இடுகைகள்

வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன் - வங்கி சொன்ன அறிவுரை - உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்...

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன்  உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்... ஒன்றாக சேர்ந்து நாம்.... என தலைப்பு கொண்டுள்ள வங்கிதான் நான் பத்தாண்டுகளாக கணக்கு வைத்துள்ளது. தொடங்கியபோது எப்படியோ இன்றுவரை அப்படியேதான் உள்ளது. மாற்றம் என்னவென்றால், நிறைய கட்டுப்பாடுகள் பெருகியுள்ளன. பணம் பிடுங்குதலையும் நாற்காலியில் அமர்ந்துகொண்டே நிதானமாக கணினியை தட்டி செய்கிறார்கள். அதையும் கூட 120 ரூபாயை இழந்துதான் கற்றுக்கொண்டேன். பொதுவாக வங்கிகளுக்கு புகார் அளித்து அதன் வழியாக இழந்த தொகையை பெறுவது பிரம்ம பிரயத்தன முயற்சி. பெரும்பாலும் காசு கிடைக்காது. ஏன் காசு கிடைக்காது என்பதற்கு ஈகுவிட்டி பங்கு விளம்பரம் போது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என வேகமாக இரண்டு பத்தியை ஒரு குரல் படிக்குமே... அந்த ரீதியில் விதிகளை காரணம் காட்டுவார்கள்.  வங்கியில் இருந்து ஏடிஎம் வழியாக பணம் பெறுவதைப் பற்றியும் அதன் கட்டுப்பாடுகளையும் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஏடிஎம்மில் பணம் எடுக்க ஒன்றாக சேர்ந்து... வங்கி மாதம் ஐந்து முறை இலவச வாய்ப்புகளை தருகிறது. அதைப் பயன்படுத்தி ஒருவர் தினசரி 25 ஆயிரம் என்ற வகையில் ஒரு லட்சத்து...

வங்கி ஓடிபியில் பணியாளருக்கு ரேட்டிங்கை வழங்குவது எப்படி? பத்து நிமிட வழிகாட்டி கட்டுரை

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - பலவித அனுபவங்கள்  நான் கணக்கு வைத்துள்ள வங்கி விவசாயிகளுக்கானது. இப்போது மெல்ல படித்த வர்க்கத்தினருக்காக கட்டாயமாக மாறி வருகிறது. படிக்காத வாடிக்கையாளர்களைக் கூட மிரட்டி கட்டாயப்படுத்தி கடன் அட்டையை திணித்து அதன் வழியாக பணத்தை எடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான சேவைக் கட்டணம் அவர்களுக்கு முக்கியமானதாக படக்கூடும். ஊழியர்களுக்கு ஆண்டு இலக்கு கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். இந்தவகையில் அதுவரை வழங்கப்படாத கடன் அட்டை நிறைய பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பெண்கள் அனைவருமே கல்வியறிவற்றவர்கள். அதுவரை படிவத்தில் காசு வேண்டுமென்றால் அதை வங்கியிலுள்ள சீருடை தரித்த பெண்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு வந்து காசாளரிடம் கொடுத்துத்தான் பெறுவார்கள். ஆனால், படிவம் எழுதுகிறவர்களைக் கூட, இன்று கட்டாயப்படுத்தி கொடுத்த கடன் அட்டை இருக்கிறதல்லவா, அதைப் பயன்படுத்துங்கள் என வங்கி அதிகாரிகள் கூச்சலிடுகிறார்கள்.  மாற்றங்கள் இந்திய சமூகத்தில் மெதுவாகத்தான் வரும் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போல. இதுபற்றி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை கூறியிருக்கிறார். நூலகம் ஒன்ற...

யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள்

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - இந்திய ஒன்றிய வங்கியின் தில்லாலங்கடித்தனங்கள் இன்றைய காலத்துக்கு இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசு நிறுவனங்களும் நேர்மையாக இயங்குவதில்லை. அப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும் நினைப்பதில்லை. அந்தளவு சட்டம், விதிமுறை, நெறிகள் என அனைத்தும் காவி நிறத்தால் மூடப்பட்டு வருகிறது. வலிமை உள்ளவர் அதாவது, அதிகாரம், பணம் கொண்டவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை ஆற்றல் இல்லாத ஏழை எளியர் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பதே சொல்லாமல் சொல்லும் பாடமாக உள்ளது. அந்த வகையில் இந்திய ஒன்றிய வங்கியின் கதை அமைகிறது. இந்த வங்கி வடக்கு நாட்டிலுள்ளது. அங்கு நிறைய கிளைகளைக் கொண்டுள்ளது போல. இரண்டு காந்தங்களை எதிரெதிரே பிடித்தது போல லோகோ அமைந்திருக்கும். அதன் அர்த்தம் தொடக்கத்தில் புரியவில்லை. பின்னே அதில் கணக்கு வைத்துள்ள மக்களின் பணத்தை இழுத்து பிடித்து கவர்ந்து ஈர்க்கத்தான் என பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது.  தொடக்கத்தில் எனக்கு சம்பள கணக்கை, பச்சை நிறம் கொண்ட பெருநிறுவன வங்கி என்ற வங்கியில் தொடங்கி கொடுத்தனர். அந்த வங்கிக்கு பெரியளவு ஏடிஎம் வசதிகளோ அல்லது பெரிய புகழோ, பெயரோ எதுவும...

வங்கிக் கணக்கும், உப்பு வழக்கும்!

படம்
  1 ஒரு வங்கிக்கணக்கை மூடுவது எப்படி? இதை நீங்கள் எளிதாக மின்னஞ்சல் அனுப்பி செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு எளிதாகவெல்லாம் காரியம் நடக்காது. கும்பகோணத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள வங்கியில் எனக்கு கணக்குள்ளது. அந்த கணக்கை மூட விரும்பினேன். இணையத்தில் அதற்கான வழியைத் தேடினால், நேரடியான வழிகள் ஏதுமில்லை. ஏஐ உதவியாளரிடம் கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைக்கிறது. அதாவது, வங்கி வழங்கிய ஏடிஎம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இதோடு கணக்கை மூடிவிடுங்கள் என கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி கணக்கு வைத்துள்ள கிளைக்கு கொடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் கணக்கு மூட முடியும்.  கும்பகோணம் வங்கியின் கொள்கைப்படி வங்கிக்கணக்கில் ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே குறையக்கூடாது. குறைந்தால் அபராதம் உண்டு. மற்றபடி காசு நிறைய கணக்கில் இருக்கும்வரை பெரிய சிக்கல் ஏதுமில்லை. அட்டை, வங்கியின் ஆப் என அனைத்துமே சிறப்பாகவே இயங்குகிறது. கணக்கு தொடங்கியபோது போனில் வீடியோ கால் செய்து அதன்வழியாக தொடங்க நிர்பந்தம் செய்தனர். என்னுடைய ஊரில் உள்ள இணைய வேகத்திற்கு கூகுள் தேடல் பக்கமே பத்து நிமிடம் ஆகும் திறப்ப...

திவாலாகும் வங்கி!

படம்
        பாயும் பொருளாதாரம் 15 திவாலாகும் வங்கி உள்நாட்டு உற்பத்திக்கு அரசு சில தொழில்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. சில இனக்குழுவினரின் உழைப்பை கருத்தில் கொள்வதில்லை. இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. முறையாக அவர்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் வருமானம் ஆவணங்களில் பதிவாகியிருக்காது. வங்கியில் கடன் பெறவும் மாட்டார்கள். உண்மையில் நிறைய பெண்கள் திருமணத்திற்கு முன்னர் வேலைக்குப் போய் சம்பாதிப்பார்கள். திருமணமான பிறகு வீட்டில் சமையல் வேலை பார்த்து சட்டி கழுவிக்கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்று வம்சத்தை தழைக்க வைப்பார்கள். அவர்களை வேலை செய்கிறார்கள் என யாரும் கருதுவதில்லை. பெண்கள் தங்களின் சொந்த செலவுக்கு கூட வேலை செய்யும் கணவனை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள். சில நிறுவனங்களில் பாலின பாகுபாடு உண்டு. ஒரே வேலை ஆனால் ஆணுக்கு ஒரு சம்பளம், பெண்ணுக்கு ஒரு சம்பளம் என தரம் பார்ப்பார்கள். சாதி, மதம், இனம் பார்த்து சம்பளம் போடும் கிறுக்கு புத்திக்காரர்களும் நிறுவனத்தில் உண்டு. ஏன் இப்படி குறைத்து சம்பளம் போடுகிறீர்கள் என்றால் அதற்கு உனக்கான தகுதி இதுத...

வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்!

படம்
          வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்! ஜீப்ரா சத்யதேவ், பிபிஎஸ், சத்யா, தாலி தனஞ்செயா தெலுங்கு இதுவும் ஒரு வங்கியை ஏமாற்றும் அதிகாரியைப் பற்றிய கதை. அதாவது வங்கிக்குள்ளே இருந்துகொண்டே ஊழலை எளிதாக கண்டுபிடிக்காத வகையில் செய்கிறார். அப்படி செய்யும்போது, மாஃபியா டான் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு ஐந்து கோடியை நான்கு நாட்களில் திரட்டுமாறு மிரட்டப்படுகிறார். அதை நாயகன் எப்படி சமாளித்தார் என்பதே கதை. இயக்குநர் ஈஸ்வர கார்த்திக் நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார். வணிக ரீதியான குத்துப்பாட்டு உண்டு. நாயகி பவானியுடன் அடல்ஸ் ஒன்லி வசனங்களை வைத்தே காதலை சொல்லிவிட்டு அடுத்த விஷயத்திற்கு செல்கிறார்கள். பிரியா அக்கட தேசத்தில் காட்டும் தாராளம் பொறாமையாக உள்ளது. விஷாலுக்கு அம்மாவாக நடித்தே சாதனை செய்துவிட்டவரை என்ன சொல்வது?   நாயகன் சூர்யா, அபார்ட்மென்ட் ஒன்றை காசுக்கு வாங்கி நீரிழிவு நோய் வந்த அம்மாவை குடிவைக்க ஆசைப்படுகிறார். அதேநேரம், இன்னொரு வங்கியில் வேலை செய்யும் காதலியைம் மணக்க நினைக்கிறார். அதற்கு காசு வேண்டுமே... அதற்கு வங்கியில் உள்ள சட்ட ...

சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல்

படம்
    சாதனைப் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024 பட்டியல் சினா சங் இயக்குநர், காகாவோ தென்கொரியா தென்கொரியாவில் இயங்கி வரும் காகாவோ ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனம், இசை, போக்குவரத்து, வெப் காமிக்ஸ், பணம் செலுத்தும் வசதி, குறுஞ்செய்தி என பலவற்றையும் ஒன்றாக இணைத்து காகாவோ டாக் என்ற ஆப் வழியாக வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநராக சினா பதவியேற்றது நடப்பாண்டு மார்ச் மாதம்தான். ஆப்பிற்கு பயனர்களாக 44 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இவருக்கு முன்னிருந்த தலைவரால் ஏற்பட்ட பங்கு சந்தை முறைகேடு பிரச்னையை சமாளித்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். டாபனி டெகாஜாரேன்விகுல் தலைவர், இயக்குநர், பெர்லி ஜக்கர் தாய்லாந்து தினசரி பயன்பாட்டுப்பொருட்கள், உடல்நலம், பேக்கேஜிங் சார்ந்த துறைகளில் பெர்லி செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் டாபனி இயக்குநராக பொறுப்பேற்றார். டாபனியின் தந்தை சாரியோன் சிரிவதனபக்தி. பெரும் பணக்காரர். டாபனியின் கணவர் அஸ்வின், பெர்லியின் இயக்குநராக செயல்பட்டு வந்தார். அந்தப்பதவி இப்போது அவரது மனைவிக்கு வந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள பிக் சி எனும் பேரங்காடி கடைகளை பெர்...

குழந்தை பத்திர முறையை உருவாக்கியவர்கள்!

