இடுகைகள்

மாற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் கல்விச் சாதனை! - கல்வி சீர்திருத்தங்கள்

சீனா, 1978ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் சந்தை பொருளாதார சக்தியாக மாறத் தொடங்கியது. அதுவரை நாடு வெறும் சோசலிச கருத்தியலைக் கொண்டதாக மட்டுமே இருந்தது. முன்னாள் அதிபர் டெங் ஷியோபிங்கின் காலத்தில் கல்வி, மத்திய அரசிடமிருந்து மையப்படுத்தாததாக, தனியார்மயமாக, சந்தைமதிப்பு கொண்டதாக மாறியது. மாவோவின் சீடராக டெங் அறியப்பட்டாலும், காலத்திற்கேற்ப நாட்டை மாற்றவேண்டும் என்ற சீர்திருத்த எண்ணம் கொண்டவர். இன்றும் கூட சீனாவில் அவருக்கு சிலைகளோ, கூறிய மேற்கோள்களோ கூட இல்லை. அதாவது அவற்றை வெளிப்படையாக பார்க்க முடியாது. ஆனாலும் முன்னாள் அதிபர் டெங் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற முக்கியமான தலைவர் என்பதை யாரும் மறுப்பதில்லை. சீன அரசு, 1949ஆம் ஆண்டு, வணிக நோக்கம் கொண்ட கல்வி அமைப்புகளை தடை செய்தது. சோசலிச கல்வியை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வலுவாக்க முயன்றது. மாவோவின் கலாசாரப் புரட்சி காரணமாக சீன மாணவர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். வெளிநாடுகளில் கல்வி பயின்றனர். அரசின் அத்துமீறல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லாதவர்களுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என டெங் நினைத்தார். எனவே, கல்வி சீர்திர...

சமூக மாற்றங்களை அடிப்படையாக கொண்ட புரட்சி போராட்டம்!

      மக்கள் அதிகார தத்துவத்தில் கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்டவர்களும் உண்டு. அதில் நம்பிக்கை இல்லாதவர்களும் உண்டு. இதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். சமூகத்தில் உள்ள செல்வம், விடுதலை, நீதி, நலவாழ்வு அனைத்து மக்களுக்கும் புறக்கணிப்பின்றி கிடைக்கவேண்டுமென கம்யூனிச தத்துவம் வலியுறுத்துகிறது. இதில் நம்பிக்கை இல்லாதவர்களை தனித்துவவாதிகள் என்று கூறலாம். அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசு என்பது ஆக்கிரமிப்பு உணர்வு கொண்டது. மக்களை அழுத்தி நசுக்குவது, அநீதியை அடிப்படையாக கொண்டது என ஒப்புக்கொள்வர். தனிமனித வளர்ச்சியை அரசு அழித்தொழிக்கிறது. ஒரு சமூகத்தில் மனிதர்கள் மீது எந்த வித அழுத்தமும் உந்துதலும் இருக்கக்கூடாது. எனவே, அடிப்படையாக அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசை ஒழிப்பது என்ற கருத்தில் ஒன்றுபடுகிறார்கள். மியூசுவலிஸ்ட் என்ற பிரிவினர், மக்கள் அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள், அரசு என்ற அமைப்பை அடியோடு அறவே ஒழிக்க நினைப்பவர்கள். பிரெஞ்சு தத்துவவாதி ப்ரவுட்தோன் என்பவரை பின்பற்றுகிறார்கள். அரசு இல்லாத அமைப்பில் லாபநோக்கு இருக்காது என்பவர்கள். வட்டி இல்லாத கடன்...

சூழலுக்கு உகந்த விவசாயத்தை கையில் எடுத்து சாதித்த கியூபா!

