அநீதியான செயல்பாட்டை நியாயப்படுத்த முடியுமா?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
வில்ஃபிரட் பியான் என்பவர் யார்?
குழு உளவியல் சிகிச்சை சார்ந்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர். குழுவின் மனநிலை என்பது தனிநபர்களின் அனுபவங்களிலிருந்து பெறப்படுகிறது. முதிர்ச்சியான ஒருவர் உலகம் முழுக்க கருப்பு, வெள்ளை இயல்பு கொண்ட மனிதர்கள் மட்டும் கிடையாது என முடிவுக்கு வருவார். அவருக்கு உலகில் உள்ள பல்வேறு குண இயல்பு கொண்ட நல்லவர்கள், கெட்டவர்கள் என பலரையும் அறிந்த அனுபவம் கைவந்திருக்கும்.
முன்முடிவு, இனவெறி என இரண்டையும் எப்படி வகைப்படுத்துவது?
குழு உளவியலில் முன்முடிவு, இனவெறி என இரண்டுமே எதிர்மறையான கருத்தை அடிப்படையாக கொண்டது. வட இந்தியாவில் குறிப்பிட்ட முறையில் முஸ்லீம்களை ஒழித்துக்கட்ட நாடகம் நடைபெறுகிறது. முதலில் முஸ்லீம் இளைஞர், இந்துகடவுள் ஏதாவது ஒன்றை சேதப்படுத்துவதாக பச்சை செயலியில் வதந்தியைப் பரப்பவேண்டும். அதை வைத்து சிறுபான்மையினர் கடைகளை, வணிகத்தை முற்றாக புறக்கணிக்கவேண்டும். கடைகளை உடைத்து, சொத்துக்களை கொள்ளையடித்து, பெண்களை மானபங்கப்படுத்தி, வழிபாட்டுதலங்களில் பேய்க்கூச்சல் எழுப்பி அவர்களை வாழும் இடத்தில் இருந்து வேறிடங்களுக்கு புலம் பெயர்ந்து செல்லுமாறு செய்யவேண்டும். இந்த சம்பவத்தில் முன்முடிவு, மதவெறி உள்ளது. இனவெறியை இந்தியர்கள் உள்நாட்டில் காட்டினால், அதே ஆட்களுக்கு வெளிநாட்டினர் அவர்களுடைய நாட்டில் காட்டுவார்கள். புலம்பெயர்ந்து வாழும் மக்கள் முன்முடிவு, இனவெறியால் பாதிக்கப்படுவது செய்திகளில் நாம் அறிந்துகொண்டுதானே இருக்கிறோம்.
ஸ்டீரியோடைப் என்றால் என்ன?
மேற்சொன்ன சொல்லை முதன்முதலில் சமூக அறிவியலில் கொண்டு வந்தவர், வால்டர் லிப்மேன். 1922இல் நடைமுறைக்கு கொண்டுவந்தார். பத்திரிகைத்துறையில் ஏற்கெனவே, இச்சொல் பயன்படுத்தப்பட்டது. நூலகர்கள் அகவயமானவர்கள், ஆசியர்கள் கடுமையான உழைப்பாளிகள், ஆங்கிலேயர்கள் நல்லவர்கள் என்பது போன்றவை ஸ்டீரியோடைப் நம்பிக்கைகள். முன்முடிவுகள் இதைப்போன்ற நம்பிக்கைகளை வைத்து உருவாகிறது. இந்தியாவில் சேரியில் இருப்பவன் குற்றம் செய்வான், அக்கிரகாரத்தில் இருப்பவன் அப்பாவி என இன்னும் ஸ்டீரியோடைப் படம் எடுக்கும் கும்பகோண பார்ப்பன கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் மெல்ல அப்பாவி மக்கள் மீது தவறான அடையாளத்தை உருவாக்குகிறார்கள். 1940ஆம் ஆண்டு கென்னத், மாமி கிளார்க் ஆகியோர், ஸ்டீரியோடைப் காரணமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குழந்தை மீது முன்முடிவுகள் உருவாவதை ஆய்வு செய்தனர். இதுபற்றி மேலும் அறிய அந்த அறிக்கையை இணையத்தில் தேடி வாசிக்கலாம்.
