இடுகைகள்

பேராசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரி உட்பட அதிகபட்சவிலை என்பது நகைச்சுவையா?

படம்
      மதுரையைச் சேர்ந்த பல்பொடி நிறுவனம். பல்பொடி, அலுப்பு மருந்து என விற்று இன்று அதே பல்பொடியில் பற்பசை அளவுக்கு முன்னேறியுள்ளது. அந்த நிறுவனத்தின் பல்பொடி பிராண்ட் பத்து கிராம் அளவுகொண்ட பாக்கெட் ரூ.2 விலை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் ஐந்து ரூபாயில் விற்கிறார்கள். அப்போது ரூ.2 என விலையை அச்சிட்டுள்ளது நகைச்சுவைக்காகவா? ஐந்து ஆண்டுகள் என காலாவதி காலத்தை அச்சிட்டுள்ள துணிச்சலான நிறுவனம், விலையை ஏன் இப்படி மாற்றி விற்க வேண்டும் என்று தெரியவில்லை.  இந்த நிலையில் பல்பொடியை, சித்த மருத்துவம் என்று வேறு போட்டு அதையும் கீழான நிலைக்கு கொண்டுவருகிறார்கள். வியாபாரிகள் இன்று அரசியலில் வலிமை பெற்று வருவதால், குறைகளை சுட்டிக்காட்டினால் கூட சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து மிரட்டும் ஆபத்துகள் அதிகரித்துள்ளன.   

ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது

படம்
    ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது ஒருவரின் அப்பா, நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியவர். வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்டு செய்யும் கடமையில் கவனம் செலுத்தவேண்டும் என நினைத்தவர். ஆனால், அவரது மகன்களோ செய்யும் அனைத்து விஷயங்களிலும் லாபத்தையே எதிர்பார்க்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? அப்படியான சூழலில், அப்பா தனது மகன்களை ஆமை முட்டைகள். அவர்களை எனது மகன்களாகவே நினைக்க முடியவில்லை என்றார். இப்படி கூறியவர் கமாண்டர் வாங் ஸென். சீனாவின் தொடக்க கால கட்ட தலைவர்கள் உடுத்தியுள்ள ஆடை எளிமையானது. ஃசபாரி சட்டை பேண்ட் அல்லது ராணவ சீருடையை உடுத்தியிருப்பார்கள். பெரும்பாலும் அழகான சட்டை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. ஆனால், அவர்களது மகன்களது வாழ்க்கை மிகவும் சொகுசானது. எளிமையான மனிதர்களிடமிருந்து வேறுபட்டது. திகைப்பூட்டும் அளவுக்கு பகட்டானது. தொண்ணூறு இரண்டாயிரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வாரிசுகள் வளம் பெற்றுவிட்டார்கள். தொடக்க கால கல்வியை பெய்ஜிங்கில் பெற்றவர்கள், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லத் தொடங்கினர். அதிபர் ஷியின் அப்பா, ஷ...

பிச்சைக்காரன், பேராசையும் கொலைவெறியும் கொண்ட பணக்காரர்கள் வாழும் அரண்மனைக்குள் நுழைந்தால்....

படம்
      பிளடி பெக்கர் தமிழ் இயக்கம் சிவபாலன் பிச்சைக்காரர் ஒருவருக்கு மாளிகை ஒன்றில் சாப்பாடு இலவசமாக போடுவதைச் சாப்பிட வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைபவர், சொத்துப்பிரச்னையில் சிக்கிக்கொண்டு உயிர் பிழைக்கப் போராடுகிறார். உண்மையில் அவர் எதற்கு அங்கு சென்றார், உயிர்பிழைத்து வெளியே வந்தாரா என்பதே கதை. படத்தின் தலைப்பு பற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. படத்தில் அனைத்தும் உள்ள பணக்காரர், எதுவுமே இல்லாத பிச்சைக்காரன் என இரண்டு அதீத நிலைகள் காட்டப்படுகின்றன. இந்தப்படம் ஆங்கிலப்படத்தின் தாக்கம் பெற்றது என ஒருசாரார் கூறினர். இருக்கலாம். மறுக்க முடியாது. படத்தை தயாரித்த இயக்குநர் நெல்சனே அமெரிக்க டிவி தொடர்களால் உந்துதல் பெற்று காட்சிகளை அமைப்பவர்தான். அப்போது அவரின் மாணவரான இப்பட இயக்குநர் எப்படி மாறுபட்டு இருப்பார்? கடினமாக உழைத்தால் பணக்காரராகிவிடலாம் என்று நினைப்பதையே படம் பகடி செய்கிறது. ஒருவர் உழைப்பது சரி. ஆனால், தான் செய்வது சரி. தனக்கு கீழே சிலர் இருக்கிறார்கள் என மனநிம்மதி பெறுகிறார். சிலசமயங்களில் அதை சொல்லிக்காட்டவும் வன்ம...

குறைந்த வேலை நேரத்தில் உழைத்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?

படம்
      குறைந்த நேரம் உழைப்பு, அதிக நேரம் வாழ்க்கை அணுக்க முதலாளித்துவத்தை கொண்டுள்ள இந்தியா, தொழிலாளர் சட்டங்களை ஏற்கெனவே திருத்தி, உரிமைகளை பறித்து வருகிறது. அப்படியும் கூட மனநிறைவு பெறாத மனச்சிதைவு கொண்ட பேராசைக்கார கிழவாடிகள், இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டும் என ஊளையிட்டு வருகிறார்கள். அதாவது, உழைத்தால் அவர்களுக்கு நல்லது. சொத்து மதிப்பு ஏறும். தொழிலாளர்களுக்கு உடைந்த மண்சட்டி ஓடு கூட கிடைக்காது. மாதசம்பளக்காரர்களிடம் வருமான வரித்துறை ஜேப்படி திருடன் போல நடந்துகொள்கிறது. இந்திய அரசு வரியை வெளிநாடுகள் அளவுக்கு வாங்கிவிட்டு மருத்துவம், கல்வி, என கேள்வி கேட்டால் தனியாரிடம் துரத்திவிடுவார்கள். கார்த்திக் நேத்தாவின் வரிகளில் சொன்னால் ஒரு கண்ணில் அகங்காரம், மறுகண்ணில் ஓம்காரம் என்பது அரசைப்பற்றி புரிய வைக்க சரியாக இருக்கும். 1926ஆம் ஆண்டு ஹென்றி போர்டு, தனது கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஐந்து நாட்கள் வேலை. எட்டு மணி நேரம் உழைப்பு என்ற விதிகளைக் கொண்டு வந்தார். இதை ஒன்பது மணி தொடங்கி ஐந்து மணி வரையிலான வேலை என்று கூட குறிப்பிடும் வழக்கம் இருந்தது. அதிக நேரம் உழைக்கும் நாடு...

மனிதர்களின் பேராசைதான் வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் - எழுத்தாளர் ஷீலா டாமி

படம்
            எழுத்தாளர் ஷீலா டாமி உங்களது பூர்விகம் வயநாடு. அதைப்பற்றி புனைவுகளில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இப்போது அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பு மாறிவருவதைக் கவனித்துள்ளீர்களா? எனது முதல் நாவல், வள்ளி. வயநாடு நிலப்பரப்பு எப்படி மாறுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பாவி மக்கள் பலியானதைப் பார்க்க வேதனையாக உள்ளது. சிறுவயதில் காடுகள், அதிலுள்ள ஆறுகளைப் பார்த்திருக்கிறேன். இன்று வறட்சி, அதீத மழை என்று காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நான் வசந்தகாலத்தை ஒவியமாக தீட்டுகிறேன் என்றால், அந்தக்காலம் பனிக்காலமாக இருக்கும் என்று தத்துவவாதி ஜீன் ஜாக்குயிஸ் ரூசியு கூறியதை நினைத்துப்பார்க்கிறேன். காலநிலை மாற்றத்தை உணர வைக்க புனைவு உதவுகிறதா? நாம் இன்று பூமியை நரகமாக்கிக்கொண்டு அதிலேயே சிக்கித் தவித்து வருகிறோம். இதை நமக்கு உணர்த்த புனைவுகள் உதவுகின்றன. அறிவியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை ஒருவர் வாசிக்கலாம். ஆனால் அவற்றில் புனைவுகளைப் போல உணர்ச்சிக...

