அசைவம் உண்ணுபவர்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டுமா?
சைவர்களின் பெருமையும், ஆணவமும்! சைவம், அசைவம் இரண்டில் எது உயர்ந்தது? இன்றைய இந்தியாவில் இது முக்கியமான விவாதப்பொருள். இதுபோன்ற விவாதங்களை சைவ உணவுபழக்கத்தினர்தான் உருவாக்கி வாதிட்டு வருகிறார்கள். சைவ உணவுமுறைதான் மனிதர்களுக்கானது என்று அவர்களே வாதிட்டு வென்று வருகிறார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பே தேவையில்லை என்று கூறலாம். அசைவ உணவுப்பழக்கத்திற்கு சைவ உணவுப்பழக்கத்திற்கு உள்ளது போன்ற விவாதம் செய்யும் நபர்கள் இல்லை. ஆனாலும் கூட அசைவம் உண்ணும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைவர்கள், அதிகரித்து வரும் அசைவர்கள் பற்றி அக்கறையோடு நிறைய கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நாளிதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இணைய வலைதளங்கள் மதம், ஆன்மிகம் பற்றிய நிகழ்ச்சிகளை எழுதி ஒளி(லி)பரப்பிவழங்கி வருகின்றன. இவற்றிலும் சைவ உணவு கோஷம் தீவிரமாக உள்ளது. அதை பாராட்டியும் பேசி வருகிறார்கள். சைவ உணவுப்பழக்கம் அந்தளவு புகழ்மிக்கது, பயன்மிக்கது என்றால் எந்த விளம்பரம், பிரசாரம் இன்றியே அசைவ உணவுப்பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவது எப்படி? பல்வேறு சாதி, ம...