இடுகைகள்

டிமென்சியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்?

 அறிவியல் தகவல்கள் மிஸ்டர் ரோனி நடுத்தர வயதில் காலம் வேகமாக நகர்வது தோன்றுவது ஏன்? இப்போதுதான் உடையை வாங்கினேன். ஆனால், அதற்குள் இந்த நாகரிகம் பழசாகிவிட்டதா? காலம் வேகமாக ஓடுகிறது என சிலர் ஆச்சரியப்படுவார்கள். அவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயது ஆசாமிகளாக இருப்பார்கள். குழந்தையாக இருப்பவர்களுக்கு நேரம் என்பது அப்படியே உறைந்து நிற்பது போல தோன்றும். இளையோருக்கு குழந்தையிலிருந்து நீண்ட தொலைவு பயணித்து வந்தாலும், காலம் வேகமாக நகர்ந்திருப்பதை அறியமாட்டார்கள். எதிர்காலம் என்ன விஷயங்களைக் கொண்டிருந்தாலும் நடைமுறை மட்டுமே நிஜம் என்பதை புரிய சிலகாலம் தேவை.  ஒரு மனிதர் இயல்பாக நடைபாதையில் நடந்து செல்லும்போது சுற்றியுள்ள கட்டுமானங்கள் அப்படியே மாறிக்கொண்டே நவீனமாக மாறுவது போலத்தான் காலம் மாறுவதை கருதவேண்டும். காலம் வேகமாக நகருவதை நடுத்தர வயது கொண்டவர்கள் உணர்வார்கள்.  டிமென்சியா என்றால் என்ன? டிமென்சியா என்றால் மூளையில் உள்ள ஒருவரின் அறிவுத்திறன்களை இழக்கும் நோய் என்று கூறலாம். திட்டமிடல், கருத்துகளை கோர்வையாக கூறுவது, சுயமாக தன்னை கண்காணித்தல், நினைவுகள் ஆகியவற்றை நோயாளி இழந்துவிடுவா...

டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் க்யூடி ஹியூமனாய்ட் ரோபோட்!

படம்
  டிமென்சியா நோயாளிகளுக்கு உதவும் சமூக ரோபோட்டுகள்!  சமூக ரோபோட்டுகள் என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாய், பூனை, உதவியாளர் என பல்வேறு வடிவங்களில் நிறைய ரோபோக்கள் உண்டு. அவையெல்லாம் இந்த வகையில் சேரும். இப்படியான ரோபோட்டுகள் நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும், குறைந்தபட்சம் மனிதர்களின் வஞ்சனையிலிருந்தேனும் விலக்கி நட்பு பாராட்டும். நோயாளிகளுக்கு வழிகாட்டியாக உதவும்.  ஆனால் தற்போது இந்தியானா பல்கலைக்கழக ரோபோட் ஆராய்ச்சியாளர் செல்மா செபானோவிக் (selma sabanovic) உருவாக்கியுள்ள ஹியூமனாய்ட் ரோபோட்டான க்யூடி வேறு வகையில் உள்ளது. அதாவது, சாட் ஜிபிடி 4 எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் சமூக ரோபோட்டான க்யூடி, டிமென்சியா நோயாளிகளுக்கு உதவுகிறது. இத்தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் பல்வேறு உணர்ச்சிகளை தனது திரையில் காட்டி உரையாடுகிறது. டிமென்சியா நோயாளிகளுக்கு நினைவுகள் மெல்ல அழிந்துகொண்டே வரும். அதுவரை நன்கறிந்த திறனான கார் ஓட்டுவது கூட மெல்ல மறந்துபோகும். மைக்ரோவேவ் ஓவனை இயக்குவது எப்படி என தடுமாறுவார்கள். உச்சபட்சமாக உணவு சாப்பிடுவது, உடை மாற்றுவது கூட மறந்துபோகும்....