இடுகைகள்

ஏஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பு பற்றி மாற்றி யோசிக்கவேண்டிய நேரமிது!

படம்
  எம்ப்ளாய்மென்ட் இஸ் டெட் ஜோஸ் டிரியன், டெபோரா பெர்ரி பிசியன் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ பிரஸ் இன்றைய காலத்தில் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இணையம் சார்ந்ததாக மாறியுள்ளது. அதற்கேற்ப ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வது, மேம்படுத்திக்கொள்வது எப்படி என இந்நூல் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்கிறோம். ஏறத்தாழ அனைத்து டெக் நிறுவனங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணியாளர்கள் நீக்கப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். மைக்ரோசாப்டில் அண்மையில் ஆறாயிரம் பேர் பணிவிலக்கப்பட்டனர். ஏனெனில் அங்கு கோடிங்குகளில் முப்பது சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு எழுதுகிறது. பணியாளர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. ஒருவர் வேலையில் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் வாழ்நாள் முழுக்க கற்க வேண்டிய தேவை உள்ளது. படிப்பு என்பது பள்ளி, கல்லூரியோடு முடிவதில்லை. தொடர்ச்சியாக எந்த வேலை செய்தாலும் மென்மேலும் இணைய படிப்புகள், பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டய படிப்புகளை படித்து தன்னை மேம்படுத்தி்க்கொண்டே இருப்பவர் எப்படியும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை நூல் விளக்கமாக எடுத்து கூறுகிறது. சாதாரண வாசகர் படிப்பதை விட இணையம் சார்ந்த க...

ஜனநாயகத்தை வளர்க்க, அரசு அமைப்புகள் சட்டத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவேண்டும்!

படம்
      நேர்காணல் பொருளாதார ஆய்வாளர் டாரன் ஆஸ்மொக்லு சில நாடுகள் தோற்றுப்போகையில் சில நாடுகள் வளம் பெறுவது எப்படி? அனைத்து நாடுகளும் வெற்றிபெறுவதற்கு தேவையான பொருளாதார, சமூக காரணங்கள் உள்ளன.இவற்றை ஒருங்கிணைக்க தேர்ந்தெடுக்கும் அமைப்புகள் திறன் பெற்றவையாக இருக்கவேண்டும். இந்த அமைப்புகள் அரசியல் ரீதியாக, சமூகரீதியாக, பொருளாத ரீதியாக சிறப்பானவையாக இருத்தல் அவசியம். வெற்றிபெற்ற நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் அனைத்து மக்களுக்கும் சரியான வாய்ப்புகளை உரிமைகளை சமத்துவமாக பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். அரசு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வரும். இந்த அமைப்புகள் பலவீனமான மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை பாதுகாக்கவும் முயலும். அதேசமயம் பெரு, பன்னாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும். கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது சில நாடுகளை வளப்படுத்தும் என பொருளாதார வரலாற்று அறிஞர் ஜோயல் மொக்யிர் கூறியிருக்கிறார். இக்கருத்தை ஏற்கிறீர்களா? ஒரு நாட்டின் வளர்ச்சியில் கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது முக்கியம் என்ற ஜோயலின் கருத்தை நான் ஏற்கிறேன். இந்த கிளர்ச்சிப் போராட்டம் என்பது சமந...

டெக் நிறுவனங்கள் அதீத பணபலத்தை வைத்து அரசை, ஒழுங்குமுறை அமைப்புகளை வளைத்து வருகின்றன!

