இடுகைகள்

வேலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைப் பயணம்!

     சென்னைப் பயணம் - மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு... மாணவர் நாளிதழில் வேலை செய்து அதைவிட்டு விலகிய பிறகு, நேர்காணல் ஒன்றுக்கு ஒருமுறை சென்னைக்கு சென்றதோடு சரி. அதற்குப்பிறகு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒருமுறை, பாத்திரங்களை எடுக்கச் சென்றபோது மெட்ரோ ரயில் காரணமாக மயிலாப்பூர் குதறப்பட்டிருந்தது. அப்போது, பேருந்துகள் எங்கே சென்று எங்கே திரும்புகின்றன, எது பேருந்து நிறுத்தம் என்றே தெரியவில்லை. அப்படியான நிலையில்தான் மயிலாப்பூர் அன்றைக்கு இருந்தது.அன்று அறையில் உள்ள அத்தனை பாத்திரங்களையும் முழுக்க எடுக்கமுடியவில்லை. பாதி பாத்திரங்களை அய்யங்கார் எங்கே உள்ளது என மறந்துவிட்டார். பிறகு, நாங்கள் ஊருக்கு வந்தபிறகு பாத்திரங்கள் தன்னுடைய அறையில்தான் உள்ளன என்று பொறுப்போடு தெரிவித்தார். அந்த முறை பயணத்தில் அம்மாவும் உடன் பயணித்தார். இருவருக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகியது. ஓரியண்ட் ஃபேனை எல்லாம் ஒருவழியாக சரக்கு கட்டணம் கொடுத்து கொண்டு வந்துவிட்டோம். ஆனால் சென்னையில் மிச்சமுள்ள பாத்திரங்களை போய் எடுத்துவா என்று அம்மா, சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு சில பாத்திரங...

நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்!

 நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்! தாராபுரத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று நண்பரை சந்தித்து வருவது வழக்கம். அந்த நகரில் உள்ள நண்பர், இலக்கியங்களை வாசிக்க கூடியவர். அதோடு பல்வேறு ஊடகங்களில் தேசிய கட்சி சார்ந்து விவாதிக்க கூடியவர். அந்த கட்சி சார்ந்த ஆதரவு நிலை எனக்கு கிடையாது. நூல்களை வாசிக்க கூடியவர் என்பதால் பலமுறை நூல்களை இரவல் வாங்கி வந்திருக்கிறேன். தான் வாசித்த நூல்களை இரவல் கொடுத்தவர், சிலமுறை பழைய நூல்களை அன்பளிப்பாக வைத்துக்கொள்ளவும் கொடுத்திருக்கிறார். கடன் வாங்கி பிறரது தலையில் மசாலை அரைக்கும் மூத்த சகோதரர் வழியாக அறிமுகம் கிடைக்கப் பெற்றவர்.  கிளம்பும் நாளன்று அதிகாலையில் எழுந்தால், அப்போதே தந்தையார் தனக்கான சமையலை தொடங்கியிருந்தார். இரண்டரை மணிக்கு எழுந்து சமையல் செய்துவிட்டு நடைபயணத்தை ஒரு கி.மீ.அளவுக்கு அமைத்துக்கொள்பவர், தேநீர் அருந்த செல்வார். பிறகு, நான்கு மணியைப் போல திரும்ப வீட்டுக்கு நடந்து வருபவர், டிவியை ஓடவிட்டு பாடல்களைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு அதை ஐந்து மணிக்கு அமர்த்திவிட்டு மோட்டார் விட்டு வீட்டின் வெளியே உள்ளே வாழை, கொய்யா...

இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா?

