தமிழகத்தில் அமைதியாக நடக்கும் பேரழிவு - குழந்தை திருமணங்கள், இளையோர் கர்ப்பிணி பிரச்னை
குழந்தை திருமணம், பள்ளிப்பருவ கால கர்ப்பங்கள் - அமைதியாக நேரும் சீரழிவு இந்தியாவில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் ஆயிரக் கணக்கில் நடந்தேறின. பின்னர், அதுபற்றிய பிரச்னைகள் தெரியவந்தபிறகு, அவற்றைத் தடுக்க அரசும் சட்டங்களை இயற்றியது. கல்வி கற்கத் தொடங்கிய மக்களும் மெல்ல மனம் மாறினார்கள். குழந்தை திருமணங்கள் நடப்பது குறைந்தது. குறிப்பாக கல்வி அறிவு, குழந்தை திருமணங்களை பெருமளவு குறைத்தது என்பதே உண்மை. இப்போது, அப்படியான சூழ்நிலை மெல்ல தகர்ந்து, தமிழ்நாடு மெல்ல பின்னோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் உள்ள வருமானம் குறைந்த பின்தங்கிய பகுதிகளில் (கண்ணகி நகர், பெரும்பாக்கம்) குழந்தைத் திருமணங்கள், பள்ளிகால கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. குடும்பநலத்துறை இதுபற்றிய தகவல்களை அறியும்போதே, பள்ளிச்சிறுமிகள் கர்ப்பிணிகளாக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அரசு பெரிதாக ஏதும் செய்யமுடிவதில்லை. இருந்தாலும் பள்ளி செல்லும் வயதில் கர்ப்பிணியாவதால் ஏற்படும் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு செய்ய முயன்று வருகின்றனர். பள்ளி, அரசு மருத்துவமனை வழியாகவே அரசின் குடு...