படம்
      amba kak ai researcher இந்தியாவில் இணைய சமத்துவம், அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். இப்போது ஏஐ தொடர்பான கொள்கையில் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறீர்கள். டைம் இதழின் ஏஐ செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆச்சரியமளிக்கிறதா? தொழில்நுட்ப கொள்கை தொடர்பாக பத்தாண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறேன். இப்போது என்னைப் பற்றி இதழ்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுமக்களின் நலன் கருதிய கொள்கையில் வேலை செய்கிறேன். ஏஐ நவ் இன்ஸ்டிடியூட், டெக் நிறுவன உரிமையாளர்களை நோக்கி கடுமையாக கேள்விகளை முன்வைத்துவருகிறது. பல்வேறு அரசுகளிடம் லாபி செய்து வருவதால், முறைப்படுத்தும் அமைப்புகள் டெக் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெக் உலகில் ஜனநாயகத்தன்மையை கொண்டு வர நினைக்கும் பலருடன் இணைந்து கொள்கைகளை வடிவமைக்க உழைத்து வருவதில் மகிழ்கிறேன். சாம் ஆல்ட்மனை, மேசியா என்று டெக் தளத்தில் புகழ்கிறார்களே? இங்கு நாம் ஓப்பன் ஏஐ பற்றி பேசவேண்டியதில்லை. மேசியா என ஒருவரை புகழ்வதெல்லாம் மார்க்கெட்டிங் உத்திகள்தான். டிரேட் கமிஷன்...

நூல்களைத் திருத்தி செம்மையாக்க ஆசிரியர் தேவையில்லை - எடிடிரிக்ஸ் ஏஐ போதும்!

படம்
          நூல்களை செம்மையாக்க எடிடிரிக்ஸ் ஏஐ போதும்! ஓராண்டு செயற்கை நுண்ணறிவு புரோகிராமுக்கு உழைத்து கடந்த மே மாதம் 2024 அன்று தனது கண்டுபிடிப்பை எழுத்தாளர், ஆசிரியர் மேரு கோகலே வெளியிட்டிருக்கிறார். இவர், பெங்குவின் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் நூல்களை செம்மையாக்கம் செய்யும் பதிப்பக ஆசிரியராக பணிபுரிந்தவர். பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகள், நூல்கள் என அனைத்துமே நாளிதழ் அல்லது பதிப்பு நிறுவன ஆசிரியரால் பல்வேறு முறை திருத்தி எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு வெளியாகின்றன. இதில், திருத்தங்களை செய்யும் நூல் மேம்பட உழைக்கும் ஆசிரியர்கள் பெயர் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை. ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் பெயர்களை வெளியிடுகிறார்கள். தமிழில், அதுபோன்ற நடைமுறை குறைவு. உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர வழங்கமாட்டார்கள்.  எடிடிரிக்ஸ் என்ற ஏஐ மூலம் எழுத்தாளர் ஒருவர், நூல்களை எளிதாக திருத்தி, பிழைகளை நீக்கிக்கொள்ள முடியும். உலகம் முழுவதுமே தொண்ணூறு சதவீத எழுத்தாளர்களுக்கு, அவர்களின் நூல்களை செம்மைப்படுத்தி திருத்தி தரும் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. அந்தக்கு...

சந்தைக்குப் புதுசு - கோ பைலட் வசதிகளைக் கொண்ட ஏஐ லேப்டாப்ஸ்

படம்
             ஏஐ லேப்டாப்ஸ் அடுத்த தலைமுறை ஏஐ என்ற சொல்லை உச்சரிக்காமல் வாழவே முடியாது போல. இன்று தொழில்நுட்ப மாநாடு என்று ஒன்று நடந்தால் அதில் ஏஐ என்ற சொல்லை எண்ணற்ற முறை உச்சரிக்கிறார்கள். முன்னர், கூகுளோடு போட்டியிட முடியாமல் தவித்த மைக்ரோசாஃப்ட் புத்துணர்ச்சி கொண்டிருக்கிறது. ஓப்பன் ஏஐ நிறுவனத்தோடு போட்ட ஒப்பந்தம், அதன் ஆயுளை சந்தையில் கூட்டியுள்ளது. பெரிதாக கண்டுகொள்ளப்படாத சத்யா நாதெள்ளா, இப்போது டெக் உலகில் மரியாதையுடன் பேசப்பட்டு வருகிறார். கணினிசந்தையில் இழந்த மவுசை பெற கோ பைலட் பிளஸ் என்ற தொழில்நுட்பம் பெயரில் மடிக்கணினிகளை, மேசைக் கணினிகளை தயாரித்து விற்கத் தொடங்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இணைய வசதி இருந்தால் போதும், நேரலையில் ஏஐ மூலம் நாற்பது மொழிகளில் ஒரு வார்த்தையை மொழிபெயர்க்க முடியும். அதை ஆடியோவாக கூட கேட்கலாம். கோ கிரியேட்டர் மூலம் கலைப்படைப்புகளை மேம்படுத்திக்கொள்ளலாம். அடோப் போட்டோஷாப், டாவின்சி ஆகிய நிறுவனங்களும் ஏஐயை தங்களது மென்பொருளில் இணைத்துக் கொள்ள தொடங்கியுள்ளனர். அவற்றைப் பற்றியும் செய்திகள் விரைவில் வெளியாகும். இப்போது...

