இடுகைகள்

விரல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழி - உரையாடுவோம்!

படம்
  கோமாளிமேடை மொழி - உரையாடுவோம்! ஒருவரோடு உரையாடுவது என்பது பேச முடிந்தால்தான் சாத்தியம் என்பது கிடையாது. அப்படி நினைப்பவர்கள், பேச இயலாதவர்களிடம் மாற்றுத் திறனாளிகளிடம் உரையாட முடியாமல் தடுமாறுவார்கள். ஒருவர் பேசாதபோதும், அவரது முகபாவனைகளைப் புரிந்துகொண்டால் போதும். சொல்ல விரும்புவதை அறியலாம். அதற்கேற்ப அவரிடம் பேசலாம். உடல்மொழியும் அப்படித்தான். முகம் சொல்வது, கை,கால்கள் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டாலே அங்கு உரையாடல் தொடங்கிவிடுகிறது.  பிறந்த குழந்தைகள் நேரடியாக பேசுவதில்லை. ஆனால், அவர்களால் பேச முடியும். அழுது, தேவை என்னவென்று தெரிவிக்க முடியும். முக பாவனைகளைப் பிறருக்கு காட்ட முடியும்.மனிதர்களுக்கு முதிர்ச்சி அதிகம் என்பதால், குழந்தைக்கு பிறந்த சில ஆண்டுகளுக்கு பெற்றோரின் பராமரிப்பு, அக்கறை, அன்பு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் அழுகிறது.  காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பிறருடன் ஏன் உலகத்துடன் கூட உரையாடுகிறார்கள். இதற்கென தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கைவிரல்கள் மூலம் வார்த்தைகளைக் கற்று அதை பயன்படுத்தி உரையாடுகிறார்கள். சைகை ம...

சீரியல் கொலைகாரனால் கொல்லப்பட்ட சகோதரியின் உடலைத் தேடி அலையும் காவல்துறை அதிகாரி! பியாண்ட் ஈவில்

படம்
  பியாண்ட் ஈவில் - கே டிராமா பியாண்ட் ஈவில் கொரிய டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   2020ஆம் ஆண்டு லீ டாங் சிக் என்பவரின் சகோதரி, காணாமல் போகிறார். அவரது வெட்டப்பட்ட கைவிரல்கள் மட்டும் வீட்டின் முன் கிடைக்கின்றன. சம்பவ இடத்தில் லீ டாங் சிக்கின் கிடார் மீட்டும் கருவி கிடைக்க, அவரை வழக்கில் குற்றவாளியாக சந்தேகப்படுகிறார்கள். அதனால், அவர் வாழும் ஊர் அவரை அக்காவைக் கொன்ற தம்பி என முன்முடிவு செய்துவிடுகிறது. ஊடகங்கள் அதை சிறப்பு செய்தியாக்குகின்றன. ஆனால் அக்காவின் உடல் கிடைக்காத காரணத்தால் தம்பி குற்றவாளி அல்ல என விடுவிக்கப்படுகிறார். அவரை கைது செய்த காவல்நிலைய தலைவர், லீ டாங் சிக் விரும்பியபடி காவல்துறை செர்ஜென்ட் ஆக உதவுகிறார். பெண் பிள்ளை இறந்த துக்கத்தால் லீ டாங் சிக்கின் அப்பா, பனியில் பிள்ளைக்காக காத்திருந்து மனம் சிதைந்து போய் உறைந்து இறக்கிறார். அதைப்பார்த்த அவரது மனைவிக்கு புத்தி பேதலித்துவிடுகிறது. லீ டாங் சிக்கை ஊர் முழுக்க தூற்றுகிறது. ஏறத்தாழ அவரது நெருங்கிய நண்பர்களே ஒருவேளை கொலை செய்திருப்பானோ, சைக்கோ பயலோ என சந்தேகப்படுகிறார்கள். ஆனால...