இடுகைகள்

ஊழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி  சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்? அதிகாரம், புகழ், பணம் இதெல்லாம் ஒருவருக்கு திடீரென கிடைத்தால் எப்படியிருக்கும்? அதை அப்படியே தக்க வைத்துக்கொள்ள பல்வேறு தில்லுமுல்லுகளை செய்வார். இப்படித்தான் நார்சிசம் எனும் சுயமோகம் உருவாகிறது. சுயமோகிகளுக்கு கல்யாணம் என்றால் மாப்பிள்ளை, இழவு என்றால் பிணமாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனெனில் மேற்சொன்ன நிகழ்ச்சிகளில் அவர்கள்தானே மையப்பொருள். இதை சொல்லும்போது தீவிரவாத தாக்குதல் நடந்து மக்கள் செத்தபோது தேர்தல் பிரசாரம் செய்தவர், விமானவிபத்தில் 270 இறந்தபோது லோ ஆங்கிள் அழகிய புகைப்படம் எடுத்து பதிவிட்டவர் பற்றி ஏதேனும் நினைவு வருகிறதா, அது உறுதியாக தற்செயலானதே...  சுயமோகிகளுக்கு மனதில் கருணை கிடையாது.  அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்குவது ஏன்? அதிகாரம், பணபலம், புகழ் கிடைக்கிறது. அதை நோக்கி பங்கு போட்டுக்கொள்ள அனுபவிக்க நிறைய ஆட்கள் வருகிறார்கள். பொதுவாக பலவீனமான ஒருவரை வலிமையான ஒருவர் பார்த்தால் அவரை கேலி சித்திரவதை செய்ய நினைப்பார். அந்த வகையில் பஞ்சத்திற்கு வழங்க வேண்டிய நிதியை அர...

தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங் ! - book review

படம்
 தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங்  ஒலிவியா செங், ஸ்டீவ் யுயி சங் ட்சங் கட்டுரை நூல் 297 பக்கங்கள் ஷி ச்சின்பிங் தனது அரசின் நிர்வாக சாதனைகளைப் பற்றி பிரசாரத்துறை மூலம் ஏராளமான நூல்களை எழுதி தொகுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து விற்று வருகிறார்கள். அந்த நூல்களை படித்த நூலாசிரியர்கள், அதை வைத்து ஷி என்ன யோசிக்கிறார், உண்மையில் அவரது நாட்டில் நடந்த சம்பவங்கள், அதைப் பின்பற்றி அவர் என்ன யோசித்தார், செய்தார். கட்சியினர் என்ன நினைத்தனர் என்று விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.  ஷியின் ஆளுமை, கட்சியில் தன்னை வளர்த்துக்கொண்ட பாங்கு ஆகியவை தொடக்கத்தில் விளக்கமாக கூறப்பட்டுவிடுகின்றன. டெங், மாவோ ஆகியோரிடமிருந்து அவர் வேறுபடும் விதம் பற்றி மெதுவாக பல்வேறு திட்டங்களை அவர் எப்படி செயல்படுத்தினார், அதில் அடைந்த ஆதாயம் என கூறிக்கொண்டே வருகிறார்கள். நூலில் அத்தியாயம் தொடங்கும்போது அதில் கூறியுள்ள செய்திகள், இறுதியாக முடியும்போது படித்த விஷயங்கள் என்னென்ன என பாடநூல் போல வடிவமைப்பை பின்பற்றி இருக்கிறார்கள். இதுபோன்ற அமைப்பு எதற்கு என புரியவில்லை.  ஷி எ...

மாவோவுக்கு அடுத்த நிலையில் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு வரும் ஷி!