படம்
  டாரிக் ஹாமில்டன் - வில்லியம் டாரிட்டி darrick hamilton -william darity 2023ஆம் ஆண்டு, ஜூலையில் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் நகரம், அங்கு பிறக்கும் புதிய குழந்தைகளுக்கு 3200 டாலர்களை வங்கிக்கணக்கில் செலுத்துவதாக கூறி, அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாட்டிலேயே முதல்முறையாக நடைமுறைக்கு வந்த குழந்தை பத்திர முறை இதுவே. பதினெட்டு தொடங்கி முப்பது வயது வரையில் மேற்கண்ட தொகை பெருகி 24 ஆயிரம் டாலர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதை வைத்து ஒருவர் தனது கல்லூரிக்கான செலவை சமாளிக்க முடியும். குழந்தை பத்திர திட்டத்தில் தற்போது, 15 ஆயிரம் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை டாரிக் ஹாமில்டன் உருவாக்கினார். அதை நண்பரான வில்லியம் டாரிட்டியிடம் கூறினார். இப்படித்தான் திட்டம் சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.  ஹாமில்டனுக்கு வயது 53. கருப்பினத்தவர்களின் பொருளாதார வளம் சார்ந்து ஆய்வுசெய்து வருகிறார். பொருளாதாரம், நகரக்கொள்கைகள் துறை சார்ந்த பேராசிரியராக வேலை செய்கிறார். 2022ஆம் ஆண்டு ஆய்வுப்படி, நடுத்தர வெள்ளை இன குடும்பத்தின் செல்வம், கருப்பினக் குடும்பத்தை விட ஆறு மடங்கு அதிகம். கலிபோர்...

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதன் காரணம்.....

படம்
      இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது ஏன்? காலநிலை மாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசின் விவசாய கொள்கைகளால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தின், மராத்வாடா பகுதியில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதுபற்றிய தகவலை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களிலுள்ள பயிர்கள் அதீத மழைப்பொழிவால் அழிந்ததால், பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்படுகிறது. வேளாண்மை வல்லுநர்கள், தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். 2021ஆம் ஆண்டு வரையில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. ஆனாலும் கூட மராத்வாடாவின் எட்டு மாவட்டங்களில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின...

விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

படம்
  விவசாயிகளின் தற்கொலை, காரணங்கள், தீர்வுகள் இந்தியாவில், எழுபது சதவீத மக்கள் வேளாண்மையை நேரடியாக அல்லது மறைமுகமாக சார்ந்து உள்ளனர். ஆனால், அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை கவலையளிக்கும்படி உள்ளது. 2013ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருகின்றனர். தற்கொலை மரணங்களில் விவசாயிகளின் அளவு 10 சதவீதமாக உள்ளது. வருவாய் மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் நிலைமை மாறலாம். (TOI) விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருவது உண்மை. அவர்கள் இறப்பதற்கு என்ன காரணங்கள் என்று பார்ப்போம். இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் வேளாண்மைத்துறை, அத்துறை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 87.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக உள்ளது. சிறு,குறு ஏழை விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்கொலை ...

11.அலுவலகமே இல்லாத நிறுவனத்தில் இருந்து கிடைத்த கடன் - மோசடி மன்னன் அதானி

படம்
  எப்படி ஏமாத்தினோம் பாத்தீங்களா? 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத ஆவணங்களில் உள்ள தகவல்படி, ரேவார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் முகவரி, மக்கள் வாழும் அடுக்கு குடியிருப்பில் அமைந்திருந்தது.   தற்போது மாற்றப்பட்டுவிட்ட அதன் புதிய முகவரியில் அலுவலகம் அகமதாபாத் நகரில் உள்ள கட்டிடத்திற்கு மாறிவிட்டது. இந்த நகரில்தான் அதானி குழுமம் இயங்கி வருகிறது.   ஹிண்டன்பர்க் அமைப்பு, புலனாய்வாளரை ரேவார் அலுவலக முகவரிக்கு   அனுப்பியது.   பெயின்ட் உதிர்ந்துகொண்டிருந்த பழைய கட்டிடத்தில்   ரேவார் அலுவலகம் அமைந்திருந்தது. வெள்ளி வணிகம் செய்யும்,   202 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனம், இப்படியொரு மோசமான இடத்தில் இயங்கி வருவது ஆச்சரியமாக இருந்தது. புலனாய்வாளர் அலுவலக நேரத்திலேயே, ரேவார் அலுவலகத்திற்குச் சென்றார், ஆனால் அப்போதே கதவில், ‘அலுவலகப் பார்வை நேரம் முடிந்துவிட்டது’ என தகவல் கூறப்பட்டிருந்தது. மேலும் தகவல் தேவை என்றால் அணுகும்படி, ஜிக்னேஷ் தேசாய் என்பவரின் பெயர், தொடர்புஎண் கையால் எழுதப்பட்டிருந்தது.     லிங்க்டுஇன் தளத்தில...