ஆங்கிலேயர்களோடு கூட்டு சேர்ந்த பார்ப்பனர்கள், மராட்டிய கலாசாரத்தை நாடகம் வழியாக உருவாக்கிய வரலாறு!

 



பார்ப்பனர்களோடு கூட்டு சேர்ந்த பிரிட்டிஷார் 

மராட்டியத்தில் நடைபெற்ற தமாஷாக்களில் மகர் இன பெண்கள் நடனமாடுவது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இதை பிரிட்டிஷார், மேல்தட்டு வர்க்க இந்தியர்கள் பாலியல் தன்மையை சற்று குறைத்து இசை நடனமாக மாற்றி பல்வேறு இடங்களில் நடத்துமாறு மாற்றினர். இப்படி கூறுவதால், பிரிட்டிஷார் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி வழங்கினர் என்றோ, அநீதியை தண்டித்தனர் என்றோ புரிந்துகொள்ளக்கூடாது. அவர்கள் வணிகர்கள். வணிகத்திற்கு பிரச்னை வராதபடி சாதி மேலாதிக்கத்தை பார்ப்பனர்களோடு சேர்ந்த கடைபிடித்து தமாஷாக்களை நடத்தினர். இதன் வழியாக சாதி மேலாதிக்கம், அதன் அடிப்படையிலான பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டது. 1898ஆம் ஆண்டில் இரு மகர் இன பெண்கள், தமாஷாக்களில் போட்டி நடனமிடுவது பற்றியெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது அரிதானதுதான் என்றாலும் அப்படி செய்கிறார்கள் என்றால், அவர்கள் புகழ்பெற்ற இசை, நடனக் கலைஞர்களாக உள்ளனர் என்று புரிந்துகொள்ளலாம். 
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் விக்டோரியா கால ஒழுக்கம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷார், கலைகளை ஐரோப்பா அளவுக்கு தூய்மை கொண்டதாக அதேசமயம் இந்திய மண்ணில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மீது மேலாதிக்கம் குறையாத அளவுக்கு தமாஷாக்களை சற்று வக்கிரம் குறைத்து நடத்தினர். இதில் பிரிட்டிஷாரும் மேல்சாதியினரும் கூட்டாக சேர்ந்து இயங்கினர். 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்கள், இந்தியாவை சற்று நவீனமாக்க முயன்றனர். அப்போது இந்தியாவின் உடன்கட்டை ஏறுவது, குழந்தை திருமணம், கோவில்களில் விபச்சாரம் செய்வது ஆகியவை நடைமுறையில் இருந்தது. இந்த வகையில் ஆங்கிலேயே அரசு சமூக, பாலியல், அரசியல், அறம் ஆகிய விவகாரங்களில் தனிநபர்களை கண்காணிக்கத் தொடங்கியது. இந்த வகையில் நூல்கள், நாடகங்கள், சொற்பொழிவுகள் ஆகியவை தணிக்கை செய்யப்படத் தொடங்கின. வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம், அறத்திற்கு எதிரானது என காரணங்களை அடுக்கி இசை நடனம், நாடகங்களுக்கு புதிய விதிகளை உருவாக்கியது. அதன்படி நாடகங்களை அரங்கேற்ற ஆங்கிலேய அரசிடம் உரிமம் பெற வேண்டும். இவ்வகையில் இசை, நடனம், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவையும் கட்டுப்படுத்தப்பட்டது. 

