இடுகைகள்

சார்லி சாப்ளின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சினிமா பற்றிய இரு நூல்கள் - ஒளி ஓவியம், சினிமா கோட்பாடு

படம்
             ஒளி ஓவியம் - சி ஜெ ராஜ்குமார் டிஸ்கவரி புத்தக நிலையம் விலை ரூ.350 புத்தகம் ஒளிப்பதிவாளர்களுக்கானது. நூலும் அதற்கேற்ப வண்ணத்துடன் வழுவழுப்பான தாளில் தயாரிக்கப்பட்டதால் விலையும் கூடுதலாக உள்ளது. உண்மையில் நூல் விலைக்கு நியாயம் செய்துள்ளதா என்றால் ஒளிப்பதிவாளர்கள்தான் கூறவேண்டும். ஒளிப்பதிவாளர்களுக்கு தேவையான விளக்குகள், ஒளியைக் குறைக்கும் கருப்புத் துணிகள், ஒளியை அளவிடும் மீட்டர், படப்பிடிப்பில் பயன்படுத்தும் விளக்குகள், அதிலுள்ள வகைகள் என நிறைய விளக்கங்கள் படங்களுடன் உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதைப் பற்றிய புகைப்படங்கள் இருப்பதால் விளக்கு, அதிலிருந்து வரும் ஒளியின் தன்மை ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும். வெளிப்புற படப்பிடிப்பு, உட்புற அரங்கில் படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு உதவும் ஏராளமான விளக்குகள், ஒளியின் வீச்சை தடுக்கும் பொருட்கள், குறிப்பிட்ட கேமரா கோணங்களில் நடிகர்கள் புகழ்பெற்ற விதம், அதற்கான உதாரண திரைப்படங்கள் என நிறைய உதாரணங்கள் உள்ளன. ஒருவகையில் ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நூல் என்றே கூறலாம். கோமாளிமேடை...

உலகளவில் சிறந்த முக்கியமான நகைச்சுவை நடிகர்கள்!

படம்
  மே மாதத்தின் முதல் ஞாயிறு, உலக சிரிப்பு தினம். இந்த தினத்தில் சமூக கருத்தோ, வார்த்தை நகைச்சுவையோ நம்மை சிரிக்க வைக்கும் கலைஞர்களில் சிலரை நினைத்துப் பார்க்கலாம். இங்கே சிலரைப் பார்ப்போம்.  சார்லி சாப்ளின் ஆங்கில நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர். 75 ஆண்டு கால வாழ்க்கையில் சாப்ளின் சந்திக்காத சிக்கல்களே கிடையாது. மௌனமொழி படங்களில் ஆட்சி செலுத்தியவர். இவர் உருவாக்கிய வேலையில்லாத ட்ராம்ப் என்ற பாத்திரம் இன்றைக்கும் இவரது பெயரைச் சொல்லுவது. சிறுவயதில் அம்மாவை மனநல காப்பகத்தில் சேர்க்கும் நிலை. அப்பா, பிரிந்துசென்றுவிட குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்கு சென்று வந்தார். படங்களின் வழியே பல்வேறு சமூக கருத்துகளை திறம்பட விவரித்த கலைஞன்.  ரோவன் அட்கின்சன் தொண்ணூறுகளில் வந்த மிஸ்டர் பீன் டிவி தொடர் மறக்கமுடியாதது. அதுதான் ரோவனை உலகம் முழுக்க பிரபலப்படுத்தியது. பிறகு ஜானி இங்கிலீஷ், நெவர் சே நெவர் அகெய்ன், ஃபோர் வெட்டிங்க்ஸ் அண்ட் எ ஃபியூனரல், லவ் ஆக்சுவலி என சில படங்களில் நடித்தார்.  மிஸ்டர் பீன் தொடரை இணைந்து எழுதி, நடித்து உலகப் புகழ்பெற்றார். தொடரில் இவரது உடல்மொழி அபாரமான சி...