படம்
பசுமை சூழலை உருவாக்க அதுதொடர்பான ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தேவை. அவை வளரும்போதுதான், அதைச் சார்ந்த வணிகமும் உருவாகும். மக்களும் அதன் பயனை உணர்வார்கள். இப்படியான மாற்றம் பலவந்தமாக இல்லாமல் இயல்பாக மடைமாறுவது நடக்கும். அரசு கட்டமைப்பு அளவில் பொதுப்போக்குவரத்தில் முதலீடு செய்து அதை பரவலாக்க வேண்டும். அலுவலகத்திற்கு காரில் அல்லது பைக்கில் செல்கிறீர்கள். என்ன காரணம், நேரத்திற்கு பேருந்தோ, ரயிலோ கிடைக்காததுதான். அலுவலகத்திற்கு அருகிலேயே செல்லும்படியாக ரயில் வசதி இருந்தால், கார், பைக்கில் முதலீடு செய்யவேண்டியதில்லைதானே? காய்கறிகளை நாமாகவே உற்பத்திசெய்துகொள்வதோடு பள்ளி, கல்லூரிகளையும் உருவாக்கிக்கொண்டால் ஆற்றல் அதிகம் தேவைப்படாது. தூய ஆற்றல் ஆதாரங்களே போதுமானது. அடிப்படையில் ஆற்றலை செலவழிப்பதில் சிக்கனம் தேவை. 1990ஆம் ஆண்டில் கியூபாவிற்கு சோவியத் யூனியன் அளித்து வந்த எரிபொருட்கள் குறைந்துவிட்டன. எனவே, அதைத் தவிர்த்து பொருளாதாரத்தை இயக்க முயன்றனர். பொதுப்போக்குவரத்தில் அரசு முதலீடு செய்தது. மண்புழு உரத்தை தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஊக்கம் கொடுத்தது. தூய ஆற்றல் ஆதாரங்க...

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி தேடும் இருவர், காடுகளை அழிக்காமல் பொருட்களை தயாரிக்க முயலும் ஆய்வாளர்!

படம்
  reem hajajreh - yael admi இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்குமான பிரச்னை தீராத ஒன்று. இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு உள்ளது. எனவே, சண்டையிட்டால் எப்போதும் அதன் கை ஓங்கி இருக்கும். அதற்காக பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. பலவீனமாக இருந்தாலும் போரிடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. போரைப் பொறுத்தவரை இருதரப்பிலும் இழப்புகள் உண்டு. உயிர்ப்பலி தொடங்கி பொருளாதார பாதிப்புகள் வரை உண்டு. எனவே, இரு தரப்பிலும் அமைதி முயற்சிகளை சிலர் செய்து வருகிறார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். அவர்களின் பெயர்கள் ரீம் ஹஜாஜ்ரே, யேல் ஆட்மி.  ரீம், வுமன் ஆஃப் சன் என்ற பெண்கள் அமைப்பையும். யேல், வுமன் வேஜ் பீஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து போருக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போராடினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் உண்டு. ஹமாஸ் அமைப்பு, அக்.7 இல்தான் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றது. இறந்துபோனவர்களில் யேலின் வும் வேஜ் பீஸ் அமைப்பின் துணைத்தலைவர் விவியன் சில்வரும ஒருவர். ...

நல்ல செய்தி - முன்னர் இளம் குற்றவாளி இப்போது மாரத்தான் வீரர்!

படம்
  ஒருவர் இளம் வயதில் வழிதவறி சிறை சென்றுவிட்டால் இயல்பான வாழ்க்கைக்கு மீள்வது கடினம். வளர்ந்த நாடுகளில் குற்றவாளிகளை மீட்க சமூகத்திற்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் குற்றவாளிகளை மனம் திருந்தியபிறகு, இயல்பான சமூகத்தில் வாழ அனுமதிப்பது கடினமாகவே உள்ளது. சமூக கண்ணோட்டம், முன்முடிவுகள், போலியான செய்திகள், வதந்திகள்  என நிறைய அம்சங்கள் பின்னணியில் உள்ளன. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போகும் நபர் சிறை சென்றவர். ஆனால் விரைவில் அதிலிருந்து மீண்டு விளையாட்டு மூலம் தனது வாழ்க்கையை மடை மாற்றிக்கொண்டார். அதோடு பிறருக்கும் வழிகாட்டி உதவி வருகிறார்.  2022ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் ஜான் மெக்கவி அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினார். அவரது இலக்கை எட்டிப்பிடிக்க நான்கு கி.மீ. தூரம்தான் இருந்தது. சாமோனிக்ஸ் என்ற இடத்திற்கு செல்லவேண்டும். அதை எட்டிப்பிடிப்பது சவாலானது. ஆனால் முடியாத ஒன்றல்ல. நாற்பது வயதில் தன்னுடைய கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பது வித்தியாசமாகத்தான் இருந்தது.  பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜானின் வாழ்...

சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டுமா? அதை மாற்ற முயலுங்கள் போதும்!

