இடுகைகள்

மஞ்சு வாரியர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காவல்துறை ஆட்களை ஆட்டுவிக்கும் கிளர்க்கின் உளவியல் விளையாட்டு!

படம்
      ஹன்ட் மலையாளம் மஞ்சு வாரியர், இந்திரஜித், குஞ்சாகோ கோபன் சினிமா நடிகை ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அதுபற்றி விசாரிக்கும்போது, நீதிமன்ற கிளர்க் ஒருவர் பிடிபடுகிறார். விசாரித்தால், அவர் தனது மனைவியைக் கூட கொன்றவர் என தெரியவருகிறது. கடத்திய நடிகை, அவரது கூட இருந்தவர் என இருவரையும் கொன்றுவிட்டேன். ஆனால் புதைத்த இடத்தை மறந்துவிட்டதாக கூறுகிறார். இந்த விசாரணை சிறிபாலா என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பெரும் சோதனையாக மாறுகிறது. எனவே, நண்பரான சைலக்ஸ் இப்ராகிம் என்பவரின் உதவியை நாடுகிறார். கிளர்க் விசாரணையின்போது சொல்லும் தகவல்களால் குழந்தையில்லாத சைலக்ஸின் வாழ்க்கையில் நிறைய குழப்பங்கள் வருகின்றன. குறிப்பாக, மனைவி மீது தவறான உறவு உள்ளதோ என சந்தேகப்படத் தொடங்குகிறார். சிறிபாலாவுக்கு கொரியரில் சில தகவல்கள் வருகின்றன. அதன்படி தேடியதில் அவரது அப்பா, பணியின்போது விபத்துக்குள்ளானதில் நண்பர் சைலக்சின் பங்கு இருப்பது தெரிகிறது. நட்பில் உள்ள துரோகம் வலி அதிகமா, காதலித்த மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதால் கொன்றுவிட்டேன் என்று கூறும் கிளர்க்கின் வாழ்க்கையில் வலி அதிகமா என சிறிபாலா புரிந்...