Time 100 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆராய்ச்சியாளர்!

படம்
           யோசுவா பென்ஜியோ செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் yoshua bengio யோசுவா, 2018ஆம் ஆண்டு டூரிங் விருதை தனது செயற்கை நுண்ணறிவு விருதுக்காக பெற்றார். இவருடன் ஹின்டன், யான் லெகன் ஆகியோரும் இந்த விருதை இணைந்து பெற்றனர். யோசுவா, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை பல்லாண்டுகளாக செய்து வருகிறார். இவரது ஆராய்ச்சியின் விளைவாக, ஆழ்கற்றல் நுட்பம் புகழ்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு வெகுஜனத்தன்மை கொண்டதாக மாறுவதில் யோசுவா முக்கிய பங்காற்றியுள்ளார். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை செய்துவிட்டு புகழ்பெற்றுவிட்டு விருதுகளைப் பெற்றுவிட்டு சென்றுவிடவில்லை. அதன் இன்னொரு பக்கம், பாதகமான விஷயங்களைப் பற்றியும் எச்சரிக்கை செய்து வருகிறார். இந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அமைக்கப்பட்ட மாநாடுகளுக்குக் கூட பல்வேறு ஆலோசனைகளை அளித்து வருகிறார். வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என உலகின் பல்வேறு நாட்டு அரசுகளுக்கும் தனது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வருகிறார். டைம் 100 ஜியோஃப்ரீ ஹின்டன்

ஏஐ முன்னோடிகள்!

படம்
  ஏஐ முன்னோடிகள்  டைம் இதழில் வெளியான ஏஐ சிறப்பிதழில் இடம்பெற்ற பிரபலமான ஏஐ ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய குறிப்புகள் இவை.  ஜேம்ஸ் மான்யிகா துணைத்தலைவர், ஆராய்ச்சி தொழில்நுட்ப சங்கம், கூகுள் james manyika google ஏஐ தொழில்நுட்பத்தை சந்தையில் பிறருடன் போட்டியிடுவதை விட அதை சரியான காரணத்திற்காக பயன்படுத்தவேண்டும் என ஜேம்ஸ் நினைக்கிறார். இதனால்தான், அவர் காலநிலை மாற்றம், ஆரோக்கியம், பொழுதுபோக்கு என பரந்துபட்ட துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை விரிவாக்க முயன்று வருகிறார். வெள்ள அபாயம் பற்றிய ஃப்ளுட் ஹப் என்ற தொழில்நுட்பம் எண்பது நாடுகளில் விரிவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசதி மூலம் வெள்ள அபாயத்தை முன்னரே மக்கள் அறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம்.  அதேசமயம் ஏஐ தவறானவர்கள் குறிப்பாக சர்வாதிகார அரசின் கைகளுக்கு சென்றால் ஏற்படும் அபாயம் பற்றியும் பிரசாரம் செய்கிறார். பேசுகிறார், எழுதி வருகிறார். ஆலோசனை அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கிறார். தொழில்நுட்பம் வேகமாக சந்தைக்கு வந்தால் வணிகம் சிறக்கும், ஆனால் ஜேம்ஸ் வேகத்தை விட விவேகம் முக்கியம் என நினைக்கிறார்....

ஏஐயைப் பயன்படுத்தி வேலையில் சாதிக்கலாம்!