படம்
  கர்ட் லெவின்  ஜெர்மனிய - அமெரிக்க உளவியலாளர். 1890ஆம் ஆண்டு போலந்தில் உள்ள மொகில்னோ என்ற நகரில் மத்தியதரவர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். 1905ஆம் ஆண்டு குடும்பம், பெர்லினுக்கு இடம்பெயர்ந்தது. ஃப்ரெய்ட்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு, முனிச் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படித்தார். முதல் உலகப்போரில் ஜெர்மனி ராணுவத்தில் இணைந்து சேவை செய்தார். ஆனால் காயம்பட்டதால் நாடு திரும்பியவர், முனைவர் படிப்பை முடித்தார். பெர்லினில் உள்ள உளவியல் மையத்தில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தார். யூதர் என்பதால் வேலையை விட்டு விலகுமாறு அச்சுறுத்தப்பட்டார். எனவே, ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். முதலில் கார்னல் பல்கலைக்கழகத்தி்ல் வேலை செய்துவிட்டு பிறகு ஐவோவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். எம்ஐடிக்கு சொந்தமான குரூப் டைனமிக்ஸ் அமைப்பின் தலைவராக இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதயபாதிப்பு ஏற்பட்டு காலமானார்.  முக்கிய படைப்புகள் 1935 எ டைனமிக் தியரி ஆஃப் பர்சனாலிட்டி 1948 ரிசால்விங் சோசியல் கான்ஃபிலிக்ட்ஸ் 1951 ஃபீல்ட் தியரி இன் சோசியல் allaboutpsychology.c...

உலகை மாற்றுவது எப்படி?

படம்
                        உலகை எப்படி மாற்றுவது ? இப்படி யாராவது இருபதுகளில் யோசிக்காமல் இருக்கமுடியுமா ? அனைவருக்கும் இந்த எண்ணம் வந்திருந்தாலும் இதனை எப்படி செய்வது என்பதை அறியாமல் இருப்பார்கள் . இதனால் நல்லது செய்ய அரசியலுக்கு செல்லலாமா என சேகர் கம்முலா பட நாயகர்கள் போல யோசிப்பவர்கள் நிறையப் பேர் உண்டு . ஆனால் அது எடுபடவேண்டுமே ? உலகம் மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை . கிரேக்க கணிதவியலாளர் ஆர்க்கிமிடிஸ் , பூமியில் நிற்பதற்கு எனக்கு இடம் கொடுங்கள் . நான் அதனை நகர்த்தி காட்டுகிறேன் என்றார் . உலகில் மாற்றங்களை நாங்கள் தருகிறோம் என்று செயல்பட்டவர்கள் , அதன்வழியே மக்களை கொன்று குவித்திருக்கிறார்கள் . நேர்முகமாகவும் , மறைமுகமாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . உலகப்போர் குறிப்பிட்ட தலைவர்களின் ஆதிக்க வெறியால் நடந்தது என்றாலும் அதனால் பட்டினியில் விழுந்து இறந்துபோனவர்கள் மக்கள்தான் . ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து போல்ஷ்விக்குகள் ஆட்சிக்கு வந்தது மாற்றம் என்றாலும் அதனால் 20 மில்லியன் மக்கள் தங்கள்...

நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்னென்ன?

படம்
              சிறிய பழக்கம் பெரிய மாற்றங்கள் தாகசாந்தி செய்யுங்கள் ! அலுவலகங்களில் வேலை செய்யும்போது ஏசி ஓடிக்கொண்டே இருப்பதால் பெரும்பாலானோர்க்கு நீர் தேவை இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது . தண்ணீரை அதிகம் குடிக்காவிட்டால் உடலில் இயக்கம் குளறுபடியாகிவிடும் . எலும்புகளின் இணைப்பிற்கு உயவு எண்ணெய் போல நீர் பயன்படுகிறது . உடலின் வெப்பநிலையை கட்டுப்பாடு செய்வதற்கும் , செரிமானத்திற்கு்ம் உதவுகிறது . அடிக்கடி கடி நீர் குடிப்பதை மறந்தால் உடல் , மனம் என இணைத்தும் ஒத்திசைவாக இயங்காது . நீண்டகால நோக்கிலும் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் . இனிமேல் அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கினால் கூட அதற்கேற்ப போனில் அலாரம் வைத்துக்கூட நீரை நேரத்திற்கு குடிக்கலாம் . இதில் ஒன்றும் வெட்கப்படவேண்டியதில்லை . நீரை அதிகமாக குடிக்கமுடியவில்லை என்றால் பழரசம் அல்லது மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம் . நேரமே எழுங்கள் இது கடைபிடிப்பதற்கு கடினமான பழக்கம் . இரவில் தாமதமாக படுப்பவர்கள் எப்படி சூரிய உதயம் பார்க்கமுடியும் ? தினசரி நடவடிக்கைகளை சரியானபடி அமைத்...

