அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மூலம் அரசியல் களம் மாறும்! - ஜவகர்லால் நேரு உரை
இங்கு நான் வந்திருக்கிற சமயம், மனதளவில் சற்று வினோதமாக உணர்கிறேன். இதுபோன்ற உணவு எப்போதும் ஏற்பட்டதில்லை. இந்த இடத்தில், அறிவியல் சார்ந்த கற்றுக்கொள்ளல் தொடர்பான அழுத்தம் திடமாக உள்ளது. டாக்டர் பாபா, எனக்கு கூறியபடி என்னுடைய பகுதியை, அறிவியல் ஆராய்ச்சிக்கு செய்ய வந்திருக்கிறேன். அறிவியல் நிறுவனத்திற்கான அடித்தள தூண்களை அமைத்துக்கொடுப்பதே நாட்டிற்கான எனது பணி. அடிப்படையான அம்சம் என்றளவில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது. இந்திய அரசு சார்பாக, டாக்டர் பாபா, மாநாட்டு விருந்தினர்களாகிய உங்களை வரவேற்றுள்ளார். நாட்டு அரசின் உறுப்பினராக, இங்கு வருகை தந்துள்ளோர் அனைவரையும் வரவேற்க விரும்புகிறேன். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் பணியாற்ற வந்திருக்கிற வெளிநாட்டு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். இயற்கையைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டால், உங்கள் ஆசைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளலாம். நமது செயல்பாட்டை, எதிர்கால உலகிற்காக, அதன் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நான் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்பவன். இதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க...