படம்
  இருப்பதிலேயே குறைந்த கூலிக்கு ஆட்களை வேலைக்கு எடுத்து செக்குமாடு போல வேலைவாங்கும் நாளிதழ் நிறுவனம், சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த நிறுவனத்திற்கு வேலைக்கு போவது உங்கள் விதியாக இருந்தாலும் ஏஐ பற்றி அறிந்து கொள்வது நல்லது. தெரிந்துகொண்டால் அங்கிருந்து தப்பி நல்ல நிறுவனத்திற்கு வேலைக்குப் போகலாம். உலகம் முழுக்க 300 மில்லியன் வேலைவாய்ப்புகள் ஏஐ மூலம் பாதிக்கப்படவிருக்கின்றன என மெக்கின்சி ஆய்வு நிறுவனம் தகவல் கூறியுள்ளது. இதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஏஐ பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றுக்கொண்டால் நல்லது.  டெக் கம்பெனி அல்லாத நிறுவனத்திற்கு சென்றால் கூட ஏஐ பற்றிய அறிவை பணியாளர் கொண்டிருப்பதை வேலைக்கு எடுப்பவர்கள் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் உதவும் என அவர் நினைக்கலாம். வடிவமைப்பாளராக இருப்பவர்கள், சாட்ஜிபிடி, டால் இ ஆகிய மாடல்களை கற்பது அவர்களின் கிரியேட்டிவிட்டியை உயரே கொண்டு செல்லும். மொத்த வித்தையையும் டிசைனில் இறக்கியிருக்கேன் என காலரை தூக்கிவிட்டுக்கொண்டு முதலாளியிடம் பெருமை பீற்றிக்கொள்ளலாம். உலகளவில் அடிப்படையான ஏஐ பற்றிய படிப்புகள் க...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் பாலின பாகுபாடு உள்ளது!

படம்
  டாமியன் பேட்ரிக் வில்லியம்ஸ் damien p williams நார்த் கரோலினா பல்கலையில் தகவல் அறிவியலாளராக உள்ளார். ஏஐ மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.  செயற்கை நுண்ணறிவில் பாகுபாடு உண்டா? ஏஐக்கு நாம் தரும் தகவல்களைப் பொறுத்துதான் அதன் செயல்பாடு அமைகிறது. அதை வெறும் கணித செயல்பாடுகளை செய்யும் தொழில்நுட்பமாக கருதவேண்டாம். அந்த அமைப்பிற்கு பயிற்சி அளிக்கும்போது கொடுக்கும் தகவல்களில் கவனம் செலுத்தவேண்டும். மனிதர்கள்தான் தகவல்களை ஏஐக்கு வழங்குகிறார்கள். எனவே, அவர்களின் மதிப்பீடுகள், பார்வைக்கோணம், பாகுபாடுகளும் அதில் சேர்ந்துவிடுகிறது.  ஏஐ அமைப்பிலுள்ள பாகுபாடுகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவுக்கு பொதுவெளியில் உள்ள தகவல்களை கொடுத்து பயிற்சி அளிக்கிறார்கள். இதில் அதிகம் கிடைப்பது கருப்பினத்தவர்களின் புகைப்படங்கள்தான். எனவே, குற்றம், தீவிரவாதம் தொடர்பான பிரச்னைகளில் செயற்கை நுண்ணறிவு கருப்பினத்தவர்களை குற்றவாளி என அடையாளம் காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் கருப்பினத்தவர்களின் பெயர்களை ஏஐ தவிர்க்கிறது. தகுதி இருந்தாலும் புறக்கணிக்கிறது. இதில் வேலை தருபவர்களின் ...

ஏஐ மூலம் நோயாளிகளின் நோய்களைக் கண்டறிவது சிறப்பானதுதான்!

படம்
  எரிக் டோபல், இதயவியல் மருத்துவர். இவர், டீப் மெடிசின் - ஹவ் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் கேன் மேக் ஹெல்த்கேர் ஹியூமன் அகெய்ன் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஏஐ, மருத்துவர்களின் வேலையை மிச்சமாக்குவதோடு, நோயாளிகளுக்கு தேவையான தொடக்க கட்ட ஆலோசனைகளை கொடுக்கும் என நம்புகிறார். அவரிடம் பேசினோம்.  மருத்துவர், நோயாளி ஆகியோருக்கு இடையிலான உரையாடலை ஏஐ பதிவு செய்யத் தொடங்கிவிட்டது. உரையாடலை சிறு குறிப்பாக மாற்றி வருகிறது. மருத்துவ சிகிச்சையில் இது மாற்றத்தை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் இதற்கு முன்னர் நோயாளி கூறும் பல்வேறு தகவல்களை கணினியில் கீபோர்டு வழியாக தட்டச்சு செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது அந்த வேலை இல்லை. இதனால் மருத்துவ சிகிச்சையின் தரம் உயர வாய்ப்புள்ளது. நோயாளிகள் கூறுவதை ஏஐ சிறப்பாக மாற்றி குறிப்பாக கொடுக்கிறது. இதை முன்னர் மருத்துவர்கள் எழுதியதோடு ஒப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அமெரிக்க மருத்துவமனைகளில் ஏஐயை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  மருத்துவர், நோயாளியின் உரையாடலில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறும்? அனைத்து விதமான சிகிச்சை பற்றிய விஷயங்களும்தான். மருத்துவம்...

வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியதிருக்கிறது!

படம்
  jenson huang nvidia ceo வயது 61 என அவரே சொன்னால்தான் தெரிகிறது. கறுப்பு ஜெர்கினும், ஷூக்களுமாக உற்சாகமாக பேசுகிறார். அவரோடு பேசும்போது அவரை நாம் நேர்காணல் செய்கிறோமா அல்லது அவர் நம்மைப் பற்றி விசாரிக்கிறாரா என்று கூட தெரியவில்லை. அந்தளவு பேச்சில் பல்வேறு விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். ஏஐ சிப்களை உருவாக்கி வரும் என்விடியா முக்கியமான டெக் நிறுவனங்களில் ஒன்று. கூகுள், அமேசான், மெட்டா, ஏஎம்டி ஆகிய நிறுவனங்களுக்கு கடும்போட்டியை சந்தையில் அளித்து வருகிறது. வாரத்திற்கு ஏழு நாட்களும் வேலை செய்யும் இயக்குநர், எந்த மேடையிலும் சோர்ந்து அமர்ந்திருந்தது இல்லை. அவரிடம் பேசினோம்.  நீங்கள் பத்திரிகையாளர் ஆக விரும்பினீர்களா? ஒருகாலத்தில் அப்படி நினைத்தேன்.  என்ன காரணத்திற்காக? அடோப்பின் நிறுவனர் சாந்தனு நாராயண், நான் மதிக்கும் முக்கியமான வணிக தலைவர்களில் ஒருவர். அவர் பத்திரிகையாளராள ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். ஏனெனில், அந்த வேலை வழியாக கதைகளை சொல்ல விரும்பினார்.  வணிக்கத்திற்கு கதை சொல்வது முக்கியம் என்று கூறவருகிறீர்களா? ஆமாம், நிறுவனத்தின் நிலைப்பாடு, கலாசார உருவாக்கம் ஆ...

ஏஐ வரவால் மாறும் ஊடக செய்தியறை!

படம்
  நவீன ஏஐகளால் செயல்வேகம் கூடும் ஊடகங்களின் செய்தியறைகள் தமிழகத்தின் இதயத்துடிப்பு, நம்பர் 1 வார இதழ் என தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் வார இதழ்கள் எல்லாமே வலதுசாரி கட்சிகளால் வாங்கப்பட்டு, அஜண்டாவிற்கு ஏற்ப போலிச்செய்திகளை, மக்களை மடைமாற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. காசு கொடுக்கிறவனே கண்கண்ட தெய்வம் என மாறிவிட்டன. அதேசமயம் காலத்திற்கேற்ப எழுதும் செய்திகளை மேம்படுத்தி பல்வேறு வழிகளில் மக்களை அடைய முயற்சிக்கும் புதிய பாதைகளுக்கும் பஞ்சமில்லை.  அமெரிக்காவிலுள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற நாளிதழ், டிக் டாக் அல்காரிதம் பற்றி ஆராய்ச்சி செய்தது. அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் அனைவருமே பெரும்பாலும் டிக்டாக்கில் பயனர்களாக இருக்கிறார்கள். சிலர் அதில் வியாபாரம் செய்கிறார்கள். நடிக்கிறார்கள். ஏதோ ஒருவகையில் அந்த ஆப்பில் இணைந்திருக்கிறார்கள். அதைவிட்டு விலகாமல் இருக்கிறார்கள். அப்படியென்ன சிறப்பம்சம் மனதை கட்டிப்போடும்படி இருக்கிறது என நாளிதழ் ஆசிரியர் குழு யோசித்தது. 2021ஆம் ஆண்டு, பதிமூன்று வயதான பயனர் ஒருவர் டிக்டாக்கில் கணக்கு தொடங்கினார். ஒன்லி பேன்ஸ் என்ற டிக்டாக்கின் கணக்கில் இ...