புதிய மொழிகளைக் கற்றால்தான் கணினி உலகில் வேலைவாய்ப்புகளை பெற முடியும்! - பழைய மொழிகளால் ஏற்படும் பாதிப்புகள்

படம்
  காலாவதியாகி வரும் கணினி மொழிகள் ! கணினி உலகில் ஆயிரக்கணக்கான புதிய புரோகிராமிங் மொழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன . அவற்றைப் பயன்படுத்துவதில் அரசு , தனியார் நிறுவனங்களிடையே தயக்கம் நிலவுகிறது . இன்று உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் அலுவலகம் என்பதைக் கடந்து வீடு நோக்கி நகர்ந்து வருகின்றன . அதேசமயம் கணினி புரோகிராம்கள் எழுதப்படும் மொழி என்பது பெரியளவு மாறுதலுக்கு உட்படவில்லை . கணினி புரோகிராம்களை நாம் மேம்படுத்தாதபோது அரசு அமைப்புகள் , மருத்துவமனைகள் , தனியார் நிறுவனங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது . குறிப்பிட்ட கணிதங்களை செய்யவும் , தகவல்களை உள்ளிடவும் மட்டுமே புரோகிராமிங் மொழிகளை பயன்படுத்தினால் அதில் முன்னேற்றம் காண்பது கடினம் . ’’ புதிய மொழிகளைக் கற்று செயல்படுத்துவதற்கான இடம் டெக் உலகில் நிறையவே உள்ளது’’ என்கிறார் எம்ஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான பார்பரா லிஸ்கோவ் . டெக் நிறுவனங்களில் கூகுள் , கோ எனும் புரோகிராமிங் மொழியை மேம்படுத்தி வருகிறது . ஒரு கணினி மொழி பிரபலமாக அதற்கென பயன்பாடுகள் , தேவைகள் உருவாக்கப்படுவது ...

தகவல் சுருக்கம் - டேட்டா கம்ப்ரஸ்ஸன் - தெரிஞ்சுக்கோ!

படம்
தெரிஞ்சுக்கோ! தகவல் சுருக்கம் என்பது இன்று பழைய வார்த்தை போல தோன்றும். ஒன்றுமில்லை. நாம் பயன்படுத்தும் சொற்களில் தேவையில்லாதவற்றை நீக்கினால் அதுதான் தகவல் சுருக்கம். இதுபற்றி தி நியூ கைண்ட் ஆஃப் சயின்ஸ் என்ற நூலில்,  மோர்ஸ் கோட்  எனும் தகவல் சுருக்க முறை 1838 ஆம் ஆண்டு தோன்றியது. இதில் e மற்றும் t  என்ற எழுத்துகளைத் தவிர்த்து எழுதும் முறையை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடந்தன. தகவல் தொழில்நுட்ப தியரின் தந்தையாக கிளாட் ஷனான் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். தகவல் வேகமாக சென்று சேரவேண்டும். அதேசமயத்தில் அதன் தரமும் குறையக்கூடாது என்று அன்றிலிருந்து இன்றுவரை டெக் கம்பெனிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே உலகை ஆளுவார்கள். அனைத்து மென்பொருட்களுக்கும் கருவிகளுக்கும் பொருந்தும் கோப்பு முறைகள் உருவாகுவது இன்று அவசியத் தேவையாக உள்ளது. அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். 1867 இல், சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகை பதிப்பாளர் ஜோசப் மெடில், முடிந்தளவு எழுத்துகளை சிக்கனமாக பயன்படுத்துவதை ஆதரிப்பவர். இப்படித்தான் ஃபேவரிட் என்ற எழுத்திலுள்ள இ ...

அடுத்து வரும் ஏ.ஐ. புரட்சி- அப்டேட்டாகும் துறைகள் ஓர் அலசல்!

