வெப்ப அலை என்றால் என்ன?
அறி்வியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வெப்ப அலை என்றால் என்ன? 1935-1975 காலகட்டத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்குதலில், பதினைந்தாயிரம் அமெரிக்கர்கள் இறந்துபோனார்கள். எண்பதுகளில், மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரத்து ஐந்நூறு பேர் இறந்துபோனார்கள். சூரிய வெப்பம் நாற்பது அல்லது நாற்பது மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்வதே வெப்ப அலை ஏற்படுவதற்கு காரணம். காற்றோட்டமான இடத்தில் மனிதர்கள் வாழ்ந்தால் அதிக மரணங்கள் ஏற்படாது. அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் முதியோரே வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வெப்பஅலை பாதிப்பை அரசு அறிவித்துவிட்டால், மக்கள் வெளியில் செல்லும்போது தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெப்பநிலை தொகுப்புபட்டியல் என்றால் என்ன? சூரிய வெப்பம் அதிகரிக்கும்போது, காற்றின் வெப்பநிலை மாறும். வெப்பநிலை நாற்பது டிகிரி செல்சியஸ் என அதிகரிக்கும்போது, மனிதர்களுக்கு நீர்ச்சுருக்கம், வெப்பத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துவிடுவது ஆகிய சிக்கல்கள் ஏற்படும். இதைக் கணிக்க பயன்படுவதே வெப்பநிலை தொகுப்புபட்டியல். 1816 என்ற ஆண்டை கோடைக்...