தென்னிந்திய குலங்களும் குடிகளும் ந சி கந்தையா

 தென்னிந்திய குலங்களும் குடிகளும்
ந சி கந்தையா
ஆய்வு நூலின் சுருக்கம்

ஆங்கில ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டீன் மேற்சொன்ன பெயரில் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அதன் மொழிபெயர்ப்பு தமிழில் கிடைக்கிறது. ந சி கந்தையா எழுதிய நூல், பல்வேறு நூல்களின் சுருக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த நூல்கள் என்ற தெளிவு இல்லை. 

நூலின் முன்னுரையில் எட்கர் தர்ஸ்டீன் ஆய்வை பார்ப்பனர்களிடம் கேட்டு எழுதிக்கொண்டார். கள ஆய்வுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் இந்த நூலை ந சி கந்தையா கள ஆய்வு செய்து எழுதினாரா என்றால் அதற்கு எந்த பதிலுமில்லை. ஆங்கிலத்தில் எழுதி வைத்ததை அப்படியே தமிழில் சுருக்கமாக 85 பக்கங்களில் எழுதியிருக்கிறார். அவ்வளவே மற்றபடி சில இடங்களில் தெளிவுக்கு அடிக்குறிப்பு உள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள சாதிகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், பட்டப்பெயர்கள், திருமண சடங்குகள் ஏன ஏராளமான விஷயங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. சில சாதிகளைப் பற்றிய தகவல்கள் விரிவாக உள்ளன. சில சாதிகளுக்கு சொல்ல ஏதுமில்லை என்பது போல சுருக்கமாக உள்ளது. வதந்தி பத்திரிகையில் வரும் சாணக்கியன் சொல் போல சுருங்கவில்லையே என சந்தோஷப்படவேண்டியதுதான். 

தமிழ்தேசியம், தமிழ் குடிமகன் என நிலப்பரப்பு சார்ந்து மொழி சார்ந்து வேற்றுமைகள் வளர்ந்துகொண்டிருக்கும்போது இத்தனை சாதிகள் பற்றிய விளக்கங்களை வாசிப்பதும். அறிவதும் முக்கியமானதுதான். நூலில் ஆச்சரியமான விஷயம் திருமணத்தின்போது மணமகனின் சகோதரி, மணமகளுக்கு தாலி கட்டுவது... பழங்குடி தொடங்கி நிறைய சாதிகளில் இந்த பழக்கம் உள்ளது. மலையில் வாழும் பழங்குடி சாதியில் விரும்பிய பெண்ணை கடத்தி வந்து, பெண் வீட்டுக்கு தகவல் சொல்லி திருமணம் நடத்தும் முறை உள்ளது. 

சாணார் பெண்கள் மார்பை மறைத்து உடை அணியும் போராட்டத்தை, கோயில் நுழைவு போராட்டத்தை நூலில் வெறும் கலகம் என்று குறிப்பிட்டுள்ளனர். அடிப்படை உரிமை, அதற்கான போராட்டம் சமூகத்தில் கலகத்தை தோற்றுவிப்பதாக நூலாசிரியருக்கு தோன்றுகிறது... நல்லது. 

உரிமை போராட்டங்களை தமிழின துரோகிகள், பார்ப்பன ஊடகங்கள் பார்க்கும் பார்வை இழிவானது. அதை அவர்கள் ஒன்றியத்தில் இருந்து பெற்ற அதிகாரத்தால் வெளிப்படையாக எழுதவும் தொடங்கிவிட்டனர். நூல் பெரும்பாலும் அவர்களோடு ஒத்துப்போகிறது.  

நூலின் அடிப்படை தகவல்கள் முடிந்தாலும் அதற்கு மேலும் சொல்ல நிறைய சாதிகள், அவர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவின் குடிகள் முடிந்த பிறகு வடக்குநாட்டு சாதிகள் குறிப்பாக தரப்பட்டுள்ளன. அதையும் நீங்கள் படித்தறியலாம். இந்த நூல் பொதுவான புரிதலுக்குத்தான். ஆழமாக எதையும் இதில் தேட முடியாது. அந்த வகையில் நூலாசிரியர் புதிதாக எதையும் சேர்த்து எழுதவில்லை. 
கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!