இடுகைகள்

கடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வில் பொருட்களின் நுகர்வைக் குறைத்து முழுமையாக வாழ்வதை கற்றுத்தரும் நூல்!

படம்
  Goodbye, Things Fumio Sasaki குட்பை திங்க்ஸ் ஆன் மினிமலிஸ்ட் லிவ்விங் ஃபிமியோ சசாகி கட்டுரை நூல் பெங்குவின்  சசாகி, நலிந்து வரும் பதிப்புத்துறையில் வேலை செய்கிறார். அதற்காக கற்றது தமிழ் நாயகன் போல இரண்டாயிரம், நான்காயிரம் என சம்பளம் வாங்கவில்லை. வீட்டில் பெரிய டிவி, இசைக்கருவிகள், நூற்றுக்கணக்கான நூல்கள், இசை கேட்கும் கருவிகள் வைத்து இருக்கிறார். ஏராளமான பொருட்களையும் வாங்கிக்கொண்டே இருக்கிறார்.  பொருட்களை எவ்வளவு வாங்கினாலும் அதில் சந்தோஷம் குறைவதை மெல்ல உணர்கிறார். அதன்பொருட்டு, பொருள் சார்ந்து வாழ்க்கை இருப்பதை அறிந்துகொள்கிறார். மெல்ல வீட்டிலுள்ள பொருட்களை குறைக்கத் தொடங்குகிறார். குறைந்த பொருட்களில் நிறைவு என்பதே நூலின் அடிப்படை மையப்பொருள்.  வாழ்க்கையை பயணங்கள், நண்பர்கள், புதிய அனுபவங்களை தேடுவது என அமைத்துக்கொள்கிறார். மினிமலிசம் என்பதை பலரும் புரிந்துகொள்ள கஷ்டப்படக்கூடும். ஆப்பிள் போன் பார்த்திருக்கிறீர்கள். வட்டவடிவில் ஒரே ஒரு பட்டன்தான் இருக்கும். அந்த போன் வந்த காலத்தில் பலரும் ஏகப்பட்ட பட்டன்களை போனில் வைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் அத...

குழந்தைகளே லட்சியம், விற்பனை நிச்சயம்!

படம்
  வீட்டுக்குத் தேவையான சோப்பு. தரையைத் துடைக்கும் பொருட்கள், சலவைததூள், சலவை சோப்பு ஆகியவற்றை வீட்டின் மூத்தவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் சாப்பிடும் பொருட்களைப் பொறுத்தவரை ஒரு வீட்டில் குழந்தைதான் முடிவு செய்யும். டிவிகளில் ஏராளமான விளம்பரங்களைப் பார்த்து, சாக்லெட் என்றால் கேண்டிமேன், கிண்டர் ஜாய், குவாக்கர் ஓட்ஸ், டோமினோ பீட்ஸா, சாண்ட்விட்ச் பிஸ்கெட்டுகள், ட்ராபிகானா ஜூஸ் என பலதையும் அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்களுக்கு வீட்டில் செல்வாக்கு அதிகம். பெற்றோர், தாத்தா, பாட்டி, உறவினர்கள் என நிறையப் பேரிடம் அவர்கள் பொருட்களைக் கேட்டுப் பெற முடியும். பொதுவாக குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே சில பிராண்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டால் ஒருவரை எளிதாக மாற்ற முடியாது. சில குடும்பங்களில் அவர்களின் கலாசார இயல்புப்படி, பேஸ்ட் என்றால் கோல்கேட்தான், பிரஷ் என்றால் சென்சோடைன், குளியல் சோப்பு என்றால் சின்தால் என முடிவே செய்திருப்பார்கள். இந்த சூழலில் வளரும் ஒரு குழந்தை தனது தேர்வை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ள முடியாது. உணவுப்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளை கவருவதற்கு ஜூனியர்...

சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

படம்
  மாட்டிறைச்சி அரசியல் குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல.  மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள்.  இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ...

செக்ஸ் பாட்டுடன் செக்ஸ் சாத்தியமா?

படம்
செக்ஸ்பாட்டுடன் செக்ஸ் சாத்தியமாகுமா? இன்று கடைகளில் செக்ஸ்பாட்கள் விலைக்கு கிடைக்கும் வகையில் பிரபலமாகிவிட்டன. உடனே அவற்றை பலர் வாங்கத் தயங்கினாலும் விரைவில்(50 ஆண்டுகளில்) இவை நாடெங்கும் பரவலாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் இது ரகசியமாக நடைபெறும். செக்ஸி ரோபோ, அல்லது செக்ஸ் பொம்மைகளா எப்படி அழைப்பது என பலருக்கும்  குழப்பம் உள்ளது. ஆனால் சிப் பொருத்தப்பட்ட செக்ஸ் ரோபோக்கள் அந்த உபயோகத்தையும் தாண்டியவை. செயற்கை அறிவு அப்டேட் கொண்டவை மனிதர்களின் உணர்ச்சிகளையும் கற்கத் தொடங்கியுள்ளன. ஸ்கேர்லட் ஜோகன்சன் உருவத்தில் மார்க் 1 ரோபோவை செய்தவர். ரிக்கி மா ஹேங், அவர், இதனை செக்ஸ் ரோபோ என்பதை விட பல்வேறு வேலைகளை செய்யும் ரோபோவாக பார்க்கிறார். இதனை எப்படி இயக்குவது, குழந்தைகளுடன் இருக்கும்போது அம்மா மோடும், இரவு வந்தால் காதலி மோடும் மாற்றிக்கொள்ள முடியுமா? நன்றி: கான்வர்சேஷன்