இடுகைகள்

தினமணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள உதவ வழிகாட்டும் அறிவுரைகளின் தொகுப்பு! - ராஜதந்திரம் - நிக்காலோ மாக்கியவெல்லி

    ராஜதந்திரம் நிக்கோலோ மாக்கியவெல்லி தமிழில் துளசி தினமணி நாளிதழ் வெளியீடு தமிழில் வெளிவந்துள்ள ராஜதந்திர நூல். இந்த நூலை எழுதியுள்ள நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலியைச் சேர்ந்தவர். முடியரசில் இயங்கியவர். பின்னாளில் அரசு பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வறுமையில் உழன்று இறந்துபோனார். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல் இதுதான். எழுத்தாளரின் வறுமை, மகிழ்ச்சி, வலி, வேதனை பற்றி தெரிந்துகொள்வது அவர் எழுதிய நூலின் அடிப்படையை புரிந்துகொள்ள கொஞ்சமேனும் உதவும். நூற்றி எழுபது பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல், இத்தாலி நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மாக்கியவெல்லி அரசு நிர்வாகம், ராணுவம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதன் அடிப்படையில், இத்தாலி நாடு எப்படி இருந்தால் பிழைக்கும் என்பதை ஊகித்து பல்வேறு நீதிகளை எழுதினார். பிரின்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த நூல் கூட முடியாட்சியில் இருந்த அரசர் ஒருவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். அரசநீதி, ஆராய்ச்சி நூல்கள், கவிதைகள், நாடகங்கள் என பல துறை நூல்களை எழுதியிருக்கிறார். அரசியல் தொடர்பான நூல்களுக்கே மா...

தேசநலனை லட்சியமாக கொண்ட பத்திரிகையாளர் ஏ என் சிவராமன்!

படம்
        ஏ என் சிவராமனின் பத்திரிகை உலகம் பொன் தனசேகரன் விலை ரூ.30 உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தினமணி நாளிதழில் நாற்பது ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர் பத்திரிகையாளர் ஏ என் சிவராமன். தனது எண்பத்து மூன்று வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது நாளிதழ் செயல்பாடுகளை நூல் கவனம் குவித்துப் பேசுகிறது. நூல் வழியாக ஏ என் சிவராமன் தமிழுக்கென செய்த முக்கியமான செயல்பாடுகள், மொழியாக்கம், எழுதிய கட்டுரைகள், என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார் என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் அறிந்துகொள்ள முடியும். ஏ என் சிவராமன், டிஎஸ் சொக்கலிங்கம் என்ற தனது உறவினர் மூலம் பத்திரிகைத்துறைக்கு வந்தார். காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்க கல்லூரி படிப்பை கைவிட்டுவிடுகிறார். கல்லூரி படிப்பை கைவிட்டாலும் பல்வேறு நூல்களை வாசிப்பதை கைவிடவில்லை. அதனால்தான் தினமணி நாளிதழில் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்த முடிந்திருக்கிறது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்திருக்கிறார். வெறுமனே அறைக்குள் இருந்தபடியே கட்டுரைகளை எழுதவில்லை. ஆசிரியராக இருந்தாலும் பல்வேறு அயல்நாடுகளுக்கு பயணித்து ...

அறம் சார் இதழியல் பணி! - தினமணி 85

படம்
குறுக சொல் நிமிர் கீர்த்தி! ஓர் பத்திரிகை ஏன் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை வெளியிட்டு, அதன் பெயரைக்கூட வாசகர்கள் சூட்டி பத்திரிகை உருவாகிறது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தினமணி அப்படித்தான் உருவானது. வளர்ந்த நகரங்களில் இல்லாமல் விழுப்புரம், தருமபுரி போன்ற பகுதிகளில் பத்திரிகை பதிப்புகள் தொடங்கியது முதல் அனைத்தும் புதுமைதான். மத்திய, மாநிலச் செய்திகளை சார்பின்றி வெளியிடும் தன்மை தமிழகத்திற்கு புதியது. தினமணிக்கென்ற தனிக் கொள்கை தலையங்கம் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள். அன்றிலிருந்து இன்றுவரை அதனைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இக்கட்டுரைகளின் நேர்த்தி இன்றும் குறையாமல் இருப்பது ஆசிரியர்களின் கீர்த்தியைச் சொல்லுகிறது.  தினமணி 85  இதழ் வியாழன் அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 96 பக்கங்கள். இதுவரை தினமணி இதழில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள் நேர்த்தியாக நினைவுகூர்ந்து கட்டுரைகளை செம்மையாக எழுதியுள்ளனர். 2007 ஆம் ஆண்டிலிருந்து தினமணி இதழின் ஆசிரியராக இருப்பவரான கி.வைத்தியநாதன், இதழ் பற்றிய தன் கருத்து இரண்டு பக்கங்களி...