டாய்ச்சி கல்லை அடைவதற்காக அழிக்கப்படும் இனக்குழு!

படம்
  டாய்சீஸ் பீஸ்ட் மவுண்ட் சீன திரைப்படம் ஒன்றரை மணிநேரம் ஐக்யூயி ஆப் டாய்ச்சி இனக்குழுவில் டாய்ச்சி கல் உள்ளது. அது சக்திவாய்ந்த ஒன்று. அதை கையகப்படுத்தினால் அவர் சகலகலா வல்லவன் ஆகிவிடலாம் என நம்பிக்கை, வதந்தி எல்லாம் இருக்கிறது. இதை யாரோ பரப்பிவிட பல்வேறு சக்தி வாய்ந்த இனக்குழுக்கள் டாய்ச்சி இனக்குழுவை ஓரிரவில் தாக்கி அழிக்கின்றன. அதில் மிஞ்சுவது, நாயகனும் அவனது தோழியும்தான். இருவரும் சிறு வேலைகளை செய்து பிழைத்து வருகிறார்கள். தங்கள் குடும்பத்தை அழித்த பகைவர்களை பழிவாங்க நாயகன் நினைக்கிறான். அதற்கான காலமும் வருகிறது. உண்மையில் அவனது இனக்குழுவைக் காட்டிக்கொடுத்த துரோகி யார்? அவன் அம்மா வயிற்றில் இருந்த பிறக்கும் தருவாயில் இருந்த குழந்தை எங்கே? டாய்ச்சி கல் சக்தி வாய்ந்த ஒன்றா என்பது பற்றிய கேள்விகளுக்கு படம் விடை தருகிறது.  பழிவாங்கும் வெறி நம்மை அழித்துவிடும் என சொல்லி படத்தை சோகமான முடிவுடன் முடித்திருக்கிறார்கள். சோகம் என்று சொல்வதா, விதி என்று சொல்வதா? நாயகன், அவனுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போக அவள் எதிரியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துபோகிறாள். இவனும் கூட நினைவிழ...

குடும்ப வறுமையைத் தீர்க்க கள்ளநோட்டு அடிக்கும் புற்றுநோய்க்குள்ளான ஏழை அச்சகத் தொழிலாளி!

படம்
  நோ வே ஃபார் ஸ்டூமர் சீன டிராமா 24 எபிசோடுகள் ஐக்யூயி ஆப் இந்த தொடருக்கு எட்டு பாய்ண்டுகள்தான் ரேட்டிங்காக கிடைத்திருந்தது. ஆனால் தொடரின் போஸ்டர் ஈர்ப்பாக தெரிந்தது. மோசமில்லை. மெதுவாக நகரும் சாகச வகை தொடர். பாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான படம்தான். ஆனால் கதையின் போக்கில் நாடு, தேசியவாதம், நன்மை, தீமை என்பதெல்லாம் அடிபட்டு போய்விடுகிறது. இறுதியாக தொடர் முடியும்போது நமக்கு எஞ்சுவது, கும்பலாக ஆயுதங்களை வைத்து ஒரு கூட்டம் செய்வது நியாயம், அவர்கள் கூறுவது நீதி. ஆயுதம் இல்லாமல், பிறரை கொல்ல மனமில்லாதவன் பலவீனமாக உள்ளான். அவன் தன்னை மிரட்டும் கொள்ளைக்கார, பேராசைக்கார கூட்டத்திற்கு பயப்படுகிறான். வலி பொறுக்கமுடியாமல் எதிர்த்து அடிக்கும்போது அவனை அதிகார வர்க்கம் கண்டிக்கிறது. ஆனால் முன்னர் அநீதியாக அவன் தண்டிக்கப்படும்போது அமைதியாக இருக்கிறது. ஏன்? அந்த கேள்விதான் தொடரைப் பார்த்து முடிக்கும்போது ஒருவருக்கு தோன்றுகிறது.  எந்த பதிலும் இல்லை.  லிஷான் என்ற நகரம் உள்ளது. அங்கு கள்ளநோட்டு புழக்கத்தில் உள்ளது. அதை யார் அச்சிடுகிறார்கள். புழக்...

மக்களின் ஆசைகளை நிறைவேற்றி வைத்து அவர்களை குற்றப்பங்காளிகளாக்கும் சூப்பர் ஆப்!

படம்
  விஷ்ஷர்  சீன தொடர்  12 எபிசோடுகள் போனில் தானாகவே வந்து அமரும் விஷ்ஷர் ஆப்பில், உங்கள் ஆசைகளைக் கூறினால் அது நிறைவேற்றப்படும். பதிலுக்கு அந்த ஆப் சொல்லும் ஒரு வேலையை நீங்கள் செய்யவேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆசையை நிறைவேற்ற கோரிக்கை அனுப்பமுடியும். இப்படி மக்களின் பேராசையைத் தூண்டும் ஆப்பின் பின்னணி, அதிலுள்ள மனிதர்களின் நோக்கம் பற்றி பத்திரிகையாளர் ஆராய்ந்து கண்டுபிடித்து தடுக்கிறார்.  பனிரெண்டு எபிசோடுகளே நீளம் என்று சொல்லுமளவு பாத்திரங்களின் நடிப்பு எரிச்சல் ஊட்டுகிறது. அதிலும் நா டு என்ற பாத்திரத்தில் வரும் பத்திரிகையாளர் தோற்றம், நடிப்பு என அனைத்துமே மிகையாக இருக்கிறது. வயதானவர் போல காட்ட முகத்தில் தாடியை நடவு செய்து இருக்கிறார்கள். அது அவருக்கு ஒட்டவே இல்லை. அவரின் பாத்திரம் கடைசிவரை குழப்பமானதாகவே இருக்கிறது. நேர்மையானவரா, சந்தர்ப்பவாதியா, புத்திசாலியா என ஏதும் புரிவதில்லை.  கற்பனையான ஒரு நகரை காண்பிக்கிறார்கள். அந்த நகரை முப்பது நாட்களில் அழிப்பதுதான் திட்டம். அதற்காக விஷ்ஷர் ஆப் வருகிறது. இந்த ஆப், மக்களின் ஆசையை நிறைவேற்றி வைத்து பதிலுக்கு அவர்களை...

உலக அனுபவத்திற்காக பேய்கிராமத்தை விட்டு வெளியேறும் வைத்திய வீரன்!

படம்
  மில்லினியம் அல்செமிஸ்ட் மாங்கா காமிக்ஸ் 100-- பேய்க்கிராமம் எனும் இடம் சபிக்கப்பட்ட இடம். அங்கு செல்பவர்கள், திரும்ப உலக வாழ்க்கைக்கு வரவே முடியாது. இங்கு, திருடர்கள், கொள்ளைக்காரர்கள், துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வாள் வீரர்கள் என பலரும் வந்து வாழ்கிறார்கள். இங்கு வீரர் ஒருவர் தனது முதலாளி குழந்தையை மரத்தில் கொண்டு வந்து விடுகிறார். அழும் குழந்தையின் வாயில் துணியை திணித்துவிட்டு  செல்கிறார். அது யார் வீட்டு குழந்தை, ஏன் அதை அழாமல் வாயில் துணி வைத்து பாதுகாக்கிறார்கள் என்பது கதையில் பின்னாடி வரும் என நம்பலாம்.  அந்த குழந்தைதான் நாயகன். அவன், குழந்தையாக இருக்கும்போது பேய் கிராமத்தில் வாழும் நான்கு முதியவர்கள் எடுத்து வளர்ப்பு தந்தைகள் போல கவனித்து வளர்க்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்டவர்கள். குழந்தைக்கு தங்களது இனக்குழுவின் பல்வேறு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். மருத்துவம், திருட்டு, வாள்வீச்சுக்கலை, பொறிகளை அமைப்பது, ஆயுதங்களை உருவாக்கும் கலை என அனைத்தையும் பல்லாண்டுகள் கற்கிறான். கதையில் நம்மை ஆச்சரியப்படுத்துவது, நாயகன் தனக்கென சா...

2015ஆம் ஆண்டு சூழல் ஒப்பந்தம் மீறப்பட்டால் என்ன விளைவுகளை சந்திக்க நேரும்?.....

படம்
  2015ஆம் ஆண்டு பாரிஸ் சூழல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்குப் பிறகு எட்டாண்டுகள் கழிந்துள்ள நிலையில், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 1.5 டிகிரி செல்சியஸ் என வரையறை செய்துகொண்டு நாடுகள் முயற்சிகளை செய்தன. ஆனால், காலப்போக்கில் பெருநிறுவனங்கள் கார்பன் வெளியீடு பற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய வருமானம் எந்தளவு பெருகியுள்ளது. பங்குச்சந்தையில் பங்கு விலை அதிகரித்துள்ளது பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். அரசும் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.  திரைப்படத்தின் வருமானம் என்பதைவிட அதைப்பற்றிய கருத்தியல் ரீதியான விமர்சனமே முக்கியம். ஆனால் இன்று மோசமான படம் கூட வருமான சாதனை செய்கிறது. அதை வைத்தே படத்தின் கருத்து சரியில்லை என்று கூறுபவர்கள் மீது வழக்கு தொடங்குகிறார்கள். அவர்களின் பதிவுகளை நீக்க முயல்கிறார்கள். உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்தபிறகே, மாசுபாடு, கார்பன் வெளியீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தலைவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவருகிறார்கள். போராளிகளை சிறையில் அடைத்து வருகி...

பேராசையைத் தூண்டி குற்றம் செய்யவைக்கும் ஏஐ ஆப்!

படம்
  கோட் – ஜப்பான் பிரீஸ் ஆஃப் விஷஸ் (code –japan price of wishes) J drama Rakutan viki   மினாடோ, காவல்துறையில் வேலை செய்கிறான். தான் நம்பும் விஷயத்தை வன்முறையான வழியில் நிரூபிக்க முயலும் பாத்திரம். இவனை அவனது குழு தலைவர் தாமி, நண்பன் மோமோடோ, காதலி யுகா ஆகியோர்தான் பாதுகாத்து வருகிறார்கள். யுகா, தான் கர்ப்பிணி என்ற தகவலைக் கூறும்போது மினாடோ ஆனந்தமாகி அவளை மணந்துகொள்ள முடிவெடுக்கிறான். அவர்கள் காதலித்து ஐந்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் நாளின் இரவில் திடீரென யுகாவிற்கு தடய அறிவியல் துறையில் இருந்து   அழைப்பு வருகிறது.   இரவு என்பதால்,, அவளை தனியாக அனுப்பாமல் மினாடோ தானும் கூடவே சென்று அலுவலகத்தில் விட்டுவிட்டு காத்திருக்கிறான். ஆனால் யுகா, பிணமாக திரும்ப வருகிறாள். லிஃப்ட் விபத்தில் இறந்துபோகிறவளின் வழக்கை விபத்து என காவல்துறை முடிக்க நினைக்கிறது. ஆனால் மினாடோ அதை நம்பவில்லை. கொலைவழக்காக நினைத்து ஆராயத் தொடங்குகிறான். இதற்கிடையில் அவனது பள்ளி நண்பன் கோட் எனும் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்துகிறான். அதில்   ஒருவர் நிறைவேற நினைக்கும் ஆசைகளை டைப் செய்து நிறைவேற்றிக...

மதுவில் கலக்கப்பட்ட விஷம் - மனைவியா, தோழியா -யார் கொலையாளி?

படம்
  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் கேசி மெக்பெர்சன் பொமெராய். இவரை சுருக்கமாக கேசி என அழைக்கலாம். மருந்துகள் விற்கும் விற்பனைப் பிரதிநிதி. இவர் செய்யும் வேலையை அவரே சொன்னால்தான் தெரியும். ஏனெனில் பார்க்க திரைப்பட நடிகர் போல தோற்றம் கொண்டவர். அதனால் சில ஆண்டுகள் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். அவர் பார்பரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். உண்மையில் கேசிக்கும், பார்பராவுக்கும் எந்தவிதத்திலும் கணவன் மனைவி   என்ற பொருத்தமே கிடையாது. பார்க்கும் யாரும் மனதில்   நொடியில் இந்த உண்மையை உணர்வார்கள். ஆனால் சட்டப்பூர்வமாக தம்பதிகளாக வாழ்ந்தனர். கேசிக்கு கடல் நீரில் சர்ஃபிங் செய்வதில் நிறைய ஆர்வம் உண்டு. எனவே, தனது மனைவியுடன் அங்குலியாவில் தனியாக வீடு வாடகைக்குப் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டார். அருகிலேயே கடலும் இருக்கையில் அவருக்கு மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. ஆனால் எல்லாமே டிசம்பர் 2018ஆம் ஆண்டோடு சரி. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருக்க கேசியும், அவரது பள்ளி   கால நண்பர் காலெப் கில்லெரியும...

பெருநிறுவனங்களின் அதீத வணிகத்தைக் கட்டுப்படுத்த துடிக்கும் உலக நாடுகள்!

படம்
  பெருநிறுவனங்களின் வணிக வெறி பெரு நிறுவனங்களை உலக நாடுகள் எதிர்க்க காரணம்! குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள வணிக நிறுவனங்கள் காலப்போக்கில் வலிமை கொண்டதாக மாறுகின்றன. இதன் விளைவாக, பல்வேறு சமூக, பொருளாதார கொள்கைகளை கூட இயற்றுவதற்கு அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பிரமாண்டமாக வளர்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு, இப்படி வளரும் பெரு நிறுவனங்களால் வரி வருவாய் கிடைத்தாலும். அவை அதன் அதிகாரத்திற்கு அச்சறுத்தலாக மாறுகின்றன. குறிப்பாக, எண்ணெய், பருப்பு ஆகியவற்றின் விலையை அரசு குறைக்க நினைக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதால், அதை குறைக்கச் செய்யும் நடவடிக்கை என கொள்ளலாம். மேற்சொன்ன இரு பொருட்களையும் நாட்டின் சிக்கலான நிலையைக் கருதி, விலையை குறைத்துக்கொள்ள வியாபாரிகள் தயாராக இருக்கலாம். ஆனால், பெருநிறுவனங்கள் அந்த நேரத்தில் கிடைக்கும் அதிக லாபத்தை விட்டுவிட தயாராக இருப்பதில்லை. இதனால, நாட்டில் எண்ணெய், பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டாலும் அரசு அதை தடுக்க முடியாது. காரணம் பெருநிறுவனங்களின் பொருள் விநியோக கடைக...

நவீன உலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனிநபர்களே காரணம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி ஜே கிருஷ்ணமூர்த்தி உலகில் மோசமான நெருக்கடி நிலை, ஏதேனும் சில செயல்பாடுகளால், வாய்ப்பால் ஏற்படுவதில்லை. அதை உருவாக்குவது மக்கள் கூட்டத்தில் உள்ள தனிநபர்களான ஓவ்வொருவரும்தான். பொறாமை, வேட்கை, பேராசை, அதிகார ஆசை, பிறரைக் கட்டுப்படுத்துதல், போட்டி,, இரக்கமில்லாத தன்மை, உடனடியாக பலன்கள் கிடைக்கவேண்டுமென நினைத்தல் ஆகியவற்றை தினசரி வாழ்க்கையில் நாம் செய்கிறோம். உலகில் உருவாகும் அபாயத்திற்கும் குழப்பத்திற்கும் வேறு யாரோ காரணமல்ல. நாம்தான் காரணம்.   அதாவது நீங்களும், நானும்தான்.   ஒன்றை ஆழமாக கவனிக்காமல், சிந்திக்காமல், ஏதேனும் பேராசையை நோக்கி ஓடுவது, உணர்வுகளின் தேவையை மட்டுமே தீர்மானிப்பது, காரணமாக ஆழமான பேரழிவு நேருகிறது.   இந்த மோசமான நிலைக்கு நெருக்கடிக்கு நீங்கள்தான் பொறுப்பு. வேறு எந்த குழுவோ, தனிநபரோ காரணமல்ல. நீங்கள் மட்டுமே காரணம். Madras The cpllected works vol .5october 1947 the collected works 4 நவீன உலகம் என்றால் என்ன? பல்வேறு நுட்பங்களாலும், பெரிய நிறுவனங்களின் திறனாலும் உலகம் உருவாகியுள்ளது. இங்கு, தொழில்நுட்ப மேம்பாட்டுடன் மனிதர...