டெஸ்லா பைல்ஸ் - ஆட்டோபைலட் முறையில் நடக்கும் எண்ணற்ற விபத்துகள், மரணங்கள்
டெஸ்லா பைல்ஸ் - அதிகரிக்கும் கார் விபத்துகள்
பாசிச இந்து மதவாதிகள் முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றி, அல்லது இயக்கங்கள் பற்றி காசு கொடுத்து எடுத்த வட இந்திய திரைப்படத்தின் பெயரல்ல இது. டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கு கார்கள் பற்றிய 23 ஆயிரம் ரகசிய ஆவணங்களை தன்னார்வலர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டார்.அதுதொடர்பாக கார்டியன் நாளிதழ் விசாரணையைத் தொடங்கி செய்திகளை வெளியிட்டு வருகிறது. இப்போது நாம் எழுதுவது அதன் தமிழாக்கம்தான்.
டெஸ்லா தொடங்கப்பட்டது தானியங்கு முறையில் காரை ஓட்டுவதை சாதிப்போம் என்று சொல்லித்தான். காரின் மாடல்கள் பாரம்பரியா போர்டு, ஜெனரல் மோட்டார்களை விட சிறப்பாக இருந்தன. டெஸ்லாவின் சிறப்பு, மின் வாகனம், அதற்கான பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் நிலையங்களையும் அவர் வலைப்பின்னலாக உருவாக்கி வைத்திருந்தார். இதனால்தான் டெஸ்லா வெற்றி பெற்றது. எலன் மஸ்க், குடியரசு கட்சிக்கு நிதியளித்து வெற்றிபெறச்செய்தார். அமைச்சர் பதவியைப் பிடித்தார். நாஜி வணக்கம் வைத்தார். பிறகு இப்போது அமைச்சர் பதவியை விட்டுவிட்டு அமெரிக்கன் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
2018ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ரீதா மெயரின் கணவர், அலுவலக பயணத்திற்காக டெஸ்லா மாடல் எஸ் என்ற காரை எடுத்துச் சென்றார். ரீதாவிடம் பிஎம்டபிள்யூ கார் இருந்தது. அதையே கணவர் பயன்படுத்தக்கூறியும் கணவர் ஏற்கவில்லை. மிலனில் உள்ள வர்த்த கண்காட்சிக்கு சென்றுவருவதே ரீதாவின் கணவர் ஸ்டீவனின் திட்டம். ஆனால், அந்த நோக்கம் பலிதமாகவில்லை. ஏ2 நெடுஞ்சாலையில் டெஸ்லா கார் விபத்துக்குள்ளானது. ஏறத்தாழ நூறு கி.மீ. வேகத்தில் பயணித்த கார் தீப்பிடித்து எரிந்து எழுபது மீட்டர் தூரம் இழுத்துக்கொண்டே சென்றுள்ளது.
விபத்து பற்றி டெஸ்லா வருத்தம் தெரிவித்தது. ஆனால், ரீதா எரிந்துபோன காரை இன்னும் வாடகை கொடுத்து தன்னுடைய வீட்டில் வைத்திருக்கிறார். விபத்தில் கிடைத்த பொருட்களையும் நீதி கிடைக்குமென பாதுகாத்து வருகிறார். அவருடைய கணவர் ஸ்டீவன் இறக்கும்போது மூன்று பிள்ளைகளில் கடைசி பிள்ளையின் வயது ஒன்று.
100 ஜிபி அளவுக்கு தகவல்கள் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ளது. தானியங்கு கார் ஓட்டும் டெஸ்லா காரின் திறமை முழுமையானது அல்ல. ஸ்டீயரிங் வீல், ஆக்சிலேட்டர், பிரேக் ஆகியவற்றை கணினி இயக்கம் என்றாலும், அதை மேற்பார்வையிட்டு இயக்குவது ஓட்டுநரின் பொறுப்பு. எப்போது வேண்டுமானாலும் ஓட்டுநர் தலையிட்டு கட்டுப்பாட்டை கையில் எடுத்துக்கொள்ளலாம்.