படம்
  ஷி ச்சின்பிங் செல்வாக்கும், கருத்துகளும்! ஷி ச்சின்பிங்  சிக்ஸியாங் - ஷி ச்சின்பிங் கருத்துகள் என்ற பெயரில் நூலொன்றை லியுமிங்ஃபு, வாங் ஸாங்யுவான் என்ற இரு கல்வியாளர்கள் வெளியிட்டனர். இந்த நூலை வெளியிட்ட நிறுவனம், ஸெஜியாங் வணிக நிறுவனம். நூல் ஆங்கிலம், சீனம் என இருமொழிகளில் வெளியானது.  இந்த நூல் பற்றி டாங்ஜியான் யான்ஜியு என்ற பொதுவுடைமைக் கட்சி இதழிலும் புகழ்ந்து எழுதப்பட்டது. இதே நூல் பற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பொதுவுடைமைக் கட்சி பள்ளியில் வெளியாகும சூக்சி ஷிபாவோ என்ற இதழில் கட்டுரை ஒன்றை எழுதினார். அக்டோபர் மாதம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 19ஆவது பொதுவுடைமை கட்சி மாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டது. மாவோ, டெங் ஆகியோருக்கு பிறகு ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் பொதுவுடைமைக் கட்சியால் ஏற்கப்பட்டுள்ளது.  2012-14 ஆகிய காலகட்டங்களில் ஷி ச்சின்பிங் ஆற்றிய உரைகள் நூலாக ஷி ச்சின்பிங் - சீன அரசு நிர்வாகம் என்ற பெயரில் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த வரிசையில் இதுவே முதல் நூல். இந்நூல் மஞ்சள் நிறத்தில் ஷி ச்சின்பிங்கின் மார்...

தொழிலாளர்களின் வேலை நீக்கத்தை எதிர்த்து போராடும் அப்பாவி மனிதவளத்துறை அதிகாரி!

படம்
  ஜானி கீப் வாக்கிங் சீன திரைப்படம் யூட்யூப் ஜானி, நட், போல்ட், ஸ்க்ரூ என தயாரிக்கும் பெரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். நிறுவனத்தில் சிறப்பாக வேலை செய்தாலும் அவனுக்கு செல்வாக்கான ஆட்கள் பின்புலம் இல்லாத காரணத்தால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில்லை. கிராமத்தில் உள்ள தொழிலாளர்களிடையே அவனுக்கு நல்ல பெயருண்டு. ஜானி சீனியர் பிட்டர். எந்த வேலையாக இருந்தாலும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறான். அவன் மனைவி, கணவனுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவில்லையென சண்டை போட்டு விவாகரத்து செய்துவிட்டு போய்விடுகிறாள். அதற்குப் பிறகு அவனுக்கு நண்பர்கள்தான் உலகம். அப்படி இருப்பவனுக்கு திடீரென நிறுவனத்தின் தலைமையகத்தில் வேலை செய்ய பணி இடமாற்ற ஆணை வருகிறது. ஜானிக்கு மகிழ்ச்சிதான். நண்பர்களுக்கு விருந்து கொடுத்துவிட்டு நகருக்கு கிளம்புகிறான். உண்மையில் அந்த பணி ஆணை, இன்னொருவருக்கு வழங்கவேண்டியது. தவறுதலாக அவனுக்கு வந்துவிடுகிறது. ஜானி, தலைமையகத்திற்கு செல்கிறான். அங்கு அவனுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையில் வேலை அளிக்கிறார்கள். அவனுக்கு ஒன்றும் புரிவதில்லை. அவன் சீனியர் பிட்டர். அவனை எதற்கு...

முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கும் அமைச்சர், காவல்துறை உயரதிகாரி, தீவிரவாதி ஆகியோரைக் கொன்றால் வாய்மை வென்றுவிடும்!