ஏஐ காரணமாக பிங்க் சிலிப் வாங்கப்போகும் தொழிலாளர்கள்! - முக்கிய தொழில்துறைகள்

படம்
  ஏஐ மூலம் பாதிக்கப்படும் தொழில்துறைகள்  கூகுள், ஏஐ ஆராய்ச்சியில் அதிக காலம் இருந்தாலும் கூட அதை வருமானத்திற்குரிய பொருளாக மாற்றத் தவறிவிட்டது. அந்த தவறை ஓப்பன் ஏஐ செய்யவில்லை. அதனால்தான் எழுத்து, புகைப்படம், வீடியோ என பல்வேறு பொருட்களை சந்தைப்படுத்தி முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது.  ஏஐ மூலம் நிறைய விஷயங்களை செய்துகொள்ளலாம் சிட்டி வங்கி, ஜே பி மோர்கன் ஆகிய நிறுவனங்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றுடன் ஒப்பந்தமிட்டு வேலைகளிலும் பயன்படுத்தி வருகின்றன. ஒரேவிதமான வேலையை செய்பவர்களுக்குத்தான் வேலை போகுமே தவிர கிரியேட்டிவிட்டியாக வேலைபார்ப்பவர்களுக்கு ஏஐயால் பாதிப்பு நேராது என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். முதுகலைப் பட்டம் பெற்றவர்களின், முனைவர் பட்டம் பெற்றவர்களின் வேலைகள் 57 சதவீதம் ஏஐயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஒற்றை டிகிரி வாங்கி கல்யாணப்பத்திரிகையில் போட்டு சந்தோஷப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு அறுபது சதவீதம் பாதிக்கப்படலாம். இதையெல்லாம் இந்திய அரசின் புள்ளிவிவரத்துறை கூறினால் சந்தேகப்படலாம். ஆனால், மெக்கின்சி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. போலிச்செய்தியல்ல உண்ம...

தேர்தல், அரசியலில் தலையிடாமல் தள்ளி நிற்க முயலும் டெக் நிறுவனங்கள்!

படம்
  கீழ்த்தரமாக பேசுவது அரசியலில் இயல்பாக இருக்கிறது. அதை இன்னும் புதிய உயரங்களுக்கு காவிக்கட்சி ஆட்கள் கொண்டு சென்று வருகிறார்கள். எதிராளி பேசும் விதமாக அதற்கு நிகராக அதை விட கீழ்த்தரமாக பேச நிறைய ஆட்கள் தயாராகி வருகிறார்கள். தனிநபர்கள் பேசுவது வேறு. அதையே டெக் நிறுவனங்கள், இணையத்தில் பதிலாக அளிப்பது வேறு. குறிப்பிட்ட கட்சி சார்ந்து தவறான பதில்களை அல்லது அவர்களுக்கு பிடிக்காதது போல நேர்மையாக பதில் சொன்னால் கூட தொழில் செய்யமுடியாது.  இந்த விதிகளை யாரும் மீறமுடியாது. மீறினால் உடனே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேசியபாதுகாப்பு, உளவுத்துறை என பல்வேறு அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கு, அலுவலகங்களுக்கு வந்து சோதனையிடுவார்கள். பிறகு தேர்தல் பத்திரங்களில் காசு கொடுத்தால் மட்டுமே தொழில் பிழைக்கும். இல்லையெனில் லஞ்ச, ஊழல் வழக்கு பதிவாகும். தேசதுரோகி என பிழைப்புவாத ஊடகங்கள் அலறுவார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. இப்படி மிரட்டி பணம் பிடுங்குவதில் காவிக்கட்சி அதிகாரத்தில் இருப்பதால் கெட்டிக்காரத்தனம் காட்டுகிறது.  கூகுள், அரசியல் கருத்துகளைக் கூறுவது தொடர்பான பிரச்னையில், எந்த க...