இடுகைகள்

நலத்திட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி நிறைவு - ஆஹா, அடச்சே விஷயங்கள் இதுதான்!

படம்
  மு.க. ஸ்டாலின் - ஓராண்டு ஆட்சி - எப்படி ஆஹா 68, 375 கோடி ரூபாய் முதலீட்டைப் பெறுவதற்காக 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது.  2500 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை அரசு மீட்டுள்ளது.  பெண்களுக்கு இலவச பயணப் பேருந்து  திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், செயல்பாடு பால் விலையைக் குறைத்தது அடச்சே!  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  மாநில அரசின் பல்வேறு தீர்மானங்கள் அனுமதியளிக்கப்படாமல் ராஜ் பவனில் நிலுவையில் உள்ளது.  சொத்து வரி உயர்வு அரசு செயல்பாட்டில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் ஈடுபடுவது... மின்வெட்டு அதிகரித்து வருவது.. திமுக அரசு பத்தாண்டுகள் தமிழகத்தை ஆள வேண்டும் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உழைத்து வருகிறது. முக ஸ்டாலின், முதல்முறையாக முதல்வர் அரியணை ஏறியிருக்கிறார். இதற்காக அவர் தொடக்கத்தில் இருந்து கடுமையாக உழைத்தாலும் அவரின் தந்தை கருணாநிதியின் ஒளி...

இந்தியர்களின் உயரம் மெல்ல குறைந்து வருகிறது!

படம்
  இந்தியர்களின் உயரம் குறைந்து வருவதாக இந்திய அரசின் தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவித்துள்ளன.  இந்தியர்கள் பொதுவாக உயரத்தை விட நிறத்தைப் பற்றிய கவனத்தை அதிகம் கொண்டுள்ளனர். ஆனால் ஒருவரின் உயரம், எடை என்பது உடல்நலத்தைப் பொறுத்தவரை முக்கியமானது. தற்போது தேசிய குடும்பநல ஆய்வுகளில் தெரிய வந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவை. 1992 முதல் 2020 வரையிலான ஆய்வுகளில் இந்தியர்களின் உயரம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இரண்டாவது மற்றும் நான்காவது ஆய்வுகளில் உயர மாறுதல் தெரியவந்துள்ளது. இதில் பதினைந்து முதல் இருபத்துநான்கு வயது வரையில் உள்ள பெண்கள் 0.12 செ.மீ. உயரம் குறைவாகவும், இருபத்தாறு முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களின் உயரம் 0.13 செ.மீ. உயரமாக உள்ளனர். இந்த வகையில் ஆண்களின் உயரம் முதல் பிரிவில் 1.1 செ.மீ, இரண்டாவது பிரிவில் 0.86 செ.மீ. என குறைந்துள்ளது. இதில் நாம் கவலைப்படும் விஷயமாக உள்ளது, பட்டியலினப் பெண்களின் உயரம் 0.42 செ.மீ., ஏழைப்பெண்களின் உயரம் 0.57 செ.மீ. என குறைந்துள்ளதுதான்.  ஆண்களைப் பொறுத்தவரை ஏழையான ஆண்கள், வசதியான ஆண்கள் பிரிவு என இரண்டிலு...

பிரேசில் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் இந்தியா கற்கவேண்டியது என்ன?

படம்
                நேரடி பணப்பரிமாற்றத்தில் இந்தியா கற்கவேண்டியவை ! இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் முதல் 52 அமைச்சகங்களை ஒன்றாக இணைத்து , 384 நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றுசேர்வதற்கான முயற்சிகளை செய்து வந்த்து . நேரடி வங்கிக்கணக்கு பரிமாற்றம் மூலம் நலத்திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது . பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதோடு வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவுகிறது . நீண்டகால நோக்கில் இதனை விரிவுபடுத்தி , குறைகளைக் களைந்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றுசேரும் . இந்திய அரசின் சிந்தனைகள் சரியாக இருந்தாலும் அனைத்து திட்டங்களிலும் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாததால் மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டம் , பிரதான் மந்திரி மாட்ரி வந்தனா யோஜனா ஆகிய திட்டங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற முடியவில்லை . 2015 ஆம் ஆண்டு டில்லியில் நிதி அமைச்சகம் ஒருங்கிணைத்த பொருளாதார மாநாட்டில் , ஜன்தன் ஆதார் திட்...

வணிகத்தில் சமூகப் பொறுப்பு - சமூக பொறுப்புணர்வு திட்டம்!

படம்
பிக்சாபே 2 சமூக பொறுப்புணர்வின் தொடக்கம் அமெரிக்காவில் 1950 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு பங்களிக்கும் விதமாக விதிகளை மாற்ற உத்தரவிட்டது . அக்காலம் தொடங்கி அங்கு சமூகப்பிரச்னைகளுக்கு நிறுவனங்கள் நிதி மட்டும் அளிக்காமல் , அப்பிரச்னையைத் தீர்க்க பாடுபடும் செயல்பாடுகளைத் தொடங்கின . இதனைப் பற்றிய கட்டுரை ஒன்றை செய்தியாளர் கிரெய்க் ஸ்மித் 1994 ஆம் ஆண்டு ஹார்வர்ட் ரிவ்யூ இதழில் எழுதியுள்ளார் . அதில் மற்றொரு முக்கியக்காரணமாக அவர் சுட்டிக்காட்டுவது எக்ஸான் வால்டெஸ் என்ற நிறுவனம் எண்ணெய்யை கசிய விட்ட செய்தி . இதன் விளைவாக சூழல் மாசுபட்டது . இதையொட்டியே சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை பல்வேறு நிறுவனங்களும் முன்னெடுத்தன . இதற்கான சட்டங்களை அரசு உருவாக்கியது . இதற்கு பத்தாண்டுகள் முன்பே 1960-70 காலகட்டத்திலேயே அமெரிக்க நிறுவனங்கள் சமூகத்திற்கு பங்களிப்பு செய்யவேண்டும் என்ற குரல்கள் மக்களிடையே எழத் தொடங்கிவிட்டன . இதன் காரணமாக , 1980 களின் தொடக்கத்திலேயே அமெரிக்காவில் குறைவான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பல்வேறு சமூக...