படம்
 சத்யமேவ ஜெயதே தெலுங்கு ராஜசேகர், சிவாஜி, சஞ்சனா, ஷெரில் பின்டோ இசை சின்னா இயக்கம் ஜீவிதா அரசு மருத்துவர் இக்பால் அன்சாரி என்பவர், தீவிரவாதி என குற்றம்சாட்டப்படுகிறார். அவரை குறிப்பிட்ட இடத்திலுள்ள நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதற்கு நாயகன் உட்பட சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து குழுவை தயாரிக்கிறார்கள். அக்குழு, இக்பாலை நீதிமன்றத்தில் சமர்பித்ததா இல்லையா என்பதே கதை. மீண்டும் என்கவுண்டர் அதிகாரியாக ராஜசேகர் நடித்திருக்கிறார். இம்முறை படத்தில் சிவாஜிக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் ஷெரில் பின்டோவுக்கும் பாடல் காட்சிகள், கிளு கிளு காட்சிகள், காமெடி ஆகியவை உண்டு. குழுவிலுள்ளவர்களின் குடு்ம்பங்களை காட்டும்போதே, இவர்களை கொத்துக்கறியாக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. அதேதான் அதேதான். படத்தில் பாஸ்டர்ட் என்ற கெட்ட வார்த்தையை மட்டும் நாயகன் எத்தனை முறை சொல்லியிருப்பார்  என்று எண்ண முடியாது. அத்தனை முறை விரக்தி அடைகிறார். கையாலாகாத்தனம், இயலாமையில் அலறிக்கொண்டே இருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கென இருக்கும் ஒரே ஆன்மா சிவாஜி மட்டுமே. காதல் என்ற பெயரில் மகாலட்சுமி...

அரசியல்வாதிகள், காவல்துறை கைகோப்பதால் ஐபிஎஸ் பதவியை கைவிட்டு மாஃபியா தலைவனாகும் நாயகன்!

படம்
    காவல்நிலையம் சுரேஷ்கோபி, ஜோதிர்மயி மலையாளம் தயாசங்கர் என்ற எஸ்பி, கேரளத்திற்கு பணிபுரிய வருகிறார். அவருக்கு மனைவி, தம்பி ஆகியோர் உண்டு. காவல்துறை கமிஷனர், அரசியல்வாதிகள், மாஃபியா தலைவன் ஜிவி ஆகியோர் செய்யும் சூழ்ச்சியால் தம்பி கொல்லப்பட்டு தலை வேறு முண்டம் வேறாக ஆக்கப்படுகிறான். மனைவிக்கு முதுகு எலும்பில் அடிபட்டு சக்கர நாற்காலியில் வாழ்க்கை அமைகிறது. தயாசங்கர் ஜிவியை எப்படி பழிவாங்கினார் என்பதே கதை. படத்தின் தொடக்கத்தில் பாட்டாளி தோழன் என்ற ஒருவரை வில்லனாக காட்ட அரசியல்வாதிகள் முயல்கிறார்கள். அவருக்கு செல்வாக்கு பல பக்கம் இருப்பது போல தெரிகிறது. பல்வேறு சமூக சேவைகளை செய்கிறார். மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம், பெண்கள் காப்பகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். அவரை எதிர்த்து அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சியால், போலீஸ் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லும் உணவுகளை கீழே கொட்டி சோதிக்கிறார்கள். ஆனால் எதுவும் காவல்துறை நினைத்தது போல நடப்பதில்லை. ஆயுதங்கள், போதைப்பொருள் என எதுவும் கிடைப்பதில்லை. காவல்துறை அதிகாரி குழம்பிப்போகிறார். அவரது காதலி, பாட்டாளி தோழன் நல்ல மனிதர் கெட்டவர் ...