படம்
  இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா? தூக்கத்திற்கு நேரம் முக்கியம் சூரியன் காலையில் எழுந்து மாலை மறைகிறது அல்லவா, அதே முறையில் தூக்கம் அமையவேண்டும். அதுபோல உங்கள் வேலை நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.  காலையில் எழுந்து சூரிய ஒளி மேலே படும்படி உலாவ வேண்டும். உணவு உண்டபிறகு சிறிது நேரம் நடக்கலாம். நாய் இருக்கிறதா, அதை அழைத்துக்கொண்டு வெளியே உலாவச் செல்லலாம்.  ஒருநாளுக்கு இருபது நிமிடங்களேனும் பசுமையான நிலப்பரப்பை பார்க்கவேண்டும். மரத்தில் அடியில் உட்கார்ந்து உணவை உண்ண முயலலாம்.  முட்கள் இல்லாத புற்கள் உள்ள இடத்தில் செருப்பை அணியாமல் வெற்று கால்களோடு சிறிது நடக்கலாம். அசுத்தமான இடங்களில் காலணி இன்றி நடப்பது நோய்களைக் கொண்டு வரும் என்பதை மறக்காதீர்கள்.  வெளியே மனதை நெகிழ்வாக வைத்துக்கொள்ளும் சமயங்களில் போன், வாட்ச் ஆகியவற்றை வீட்டிலேயே வைத்துவிடவேண்டும். அப்போதுதான் மேகத்தை, பறவைகளைப் பார்க்க முடியும். வீசும் குளிர்ந்த தென்றலின் இனிமையை உடலும் மனதும் உணரும்.  தோட்டத்தை பராமரிக்க முயலலாம். உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால், அதில் பூக்கள், காய்கறிகளை...

அதிக நேரம் வேலை செய்யக்கூடாது என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கி கூறுகிற நூல்!

படம்
  டு நத்திங் - ஹவ் டு பிரேக் அவே ஓவர் வொர்க்கிங் செலஸ்டி ஹெட்லி கட்டுரை நூல் 167 பக்கங்கள் பொதுவாக இந்தியர்கள் விடுமுறை எடுக்காமல் கடுமையாக உழைத்து மேற்கத்திய ஆட்களுக்கு நிறைய சம்பாதித்து கொடுப்பார்கள். ஆகவே அவர்கள் சிறந்த மேனேஜர்களாக இருப்பார்களே ஒழிய கண்டுபிடிப்பாளர்களாக மாறவில்லை. அப்படி அதிக நேரம் உழைப்பதால் என்ன பாதிப்பு தனிமனிதர்களுக்கு, சமூகத்திற்கு, ஏற்படுகிறது என்பதை எழுத்தாளர் செலஸ்டி ஹெட்லி நிதானமாக விவரித்து உள்ளார்.  அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்வது ஆசிய நாடுகளில் பெரிதும் போற்றப்படுகிற பழக்கம். ஆனால், மேலைநாடுகளில் அதை திறமையின்மையாக பார்க்கிறார்கள். அங்கும் ஆசியர்கள் சென்று அதே பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். உண்மையில் அதிக நேரம் வேலை செய்வதன் அர்த்தம் என்ன என்பதை நூலாசிரியர் ஆராய்ந்து, நிறைய நூல்களைப் படித்து விளக்கியிருக்கிறார். அவர் ஆய்வுப்பூர்வமாக சொல்லும் தகவல்கள் எவையும் மிகைப்படுத்தப்பட்டதாக இல்லை.  அடிப்படையில் அலுவலகம் முடிந்தால் வீட்டுக்கு செல்வது, குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவது ஆகியவற்றை தேசப்பற்று, நாட்டை காப்பாற்றுவது, பொருளாதார வலிமை, பணவீ...

