இடுகைகள்

நானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

படம்
  அன்டே சுந்தரானிக்கி நானி, நஸ்ரியா இயக்கம் விவேக் ஆத்ரேயா இசை  விவேக் சாகர் சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை.  விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை.  சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது....

திரைப்பட இயக்குநர் எடுக்கும் புனர்ஜென்ம அவதாரம்! ஷியாம் சிங்கா ராய் - தெலுங்கு

படம்
  ஷியாம் சிங்கா ராய் -தெலுங்கு ஷியாம் சிங்கா ராய் தெலுங்கு ராகுல் சாங்கிருத்தியன் சானு வர்க்கீஸ் மிக்கி ஜே மேயர்  நாளைய இயக்குநராகும் ஆசையில் உள்ளவர், வாசு. எப்படியோ தனது குறும்படத்திற்கு கீர்த்தி என்று வெளிநாடு சென்று படிக்கும் ஆசையில் உள்ள பெண்ணை சரிகட்டி நடிக்க வைத்துவிடுகிறார். பிறகு கிடைக்கும் திரைப்பட வாய்ப்பிலும் வெல்கிறார். அந்த  படத்தை இந்தி மொழியில் உருவாக்க முயலும்போது தான் பிரச்னை தொடங்குகிறது. வாசு மீது கொல்கத்தாவை சேர்ந்த எஸ்ஆர் பதிப்பகம் கதை திருட்டு என வழக்கு போடுகிறது.  உண்மையில் வாசு கதையை திருடினாரா இல்லையா என்பதுதான் படமே... படம் புனர்ஜென்மம், ஹிப்னோதெரபி என நிறைய விஷயங்களைப் பேசுகிறது. எல்லாவற்றையும் விட படத்தில் கவருவது கல்கத்தாவில் சீர்திருத்தக்காரராக வரும் ராய் தான். அவர் பேசும் விஷயங்கள் அக்காலத்திற்கு மட்டுமல்ல, இப்போதும் முக்கியமானதாக இருக்கிறது. இப்போதும் தொன்மை இந்தியாவை நோக்கி செல்வதால் இப்படிப்பட்ட ராய்கள் தேவைப்படலாம்.  படத்தின் கதை நவீன காலம் 2021, 1969 என இரண்டு காலகட்டமாக உள்ளது. அதற்கேற்ப படக்குழு உழைத்திருக்கிறார்கள்.  ப...

ஐந்து கொலைகளை செய்யும் கொலைகாரனின் பின்னணி! - வி தெலுங்கு #நானி 25

படம்
      வி     v telugu movie director Intragandhi mohanakrishna RR thaman ss songs amit trivethi தமிழில் இந்த படம் போல நிறைய படங்கள் உண்டு. தெலுங்கில் இதுபோல வெளிவந்துள்ள படங்கள் ஒப்பீட்டளவில் குறைவு.  போலீஸ் கொலைகாரன் என இருவருக்கும் இடையே நடக்கும் பூனை எலி விளையாட்டுதான் கதை.  படத்தில் முதல் காட்சியே சுதீர் பாபுவுக்குத்தான். அதிலேயே சண்டை, உடற்கட்டு, நேர்மையான குணம் வசீகரித்து விடுகிறார். படம் தொடங்கி சிறிது நேரத்திற்கு பிறகுதான் நானி(வி) உள்ளே வருகிறார். அவரது டீமைச் சேர்ந்த பிரசாத் என்பவரைப் போட்டுத்தள்ளிவிட்டு நெற்றியில் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி வைத்திருக்கிறார். போனில் பேசும் வி, டிசிபி ஆதித்யாவுக்கு சவால் விடுகிறார். முடிந்தால் அடுத்தடுத்த கொலைகளை தடுத்து பார். அப்படி தடுத்தால் நான் போலீசில் சரண்டைகிறேன். இல்லையென்றால் நீ இதுவரை வாங்கிய மெடல்களை அரசுக்கு அனுப்பிவிட்டு வேலையை விட்டு விலக வேண்டும் என்பதுதான் அந்த சவால். முதலில் ஆதித்யா இதென்னடா இப்படியொரு சோதனை என்றாலும் சவாலை ஏற்கிறார். இறுதியில் யார் சவாலில் ஜெயிக்கிறார்? என்பதுதான் கதை.  பணபலம...