ஊழலால், அநீதியால் இழிந்த நிலைக்கு தள்ளப்படும் மூடநம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் கிராமம்! - தர்பாரி ராகம் - ஶ்ரீலால் சுக்ல

படம்
            மறுவாசிப்பு- தர்பாரி ராகம் ஶ்ரீலால் சுக்ல தமிழ் மொழிபெயர்ப்பு - சரஸ்வதி ராம்னாத் நேஷனல் புக் ட்ரஸ்ட் அரசு மீது அங்கத தன்மையோடு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் இந்தி இலக்கிய நூலை வெளியிட்டதற்காகவே அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். புண்பட்ட மனங்கள் அதிகரித்துவிட்ட காலத்தில், இந்த நூலெல்லாம் மறுபதிப்பு கண்டு வெளியானால் அதுவே பெரிய ஆச்சரியம். நூலாசிரியர், ஶ்ரீலால் சுக்ல. இவரது வேறு எந்த நூல்களையும் நான் படித்தது இல்லை. இந்த நூலும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட பிறரையும் வாசிக்க வைக்கும் நோக்கில் உள்ள சகோதரர் முருகு மூலமாகவே வாங்கினேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. முந்நூறு பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட நூலின் அச்சிடப்பட்ட விலை ரூ.28. புத்தக திருவிழா தள்ளுபடியில் ரூ.14க்கு வாங்கினேன். இந்நூலில் உள்ள கருத்துகளை காங்கிரஸ் அனுமதித்து அரசு நிறுவனம் மூலம் வெளியிட்டது.  தற்போதுள்ள வலதுசாரி மதவாத அரசு, இத்தகைய நூலை நிச்சயம் ஏற்காது. புறக்கணிக்கவே செய்யும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் நூலில் ஏராளம் உள்ளன. சிவபால்கஞ்ச் எனும் கிராமம்...

ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது

படம்
    ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது ஒருவரின் அப்பா, நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியவர். வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்டு செய்யும் கடமையில் கவனம் செலுத்தவேண்டும் என நினைத்தவர். ஆனால், அவரது மகன்களோ செய்யும் அனைத்து விஷயங்களிலும் லாபத்தையே எதிர்பார்க்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? அப்படியான சூழலில், அப்பா தனது மகன்களை ஆமை முட்டைகள். அவர்களை எனது மகன்களாகவே நினைக்க முடியவில்லை என்றார். இப்படி கூறியவர் கமாண்டர் வாங் ஸென். சீனாவின் தொடக்க கால கட்ட தலைவர்கள் உடுத்தியுள்ள ஆடை எளிமையானது. ஃசபாரி சட்டை பேண்ட் அல்லது ராணவ சீருடையை உடுத்தியிருப்பார்கள். பெரும்பாலும் அழகான சட்டை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. ஆனால், அவர்களது மகன்களது வாழ்க்கை மிகவும் சொகுசானது. எளிமையான மனிதர்களிடமிருந்து வேறுபட்டது. திகைப்பூட்டும் அளவுக்கு பகட்டானது. தொண்ணூறு இரண்டாயிரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வாரிசுகள் வளம் பெற்றுவிட்டார்கள். தொடக்க கால கல்வியை பெய்ஜிங்கில் பெற்றவர்கள், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லத் தொடங்கினர். அதிபர் ஷியின் அப்பா, ஷ...

விரைவில்... பேய்ப்பாலை மின்னூல் வெளியீடு

படம்
 

அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள்

படம்
      அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள் மாவோ காலத்தில் நான்கு நபர்கள் அரசியல், சமூக, பொருளாதார பலம் பெற்றவர்களாக வலம் வந்தனர். அவர்கள்தான் கட்சியில்  செல்வாக்கு பெற்றவர்கள். 1976ஆம் ஆண்டு மாவோ மறைந்தபிறகு டெங் ஷியாவ்பிங் தலையெடுத்தார். அவர், மாவோ தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கென உருவாக்கிய தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களை மாற்றியமைத்தார். இரும்பு அரிசிக் கிண்ணம் எனும் திட்டம் இந்த வகையில் ஒழித்துக்கட்டப்பட்டது. அரசு நிறுவனத்தில் வேலையில் இருந்த பணியாளர்களுக்கு சலுகை கட்டண வீடு, மருத்துவம் இலவசம், காப்பீடு உண்டு, இன்னும் நிறைய சலுகைகள் கிடைத்தன. குறிப்பாக அவர் தம் பிள்ளைகளுக்கு கல்வி இலவசம். ஆனால், டெங் தனிநபர்கள் அனைவரும் செல்வந்தர்களாகுங்கள் என்ற கோஷத்துடன் சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். அதற்குப் பிறகுதான் எட்டு குடும்பங்கள், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளே நுழைந்தனர். சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள், உறுப்பினர்களிடையே வினோத வாழ்க்கை முறை உண்டு. அதாவது, பொதுவாழ்க்கை, தனிவாழ்க்கை, ரகசியவாழ்க்கை என மூன்று வாழ்க்கை உண்டு. சீன...

