பார்க்கப்படும் உடல் தகுதி. இதனால் நிறைய பெண்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து பற்றாக்குறையாகி நோய்வாய்ப்படுவதையெல்லாம் கட்டுரைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இப்படி பெண்கள் இருப்பதை ஒரு சமூகமே விரும்பினால், அப்படித்தான் இருக்கவேண்டுமென சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை தெரிவித்தால் எப்படியிருக்கும்...

அற்புதமான விமானங்களை வடிவமைத்த ஜப்பானிய பொறியாளரின் கனவு - விண்ட் ரைசஸ் - anime

படம்
  விண்ட் ரைசஸ் அனிமேஷன்  ஜப்பான்  அடிப்படையில் தேசியவாதப் படம்தான். ஆனால் அதைத்தாண்டிய விமானங்களை கட்டமைக்கும் கனவு கொண்ட ஒருவனின் வாழ்க்கை தான் அனிமேஷன் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.  இந்த அனிமேஷன் படம், ஜெர்மனியில் உள்ளது போன்ற நவீனத்துவத்துடன் அதிவேகம் செல்லும் விமானங்களை கட்டமைக்கும் பொறியாளர் ஒருவரின் கதையைப் பேசுகிறது. சிறுவயதில் இருந்தே விமான பைலட்டாக மாறும் ஆசையுடன் ஜீரோ உள்ளான்,ஆனால் கண்பார்வை சற்று குறைவானதால், பொறியாளர் ஆகிறான். அப்போது உலகப்போர் காலகட்டம். எனவே, வேகமாக செல்லும் ஆயுதங்களை கொண்டு செல்லும் விமானங்களை தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஜீரோ தனது விமானத்தை எப்படி உருவாக்குகிறான் என்பதே படம்.  படம் நெடுக விண்ணில் பறக்கும்போது அல்லது வாகனத்தில் பைக்கில் போகும்போது நமது முகத்தில் காற்று அடிக்குமே, வேகமாக, மெதுவாக என பல்வேறு விதமாக.. .அப்படி காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. விமானத்தை உருவாக்குபவனான ஜீரோ, காற்றில் தனது கனவுகள் அலைபாய திட்டங்களை தீட்டுகிறான். பெரும்பாலானவை, எஞ்சின் கோளாறுகள், மோசமான எரிபொருள், ஜப்பானில் வீசும் க...