கலக்கும் காமெடியோடு பழிக்குப்பழி படலம்! - கேங்லீடர் சினிமா!

படம்
கேங்லீடர் - தெலுங்கு இயக்கம் - விக்ரம் கே குமார் எழுத்து - விக்ரம் குமார், வெங்கட் டி பதி கேமரா - மிரோஸ்லா ப்ரோசெக் இசை - அனிருத் ஆஹா ... அசத்தலான கதையும், அம்சமாக நடித்து கொடுத்திருக்கும் லஷ்மி, சரண்யா பொன்வண்ணன், நானி ஆகியோரின் நடிப்புதான். இசையில் அனிருத் நிறைய இடங்களில் உதவுகிறார். சீரியசான இடங்களை படக்கென உடைக்கும் காமெடியும் செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிரியா அருள் மோகனும் செம அழகு என்பதால், பக்கத்திலிருக்கும் காதலி கூட சுமாராக தோன்ற வாய்ப்புள்ளது. அய்யய்யோ .... மனம், 24 முதற்கொண்டு வரும் பின்னோக்கி போகும் உத்தியும், இது நடக்காமல் இருந்தால் என காட்சிகள் மாறும் விதம் ஒருகட்டத்தில் படத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது. இந்த காட்சி உண்மையா அல்லது பென்சில் சிஸ்டத்தில் டைப் செய்துகொண்டிருக்கிறாரா என்று டவுட் ஆகிறது. வெண்ணிலா கிஷோரை ஓரினச்சேர்க்கையாளராக காட்டி சிரிக்க வைப்பது சங்கடமாக இருக்கிறது.  கார்த்திகேயா கிடைத்த வாய்ப்பில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். இது முழுக்க நானியின் சினிமா என்பதால், ஜாலியாக நீங்கள் ரசிக்கலாம். கதை, வங்கி கொள்ளையில்...

காதல் யுத்தமா, கடத்தல் யுத்தமா-கிருஷ்ணார்ஜூனா யுத்தம்

படம்
indiaglitz கிருஷ்ணார்ஜூனா யுத்தம் மெரலபாக காந்தி கார்த்திக் கட்டமனேனி ஹிப்ஹாப் தமிழா tollywood.net சித்தூர் கிருஷ்ணா, செக் நாட்டின் பிராக்கில் வசிக்கும் ராக்ஸ்டார் அர்ஜூன்  இரண்டு நாடுகளில் வசிக்கும்  இருவருக்கும் காதல் வருகிறது. அது கைகூடியதா என்பதுதான் 2.30 மணிநேரம் நாம் பார்க்கவேண்டிய இப்படத்தின் கதை. படத்தில் நானி, ஹிப்ஹாப் தமிழா தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. காமெடி படத்தை காப்பாற்றியிருக்கும். ஆனால் அந்த நேரத்தில்தான் மெரலபாக காந்தி படத்தில் கதைன்னு ஒண்ணு வேணுமே ப்ரோ என நினைத்திருக்கிறார். indiaglitz பெண்களை கடத்தி துபாய் ஷேக்குகளுக்கு விற்கும் மஸ்தி வேலையை வில்லன் கூட்டம் செய்கிறது. அதில் மாட்டும் காதலிகளை எப்படி சித்தூர் கிருஷ்ணா, ராக்ஸ்டார் அர்ஜூன் காப்பாற்றி நமக்கு கல்யாணச்சோறு போடுகிறார்கள் என்பதுதான் க்ளைமேக்ஸ். காதல் நீளமானதில் கடத்தல் விஷயங்கள் எக்ஸ்ட்ராவாக தொங்குகின்றன. எனர்ஜி குறையும்போதெல்லாம்  கோவை ஆதி இசை மூலமாக பார்த்துக்கலாம் பாஸ் வாங்க என நம்பிக்கை கொடுக்கிறார். மற்றபடி சித்தூர் கிருஷ்ணா, ராக்ஸ்டார் அர்ஜூ...