மக்களின் புகார்களை பரிசீலித்து தீர்த்து வைக்க முயலும் அமலாக்கத்துறை! என்போர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட் - சீன தொடர்

படம்
    என்ஃபோர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட் சீன தொடர் 40 எபிசோடுகள் யூகு ஆப் சீனதொடர்களைப் பொறுத்தவரை இழு இழுவென இழுக்குதடி என பார்வையாளர்கள் சொல்லாவிட்டாலும் தயாரிப்பாளர்களே நாற்பது எபிசோடுகள் அவர்களாகவே போய்விடுகிறார்கள். இதில் உள்ளூர் ஓடிடியான யூகு சில எபிசோடுகளை இலவசமாகவும் மீதி அனைத்தையும் விஐபி என சந்தா கட்டி பார்க்கும்படி மாற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் இத்தொடரின் பதினெட்டு எபிசோடுகள் மட்டுமே யூட்யூபில் இலவசமாக கிடைக்கிறது. பதினெட்டு எபிசோடுகளில் கதை எதை நோக்கி நகர்கிறது என புரிந்துகொள்ளலாம். கு லின், நீதிபதியாக இருக்கிறார். சட்டம் பற்றிய பரவலான அறிவுக்காக ஆறுமாதங்கள் வேறு துறையில் வேலை செய்வதற்காக பணிக்கிறார்கள். அப்படி அவர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார். அங்கு அதன் தலைவர் நீதிபதி சு என்பவரோடு முட்டல், மோதல் ஏற்பட்டு பிறகு உறவு நட்பாகி காதலாக மாறவும் தொடங்குகிறது. காதலுக்கு போகவேண்டாம். மக்கள் சேவையை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம். எழுதி வைத்த சட்டமே பிரதானம். அதை உரியபடி நிறைவேற்றினால் போதும் என இறுக்கமாக நடந்துகொள்கிறார் சு.கு லின், சட்டம் இருக்கிறபடி இருக்க...

தீவிரவாதிக்கு மதமில்லை, ஊழல் அரசியலுக்கு கட்சி பேதமில்லை

படம்
              ஊழல்களுக்கு கட்சி பேதமில்லை!  பல காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். 2ஜி ஊழல் என்பது இதில் முக்கியமாக குறிப்பிடலாம். ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி, பெருமளவு விவாதங்களில் ஈடுபட்டுவருகிறது. இதில் ஈடுபட்ட சிலரைக்காப்பாற்ற பெரும் தலைவர்களின் அறிக்கைகள் போதுமானதல்ல. இதோடு நின்றுவிடப்போவதுமில்லை. சராசரி இந்தியர்களுக்கும் அரசியலில் அறமின்மை புகுந்தது கண்டு வெறுப்பு கொள்வதற்கான காரணமாக இவை அமைந்துவிட்டது. பல்வேறு ஊடகங்களின் சம்மட்டி அடி போன்ற ஊழல்களின் மீதான செய்திதொகுப்புகள், தெருவில் உள்ள கடைசி மனிதர் வரைக்குமான விழிப்புணர்வை தந்துவிட்டிருக்கிறது.  உண்மையில் ஊழல் செய்திகளை,  டி.வியில் பார்ப்பது பெரும் பொழுதுபோக்காக மாறிவருகிறது. சேனல்களுக்கான நிகழ்ச்சிக் கருக்களை அரசியல்வாதிகளே தந்துதவுகிறார்கள். டி.வி பார்க்கும் பார்வையாளர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்ட தலைவரை அப்பாவி என்று நம்புவதில்லை. அரசியல்வாதிகள் யார்தான் குற்றம் செய்யவில்லை என்று கூறப்படும் வழக்கமான செவ்வியல் வாக்க...

