காப்புரிமையற்ற தடுப்பூசி
பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காப்புரிமையற்ற தடுப்பூசியின் பங்கு! உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தம்மைக் காக்க உலக மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவே தற்போது மாறிவரும் வைரஸ் வகைகளுக்கு ஏற்ப பெருமளவு மக்கள் பலியாகாமல் தடுத்து வருகிறது. மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் செலுத்தியுள்ளனர். வறுமையான நாடுகளில் இந்த வகையில் 10 சதவீத மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த இடைவெளியை காப்புரிமை இல்லாத கோர்பேவாக்ஸ் (CORBEVAX ) போக்கும் என மருத்துவர் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். வேறுபாடு என்ன? புரத துணைப்பிரிவு (protein subunit) தடுப்பூசி வகையைச் சேர்ந்த கோர்பேவாக்ஸ், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்பைக் புரதத்தை கொரோனாவிலிருந்து பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு எதிர்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. பிற தடுப்பூசிகள், உடலில் ஸ்பைக் புரதத்தை உருவாக்க தூண்டுகின்றன....