ரகசிய தகவல்களைப் பார்ப்போம். மோதல், விபத்துகளின் எண்ணிக்கை 1000க்கும் மேல். அதிக ஆக்சிலேட்டர் புகார்களின் எண்ணிக்கை 2400. பிரேக்கில் பிரச்னை புகார்கள் 1500. அவசரநிலை பிரேக் இயக்க தலையீடு பற்றிய புகார்கள் 139. தவறான எச்சரிக்கையால் பிரேக் பிடிப்பது பற்றி 383 புகார்கள் என புகார்களுக்கு குறைவே இல்லை. 2015ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை தகவல்கள் நீளுகின்றன. பெரும்பாலான புகார்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. அதேசமயம் ஆசியா, ஐரோப்பாவில் வந்த புகார்களும் வெளியிடப்பட்டுள்ளன.
திடீரென ஆக்சிலேட்டர் அதிகரிப்பது, பிரேக் பிடிக்காமல் போவது, கார்கதவு திறக்காமல் போவது என டெஸ்லா கார்கள் மீது வரும் புகார்கள் சாதாரணமல்ல. அதுவும் இப்போது வரும் டெஸ்லாவில் கார் கதவுகளுக்கு கைப்பிடி கிடையாது. இதனால் விபத்துக்குள்ளான காரை தீயணைப்புத்துறையினர் எளிதாக அணுகி காப்பாற்ற முடியாத சூழல் உள்ளது.
2
எலன் மஸ்க் வலதுசாரி இனவெறி தலைவரான ட்ரம்போடு கூட்டாக இருப்பது பற்றி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். டெஸ்லா பைல்ஸ் பற்றிய தகவல்கள், ஜெர்மனியின் ஹண்டேல்ஸ்பிளாட் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. கார்களைப் பற்றிய பல்வேறு தகவல்களைக் கொண்ட தகவல் அட்டவணையை டெஸ்லா நிறுவனம் பராமரித்து வைத்துள்ளது. அதில் முன்னமே விபத்துக்குள்ளான ஸ்டீவனின் கார் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரீதா, தனது குடும்ப நிறுவனமான டிம்பர் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். அதில் இருநூறு பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். காரை வடிவமைத்து அதை பல்வேறு சோதனைகள் செய்த பிறகே வெளியிடுவார்கள். அத்தகைய சோதனைகளை எலன் மஸ்க் முழுமையாக வெளியிடவில்லை என ரீதா கூறுகிறார். அவரது கணவர் பற்றிய விபத்தில், விபத்து பற்றிய முழுமையாக விவரங்களை டெஸ்லா குறிப்பிட்டு விளக்கவில்லை. கார்டியன் நாளிதழ் டெஸ்லா பற்றிய செய்தியை வெளியிடவிருப்பதை அறிந்தவுடன் டெஸ்லா கார் விபத்துகளில் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் உடனே நாளிதழை தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்களை வழங்கினர்.
கார் விபத்துகளில் பொதுவான ஒற்றுமை, டெஸ்லா எப்படி இயங்குகிறது என யாருக்குமே தெரியவில்லை என்பதுதான். உறவை இழந்தவர் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவருக்கோ, அவருடைய குடும்பத்திற்கோ பெரிய உதவிகள் கிடைக்கவும் இல்லை. அன்கே ஸ்சஸ்டரின் கதையைப் பார்ப்போம். அவருடைய கணவருக்கு எலன் மஸ்க் என்றால் கொள்ளைப் பிரியம், ஹோட்டல் அதிபர் என்பதால் காசு புழங்கியது. எனவே, நான்கு டெஸ்லா கார்களை வைத்திருந்தார். அவர் விபத்தான போது டெஸ்லா மாடல் எக்ஸில் பயணித்தார். நெடுஞ்சாலையில் பயணித்தவரின் கார் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அங்கேவின் கணவர் இறந்துவிட்டார். இந்த விபத்து பற்றியும் டெஸ்லா நிறுவனம், எந்த தகவலும் இல்லை என்று கூறிவிட்டது.