உரிமைகளைக் காக்க, கடமைகளை அரசுக்கு நினைவுபடுத்த தெருக்களில் இறங்குவோம்!

படம்
             தெருக்களில் இறங்குவோம்! நம் அனைவரிடமும் உள்ள சிடுமூஞ்சி மாமா ஒருவர் இந்தியா எவ்வளவு மோசமானது என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். ஆர்.டி.ஓவிலிருந்து நியாயவிலைக்கடை, நகராட்சி வரை ஒவ்வொரு அரசு அமைப்பும் லஞ்சம் பெறுவது குறித்து நம்மிடம் கூறுகிறார். உடைந்துபோன சாலைகள், சீர்கெட்டுப்போன அரசுப் பள்ளிகள், மோசமான கல்வி என தனது கூற்றுக்கு பலபுறமும் ஆதரவு தேடிக்கொள்கிறார். அவரது தரப்பு சரியாக இருக்கிறபோது, அவரிடம் வாதம் புரிவது மிக கடினமானதாக இருக்கிறது. சில விஷயங்கள் வேலை செய்யாது; நீதி கிடைப்பதில்லை; அதிகாரம் பேசுகிறது; சமநிலை அழிந்துபோனது. அனைத்தும் கேட்க சிரமமாக, கசப்பாக இருந்தாலும் உண்மை அவையாகத்தான் இருக்கிறது. ஒத்துக்கொள்ள மனமில்லை என்றாலும் அதுவே நிஜம்.  மேலும் மாமா கூறுவார்: இங்கு எதுவும் மாறப்போவதில்லை. நமது சமூகம் சரிசெய்யமுடியாத அளவு பாதிக்கப்பட்டு இந்தியாவே துக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பதாக விளக்குவார். சிடுமூஞ்சி மாமா அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கி மோசமான மனிதர்கள் என முத்திரை குத்தி நாட்டை கீழே தள்ள திட்டத்தோடு யாரோ ஒ...

அதானி குழுமம் பங்கு மோசடி செய்து வளர செபி தலைவர் சிந்திய வியர்வை!

படம்
            செபியின் தலைவர் மாதபி, அதானி குழுமத்தின் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க முடியாததற்கு, வினோத் அதானியின் நிறுவனங்களில் அவர் செய்திருந்த பங்கு முதலீடும் முக்கிய காரணம் என ஹிண்டென்பர்க் கருதுகிறது. இன்றைய தேதிவரை செபி அமைப்பு, அதானி குழுமம், அதன் பங்குதாரர்கள், இந்தியா இன்போலைன் ஆகியோர் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதில் இஎம் ரீசர்ஜென்ட் பண்ட், எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்தியா இன்போலைன் நிறுவனம் இப்போது பெயர் மாறி 360 ஒன் என செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய நிறுவனங்களைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளோம். இந்தியா இன்போலைனின் ஆண்டு அறிக்கைப்படி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு எண்ணிக்கை, விலை அதானி குழும நிறுவனங்களால் போலியாக ஊதி பெருக்கப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. ஃபினான்சியல் டைம்ஸ் இதழ் செய்த விசாரணையில், அதானி  வணிக நிறுவனங்களை, முன்னே நிறுத்திவைத்துவிட்டு, மறைமுகமாக இந்திய சட்டவிதிகளை மீறி பங்குவிலைகளில் முறைகேடு செய்துள்ளார் என தெரிய வ...

