சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்?

 



அறிவியல் கேள்வி பதில்கள் 
மிஸ்டர் ரோனி 

சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்?

அதிகாரம், புகழ், பணம் இதெல்லாம் ஒருவருக்கு திடீரென கிடைத்தால் எப்படியிருக்கும்? அதை அப்படியே தக்க வைத்துக்கொள்ள பல்வேறு தில்லுமுல்லுகளை செய்வார். இப்படித்தான் நார்சிசம் எனும் சுயமோகம் உருவாகிறது. சுயமோகிகளுக்கு கல்யாணம் என்றால் மாப்பிள்ளை, இழவு என்றால் பிணமாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனெனில் மேற்சொன்ன நிகழ்ச்சிகளில் அவர்கள்தானே மையப்பொருள். இதை சொல்லும்போது தீவிரவாத தாக்குதல் நடந்து மக்கள் செத்தபோது தேர்தல் பிரசாரம் செய்தவர், விமானவிபத்தில் 270 இறந்தபோது லோ ஆங்கிள் அழகிய புகைப்படம் எடுத்து பதிவிட்டவர் பற்றி ஏதேனும் நினைவு வருகிறதா, அது உறுதியாக தற்செயலானதே...  சுயமோகிகளுக்கு மனதில் கருணை கிடையாது. 

அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்குவது ஏன்?

அதிகாரம், பணபலம், புகழ் கிடைக்கிறது. அதை நோக்கி பங்கு போட்டுக்கொள்ள அனுபவிக்க நிறைய ஆட்கள் வருகிறார்கள். பொதுவாக பலவீனமான ஒருவரை வலிமையான ஒருவர் பார்த்தால் அவரை கேலி சித்திரவதை செய்ய நினைப்பார். அந்த வகையில் பஞ்சத்திற்கு வழங்க வேண்டிய நிதியை அரசியல்வாதி திருடுகிறார். பிடித்த இளம்பெண்களை காவல்துறை வைத்து வேட்டையாடி சுகிக்கிறார். விஷயம் வெளியே கசி்ந்தால் என்ன செய்வது என தடயங்களை, மனிதர்களை அழிக்கிறார். தேர்தல் ஆதாயத்திற்காக சிறுபான்மையினரை ரயிலில் வைத்தே எரித்து கொல்கிறார். இதெல்லாம் நடந்துகொண்டே இருப்பவைதானே? அமெரிக்க அதிபரை அந்நாட்டு நீதிமன்றமே குற்றவாளி என அறிவித்துவிட்டது. ஆனாலும் தண்டனை வழங்கவில்லை. ட்ரம்ப் இப்போது அதிபராகி, அவர் நாட்டு மக்களை மட்டுமல்லாது பிற நாட்டினரையும் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறார். அவரும் செக்ஸ் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஆள்தான். 

மக்கள் எதற்கு தேர்தலில் வாக்களிக்கிறார்கள்?

அரசியல் கட்சிகள் வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறார்கள். இதுதான் நடைமுறை உண்மை. சகடன், உச்சம், சந்தனம் ஆகிய பத்திரிகைகள் செய்யும் ஜனநாயக மீட்பு பிரசாரத்தின் காரணமாக மக்கள் வாக்களிக்கிறார்கள் என நம்புகிறீர்களா, அது கனவு. வாக்களிக்க செல்பவர்களுக்கு ஒருநாள் வேலை கெடும். வரிசையில் நிற்க வேண்டும். உங்கள் அடையாளங்களை சோதித்து வாக்களிக்க அனுமதிப்பார்கள். ஓட்டு எந்திரங்களிலேயே தில்லுமுல்லு செய்ய முடியும், நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் அதை விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.  மக்கள் வாக்களிப்பது, ஜனநாயகம் உயிரோடு இருப்பதற்கு முக்கியம் என ஊடகங்கள் கூவுகின்றன. எப்படி வாக்களிக்கிறார்கள் என்றால், உணர்வுப்பூர்வமாக யோசித்து என கூறலாம். 

சிசோபெரெனியாவின் அறிகுறிகள் என்ன?

இங்கிலாந்து ராணி செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்கள் மூளையிலுள்ள சிப்புக்கு தகவல் அனுப்புவார், அமெரிக்காவின் சிஐஏ  உங்களை கண்காணிப்பது, குத்துப்பாட்டு நடிகை உங்களை வெறித்தனமாக காதலிப்பது, மர்ம குரல் காதில் கேட்டுக்கொண்டே இருப்பது, பேச்சு சிந்தனை ஒத்திசையாமல் குளறுபடியாவது, தவறான நம்பிக்கைகளை நம்புவது ஆகியவை சிசோபெரெனியாவின் அறிகுறிகள். 

ஆளுமை பிறழ்வும், சிசோபெரெனியாவும் ஒன்றுதானா?

சிறுவயதில் ஒருவருக்கு உடல் ரீதியாக செய்யப்படும் சித்திரவதை அல்லது பாலியல் ரீதியான சுரண்டல் காரணமாக மனம் பிளவுபட்டு, பல்வேறு ஆளுமைகளை உருவாக்குகிறது. அதுதான் ஆளுமை பிறழ்வு. குணம், உடை, செயல்பாடு என வேறுபட்ட பல் ஆளுமைகள் உருவாகிறார்கள். குறும்புச்சிறுமி, பொறுப்பான இளைஞன், கலகம் செய்யும் இளையோர் என பல ஆளுமைகளை ஒருவர் கொண்டிருக்கலாம். இவர்கள் யாருமே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஆட்கள் போல இருக்கமாட்டார்கள். இவர்கள் செயலும் வன்முறையை அடிப்படையாக கொண்டதாக இருக்காது. சிசோபெரெனியா குறைபாடுள்ளவர்கள் தங்களூடைய அடையாளத்தை நன்கு அறிந்திருப்பா்ர்கள். சைக்கோஸிஸ் மூலம் பெரும் போராட்டத்தை எதிர்கொள்வார்கள். 










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!