கடலை மிட்டாய்க்கு பதினெட்டு சதவீத ஜிஎஸ்டி போட்டு குடிசைத்தொழிலுக்கு பார்ப்பன மதவாத அரசு குழிதோண்டுகிறது அல்லவா? அதேதான் அன்றைய காலத்தில் தலித் முரளி இனத்தினர், தமாஷா நடத்தும் தாழ்த்தப்பட்டோர் தெருக்களில்தான் பாடி பிழைப்பை நடத்தினர். அவர்களால் அரசிடம் உரிமம் பெற்று இசை நாடகம் நடத்தும் பொருளாதார பலம் இருக்கவில்லை. அன்றைக்கு இருந்த சூழலில் ஆங்கிலேய அரசு அதிகாரிகள், தமாஷா பெண்களை முக்கியமான இசைநாடக கலைஞர்களை கருதவில்லை. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களோடு பாலுறவு கொண்டிருந்தனர். இவர்களில் மிகச்சிலரே குடும்பத்தை உருவாக்கிக்கொண்டிருந்தனர். ஆங்கிலேயே அரசு தமாஷாக்களை நிறுத்துவதற்கு, அவர்களின் ஆபாச வக்கிரமான நடனம், திருமணம் கடந்த உறவுகளை உருவாக்குதல் கூட காரணமாக இருந்திருக்கலாம். அரசின் ஆவணங்களி் தமாஷா பெண்கள் பற்றி எந்த ஆவணங்களும் இல்லை. இதற்கு அரசு,  தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான உரிமைகளை, குடும்ப சொத்துக்களை மறுக்கும் ஒழுக்க விதிகளை பின்பற்றியது காரணமாக இருக்கலாம். 
ஆங்கில அரசின் தாராளமய சீர்திருத்தங்கள், இந்தியாவில் எதிர்பார்த்த விளைவை உருவாக்கவில்லை. அதற்கு மேல்சாதியினர், தாழ்த்தப்பட்ட பெண்களின் இசை நாடகத்தை ரசிப்பதோடு அவர்களோடு பாலுறவு கொண்டும் சுரண்டினர், ஆனால், அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கவில்லை, ஆங்கில அரசும் இதே பார்வையைக் கொண்டிருந்தது. 

காசு கொடுத்தாவது காலாவதியான வடமொழியை சொல்லிக்கொடுத்து நாட்டை மேலாதிக்கம் செய்ய பாசிச இந்துத்துவ அமைப்புகள் துடிக்கிறது அல்லவா? அன்று மராட்டியத்தில் பார்ப்பன சமூகமும் இதையேதான் செய்தது. விக்டோரியா கால ஒழுக்க விதிகளை பார்ப்பன மேலாதிக்க சாயம் பூசி மராட்டிய சமூகத்தை பார்ப்பனமயமாக்கியது. இந்த வகையில் உயர்வர்க்க நாடக சபைகள் உருவாயின. இதிலும் மேல், கீழ் பாரபட்சம் உண்டு. ஆனால், மேற்பார்வைக்கு வக்கிரம் இல்லாத இசை நாடகம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டனர். இதே கருத்தை சமூகம் முழுக்க உருவாக்க முயன்றனர். இதற்கு பார்ப்பனர்கள், அவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு பணியும் இடைநிலை சாதியினரின் உதவி தேவைப்பட்டது. 
மேல்தட்டு வர்க்க சீர்திருத்தக்கார்கள், பார்ப்பன கலாசாரத்தை பரப்ப அதுவரை இருந்த தாழ்ந்த சாதியினரின் இசை, நாடகம், நடனம் ஆகியவற்றை குறை கூறி நிறுத்த தொடங்கினர். ஜாத்ரா, தமாஷா ஆகியவை வக்கிரம் என பார்ப்பன ஊடகங்கள் முழங்கின. 
பார்ப்பனர்களின் கலாசாரம் நாகரிகமானது, அறிவுப்பூர்வமானது என மராட்டிய கலாசாரம் மாற்றப்பட்டது. தாழ்த்தப்பட்டோரின் கலைகள் நாகரிகமற்றவை, அசுத்தமானவை, பட்டிக்காட்டுத்தனமானவை என நிராகரிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி இருபதாம் நூற்றாண்டு நடுப்பகுதி வரை நாடக கலையில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தி தங்களுடைய புனித கருத்துகளை மராட்டிய கலாசாரமாக மாற்றினர். இதில் விடி பாலுஸ்கர், விஎன் பக்த்காண்டே ஆகியோர் முக்கியமான பார்ப்பனர்கள். இவர்கள் இருவரும் இந்திய செவ்வியல் இசைக்கான வடிவம், அடையாளத்தை உருவாக்கினர். இவர்களைத் தொடர்ந்து வடமொழி இலக்கியத்தை ஒட்டி நாடகங்களை பார்ப்பனர்கள் உருவாக்கினர். பின்னாளில் வரலாறு, மாயப்புனைவு, ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் கதைகள் ஆகியவை மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டு நாடகமாக மாற்றப்பட்டது. 


மூலம் வல்காரிட்டி ஆப் காஸ்ட் - தலித் செக்சுவாலிட்டி அண்ட் ஹியூமனிட்டி - சைலஜா பைக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!