நம் அருகில் வசிப்பவர்களின் பொருளாதார வெற்றி, நம்மை பாதிக்குமா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மகிழ்ச்சியை தீர்மானிப்பது எது? லாட்டரியில் பணம் கிடைப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி எதுவரை உங்களுக்கு இருக்கும். உங்களைத் தேடி பணம் கேட்டு உறவுகள், நண்பர்கள் வரும்வரை மட்டும்தான். அதேசமயம், விபத்துகள் துரதிருஷ்டங்களை சந்திக்கிற மனிதர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அவர்களாக எதையும் தேடுவது என்றில்லை. அதுவாகவே கூட அவர்களைத் தேடி வந்து போட்டுத்தாக்கும். மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் ஆரஞ்சுகளோடு சென்று பார்க்கும் நிலையில் ஆண்டு முழுவதும் இருப்பார்கள். இப்படி வாழ்க்கை போட்டு சக்கையாக பிழிந்துகொண்டிருக்க மனதில் மகிழ்ச்சி இருக்குமா என்றால், இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பிலிப் பிரிக்மன், டான் கோட்ஸஃ, ரோனி ஜேன் ஆப் புல்மன் ஆகியோர் 1978ஆம் ஆண்டு செய்த ஆய்வில் அடையாளம் கண்டுள்ளனர். லாட்டரி விழுந்தவருக்கு எதிர்காலம் பற்றிய மகிழ்ச்சி உள்ளது. விபத்துக்குள்ளானவருக்கு நிகழ்காலம் நரகம்தான். ஆனால் கடந்த காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தோம் என யோசித்தார்.  இதெல்லாம் மனம் தொடர்பானது. மும்பையில் பார்ப்பன முதல்வர், மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல...

உங்களது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நூல் - டெய்லி ரிச்சுவல்

படம்
 டெய்லி ரிச்சுவல்  மாசன் குரே சுயமுன்னேற்ற நூல் 171 பக்கம் தினசரி சடங்கு என கலைஞர்களுக்கு என்ன இருக்கும்? கட்டுரை, நாவல், ஓவியம், திரைப்படம் இதுதானே? அதை எப்படி உருவாக்குகிறார்கள், அதற்கு என்னென்ன விஷயங்களை செய்கிறார்கள் என்பதுதான் நூலின் மையப்பொருள்.  நூலில் ஏராளமான திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கட்டுமான கலைஞர்கள், ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள் தங்களின் பழக்க வழக்கம் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே தங்களைப் பற்றி கூறுகிறார்கள் அல்லது அவர்களைப் பற்றி சுயசரிதை எழுதும் பத்திரிகையாளர்கள் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். நூலை வாசிப்பவர்களுக்கு தேவையான குறிப்புகளும் கூட நூலின் பின்பக்கத்தில் உள்ளது. நூல்களை தேடி எடுத்து பார்த்துக்கொள்ளலாம்.  சில எழுத்தாளர்கள் திருமணம் செய்தாலும் கூட எழுத்தாளராக சாதிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காகவே ஒருவர் வேலைக்கு செல்வது இன்னொருவர் எழுதுவது என திட்டமிடுகிறார்கள். அதில் ஒருவர் வெற்றி பெறுகிறார், இன்னொருவர் தோல்வியுறுகிறார். இந்தவகையில் எழுத்தாளர் கார்சன், ரீவ்ஸ் ஜோடியில் கார்சன் வெற்றிபெறுகிறார். அதாவத...

விரைவில் .... மின்னூல் வெளியீடு

படம்
  ராக்குட்டன் கோபோ, ஸ்மாஷ்வேர்ட்ஸ் தளங்களில் நூல் கிடைக்கும்....    

வேலைவாய்ப்பு பற்றி மாற்றி யோசிக்கவேண்டிய நேரமிது!