பலியாடு என்பதை எப்படி விளக்குவது?
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றது. அதுவரை அந்த நாடு அடைந்த அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் யாராலும் எட்டப்படாதவை. ஆனால், ஹிட்லர் யூதர்களை பலியாடாக வைத்து தொடங்கிய போர், மொத்த நாட்டையும் பாதாளத்தில் தள்ளியது. போரின் முடிவில் ஜெர்மனி தோற்றுப்போனது. வெற்றி பெற்றவனுக்கே எல்லாம் என்ற திட்டப்படி, அனைத்து நாடுகளுக்கும் ஜெர்மனி பெரும் தொகையை வழங்க வேண்டி வந்தது. நாடு நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார இழப்பை சந்தித்தது.
அறம் சார்ந்த பிரச்னைகளை சிறுவர்கள் எப்போது அடையாளம் காணத் தொடங்குகிறார்கள்?
ஏழுவயதில் அவர்கள் உலகில் உள்ள பல்வேறு விதிகளை சட்டங்களை புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். அதுவரை அவர்களுக்கு பெற்றோர், உறவுகள் சொல்வதே விதிகள். சட்டங்கள்.
அநீதியான செயல்பாட்டை நியாயப்படுத்த முடியுமா?
தமிழ் திரைப்படம் ஒன்றில் நாயகி, நீதிப்போராட்டத்திற்கு தேவையான நிதியை முட்டையை விற்று அதில் வரும் பணத்தை வைத்து கொடுப்பார். ஆனால் அந்த முட்டையை போலியாக ஒரு பெயர் சொல்லி ஏமாற்றி விற்றுத்தான் வருமானம் ஈட்டுவார். அவருக்கு அதிக பணம் சேர்க்கவேண்டும். ஆனால், அதில் நீதி, நியாயம் இருக்கவேண்டுமென தோன்றவில்லை. பொன்சி திட்டத்தை செயல்படுத்தி நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் 50 பில்லியன் டாலர்களை கொள்ளையடித்தவர் நிதி தொழிலதிபர் பெர்னி மேட்ஆப். அவரது செயலை அவரால் நியாயப்படுத்த முடியுமா? ஏன் முடியாது. ஒரு செயலை நியாயம் என நம்ப வைக்க நீங்கள் முதலில் அதை நம்பவேண்டும். பிறகுதான் பிறரை எளிதாக நம்ப வைக்க முடியும்.
பச்சை செயலியில் தொன்மை இந்திய வரலாறு, முஸ்லீம்களுக்கு பிள்ளைகள் அதிகம் பிறப்பது, ஔரங்கசீப் செய்த கொடூரம் என எல்லாமும் பேசப்படுகிறது. அதை முட்டாள்கள் நம்பித்தானே மதவாத கட்சிக்கு மூன்று முறை வாக்களித்தனர். ஆனால், இந்திய அரசு அதிக ஜிஎஸ்டி வரி வாங்குவது, சிறுபான்மையினர் வீடு இடிக்கப்படுவது பற்றி பேசாது. அப்படி பேசினாலும் அவர்கள் இந்தியர்கள் இல்லை, ஊடுருவல்காரர்கள், நம் கடவுள்களை அழித்தவர்கள் என பொய்ப்புரளிகளை அடுக்குவார்கள். இதன் வழியாக சிறுபான்மையினரை படுகொலை செய்வது, கடைகளை கொள்ளையடிப்பது, பெண்களை வல்லுறவு செய்வது, வீடுகளை இடிப்பது என அனைத்துமே நியாயப்படுத்தப்படுகிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக