இடுகைகள்

சைவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பௌத்த மத வேட்கையால் நேபாளம், இலங்கை, பர்மா சுற்றியலையும் பார்ப்பனரின் இடையறாத அலைச்சல்!

 பௌத்த வேட்கை தர்மானந்த கோசம்பி தமிழில் தி.அ.ஶ்ரீனிவாசன் காலச்சுவடு வெளியீடு தன் வரலாற்று நூல். NIVEDAN by Dharmanand Kosambi First published in English as ‘Nivedan’ by PERMANENT BLACK © 2011 Meera Kosambi பௌத்த வேட்கை என்ற நூல், தர்மானந்த கோசம்பி என்ற சரஸ்வத் பார்ப்பனரின் பௌத்த தேடுதலைப் பற்றிப் பேசுகிறது. கோசம்பி, பௌத்தம் கற்க கோவாவில் இருந்து நேபாளம், இலங்கை, மியான்மர் என பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். இறுதியாக இந்தியாவுக்கு திரும்பி தான் கற்ற பௌத்தத்தை கல்லூரியில் போதித்திருக்கிறார். பிறகு, உயிர்வாழும் ஆசை அற்றுப்போய், வார்தா ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உடலை உகுத்திருக்கிறார்.  இந்த நூல் நிவேதன் என்ற பெயரில் மராத்தி மொழியில் வெளியானது. அதை கோசம்பியின் பேத்தி மீரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக ஶ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து உதவியிருக்கிறார். நூலில், பௌத்தம் கற்க எத்தகைய சவாலையும் சந்திக்க தயார் என்ற கிளம்பிய மனிதனின் அலைச்சலை எழுத்து வழியாக உணர முடிகிறது. அதை வாசகர்களின் மனதில் பதிவு செய்த வகையில் மொழிபெயர்ப்பாளர் ஶ்ரீனிவாசன் வெ...

திரைப்பட திருட்டுக்கு எதிராக தனிநபராக போராடும் நாயகன்!

படம்
    நேடு விடுதலா ஆசிப்கான், மௌர்யானி தெலுங்கு திரைப்படங்களை சட்டவிரோதமாக வலைத்தளங்களில் வெளியிடுவதைப் பற்றிய படம். அவ்வளவே. கதை எளிமையானது. அதை சொன்ன விதத்தில் எந்த புதுமையும் இல்லை. அப்படியே நேர்கோட்டு வடிவம். சலிப்பு தட்டுகிற படம். படத்தில் நாயகன், கல்லூரி படிப்பை 99 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முடிக்கிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலையில், அப்பாவின் சிபாரிசின் பெயரில் ஹெச்எம் டிவியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு சினிமா நிகழ்ச்சிப்பிரிவில் வேலை செய்யக் கூறுகிறார்கள். அப்படி வேலை செய்யும்போது, நடக்கும் சம்பவம் ஒன்றால் பாதிக்கப்பட்டு அதை தீர்க்க முயல்கிறார். இறுதியில் என்னானது என்பதே கதை. தெலுங்கு திரைப்படங்களை திருட்டுத்தனமாக சிதைப்பவர்கள், அதன் உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறது படம். ஆனால் அப்படி திரைப்படத்திருட்டை காட்டியவர்கள் அதை சுவாரசியமாக சொல்ல மறந்துவிட்டார்கள். இதனால் படம் எங்கெங்கோ சென்று எப்படியோ முடிகிறது. படத்தில் வேகமாக நடக்கும் விஷயம், நாயகி நாயகனை காதலிப்பதுதான். நடிகை மௌர்யானி அழகாக இருக்கிறார். ஆனால், அவர் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை...

பௌத்தம்/ சமணத்தை போலச் செய்து சைவம் வென்ற வரலாறு - வைத்தியர் அயோத்திதாசர்/ஸ்டாலின் ராஜாங்கம்

படம்
  வைத்தியர் அயோத்திதாசர் நூல் ஸ்டாலின் ராஜாங்கம் வைத்தியர் அயோத்திதாசர் ஸ்டாலின் ராஜாங்கம் நீலம் ரூ.175                                           தமிழன் என்ற நாளிதழை நடத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். இவர், சித்த வைத்தியராக ராயப்பேட்டையில் மருத்துவமனை நடத்தியவர். மருத்துவமனை என்பதை விட வைத்திய சாலை என்று கூறலாம். தனது நாளிதழில் சித்த மருத்துவ சிகிச்சை பற்றியும், உண்ண வேண்டிய பல்வேறு மருந்துகளைப் பற்றியும் எழுதி வந்தார். பௌத்தம்/சமணம் ஆகிய மதங்களிலிருந்து எப்படி சைவம், வைணவம் போலச்செய்தல் முறையில் தன்னை வளர்த்திக்கொண்டது. அதற்கேற்ப திரிக்கப்பட்ட இலக்கியங்கள், பாடல்கள் உருவாக்கப்பட்ட விதத்தை பல்வேறு ஆதாரங்களின்படி நூல் விளக்குகிறது. நூலில் வரும் சிறுவன் ஒருவனுக்கு அயோத்தி தாசர் வைத்தியம் செய்விக்கும் முறை சிறுகதை போல உள்ளது. அந்தளவு நுட்பமான தன்மையில் விளக்கப்படுகிறது. அந்த சிறுவன்தான், வளர்ந்தபி...

காந்தியின் அடிப்படை சிந்தனைகளை உருவாக்கிய நகரம்!

படம்
  காந்தி படிக்கச்சென்ற இங்கிலாந்தின் லண்டன் நகரம் . அந்த நகரம்தான் ஆங்கில தேசத்தின் சட்டங்களோடு அவரின் மனவலிமையையும் திடமாக உருவாக்கிய இடம் . இங்கு அவர் படித்த மத ரீதியான நன்னெறி நூல்களும் , சந்தித்த நூல்களும் காந்தி என்ற அடையாளத்தை வலிமையாக்கின . அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் . வைஷ்ணவ குலத்தில் பிறந்த காந்தி இந்து , சமணம் ஆகிய மதத்தினரின் பல்வேறு சடங்குகளை அறிந்துகொள்ள அவரது அம்மாவே காரணம் . லண்டன் நகரில் வழக்குரைஞர் படிப்பிற்காக தங்கியிருந்த காலகட்டம் அவரை சிந்தனையாளராக மாற்றியது . வாழ்க்கை முழுமைக்குமான லட்சியவாத கருத்துகளை அவர் லண்டனில்தான் பெற்றார் . 1888-1891 ஆண்டில் லண்டனில் சட்டம் படிக்க வழக்குரைஞராக காந்தி சென்றார் . பிறகு , 1906-1931 காலகட்டத்தில் , அரசியல் காரணங்களுக்காகவும் பணிக்காகவும் நான்கு முறை காந்தி பயணித்தார் . இந்தியா காலனி தேசமாக இருந்தது . இ்ங்கிலாந்து அதனை ஆண்டு வந்த பேரரசு . இதனால் லண்டன் நகரம் பல்வேறு முக்கியமான தலைவர்கள் வந்து செல்லும் இடமாக புகழ் பெற்றிருந்தது . காந்தி முதல்முறையாக லண்டனுக்கு வந்தபோது தன்னோடு டைரி ஒன்றை வைத்திருந்தார் . அதில் பல்வேறு கு...

காந்தியின் அரசியலைச் சொன்ன அவரின் உணவுமுறை

படம்
              காந்தியின் அகிம்சை , சுய சிந்தனை அனைவரும் அறிந்த ஒன்றுதான் . இதைக்கடந்த ஒன்றை அவர் செய்தார் . அதுதான் , நேர்த்தியான உணவு பண்டங்களைக் கொண்ட உணவுமுறை . காந்தி , வைஷ்ண குடும்பத்தில் பிறந்தவர் . சைவ உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினார் . அவர் சிறுவயதில் ஒருமுறை ஆட்டின் இறைச்சியை ரகசியமாக சாப்பிட்டுப் பார்த்தார் . பிறகு வாழ்வெங்குமே இறைச்சியை அவர் சாப்பிடவில்லை . அதற்கு மாற்றாக கிடைத்த பொருட்களை உண்டார் . அவை அனைத்துமே எளிமையான உணவுதான் . கோதுமை , சோளம் , சோயாபீன்ஸ் அல்லது வேர்க்கடலை பால் ஆகியவற்றை காந்தியின் உணவு என ஆப்பிரிக்க அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் உருவாக்கினார் . இது இன்று வீகன் என்று கூறப்படுகிறது ., பசுவின் பாலை தானே பயன்படுத்தி வந்தாலும் கூட ஒரு கட்டத்தில் அப்படி விலங்கிடமிருந்து பெற்று குடிப்பது அறமல்ல என்று தோன்றியிருக்கிறது .. உடனே அதை நிறுத்திவிட்டார் . ஆனால் அந்த பால் கொடுத்த நிறைவை அதற்கு பதிலீடான உணவுகள் ஏதும் கொடுக்கவில்லை . எனவே , வேறுவழியின்றி பாலுக்கு மாற்றாக பாதாம் பாலை காய்ச்சி குடிக்கத் த...

இந்தியாவின் காய்கறிகள் மற்றும் வாசனைப்பொருட்கள் ஆச்சரியம் தருகின்றன! - அலைன் டுகாசி, சமையல் கலைஞர்

படம்
  அலைன் டுகாசி சமையல் கலைஞர் உலகளவில் மிச்செலின் ஸ்டார் பெறுவது கடினம். அலைன் இந்த வகையில் 17 ஸ்டார்களைப் பெற்றுள்ள சமையல் கலைஞர். தனது தொழில்முறை வாழ்க்கையில் 21 ஸ்டார்களைப் பெற்றுள்ளார். இப்போது சூழல் நிலைத்தன்மை கொண்ட  தாவர உணவுகளை சமைக்கும் செயல்பாடுகளை செய்துவருகிறார். குர்கானில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தில் இகோல் டுகாசி எனும் தனது வளாகத்தை உருவாக்குவதாக கூறியுள்ளார். அவரிடம் பேசினோம்.  இந்தியா சார்ந்து உங்களுக்கு பிடித்த உணவு வகை என்ன? இப்படி கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. பிரெஞ்சு உணவு வகைகளில் பிடித்த உணவு என்றாலும் கூட கூறமுடியாது. பிரெஞ்சு நாட்டில் நான் நீண்டகாலமாக வசித்தாலும இப்படித்தான் இதற்கு பதில் கூற முடியும். இந்தியாவில் எனக்கு பிடித்த விஷயம், மக்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள். அப்புறமாக பருப்புகள். இவற்றை எப்படி பயன்படுத்துவது சமைப்பது என ஓராண்டாக கற்று வருகிறேன்.  மிச்செலின் ஸ்டார்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் போராடி வருகிறீர்களா? எங்களது உணவகம் மூன்று மிச்செலின் ஸ்டார்களைப் பெற்றுள்ளது. நாங்கள் நடத்தும் உணவகம்...

தனித்தமிழை வளர்க்க தன்னை அர்ப்பணித்த தமிழ் அறிஞர்! - மறைமலையடிகள் கடிதங்கள்

படம்
  மறைமலையடிகள் படம் - புதிய தலைமுறை மறைமலையடிகளின் கடிதங்கள் தமிழ் மின்னணு நூலகம் மறைமலையடிகள், தமிழ்த்தொண்டு ஆற்றியவர். தனித்தமிழில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சொற்பொழிவுகளையும் ஆற்றியவர்.  அவர் இந்த நூலில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார். இதில் அவரே முந்தைய பக்கங்களில் குறிப்பொன்றை குறிப்பிடுகிறார். அஞ்சலட்டையில் ஆங்கிலத்திலும், இன்லேண்ட் தாளில் தமிழிலும் எழுதுவேன் என்று. எதற்காக இந்த விதி என்று புரியவில்லை.  அவரது காலத்தில் அவருக்கான சில நெறிமுறைகளோடு வாழ்ந்திருக்கிறார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.  1920 தொடங்கி 1950 ஆம் ஆண்டு வரையில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை முறையாக ஆண்டு கணக்கில் தொகுக்கப்படவில்லை. எனவே நடைபெறும் சம்பவங்கள் தாறுமாறாக இருக்கும் என்பதால் வாசகர்களே மனதில் தொகுத்துப் பார்த்து புரிந்துகொண்டு சிவனை  மனதில் நினைத்து வாசிக்க வேண்டியதுதான்.  கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதப்படுபவைதான். அதனை நூலாக தொகுக்கும்போது குறிப்பிட்ட நபரின் பெயரைக்கூட எடுத்துவிட்டால் அதனை வாசிப்பவர்கள் எப்படி பொருந்திப் பார்ப்பா...

சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

படம்
  மாட்டிறைச்சி அரசியல் குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல.  மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள்.  இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ...

சமூக வளர்ச்சிக்கு உதவும் திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்!

படம்
சென்னையில் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு அக்சயா பாத்ரா அமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ளது . பெங்களூருவைச் சேர்ந்த இந்த அமைப்பு பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . அமைச்சர் வேலுமணி இத்திட்டம் பற்றி ட்விட்டரில் முன்னமே அறிவித்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி எந அறிவிப்பையும் வெளியிடவில்லை . அக்சய பாத்ரா அமைப்பின் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கட்டிடம் பேசினோம் . தமிழ்நாடு அரசு மதிய உணவுத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது . அதுபற்றிய உங்கள் கருத்து ? தமிழ்நாடு அரசின் மதிய உணவுத்திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடியான திட்டமாக உள்ளது . இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன . உங்களது அமைப்பு இந்தியாவில் உள்ள பன்னிரண்டு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது . ஆனால் தமிழகத்தில் உங்களுக்கென சமையல் செய்ய ஒரே ஒரு சமையற்கூடம்தானே உள்ளது ? நாங்கள் வரும் மார்ச்சிலிருந்து சென்னை கார்ப்பரேஷன் அமைப்புடன் இணைந்து 5, 090 மாணவர்களுக்கு நாங்கள் கா...

இறைச்சி சுவையில் சைவ பலகாரங்கள் எப்படி உருவாயின?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி இறைச்சி சுவையில் முறுக்குகள் எப்படி உருவாகின்றன? இறைச்சி சுவையில் உருவாகும் பல்வேறு பிஸ்கெட்டுகள், முறுக்குகள் சைவ வகையைச் சேர்ந்தவைதான். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கு நாடுகளில் 2013 ஆம் ஆண்டு தொடங்கின. இன்று பல்வேறு இறைச்சி சுவையில் தின்பண்டங்களைத் தயாரித்து வருகின்றனர். இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள்தான் அதன் மணத்திற்கு காரணம், இவற்றை சூடுபடுத்தும்போது இறைச்சிக்கான தன்மை உணவில் உண்டாகிறது. இதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சைவ உணவுகள் ரெடியாகின்றன. அப்படியே அல்ல. தாவரங்களிலுள்ள அமினோ அமிலங்களான எல் - சிஸ்டெய்ன் எனும் அமினோ அமிலத்தை இதற்காக பயன்படுத்துகின்றனர். இதன்விளைவாக சைவத்திலும் நிறைய தின்பண்டங்கள் புதிய மணம் சுவையில் சாப்பிடக் கிடைக்கின்றன. நன்றி - பிபிசி