படம்
  எம்ப்ளாய்மென்ட் இஸ் டெட் ஜோஸ் டிரியன், டெபோரா பெர்ரி பிசியன் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ பிரஸ் இன்றைய காலத்தில் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இணையம் சார்ந்ததாக மாறியுள்ளது. அதற்கேற்ப ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வது, மேம்படுத்திக்கொள்வது எப்படி என இந்நூல் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்கிறோம். ஏறத்தாழ அனைத்து டெக் நிறுவனங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணியாளர்கள் நீக்கப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். மைக்ரோசாப்டில் அண்மையில் ஆறாயிரம் பேர் பணிவிலக்கப்பட்டனர். ஏனெனில் அங்கு கோடிங்குகளில் முப்பது சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு எழுதுகிறது. பணியாளர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. ஒருவர் வேலையில் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் வாழ்நாள் முழுக்க கற்க வேண்டிய தேவை உள்ளது. படிப்பு என்பது பள்ளி, கல்லூரியோடு முடிவதில்லை. தொடர்ச்சியாக எந்த வேலை செய்தாலும் மென்மேலும் இணைய படிப்புகள், பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டய படிப்புகளை படித்து தன்னை மேம்படுத்தி்க்கொண்டே இருப்பவர் எப்படியும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை நூல் விளக்கமாக எடுத்து கூறுகிறது. சாதாரண வாசகர் படிப்பதை விட இணையம் சார்ந்த க...

நவீனத்துவ இந்தியாவையும், அதன் வளர்ச்சியையும் தடுக்கும் பெரிய எதிரி இந்துமதம்.

படம்
பெருமை மிக்க சூத்திரன் இந்துமதம், தனது கருத்தியலை பயன்படுத்தி எப்படி தீண்டத்தகாதவர்களை ஒடுக்கிறது என பார்ப்போம். முதலில் அவர்கள் தங்களை சூத்திர ர்களாக கருதவேண்டும். அப்படி இருக்க விரும்ப வேண்டும். இதுதான் அனைத்து மோசமான கருத்தியலின் அடிப்படையும் கூட. பெயர், புகழ், அடையாளம், மதம் இல்லாமல் இருப்பவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயரைக் கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். இதுகூட அவமானத்தை மறைக்க என்று கூறுகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் தங்களை சூத்திரர்களாக நினைத்துக்கொண்டாலும் அவர்கள் இந்துமதத்திற்குள்ளாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் இந்து கடவுள்களை வணங்க கூடாது. இந்துமத புனித நூல்களை தொடக்கூடாது. அவர்கள் கலாசாரமான மொழியை பேசக்கூடாது. தங்களுடைய பெயரைக் கூட கௌரவமாக வைத்துக்கொள்ளக்கூடாது. தீண்டத்தகாதவர்கள் தினசரி அடி, உதை, கொல்லப்படுவது, எரிக்கப்படுவது, வல்லுறவு செய்யப்படுவது ஆகிய அநீதிகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எதற்காக? அவர்கள் இந்து அல்ல என்பதற்காக. இந்து மனித பிரமிடின் வெளியேதான் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்துமத படிநிலைமுறையின் ஒட்டுமொத்த எடையையும் தூக்கி சு...

சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - உயர்கல்வியை வளர்த்தெடுத்த தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்!

படம்
    சீனாவில், 1998 -2007 காலகட்டத்தில் மட்டும் 1022லிருந்து, 1912 கல்வி நிறுவனங்கள் என உயர்கல்விக்காக தொடங்கப்பட்டுள்ளன. வளர்ச்சி 2சதவீதம். பெய்ஜிங், தியான்ஜிங், கிழக்கு கடற்புற பகுதியான ஜியாங்சு ஆகியவற்றில் உயர்கல்வி பாராட்டும்விதமாக வளர்ந்துள்ளது. சீன அரசின் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. சீன நகரங்களில் கல்வியில் ஒட்டுமொத்தமாக முன்னிலை பெறும் நகரமாக பெய்ஜிங் உள்ளது. குறைந்த வளர்ச்சி கொண்ட மாகாணங்களைப் பார்ப்போம். ஷெஜியாங், குவாங்டாங் ஃப்யூஜியன், சான்டாங், ஹெனான், நிங்ஷியா ஆகியவை கல்வி வளர்ச்சியில் கீழே உள்ளன. பெய்ஜிங், சாங்காய், ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் ஒருவர் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், அதுவே ஹெனான், ஷெஜியாங், சான்டாங், குவாங்டாங் ஆகிய மாகாண மாணவர்களில் ஒருவர் கல்வி கற்க நினைத்தாலும் வாய்ப்பை பெறுவதற்கு ஏராளமான பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். வாய்ப்பே கிடையாது என்றல்ல. கடினம் என்று கூறவேண்டும். சீனாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டதே தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கவேண்டும் என சீன அரசு முடிவெடுத்ததால்தான். ஐம்பது எழுபதுகளில் தைவானில் உள்ள கு...

