இடுகைகள்

தொழில்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - நாட்டுப்பற்றை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டம்!

படம்
நாட்டில் எந்த சீர்திருத்தங்கள் வந்தாலும் அதற்கு கலந்துரையாடல்கள், விவாதங்கள் அவசியம். பல்வேறு தரப்பு, கொள்கைகளை விவாதித்தால்தான் பல்வேறுவிதமான பார்வைகள் நமக்கு கிடைக்கும். அதுவே, நேர்மறை, எதிர்மறையான விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி அதை புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் சீனாவில் கல்வி சீர்திருத்தங்கள் வேகம் பெற்றது தொண்ணூறுகளுக்கு பிறகுதான். சீனா போன்ற தொன்மை பெருமை கொண்ட நாட்டில், அதன் கடந்த காலமே சீர்திருத்தங்களுக்கு எதிராக மாறுவது புதிதான ஒன்றல்ல. சீனாவில், 1990ஆம் ஆண்டு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு கல்வி புத்துயிர்ப்பு செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு, அடிப்படை கல்வித்திட்ட சீர்திருத்தம் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. 2011ஆம் ஆண்டு சீனாவின் கல்வித் திட்டங்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. காலப்போக்கில் மேம்பாடுகள் இருந்தன என்பது உண்மை என்றாலும் மத்திய அரசின் மேலாதிக்கம் கூடுதலாக இருந்தது. 2017ஆம் ஆண்டு அதிபர் ஷி ச்சின் பிங்கின் கருத்துகள் அடிப்படையில் நாட்டுப்பற்று தொடர்பான கருத்துகள், பாடங்கள் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இவை முழுக்க மாணவர்கள...

மாநில பொருளாதார நலனுக்காக கனவு கண்ட லட்சியவாதித் தலைவர்! - புத்ததேவ் பட்டாச்சார்ஜி - அஞ்சலி

படம்
  அஞ்சலி புத்ததேவ் பட்டாச்சார்ஜி 1944-2024 மேற்கு வங்கத்தின் இடதுசாரிக்கட்சி, தனது முக்கியமான தலைவர்களில் ஒருவரான புத்ததேவை இழந்திருக்கிறது. அவருக்கு மனைவி மீரா, மகன் சுசேட்டன் ஆகியோர் உண்டு. மாநிலத்தில் இரண்டு முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று முதல்வராக பதவி வகித்தார். 2000-11 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வங்கத்தை தொழில்துறை சார்ந்த மாநிலமாக பல்வேறு முதலீடுகளை ஈர்க்கக் கூடியதாக மாற்ற கனவு கண்டார். ஆனால் அக்கனவு நிறைவேறவில்லை. புத்ததேவின் இறப்பு முக்கியமான காலகட்டத்தில் நடந்திருக்கிறது என்றே கூறவேண்டும். அவர் முதல்வராக பதவியேற்றது இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.... 1977 ஆம் ஆண்டு ஜோதிபாசு தலைமையின் கீழ் இடதுசாரி கட்சி தேர்தலில் பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்தது. அன்றைய காலம் அரசியல் சிந்தனையாளர்களுக்கானது. பல்வேறு அரசியல் தத்துவவாதிகளின் கொள்கை, கோட்பாடுகள், மேற்கோள்கள், செயல்பாடுகள் என அரசியல்தளம் மாறியிருந்தது. இப்படியான சூழலில் வளர்ந்து வந்த புத்ததேவ் கவிதைகளை எழுதினார். புத்தக திருவிழாக்களுக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். காப்ரியல் கார்சியா மார்கேஸ் நூல்களை மொழி...

இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

படம்
         காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?   இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில் , ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் . காந்தி , சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர் . இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே , நேரு , ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை . ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார் . மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும் . இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது . பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை . தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார் . இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள் . அவர்கள் - ஜே சி குமரப்பா , வினோபா பாவே என்ற இர...

