பிச்சைக்காரன், பேராசையும் கொலைவெறியும் கொண்ட பணக்காரர்கள் வாழும் அரண்மனைக்குள் நுழைந்தால்....
பிளடி பெக்கர் தமிழ் இயக்கம் சிவபாலன் பிச்சைக்காரர் ஒருவருக்கு மாளிகை ஒன்றில் சாப்பாடு இலவசமாக போடுவதைச் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைபவர், சொத்துப்பிரச்னையில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைக்கப் போராடுகிறார். உண்மையில் அவர் எதற்கு அங்கு சென்றார், உயிர்பிழைத்து வெளியே வந்தாரா என்பதே கதை. படத்தின் தலைப்பு பற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. படத்தில் அனைத்தும் உள்ள பணக்காரர், எதுவுமே இல்லாத பிச்சைக்காரன் என இரண்டு அதீத நிலைகள் காட்டப்படுகின்றன. இந்தப்படம் ஆங்கிலப்படத்தின் தாக்கம் பெற்றது என ஒருசாரார் கூறினர். இருக்கலாம். மறுக்க முடியாது. படத்தை தயாரித்த இயக்குநர் நெல்சனே அமெரிக்க டிவி தொடர்களால் உந்துதல் பெற்று காட்சிகளை அமைப்பவர்தான். அப்போது அவரின் மாணவரான இப்பட இயக்குநர் எப்படி மாறுபட்டு இருப்பார்? கடினமாக உழைத்தால் பணக்காரராகிவிடலாம் என்று நினைப்பதையே படம் பகடி செய்கிறது. ஒருவர் உழைப்பது சரி. ஆனால், தான் செய்வது சரி. தனக்கு கீழே சிலர் இருக்கிறார்கள் என மனநிம்மதி பெறுகிறார். சிலசமயங்களில் அதை சொல்லிக்காட்டவும் வன்ம...