அரசு இல்லாத ஒழுங்கு, வன்முறை இல்லாத அமைதி - மக்கள் அதிகாரம்
மக்கள் அதிகாரம் 1 தமிழ் திரைப்படங்களில் காவல்துறையினரின் கொடூரங்களை உண்மையைக் காக்க அப்படி செய்கிறார்கள் என காட்டியிருப்பார்கள். ஆய்வாளர், தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி யாரொருவரையும் கள்ளத்துப்பாக்கியால் சுடுவார். அல்லது அரசு வழங்கிய துப்பாக்கியால் சுட்டுவிட்டு எப்படி கணக்கு காட்டவேண்டுமென தனக்கு தெரியும், உரிமம் பெற்ற ரவுடி, எவுடாய்த்தே நாக்கேண்டி, சம்பேஸ்தா, கண்ட கோசேஸ்தா என பொறிபறக்க வசனம் பேசுவார். இதெல்லாம் திரையில் சரி. நிஜத்தில் பாதிக்கப்படும் மக்கள் எவரும் கல்லறையில் இருந்து மீண்டெழுந்து தனக்கு நடந்த அநீதியைக் கூறுவதில்லை. அதுதான் வன்முறையின் பலம். செத்தால் புதைத்துவிடலாம். உயிரோடு இருந்தாலும் கை, கால்களை உடைத்து விட்டால் அவன் சோறு தின்ன, மலம் கழிக்க உடல் ஒத்துழைக்கவே பல மாதங்கள் ஆகும். அதுவுமில்லாமல் வன்முறை ஏற்படுத்திய பயம் காரணமாக அரசுக்கு எதிராக அவன் சாட்சியமும் கூறமாட்டான். அரசுக்கு ஆதரவாக உள்ள தொழிலதிபர்களுக்காக, நேரடியாக அரசுக்காக என ஏதோ ஒருவகையில் மக்கள் மீது காவல்துறையின் தாக்குதல் அல்லது கொலை நடைபெறுகிறது. இப்படியாக வன்முற...