உயிரிவேதியியல் துறையில் இந்தியாவை உயரத்துக்கு கொண்டு சென்ற பெண்மணி! - கிரண் மஜூம்தார் ஷா

படம்
  கிரண் மஜூம்தார் ஷா கிரண் மஜூம்தார் ஷா தொழிலதிபர் தனது வாழ்க்கையை தானே செதுக்கி தொழிலதிபர் ஆனவர் என்று சொல்லலாம்.  1953ஆம்ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர், கிரண். பெங்களூரில் பிறந்தவரின் அப்பா, யுனைடெட் ப்ரீவர்ஸ் நிறுவனத்தில் தலைமை பொறுப்பாளராள இருந்தார். இவரது அம்மா,  யாமினி மஜூம்தார் சலவைத்தொழிலை நடத்தி வந்தார். கிரணுக்கு தொடக்கத்தில தனது அப்பாவின் தொழிலை அப்படியே பின்தொடர்ந்து செய்யலாம் என்று எண்ணம் இருந்தது. தனது மதுபான தயாரிப்பு தொடர்பான படிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகரில் பல்லாரட் பல்கலையில் முடித்தார். ஆனால் இந்தியாவில் நிலைமை வேறாக இருந்தது. பெண்களுக்கு மதுபானத் தயாரிப்பில் பெரிய வேலைகள் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு ஐரிஷ் கம்பெனியான பயோகான் பயோகெமிக்கல்  வேலை தருவதாக கூறியது. அதனை உருவாக்கி நிறுவியர் லெஸ்லி ஆசின்குளோஸ்.  1978ஆம் ஆண்டு ஆசின்குளோஸ், கிரணை தனது பயோகான் இந்தியா நிறுவனத்தில் கூட்டாளியாக சேர அழைப்பு விடுத்தார்.  பயோகான் நிறுவனம் பாபெய்ன், இசின்கிளாஸ் எனும் என்சைம்களை பப்பாளி, மீனிலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டிருந்தது. இந்திய...

இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பை மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்கவில்லை! - இருதய ராஜன்

படம்
pixabay இருதயராஜன், வளர்ச்சி மேம்பாட்டு மையம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கையாள்வதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டதாக எப்படி சொல்லுகிறீர்கள்? இடம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் உழைக்கும் தொழிலாளர்களை முக்கியமானவர்களாக மத்திய மாநில அரசுகள் கருதவில்லை. அவர்களை கொள்கை வகுக்கும்போதும் புறக்கணித்தே வந்திருக்கிறார்கள். இதனால்தான் பல்வேறு நகரங்களில் பொருளாதாரத்தில், கலாசார ரீதியாக, தொழில்ரீதியாக பங்களிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊரடங்கு காலத்தில் மத்தி அரசு கணக்கில் கொள்ளவில்லை. ஊரடங்கு காலத்திற்கு முன்னரே நான்கு நாட்கள் கொடுத்திருந்தால் அவர்கள் தங்கள் ஊருக்கு சென்றிருக்க முடியும். ஆனால் அப்படி ஒரு செயல்பாடு நடக்கவில்லை. காரணம் அரசுகள் அவர்களை எப்போதும் போல பொருட்படுத்தவில்லை. அவர்கள் இடம்பெயர்ந்து செல்வதன் மூலம் நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதேசமயம் சரியான முறையில் அவர்களை பராமரித்து சோதனை செய்தால் நோய்த்தொற்றை சமாளித்து இருக்கமுடியும். இனி அவர்கள் நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியபிறகு இங்கு வருவது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. நாம் இச்சமயத்தில் அவர்களுக்கான க...

ஏஐ புரட்சி என்ன செய்யும்?

படம்
நன்றி: தினமலர் பட்டம் ஏஐ புரட்சிக்கு ரெடியா? செய்தி: அண்மையில் டெலாய்ட்(Deloitte) என்ற ஆய்வு நிறுவனம் செய்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் உலகளவில் பயன்படுத்தும் அளவு 42 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தொழில்துறை, பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். தொழில்நுட்பத்தின் அடிப்படை என்ன? செய்யும் வேலைகளின் எளிமை. அதேதான். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் மனிதவளத்துறை முதல் தொழில்துறை வரை வேலைநேரமும் செலவும் பெருமளவு குறைகிறது. Redmondmag.com மனிதவளத்துறை  மனிதவளத்துறையில் செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையாக இருக்கலாம். பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு இணையாக செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ரோபாட்டிக்ஸ் புரோசஸ் ஆட்டோமேஷன்(Robotics Process Automation RPA) எனும் முறையை மனிதவளத்துறையில் பயன்படுத்துகின்றனர். ஊழியர்களுக்கான சம்பளம், தகவல் மேலாண்மை, கடிதம் எழுதுவது ஆகியவற்றில் இவை உதவுகின்றன. நடப்பு முதல் எதிர்காலம் வரை விய...