பொருளாதாரத்திற்கு உதவும் வேலை!

படம்
             பாயும் பொருளாதாரம் 9 பொருளாதாரத்திற்கு உதவும் வேலை யாருடைய செழிப்பிற்கு வேலை உதவுகிறது என்று உள்நோக்கமாக கேட்டால் பதில் சொல்லமுடியாது. பொதுவாக மனிதர்கள் அனைவருமே வேலை செய்வதில் அதிக நேரத்தை செலவிடுகிறோம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உணவு, உடை, இருப்பிடம் பெறுகிறோம். இதற்கு மேல் காசு இருந்தால் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தலாம். தொழிலாளர்களை தொடக்கத்தில் எந்த அரசும் பாதுகாக்கவில்லை. அவர்களே ஒன்று திரண்டு போராடித்தான் குறிப்பிட்ட எட்டுமணி நேர வேலைத்திட்டத்தை உருவாக்கினர். இன்று அந்த வேலை நேரத்தை மாற்றிவிட சுரண்டல் தொழிலதிபர்களாக சில பைத்தியங்கள் ஊளையிடுகின்றன. இதற்கு பதிலடியாக, வாகனங்கள் தயாரிக்கும் தொழிலதிபர், இப்படியான வேலை நேரத்தை மேல்நிலையில் இருந்து தொடங்கலாமே என்று கேட்டிருக்கிறார். நிறுவனர், தலைவர், இயக்குநர் வாரத்திற்கு 90 மணிநேரங்கள் வேலை செய்கிறார் என்றால் அவரின் சம்பளம் அதிகம். தொழிலாளர்கள் அதை வாழ்நாளில் நினைத்து பார்த்திர முடியாத தொகை. அப்படியே உழைத்தாலும் உடல்,மனம் கெட்டுப்போவதுதான் மிச்சமாகும். கையில் காசு ஏதும் கிடைக்க...

தமிழ் இணையம் 2024 செயற்கை நுண்ணறிவு

படம்
தமிழ் இணையம் 2024 செயற்கை நுண்ணறிவு உலககெங்கும் கணினி தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வருகிறது. சந்தையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு துறைகளிலும் ஆய்வுகளை செய்துவருகின்றன. வணிக ரீதியாக செயற்கை நுண்ணறிவை இணையத்தில் பயன்படுத்தும் முறையை ஓப்பன் ஏஐ நிறுவனம், நவம்பர் 2022ஆம் ஆண்டு செய்து காட்டியது. இதன் வழியாக கிடைத்ததுதான் சாட்ஜிபிடி சேவை. அறிமுகமான ஒரு வாரத்திலேயே பல கோடி மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். செயற்கை நுண்ணறிவு சார்ந்து உதவும் கருவிகளை மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கெனவே சந்தையில் கொண்டிருந்தன. ஆனால் அவை வணிகரீதியாக துல்லியமாக இல்லை. சாட்ஜிபிடியின் வருகை இணையத்தில் அதுவரை இருந்த தேடுதல் வணிகத்தையே மாற்றியமைத்திருக்கிறது. பொதுவாக தேடுபொறியில் ஒரு தகவலைத் தேடும்போது, இணையதளங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் காண்பிக்கப் பெறும். ஆனால், சாட்ஜிபிடியில் தேடும் தகவலே சுருக்கமாக வந்துவிடும். குறிப்பாக உளவியலில் வாசிக்க வேண்டிய முக்கிய நூல்கள் ஐந்து அல்லது பத்து வேண்டும் என்...