எதிர்கால வடிவமைப்பு என மஸ்க், கார் கைப்பிடிகளை நீக்கிவிட அதன் காரணமாகவே விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 5. ஐரோப்பா, அமெரிக்கா என கணக்கை கூட்டிக்கொள்ளலாம். கார் கைப்பிடிகளை அகற்றுவது பற்றி மஸ்கிற்கு பொறியாளர்கள் எச்சரிக்கையை விடுத்தபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை. 2018ஆம் ஆண்டு தொடங்கியே விபத்துகள் நடந்து வருகின்றன. 2024ஆம் ஆண்டு இளையோர் இருவர் டெஸ்லாவில் பயணித்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாயினர். இருவரையுமே தீயணைப்பு துறையினர் மீட்கமுடியவில்லை. அவர்கள் கண்முன்னே இருவரும் நெருப்பில் எரிந்து கரிக்கட்டையாயினர். நீதிமன்றத்தில் பாதுகாப்பு வசதி செயலிழந்தது என கூறப்பட்டது. ஆனால் அதனால் இறந்துபோனவர்களின் உயிருக்கு என்ன பதில்?
ஜெர்மனியைச் சேர்ந்த அடாக் என்ற கிளப், டெஸ்லாவை ஓட்டும் ஓட்டுநர்கள் எப்போதும் கையில் அவசரநிலைக்கு உதவும் வகையில் சுத்தியை வைத்திருக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளது. அரசு வாகன போக்குவரத்து ஆணையம், பாதுகாப்பு விதிகளை மேலும் மேம்படுத்தவிருப்பதாக கூறியுள்ளது.
இத்தனை புகார்கள் வந்தும், உயிர்கள் பறிபோனாலும் கூட மஸ்க் தனது கார் வடிவமைப்பை மாற்றவில்லை. தானியங்கு கார் ஓட்டும் வசதி முழுமையாகாத போதும் அதை காரில் இணைந்து சந்தைக்கு கொண்டு வந்தார். வணிகம் செய்து பெரும் லாபத்தை ஈட்டினார். இப்படி செய்ததன் காரணமாக டெஸ்லா காரை ஓட்டுவது, அதன் ஆப் வழியாக பெறும் தகவல்கள் என நிறைய லாபத்தை அடைந்தார். அதை வைத்து இனி மெல்லக்கூட தானியங்கு வசதியை மேம்படுத்தலாம். நீங்கள் தாமதித்தால் லாபத்தை இழந்துவிடுவீர்கள். அவசர அவசரமாக டெஸ்லாவை சந்தைக்கு கொண்டு லாபம் சம்பாதித்தது இப்படித்தான்.
டெஸ்லா காரில் உள்ள தகவல்கள் மூன்று இடங்களில் பதிவாகிறது. ஒன்று காரில் உள்ள நினைவகம், அடுத்து, விபத்து நடந்தால் அதை பதிவு செய்யும் கருப்பு பெட்டி, பிறகு நிறுவனத்தின் சர்வர்கள். இதையும் நிறுவனம் கூறவில்லை. நிறுவனத்தின் சர்வர்களை சிலர் ஹேக் செய்து தகவல்களைப் பெற்று வெளியிட்டதால்தான் மக்களுக்கு தெரியவந்தது. டெஸ்லா நிறுவன ஊழியர்களை அணுக கார்டியன் இதழ் முயன்றது. அவர்களின் வீட்டுக்கும் சென்று சந்திக்க விரும்பும் தகவலை தெரிவித்தது. ஆனால், யாருமே எந்த உண்மையையும் பேச முன்வரவில்லை. கொலராடோவில் 2022ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி ஓஹெய்ன் என்பவர் டெஸ்லா காரை ஓட்டி மரத்தில் மோதினார். கார் தீப்பிடித்து எரிந்தது. அதில் அவருடன் சென்ற நண்பர் மட்டுமே உயிர் பிழைத்தார். ஓஹெய்ன் மது அருந்தியிருந்ததாகவும் முழுக்க ஆட்டோபைலட் முறையில் கார் ஓடியதாகவும் கூறினார். இந்த விபத்திலும் கார் பற்றிய தகவல்கள் எதுவும் நிறுவனத்தில் இல்லை என கூறப்பட்டது. ஓஹெய்ன் டெஸ்லாவில் பணியாற்றி ஊழியர்.
விபத்தை விசாரித்த கொலராடோ காவல்துறை, டெஸ்லா மீது குற்றம் கூறவில்லை. ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக்கொண்டது.




கருத்துகள்
கருத்துரையிடுக