பங்கு முறைகேட்டை விசாரிக்க வேண்டிய செபியின் தலைவரே குற்றவாளியானால்... ஹிண்டென்பர்க் அறிக்கை 2024

படம்
        ஐபிஇ பிளஸ் பண்ட் நிதி நிறுவனத்தின் முதலீட்டு அதிகாரியின் பெயர் அனில் அகுஜா. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகள் தலைவராக பணியாற்றியுள்ளார். பணி விலகிய ஆண்டு, 2017. அதானி பவர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். செபியின் தற்போதைய தலைவரான மாதபி புச், அவரின் கணவர் ஆகியோர், அதானியின் வெளிநாட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். அதானி, முறைகேடான பங்கு வர்த்தகத்தை செபியின் விசாரணை, தண்டனை பற்றிய பயமின்றி எப்படி செய்கிறார் என ஹிண்டென்பர்க் நிறுவனம் யோசித்தது. அதானி குழுமத்தில், செபி தலைவரான மாதபி புச்சின் பங்கு முதலீடு பற்றி தெரிய வந்ததும் விவகாரத்தை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. பெர்முடா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள வினோத் அதானியின் போலி நிறுவனங்களில் செபியின் தலைவரான மாதபி புச், அவரின் கணவர் தாவல் புச் பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் ஹிண்டென்பர்க் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை.   2015ஆம் ஆண்டு, ஜூன் 5 ஆம் தேதி, சிங்கப்பூரில் ஐபிஇ பிளஸ் பண்டில் புச் தம்பதியினர் செய்த முதலீடு பற்றிய தகவல் தெரியவந்தது. பங்கு முதலீட்டிற்கான நிதி ...

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! - அரசியல் கட்சிகளின் வருமானம்

படம்
            காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! இந்தியாவில் தேர்தல் நன்கொடைகளை கட்சிகள் பெறுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென வலதுசாரி மதவாத ஆளும்கட்சி, தனியாக சட்டம் ஒன்றை உருவாக்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக பயன்களைப் பெற்றது. அதே சட்டங்களை பிற கட்சிகளும் பயன்படுத்தின. மதவாத ஆளும்கட்சி, இன்னும் சற்று மேலே போய் நிதி அளிப்பவர்களை, தொழில் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, தேசிய புலனாய்வு முகமை வைத்து மிரட்டி பேரளவிலான நிதியைப் பெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் ஒரு பார்முலா உருவானது போல, ரெய்டு நடந்த சில வார, மாதங்களில் கட்சிக்கு நிதி வரவு அதிகரித்தது. இதைப்பற்றிய உண்மையான செய்திகளை அறிய நியூஸ்மினிட், நியூஸ் லாண்ட்ரி, தி வயர், கேரவன் ஆகிய ஊடகங்களை அணுகலாம். தேர்தல் பத்திரம் மூலம் பேரளவிலான நிதியை ஆளும் கட்சி திரட்டியபிறகு, அதுவரை மீளாத உறக்கத்திலிருந்த நீதிமன்றம் எழுந்தது. தேர்தல் பத்திரம் அச்சிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சன்டிவி சீரியல் திருப்பங்களை விட நகைச்சுவையானது. இரண்டு தேர்தல்கள...

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள்!

படம்
  தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை - விவாதங்கள் 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம், தனிநபர்கள், பெருநிறுவனங்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை பிறர் அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியும். தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். அதை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அவர்கள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.  இதுபற்றிய வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்கை இடதுசாரி கட்சி தொடுத்து நடத்தியது. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனோடு மேலும் பலரும் பங்கேற்றனர்.    தகவலறியும் உரிமைச்சட்டம் 19 (1) படி விதிகளை மீறி, தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்படும் நன்கொடை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என வாதாடப்பட்டது. அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மக்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. இதில...