காதல் மீட்டர் - உறவுகளை பாதுகாப்பது எப்படி?
காதல் மீட்டர் 2 ஒருவர் நண்பராக இருந்து அப்டேட் ஆகி காதலராக மாற வாழ்க்கையில் வாய்ப்பு உள்ளது. இதற்கும் அவர் நம்பிக்கையை சம்பாதித்து உழைக்கவேண்டும். ஒரு பதவி கொடுத்தால், முந்தைய பதவியை விட கூடுதலாக உழைக்கவேண்டும் என்றுதானே கொடுக்கிறார்கள். அந்த வேலையை செய்யாமல் அவர் உறங்கிவிட்டால் என்னாவது? ஒருவருக்கொருவர் லட்சியங்களில் உதவிக்கொள்வது நண்பர்களுக்கு சாத்தியம். அதேசமயம், அவர்களில் ஒருவருக்கு மட்டும் வெற்றி கிடைக்கிறது. இன்னொருவருக்கு கெடுவாய்ப்புகளே அதிகம் என்றாலும் அந்த உறவு அதிக நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இருவர் வாழும் உறவில் ஒருவருக்கு மட்டுமே பயன் விளைகிறது என்றால் இன்னொருவர் மனதிற்குள்ளாக வருத்தமுறுவார். இங்கு யாரும் மகான் அல்லது துறவி கிடையாது அல்லவா? அகமணமுறையை எடுத்துக்கொள்வோம். சாதியைக் காப்பாற்றுவதுதான் அதன் ஆழத்தில் உள்ள நோக்கம். மேல்சாதி இந்துகள் தங்கள் அந்தஸ்து, பணம், அசையும் சொத்து, அசையா சொத்து என பலதையும் பார்த்துத்தான் மணம் செய்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் வரதட்சணைப் பணம் வேறு இருக்கிறது. இதையெல்லாம் வைத்துத்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அவ்வளவு பணத்தை ...