படம்
ஏஐ புரட்சிக்கு ரெடியா?  அண்மையில் டெலாய்ட்(Deloitte) என்ற ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் உலகளவில் பயன்படுத்தும் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தொழில்துறை, பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? செய்யும் வேலைகளின் எளிமை. அதேதான். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மனிதவளத்துறை முதல் தொழில்துறை வரை வேலைநேரமும் செலவும் பெருமளவு குறைகிறது. மனிதவளத்துறை மனிதவளத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ரோபாட்டிக்ஸ் புரோசஸ் ஆட்டோமேஷன்(Robotics Process Automation RPA) எனும் முறையை மனிதவளத்துறையில் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளம், தகவல் மேலாண்மை, கடிதம் எழுதுவது ஆகியவற்றில் இவை உதவுகின்றன. நடப்பு முதல் எதிர்காலம் வரை வியாபார நிலைகளைக் கணித்து வளர்ச்சி எப்படியிருக்கும் என்பது வர...

மாற்றம் இங்கே தொடங்குகிறது: மாற்றம் தரும் இளைஞர்கள்!

படம்
சான்டியாகோ மார்டினெஸ் - கொலம்பியா இந்த இளைஞர் டிசைன் யுவர் நேஷன் எனும் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். உலகின் முக்கியமான பிரச்னைகளுக்கான தீர்வுகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்க இவர் உதவுகிறார். முழுக்க இவை டிஜிட்டல் வடிவில் இருக்கும். லிடரோட்டெகா எனும் பலரும் ஒன்றுகூடி எதிர்கால பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தரக்கூடிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார். ஐ.நா சபை திட்டங்களில் செயற்பாட்டாளர், டெட்எக்ஸ் பேச்சாளர் என பல்வேறு வகைகளிலும் சமூகத்தை முன்னேற்றுவதற்கான பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். ஸன்ஜி சிங்களா - ஸாம்பியா ஸாம்பியா பல்கலையில் பொருளாதாரம் படித்து வரும் பெண் உரிமை செயற்பாட்டாளர். சிறந்த செயற்பாட்டாளருக்கான பரிசை தன் நாட்டில் பெற்றவருக்கு வயது 23தான் ஆகிறது. வுமன் தபூஸ் ரேடியோ, வானச்சி பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளை நடத்தி வருகிறார். யாஸ்மின் அல்மெய்டா லோபெடா பிரேசிலிருந்து வந்து உலகம் காக்க வந்த இசைப்பறவை. போஸ்டன் பல்கலையில் உலக உறவுகள் மற்றும் அரசியல் அறிவியல் படித்துக்கொண்டிருப்பவருக்கு வயது 20தான்.  அகதிகுழந்தைகளுக்கான கல்வி, எல்லைகள் இல்லாத மருத்துவ...

லவ் இன்ஃபினிட்டி: என்னை ஏன் நம்ப மறுத்தாய்?

படம்
pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ச.அன்பரசு வரிகளை மடக்கி எழுதினால் கவிதை என்று உலகம் பார்க்கும் என்பதை புரிந்துகொண்டபோது இப்படி எழுதினேன். எப்படி மாற்றுவேன்? புது வீடு  எல்லாமே புதுசாய் என்னால்  எடுத்துப் போக முடிந்தது நீயில்லாத வாழ்க்கையையும் நிசப்தமான மனசையும்தான்.  புது வீட்டைக் காட்டிலும்  பழைய வெளிச்சம் குறைந்த  இருளான மழை ஒழுகும் நீ வந்து போன  நீ ஒளிந்து ஓடி விளையாடிய நீ தலை இடித்துக்கொண்ட தாழ்வாரம்,  நீ நடந்த சுவடுகள் அழியாமல் இருக்கும் என் பழைய வீடு அற்புதமானது.  வீடு மாற்றிக்கொள்ளலாம் மனசை எப்படி மாற்ற????? அடுத்தவர்கள் ஆயிரம் சொல்லி கெடுக்க நினைக்கலாம் நீ எப்படி நம்பலாம்? என்மேல் சந்தேகம் எப்படி வரலாம்? உனக்கு அவள் தோழி எனக்கு அவள் யாரோ? நல்லவர்களுக்கு தீமை விளையும்போது தடுக்க நினைப்பதும், தடுப்பதிலும் தவறில்லை பாம்புக்கு பால் வார்த்தால்? அதனால்தான் அனைத்தும் அறிந்தும் அமைதியாக இருக்கிறேன். நாம் தப்பு செய்தால்தானே பிரச்னை வருகிறது? அவள் உப்பு தின்றாள், தண்ணீர் இப்போ...